<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, June 04, 2006

இட ஒதுக்கீடு: என் இரண்டணா

இட ஒதுக்கீடு குறித்து வலைப்பதிவுகளில் மக்கள் ஏராள தாராளமாக எழுதி முடித்து விட்டதால், ஆட்டத்திற்கு மிகவும் லேட்டாக வருவது போல் ஒரு பக்கம் தோன்றுகிறது. ஆனால், இன்னொரு பக்கம், சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த விவாதங்களின் படிமங்கள் துளியும் மாறாமல், அதே வார்த்தைகள் கொண்டு இன்றளவும் விவாதங்கள் நடப்பதைப் பார்க்கும் போது அவ்வளவொன்றும் தாமதமாகி விடவில்லை என்றும் தோன்றுகிறது.

மேலும், இந்த விஷயத்தில் எல்லாரும் ஆயாசமுற்றிருக்கும் இவ்வேளையில், என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டுத் தப்பி விடலாம் என்ற மனக்கணக்கும் உண்டு :-)

For what it’s worth:

1. ‘சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறாயா, இல்லையா?’ என்ற கேள்வியை நான் நிராகரிக்கிறேன். அது ஒரு false choice. சாதியைப் பெருமளவில் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஆனால் அதை மட்டுமே கணக்கில் கொள்ளாத எஸ்.பி.உதயகுமாரின் முறையை முழுமையாக ஆதரிக்கிறேன். என் பார்வையில், இடஒதுக்கீடு என்பது ‘reparation’னோ, ‘restitution’னோ அல்ல. மாறாக, இன்றைய சமுதாயத்தை ஒரு சமச்சீரான ஒன்றாக மாற்ற அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய உபாயங்களுள் (முக்கியமான) ஒன்று. அம்முயற்சியை வெறும் சாதி அடிப்படையில் மட்டும் நிகழ்த்தினால், அது வெற்று அரசியலே அன்றி வேறில்லை.

2. இடஒதுக்கீட்டால் தரம் தாழும், நாட்டின் வளர்ச்சி குறையும் என்பதெல்லாம் புல்ஷிட்.

3. தகுதி என்ற வார்த்தை வெற்றிகரமாக கெட்ட வார்த்தை ஆக்கப்பட்டு விட்டது. இடஒதுக்கீட்டினை முழுமையாக எதிர்ப்பவர்கள் அவ்வார்த்தையைக் கையாண்ட விதமே இதற்கு முக்கியக் காரணமென்றாலும், அவ்வார்த்தைக்கு இந்த அவப்பழி தேவையில்லை. இடஒதுக்கீடு அமலிலிருக்கும் சூழலிலும், தேவைக்கதிகமான தாழ்த்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருக்கும் நிலையில், தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், தகுதி அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். வேறு வழியில்லை. ‘தகுதி' என்ற வார்த்தைக்கு பதில் ‘உழைப்பு' என்ற வார்த்தையை மாற்றிப் பயன்படுத்தினால் என்ன? ‘நான் இவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்து பரிட்சை எழுதினேன், எனக்கு இடம் கிடைக்கவில்லை' என்று சொல்லும் மாணவனிடம் வெளிப்படுவது தனது தகுதி அவமதிக்கப்பட்டது குறித்த கோபமில்லை, தனது உழைப்பு விரயமானதே என்ற விரக்தி தான்.

4. சாதியை மட்டும் அடிப்படையாகக் கொண்ட இடஒதுக்கீட்டினை ஆதரிப்பவர்கள் ‘creamy layer’ விவாதத்தின் போது மட்டும் ஏன் பின் வாங்குகிறார்கள், அல்லது தடுமாறுகிறார்கள்?

உதாரணம் - 1: பத்ரியின் பதிவிலிருந்து:
பிற்படுத்தப்பட்டோருள் Creamy layer என்று முடிவுசெய்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது எனலாமா?

பதில்: சமூகத்தின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகையை தமக்குள்ளாக எவ்வாறு பிரித்துக்கொள்வது என்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே முடிவு செய்ய வேண்டும். முற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இதனை வேண்டுவதை பிற்படுத்தப்பட்டோர் தவறாக எடுத்துக்கொள்ள நேரிடலாம்.

