சண்டே போஸ்ட் - 13
இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள் (கடைசி மேட்டரைப் படிக்கத் தவறாதீர்கள் :-) ):
தமிழ்ப்பதிவுகள்
- இந்தியாவின் நக்சல்பாரி இயக்கம்: ஒரு அறிமுகம்: (இது நேற்றைய நாளிதழில் வெளியானது) நேற்று சட்டிஸ்கர் மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்துப் படித்திருக்கலாம். அந்த செய்தி வருவதற்கு முன்பு தற்செயலாக நேற்று போஸ்டில் நக்சல்பாரி இயக்கம் குறித்த இந்த அறிமுகக் கட்டுரை வெளியாகியிருந்தது. சல்வா ஜூதும் பற்றியும் சில கருத்துக்களை முன்வைக்கும் இக்கட்டுரை அவசியம் படிக்கப் பட வேண்டியது.
கட்டுரையிலிருந்து:
Drawing recruits and support from indigenous tribespeople known as adivasis , the ragtag band of young men and women is part of a larger revolutionary movement whose audacious, if anachronistic, goal is to replace India's parliamentary democracy with a communist system straight out of Chairman Mao Zedong's Little Red Book.
...
The Maoist commander in the area, who goes by the name Kosa, said the movement had not been deterred by the triumph of capitalism in China and other formerly communist countries.
"When a scientist doesn't get the desired results from an experiment, he doesn't just abandon the experiment," he said. "Every movement has its ups and downs. There are defeats as well as victories. We should learn from the failure of Maoism in China and move ahead." - ஈராக்: சென்றோம், கொன்றோம், வந்தோம்: ராணுவ வீரர்களின் வாழ்வியல் என்பது தனித்துவங்கள் நிறைந்த ஒரு உப கலாசார வாழ்வியலாகும். ஒவ்வொரு போரும், அந்தப் போருக்கே உரித்தான குணாதிசியங்களை உள்வாங்கிக் கொண்ட ஒரு படைக்குழுவை உருவாக்குகிறது. பல நாடுகள் சென்று பல போர்களில் தொடர்ந்து ஈடுபடும் அமெரிக்கப் ராணுவத்தில் இதனால், வியட்நாம் வீரர்கள், கொரிய வீரர்கள், முதல் ஈராக் போர் வீரர்கள் என்று பல குழுக்கள் உள்ளன. இந்த வரிசையில் இப்போதைய இரண்டாம் ஈராக் போர் வீரர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு போரும் வித்தியாசமானது தான். இருப்பினும், வீடு திரும்பி வரும் இவ்வீரர்கள் பேசும் வார்த்தைகளில் எல்லாம், கால தேச வர்த்தமானங்களைக் கடந்து ஒரே செய்திகள் ஒலிக்கின்றன.
இக்கட்டுரையில், பல வீரர்கள் தங்கள் அனுபவங்களை சுருக்கமாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.
"One time, I was on the phone with my child and there was a mortar attack and she asked me what the sound was, and I had to think of something to tell her." - டான்யா
"Everything was like slow motion. I saw a medic. He was going, 'What hurts?' I couldn't hear him but I read his lips, saying 'what hurts?' I said, 'My finger, it's killing me.' He said, 'Your finger? Have you seen your arm?' I said, 'What's wrong with my arm?'" - க்ரிஸ் - ஜிம்பாப்வேயின் பண வீக்கம்: ஆப்பிரிக்காவில் அழிந்து கொண்டிருக்கும் நாடுகளின் டாப் டென் வரிசையில் கண்டிப்பாக இடம் பெறக்கூடிய நாடு ஜிம்பாப்வே. அதன் பணவீக்க சதவிகிதம் ஆயிரம் சதவிகிதத்தைத் தாண்டி இருப்பதாக இந்தச் செய்தி கூறுகிறது. சென்ற வருடம் ஒரு பண விலை கொண்ட பண்டம் இந்த வருடம் பத்து பணம்!
மொத்த கட்டுரையே இவ்வளவு தான்:
Zimbabwe's annual inflation rate topped 1,000 percent for the first time, underlining the economic collapse of a country crippled by shortages.
Moffat Nyoni, acting director of the government's Central Statistical Office, said that inflation for the 12-month period ending in April was 1,042.9 percent, state radio reported Saturday.
A loaf of bread costs 100,000 Zimbabwe dollars. But the maximum denomination note is 50,000 dollars, forcing shoppers to carry bags of money for basic purchases. The economy has been in free fall since President Robert Mugabe seized 5,000 white-owned commercial farms starting in February 2000.
