<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Sunday, June 11, 2006

சண்டே போஸ்ட் - 17

சென்ற வாரத்து பஞ்சாங்கத்தை எடுத்து கிரக சஞ்சாரங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில், அல் சர்காவியின் மரணத்தை ஒட்டி அமெரிக்க அதிபர் புஷ் ஈராக் குறித்து சொன்ன இரு கருத்துக்களுடன் இங்குள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, இங்கிலாந்தின் கார்டியன், இந்தியாவின் ஹிந்து ஆகியவற்றின் ஆசிரியர்கள் நேர்க்கோட்டில் நின்று உடன்பட்ட அதிசயம் நிகழ்ந்தது. முதல் கருத்து தீவிரவாதித் தலைவன் சர்காவியின் மரணம் ஈராக்கிற்கு நன்மை பயக்கக்கூடியது என்பது. இரண்டாவது, ஈராக்கின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து விட்டதாக நினைக்கக் கூடாது என்பது. எதிர்பார்க்கக்கூடிய விதத்தில், புஷ் முந்தைய கருத்தை வலியுறுத்தினார், பத்திரிக்கைகள் பிந்தையதை வலியுறுத்தினர் என்றாலும், இந்த அளவுக்கு ஒத்துப் போனதே எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. மூன்று தலையங்கங்களின் தலைப்புகள் கூட சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரி இருந்தன - Death of a Terrorist (NYTimes), Death of a Fanatic (Guardian), Death of a warlord (Hindu). சர்காவியின் மரணத்தை ஒட்டி அவனை ஒரு விடுதலை வீரனாகவோ, ஏகாதிபத்தியத்தின் எதிரியாகவோ நிலைநாட்ட நான் படித்த வரை எந்த ஒரு கருத்துப் பத்தியும் முனையவில்லை. போரின் பனிப்போர்வைக்குப் பின்னிருந்து வரும் எந்த செய்தி உண்மை, எது பொய் என்று தெரியாத சூழலிலும், சர்காவி ஒரு தீய சக்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஈராக்கிற்குக் குந்தகம் செய்யும் வகையில், சுன்னி இனத்து சிறுபான்மையினரின் காவலன் என்ற ரூபத்தில் கலவரங்களைத் தூண்டி விட்டு வந்தவனின் மரணம், அந்நாட்டு மக்களுக்கு சற்றேனும் நிம்மதி அளிக்கும் என்று நினைக்க விரும்புகிறேன்.

நான் முன்னமே ஒரு முறை சொன்னது போல், இந்தப் போர் அமெரிக்காவினால் மோசடியான காரணங்களுக்காகவே துவங்கப்பட்டது என்ற போதும், *இன்றைய நிலையில்* ஈராக்கில் அமைதியைக் கொண்டு வர அமெரிக்கப் படை அங்கு தேவைப்படுகிறது என்ற உண்மையை இந்த நிகழ்வு மீண்டும் சுட்டிக் காட்டுகிறது. உண்மையில், அமெரிக்கப்படைகள் திரும்பக்கூடாது என்பதைத்தான் ஈராக்கும், உலக நாடுகளும் வலியுறுத்த வேண்டும். You broke it, you fix it என்ற ரீதியில் தான் பொறுப்பு சுமத்தப் படவேண்டும். இன்றைய நிலையில் ஈராக்கில் இருப்பதனால், அமெரிக்காவிற்கு பெரும் பொருள், படை மற்றும் (உள்ளூரில்) அரசியல் சேதம் என்பதுதான் நிஜம். ஒரு பொறுப்பற்ற விதத்தில் போரைத் துவங்கி நடத்தியதற்கு அவர்கள் செலுத்தும் ஊதியமாகவே இதை உலகம் பார்க்க வேண்டும்.

நிற்க.