உதாரணம் -2: ஞாநியின் கட்டுரையிலிருந்து:
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையில் சின்னச் சின்ன பிரச்னைகள் உண்டுதான். பிற்படுத்தப்பட்ட சாதியிலும், தாழ்த்தப்பட்ட சாதியிலும் முதல் தலைமுறையாகக் குடும்பத்தில் படிக்க வருபவருக்கும், அந்தந்த சாதிக்குள் இருக்கும் ஏழைக்கும் முன்னுரிமை தேவைப்படுகிறது. ஆனால், இந்தப் பிரச்னைகள் சாதி அடிப்படையை நீக்குவதால் தீரக்கூடியவை அல்ல. சாதி அடிப்படை ஒதுக்கீட்டைக் கொடுத்துவிட்டு, அதில் மேலும் என்ன சீர்திருத்தம் தேவை என்று யோசிப்பதே நியாயமானது.

உதாரணம்-3: பேராசிரியர் ராகுல் வர்மனின் கட்டுரையிலிருந்து:
Let’s put the creamy layer argument also in perspective now. Point is that such elite education which has so many barriers – expensive and time consuming coaching, expensive education, elite culture, etc. is under the present order going to be a preserve only of a select few. All we are saying is whether it is going to be the preserve of a few higher castes or some of the other castes can also find an entry. Even if it is backward IAS’s daughter, so be it, finally many others are also IAS’s wards, so how does it make a difference? As has been rightly said by the critiques, it’s a populist measure for the votes. etc. But so is every single policy of the govt. and so it will be in a ‘vote bank democracy’ – either for the votes directly, or for generating resources for the next election. When an Ambani or an Enron is granted abominable concessions, why don’t we come on streets and say, “it is for money for the next elections.”

ஆக, பத்ரி ஜகா வாங்குகிறார், ஞாநி ஒத்திப்போடுகிறார், பேராசிரியரோ சுத்தமாக குழப்பி அடிக்கிறார்.

எனக்கு இதில் குழப்பமில்லை. இன்று இந்தியாவில் மிகத்தரமான உயர்கல்வி பெறத்தேவை இவ்வளவு, அதற்கு ஒரு குடும்ப வருமானத்தின் தேவை இவ்வளவு என்று மிகவும் தாராளமான கணக்குகளை முன்வைத்து, இதை விட அதிகம் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்வதில் என்ன தயக்கம்? உதாரணமாக, இன்றைய அளவில் மாதம் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று சொல்வதில் யாருக்கு என்ன ஆட்சேபம் இருக்க முடியும்?

5. ஒட்டு மொத்த இடஒதுக்கீடு விஷயத்திலும் வடக்கிந்தியர்களின் கடுமையான பிற்போக்குவாதம் எரிச்சலளிக்கிறது. இங்கே (அமெரிக்காவில்) எனது அலுவலக நண்பரொருவர் (வடக்கிந்தியர்) எனக்கு மின்னஞ்சலில் ஒரு “ஜோக்“ அனுப்பினார். இந்தியாவில் இடஒதுக்கீட்டை கிண்டல் செய்யும் மோசமான துணுக்கு. நானும் அவரும் இட ஒதுக்கீடு குறித்துப் பேசியதே இல்லை. நான் கண்டிப்பாக இடஒதுக்கீட்டை எதிர்ப்பவனாகத் தான் இருப்பேன் என்ற அனுமானம் அவருக்கு ஏற்பட்டது எப்படி? இவ்விஷயத்தில் (இடஒதுக்கீட்டிற்கு எதிரான) ஒருமித்த கருத்து ஒன்று இருப்பதான பிரமை உண்டானது எதனால்?

6. அமெரிக்க அரசாங்கத்தின் ‘affirmative action’ மற்றும் ‘diversity’ திட்டங்களால் பயனடையும் இந்தியர்கள் அநேகம். குறிப்பாக வாஷிங்டனில் அரசாங்க காண்டிராக்டுகளுள் இவ்வளவு சதவிகிதம் சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களுக்குத் தரப்பட வேண்டும் என்று சட்டங்கள் உண்டு. அவற்றிற்காக க்யூவில் நிற்கும் இந்தியர்களிடம் போய் இடஒதுக்கீடு பற்றி கருத்துக் கேட்க வேண்டும்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

9 Comments:

Blogger வஜ்ரா said...