Many Zimbabweans make ends meet by growing sweet potatoes and corn along roads and railways or on vacant land. An estimated 4 million others have emigrated. - உள்நாட்டு உளவு: அமெரிக்க ரகசிய உளவுத்துறை இந்நாட்டின் மக்கள் யாருக்கு எப்பொழுது தொலைபேசுகிறார்கள் என்ற தகவலைக் கடந்த நான்கு வருடங்களாகத் திரட்டி வருவது சென்ற வாரம் செய்தியானது. இது குறித்து போஸ்டின் தலையங்கம். ஒரு ஒற்றை நிகழ்வாக இதைப் பார்க்காமல், அமெரிக்க அரசுச்சட்டத்தின் மீது இந்த அரசாங்கம் தொடுத்திருக்கும் போரின் ஒரு பகுதியாகப் பார்க்கிறது.
Some of these measures may be necessary to effectively combat international terrorist networks such as al-Qaeda. Many were adopted in the weeks immediately after Sept. 11, 2001, when the situation seemed to demand urgent and aggressive action. Yet almost all of the exceptional steps President Bush approved have been compromised and discredited by the administration's behavior: its insistence on secrecy and imperious readings of the law; its contempt for meaningful congressional oversight and disregard of international opinion and U.S. alliances; its stubborn resistance to good-faith efforts by Congress to bring the operations under statute. - சொகுசு: சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு பணி நிமித்தமாக டோக்யோ சென்றிருந்தேன். ஒரு அமெரிக்க ஓட்டலை miniaturize செய்தால் போலிருந்த ஒரு சிறிய ஓட்டலில் தங்கியிருந்தோம். அந்த சிறிய ஓட்டலில் கூட என்னை பிரமிக்க வைத்த ஒரு விஷயம், அந்த ஓட்டல் அறையில் இருந்த டாய்லெட்! சும்மா சொல்லக் கூடாது, ஜப்பானியர்கள் எதில் சிக்கனம் பார்க்கிறார்களோ இல்லையோ, டாய்லெட் சொகுசில் வஞ்சனையில்லாமல் இருக்கிறார்கள். அந்த 'சுகத்தை' வார்த்தையால் வர்ணித்தால் புரியாது, அனுபவிக்க வேண்டும் :-)
இந்த கட்டுரையில் ஜப்பானில் டாய்லெட்களின் பிதாமகரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இந்தக் கட்டுரை எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்ததற்கு அதை நான் எங்கே படி...வேண்டாம், too much detail...
கட்டுரையிலிருந்து எதை மேற்கோள் காட்டுவது, எதை விடுவது என்று திண்டாடிப் போய் விட்டேன்:
"Going to the toilet should be about relaxation, comfort and cleanliness," he said. "I strongly believe the Japanese have the cleanest and most comfortable toilets in the world."
...
During his first chance to get up close and personal with them since installation, Asada's passion for his job overflowed. "We developed them without a base. Their pipes attach from their backs directly into the wall," he explained with excitement, caressing the toilet with his hand. "With nothing underneath, you can see how easy it is for someone to wipe the floor. It makes a bathroom easy to keep spotless."
...
A Japanese proverb says that pregnant women who keep their toilets sparkling clean will give birth to attractive babies. The Japanese word for clean -- kirei -- is the same as the word for beautiful. Japanese almost always use moist towelettes to wipe their hands before meals. "Why shouldn't it apply to other places on the body?" Asada said.
தமிழ்ப்பதிவுகள்
மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
4 Comments:
ஜப்பானிய டாய்லெட் இந்த ஊரில் டோடோ என்ற பெயரில் விற்பனையில் இருக்கிறது. இவர்களுடைய
சூப்பர் மாடல் டாய்லெட்டின் விலை 5000 டாலர் லிஸ்ட் விலை.
குறைந்த விலை டாய்லெட்டின் சிறப்பம்சம் இதனுடன் பொருத்தக் கூடிய ஸீட் மற்றும் கால்
கழுவ தண்ணீர் வசதி. பேப்பரை ஒழித்து விடலாம். ஒரு நூற்றாண்டுக்கு முன் காய்ந்த சோள
மட்டைகள் உபயோகத்தில் இருந்தது என்பது வியப்பூட்டும் செய்தி.
அந்த எழுத்தாளர் சல்வா ஜுதூம் ஐ Militia என்ற வார்த்தைகளால் வர்ணிக்கிறார். அதே நேரத்தில் மாவோயிஸ்ட்களை Rebels என்கிறார். அதை கவனிக்க.
எனக்குத் தெரிந்து, சல்வா ஜுதூம் துப்பாக்கி எடுத்து சண்டை போடுவது போன்ற காரியங்களில் ஈடுபடவில்லை. தீவிரவாதச் செயல்கள் செய்யதில்லை.
வஜ்ரா ஷங்கர்.
//கடைசி மேட்டரைப் படிக்கத் தவறாதீர்கள் :-) //
Looks like Dinamalar title..
"Saloonkalil athu Ilavasamaka kidaikum" ;-)
ஷங்கர், சல்வா ஜூதும் பற்றி நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம், இருப்பினும், நான் வேறு விதமாகவும் கேள்விப்படுகிறேன்/படிக்கிறேன். எனக்கு இந்த விஷயத்தில் தெளிவில்லை.
சாம், கமல், கிறுக்கன், :-) நன்றி!
Post a Comment
<< Home