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:

  1. ஹடிதா: மறுபக்கம்?: ஹடிதா படுகொலைகளின் போது ‘உண்மையில்' என்ன நடந்தது என்பதை அந்நிகழ்வில் பங்கேற்ற ஒரு படைவீரர் தனது தரப்பு வாதமாகக் கூறுகிறார். கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து பல நாட்களுக்குப் பிறகு, ஒரு வழக்கறிஞர் மூலமாக வந்துள்ள கவனமாக செதுக்கப்பட்ட வரிகள் என்ற போதிலும் இப்படியும் நடந்திருக்கலாமோ என்று யோசிக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்த நிகழ்வு குறித்த செய்திகளைத் தொடர்ந்து வருபவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய செய்தி.

    கட்டுரையிலிருந்து:

    Staff Sgt. Frank D. Wuterich, 26, told his attorney that several civilians were killed Nov. 19 when his squad went after insurgents who were firing at them from inside a house. The Marine said there was no vengeful massacre, but he described a house-to-house hunt that went tragically awry in the middle of a chaotic battlefield.
    ...
    Puckett said that while Wuterich was evaluating the scene, Marines noticed a white, unmarked car full of "military-aged men" lingering near the bomb site. When Marines ordered the men to stop, they ran; Puckett said it was standard procedure at the time for the Marines to shoot suspicious people fleeing a bombing, and the Marines opened fire, killing four or five men.

  2. குவாண்டனமோ தற்கொலைகள்: அல் சர்காவி மரணம், ஈராக்கில் புதிய அமைச்சர்கள் நியமனம், ஈரானிடமிருந்து இணக்கமான சமிக்ஞைகள் என்று புஷ் அரசாங்கத்திற்குச் சுமுகமாகப் போய்க் கொண்டிருந்த சென்ற வாரத்தின் முடிவில் குவாண்டனமோ தற்கொலைகள் குறித்த செய்தி வந்து படுத்தியது. இதனால் எரிச்சலுற்ற அதிகாரிகள், இவர்கள் தற்கொலை செய்வது கூட அமெரிக்காவிற்கு எதிரான போரின் ஒரு அங்கமே என்று சொல்லியிருக்கிறார்கள். என்ன தைரியம், எங்களுக்குத் தெரியாமல் நைசாக தற்கொலை செய்து கொண்டு சொர்க்கப் பதவி அடைந்து விட்டார்கள் இவர்கள் என்று கோபமடைந்திருக்கிறார்கள்.

    Military officials were not releasing the names of the detainees yesterday, but said two were Saudi Arabian nationals and one was a Yemeni national. Harris described them as having close ties to terrorist organizations in the Middle East and said their suicides were "not an act of desperation, but an act of asymmetric warfare against us."
    ...
    "This is a determined, intelligent, committed element," Craddock said. "They continue to do everything they can . . . to become martyrs."

  3. வலைப்பதிவர்களின் அரசியல் தாக்கம்: அமெரிக்காவில் வலைப்பதிவர்களின் அரசியல் செல்வாக்கு ஓங்கி வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு வலைப்பதிவாளர்கள் சந்திப்பு பெருத்த அரசியல் கவனம் பெற்றிருக்கிறது. பல அரசியல் தலைவர்கள் - செனட்டர்கள், கவர்னர்கள் உட்பட - இதில் கலந்து கொண்டு தமது தரப்பு செய்திகள் மக்களைச் சென்றடையக் கோரி இருக்கின்றனர்.

    அரசியல் வட்டங்கள், தலைவர்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருந்ததால், இருப்பதனால், வலைப்பதிவாளர்களுக்கு வாசகர்களிடையே கிடைத்திருக்கும் நம்பகத்தன்மையை இது போன்ற நெருக்கங்கள் எப்படி பாதிக்கப் போகின்றன என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

    கட்டுரையிலிருந்து:

    Moulitsas, founder of the Daily Kos, is one of the most influential progressive bloggers in America today and a symbol of an expanding Internet-based movement that has led the attacks on President Bush while challenging the Democratic establishment.
    Moulitsas's message is clear and uncompromising. "The media elite has failed us," he says. "The political elite has failed us. Both parties. Republicans failed us because they can't govern. Democrats failed us because they can't get elected."
    Many Democrats see this emerging community as a source of innovation, energy and ideas that will change the way politics and journalism are practiced, and one that will provide a new army of activists for a party badly in need of help.