இட ஒதுக்கீட்டில் வடக்கிந்தியர் தென்னிந்தியர் என்ற உங்கள் வேறுபாட்டிற்கு என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது.

தமிழ்நாட்டில் பிராமண சமூகம் வேறு எந்த ஜாதியையும் தனக்கு நிகராக பாவிக்கவில்லை. ஆகயால் பல முன்னேரிய ஜாதிகள் OBC வகையில் பிரிக்கப் பட்டுவிட்டது. வடக்கில் அப்படி அல்ல. கிட்டத்தட்ட 30% ஓப்பன் கேடகிரி (துவிஜா எனப்படும், பூனூல் அணிபவர்கள், க்ஷ்த்ரியர்கள், வைஷியர்கள் என்று எல்லாமே இருக்கும்). நிச்சயமாக எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்.

(அவர்கள் எதிர்ப்பைப் பற்றிய கருத்து அல்ல இது, உங்கள் வடக்கிந்தியர், தெற்கிந்தியர் என்ற பிரித்தலால் உங்கள் பதிவில் நேர்ந்த bias ("பிற்போக்குவாதம்":(( ) க்கான கருத்து.)

June 04, 2006 4:20 PM  
Blogger kirukan said...

////எனக்கு இதில் குழப்பமில்லை. இன்று இந்தியாவில் மிகத்தரமான உயர்கல்வி பெறத்தேவை இவ்வளவு, அதற்கு ஒரு குடும்ப வருமானத்தின் தேவை இவ்வளவு என்று மிகவும் தாராளமான கணக்குகளை முன்வைத்து, இதை விட அதிகம் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்வதில் என்ன தயக்கம்? உதாரணமாக, இன்றைய அளவில் மாதம் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று சொல்வதில் யாருக்கு என்ன ஆட்சேபம் இருக்க முடியும்?////

Haven't you ever read another discussion regarding reservation. So many people have raised this point. How will you decide the income of any person. Rightnow a person who makes revenue in lakhs in business put 5000 as monthly income.. a govt clerk will also put the same..

Can you reveal how much you have indicated as your income in your RationCard in India.... Have you indicated what you get in US?.. Excuse me for going too personal..

//எனக்கு இதில் குழப்பமில்லை.// You dont have confusion in only one thing. You hate reservation. Better you could have written it directly.....

June 04, 2006 4:23 PM  
Blogger துளசி கோபால் said...

இது பதிவுக்குச் சம்பந்தம் இல்லாதது.

தேன்கூட்டில் பார்த்தேன். வாழ்த்து(க்)கள்.

June 04, 2006 5:30 PM  
Blogger Srikanth Meenakshi said...

ஷங்கர், சதவிகிதங்கள் சற்று முன்பின்னே இருந்தாலும் இந்தியா முழுவதிலும் ஒரு சில சிறுபான்மையர், பெரும்பான்மையினரை ஒடுக்கி வந்திருக்கின்றனர் என்பதில் வித்தியாசமில்லை. அப்படி இருக்கையில், இடஒதுக்கீட்டினை எதிர்க்கும் எந்த ஒரு முழுமையான எதிர்ப்பையும் நியாயப்படுத்த இயலாது. மேலும், இந்த ஒரு விஷயத்தின் சமீப கால வரலாற்றை முன்வைத்து வட, தென்னிந்தியரைப் பிரித்துப் பார்ப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

கிறுக்கன், இது குறித்து நான் பலவற்றைப் படித்து மேற்கோளும் காட்டியிருக்கிறேன். ஒருவரது சாதியை மட்டும் எப்படி ஆணித்தரமாக நிறுவ முடியும்? சட்டத்தை எப்படி அமலாக்குகிறார்கள் என்பது தனிப் பிரச்னை. சட்டமே வேண்டுமா, வேண்டாமா என்பது தான் இப்பொழுதைய பிரச்னை.

துளசியக்கா, நன்றி!!

June 04, 2006 6:20 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

எத்தனை வருடங்கள்தான் இதை தொடர்வது. ஒரு கால வரையறைக்குள் இதை கொண்டுவருவது நல்லது என நினைக்கிறேன்.

June 04, 2006 9:51 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

My 2cents are in
ravisrinivas.blogspot.com
the pro-reservation gang in
tamil blogs is unwilling to
face my questions and indulges
in dirty tricks and streotyping.
Gnani sounds like a third
rate propaganda worker of DK
in reservation.He has distorted
facts.By and large, the pro-reservation gang wants OBCs
to dominate but dont want to
tell that so openly.So it
is a question of dominance
by one group vs equality.
Equality is something the
pro-reservation gang is
scared of.

June 04, 2006 10:31 PM  
Blogger arunagiri said...

சம்பளத்தைத் தவறாய்க் காட்டுவார்கள் என்பதெல்லாம் வெற்றுவாதம். Implement செய்ய எளிது என்று சொல்லி இன்கம் டாக்ஸ் கலெக்ட் பண்ணாமல் விடுகிறார்களா? அல்லது பொய் சாதி சர்ட்டிபிகேட் கேஸுகள் வரும் என்று சொல்லி சாதி அடிப்படை இட ஒதுக்கீடு வேண்டாம் என்றார்களா? எல்லா திட்டத்திலும் ஓட்டைகள் இருக்கும்தான், அவற்றை அடைத்து சரியான வழியில் செலுத்தத்தான் அரசும் தலைவர்களூம் அதிகாரிகளும் பிரம்மாண்ட அரசு இயந்திரங்களும்.

திசையை சரியாக வைத்துக்கொண்டு வழியைச் செப்பனிட்டு போகும் பாதையை சரியான திசையில் உருவாக்குவதுதான் ஊர்போய்ச்சேர சரியான அணுகுமுறை.

மண்டலே ஒத்துக்கொண்ட அறிவியல் பூர்வமான பெரியதொரு கணக்கெடுப்பு எதுவும் இல்லாமல் உள்ள ஒரு விஷயத்தை இதற்கு அடிப்படையாகக் கொள்வதை விட, கல்வி நிலை மற்றும் பொருளாதாரம் என்ற இரு கூறுகளை அடிப்படையாய்க் கொள்வதே உண்மையிலேயே உதவி வேண்டுபவர்களுக்கு கை கொடுப்பதாகவும், சாதி அரசியல் மேலும் இறுக்கமடையாமல் போகவும், சாதி தாண்டிய சமூக நீதி நம் நாட்டில் உருவாகவும் வழி வகுக்கும்.

பத்ரியிடம் நான் கேட்டு அவர் பதில் சொல்லாத இன்னொரு விஷயம். பொருளாதார நிலையை கணக்கில் கொள்ளாமல் ஒரு சாதி மேலே வந்து விட்டது அல்லது இல்லை என எவ்வாறு தீர்மானிப்பது? எப்போது 'இந்த சாதிக்கு இனி சலுகை வேண்டாம்' என்று சொல்வது?

சாதி அடிப்படை இட ஒதுக்கீடு என்பது சாதி அரசியல் தவிர, சாதி தாண்டிய சமத்துவத்திற்கோ உண்மையான சமூக நீதிக்கோ ஒருபோதும் உதவப்போவதில்லை.

June 04, 2006 11:43 PM  
Blogger arunagiri said...

"தமிழ்நாட்டில் பிராமண சமூகம் வேறு எந்த ஜாதியையும் தனக்கு நிகராக பாவிக்கவில்லை. ஆகயால் பல முன்னேரிய ஜாதிகள் OBC வகையில் பிரிக்கப் பட்டுவிட்டது".