  4. கதீட்ரல் குடை: நூதனமான, கலைநுட்பமுள்ள பொருட்கள் சிலவற்றை போஸ்ட் ஞாயிறன்று ஒரு தனிப்பத்தியில் பரிந்துரைக்கும். இன்றைய வரிசையில் அப்படிப்பட்ட ஒரு பொருள் கவனத்தைக் கவர்ந்தது. வாஷிங்டனின் புகழ் பெற்ற நேஷனல் கதீட்ரலின் ஜன்னல் அலங்கரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு சாளரக்குடை ஒன்று உருவாக்கியிருக்கிறார்கள். முப்பத்தி இரண்டு டாலர்கள் மதிப்புள்ள இக்குடை அடுத்த முறை அமெரிக்காவிலிருந்து இந்தியா செல்பவர்களின் பரிசுப்பட்டியலுக்கு உகந்தது என்று நினைக்கிறேன்.
    பரிந்துரையிலிருந்து:

    Brighten your rainy day with this 10-panel umbrella that lets light shine through to stunning effect. The stained-glass design is a reproduction of the cathedral's 25-foot-wide Creation Rose window, which was designed with more than 10,500 pieces of handblown glass.



மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger வஜ்ரா said...

இங்கிலாந்தின் கார்டியன், இந்தியாவின் ஹிந்து :

ஹி ஹி ஹி..
இந்தியாவின் கார்டியன் தி. ஹிண்டுவும், இங்கிலாந்தின் ஹிண்டு தி. கார்டியனும் என்றைக்கு வேறுபட்ட கருத்துக்கள் தெரிவித்திருக்கின்றனர்? ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.

ஹிண்டு பத்திரிக்கையில் நித்தம் ஏதாவது ஒரு கார்டியன் எடிடோரியலை வாந்தி எடுத்து வைத்திருப்பார் "மவுண்ட் ரோடு மாவோ" திரு. நரசிம்மன் ராம்.

June 11, 2006 11:10 AM  
Blogger Amar said...

நியூயார்க் டைம்ஸ் பத்தி தெரியவில்லை ஆனால் ஹிந்துவும் கார்டியனும் ஒத்த கருத்து கொண்டு இருப்பது ஒன்றும் பெரிய விஷயமா தெரியலீங்க.

அந்த தற்கொலை செஞ்சுகிட்ட முனு பேர பத்தி என்ன சொல்றது.

இவங்க இடுப்புல குண்டு கட்டிகிட்டு கூடவே சேர்த்து பத்து இருபது பேர சாகடிக்கறதுக்கு பதிலா அவன் அவன் சுருக்கு மாட்டிக்கிட்டு சாகறது ரொம்ப உத்தமம்.

June 12, 2006 6:22 AM  
Blogger வஜ்ரா said...

//
You broke it, you fix it என்ற ரீதியில் தான் பொறுப்பு சுமத்தப் படவேண்டும்.
//

நான் ஏதோ காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாய், அமேரிக்கா படை யெடுத்தபின்பு தான் ஈராக்கின் கேவலமான ஷியா சன்னி மதச்சண்டை, "மனிதாபிமான" அடிப்படையில் நடக்கும் தலைக் கொய்தல்கள் இத்யாதி எல்லாம் வெளியில் வந்து 'புஷ் மாமா'வின் தூக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது...அதே வேளையில் நாகரிக உலகில் பழமைவாத இஸ்லாம் மிரட்டுகிறது, என்று நினைத்தேன்... நீங்கள் வேறு மாதிரி யோசிக்கிறீர்கள்.

June 12, 2006 6:52 AM  

Post a Comment

<< Home