இதனை என்னால் ஒப்புக்கொள்ல முடியவில்லை. இது தமிழ் பிராமண சமூகம் பிறரை எப்படிப்பார்த்தது என்பதைப்பொறுத்த விஷயமாகத் தெரியவில்லை. பிராமண,
அ-பிராமண உரசல் மெட்ராஸ் ராஜதானியில் வெள்ளைக்காரனுக்கு அரசு நிர்வாகத்தில் யார் அதிக விசுவாசம் என நிரூபிக்க முயன்றதில் தொடங்கியது. ஜஸ்டிஸ் கட்சியென்ற அமைப்பு ரீதியாக அடையாளத்துடன் அ-பிராமண அணி காலனியாட்சியால் "பிராமணீய" காங்கிரஸுக்கு மாற்றாக வளர்த்தெடுக்கப்பட்டது. (வட இந்தியாவிலும் அரசு அதிகாரங்களில் அதிகம் இருந்தது தென் பிராமணர்களே எனினும் அவர்கள் பிராமணர் என்பதை விட தென்னவர் -மதராஸி- என்றே அதிகம் இனம் காணப்பட்டனர்). மொழிவாரி மாநிலங்கள் பிரிந்தபோது இந்த பிராமண- அபிராமண அரசியலின் தாக்கம் தமிழ்நாடு என்ற அளவில் குறுகி, பிராமண எதிர்ப்பை முன்னிறுத்தி அரசியல் செய்யும்
திராவிட இயக்கங்களாக உருவெடுத்தன. இப்படிப்பட்ட அரசியல் சூழலில் முதன் முதலாக பிசி, எம்பிசி, ஓபிசி என்றெல்லாம் இட ஒதுக்கீடு தமிழகத்தில் கொண்டு வந்தபோது ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு அரசியலில் தீண்டத்தகாதவர்களாய்ப்போயிருந்த தமிழக பிராமணர்களின் எதிர்ப்பு ஈனக்குரலாய் அமுங்கிப்போனது.
ஜஸ்டிஸ் கட்சியில் வேர்விட்டு தமிழக பிராமணர்கள் சந்தித்த கொடுமையான காழ்ப்பு அரசியலை வட இந்திய பிராமணர்கள் இதுவரை சந்திக்கவில்லை. கொடுமையான மத அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் அருகில் இருந்து பார்த்து விட்ட வடக்கில், பிராமணீயம்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்ற சாதிக்காழ்ப்பு வாதம் எந்தப்பகுதியிலும் முழுமையாக எடுபடவில்லை. இவையே ஓபிசி அரசியலில் தமிழக பிராமண எதிர்ப்பு எடுபடாமல் போனதற்கும் வடக்கில் ஒபிசி அரசியல் கடும் எதிர்ப்பை சந்திப்பதற்கும் காரணம். இதனை சால்வ் செய்ய ஒன்றே ஒன்று செய்தால் போதும்: போராடும் பெரும்பான்மை சாதிகளை ஓபிசி,பிசி, எம்பிசி என ஏதோ ஒரு பட்டியலில் இணைத்து விட வேண்டும்.

ஸ்ரீகாந்த்,

வட இந்தியரின் ஜோக் ஏன் கோபம் தந்தது? குடுமி குறித்தும், சேட்டுகள் குறித்தும் ஜோக்குகள் வருகையில் இதே போல் கோபம் கொண்டு பொங்கி எழுந்தீர்களா? அது எப்படி எல்லாருக்கும் சிரிப்பு வரும் என எண்ணி அப்படிப்பட ஜோக் வைக்கிறார்கள் என யோசித்திருக்கிறீர்களா? எல்லாம் stereotypingதான். அதுபோலத்தான் இன்று சாதி அடிப்படை இட ஒதுக்கீடும்- சமூக நீதி பாசாங்குகள் நீங்கி கலப்படமற்ற வெறும் சாதி அரசியலாகவே அது இன்று பார்க்கப்படுகிறது. அதனாலேயே மக்களைப்பிளக்கும் இப்படிப்பட்ட அரசியலைக்கிண்டல் செய்யும் stereotype ஜோக்காக வெளிப்படவும் செய்கிறது. இதில் எந்த வியப்பும் இல்லை.

6-வது பாய்ண்டில் நீங்கள் சொல்வதில் பல ஓட்டைகள் உள்ளன. டயர்டாக உள்ளதால் இத்துடன் முடிக்கிறேன்.

June 05, 2006 1:36 AM  
Blogger வஜ்ரா said...

//
சற்று முன்பின்னே இருந்தாலும் இந்தியா முழுவதிலும் ஒரு சில சிறுபான்மையர், பெரும்பான்மையினரை ஒடுக்கி வந்திருக்கின்றனர் என்பதில் வித்தியாசமில்லை.
//

நீங்கள் இப்படி பாலீஷ் போட்டு சொல்வதைத்தான் தி.க வினர் மேடை போட்டு முழங்கினார்கள் அன்று. லாலுக்கள், முலாயம் சிங்குகள் காட்டமாக "கடி போலி" (khari boli) ஹிந்தியில் சொல்கிறார்கள் இன்று. அடுத்தவனைக் குற்றம் சொல்லி மேலே வந்துவிடலாம் என்கிற நம்பிக்கை தவிர வேறேதுமில்லை.

June 05, 2006 5:15 AM  

Post a Comment

<< Home