<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Saturday, May 20, 2006

சண்டே போஸ்ட் - 14

(முன் குறிப்பு: சமீபத்திய விகடனில் கமல்ஹாசன் எழுதியுள்ள 'அணையா நெருப்பு' சிறுகதை அருமையாக உள்ளது. கமல் எழுதியது என்ற பிரக்ஞையோடு படித்தது எனது வாசக அனுபவத்திற்கு சற்று இடைஞ்சலாக இருந்தாலும், ஒரு வித்தியாசமான கோணத்தில், தெளிவான நடையில் எழுதப்பட்ட நல்ல கதையைப் படித்த நிறைவு முடிவில் ஏற்பட்டது. ஆங்காங்கே கொஞ்சம் provocative-ஆன வாக்கியங்கள் இருந்தாலும், அவையும் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் நேர்த்தியாகவும் இருந்தன)

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:


  1. தொலைதூரக் கல்வி: (சென்ற திங்களன்று போஸ்டில் வெளியான கட்டுரை) அமெரிக்காவில் மாணவர்கள் வீட்டுப் பாடங்கள் செய்வதற்கும் பரிட்சைகளில் தேர்ச்சி பெறுவதற்கும் மேற்கொள்ளும் ட்யூஷன் வகுப்புகள் இந்தியாவிற்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்டுள்ளன என்பது புதிய செய்தி இல்லையென்றாலும், மாணவர்கள் பார்வையில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை சுவாரசியமாக இருக்கிறது. நாடு கடத்தப்படும் பல சேவை-சார் வேலைகளைப்போல் இதற்கும் செலவு, தரம் இரண்டுமே காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. இணையத்திலேயே பிறந்து வளர்ந்து வாழும் இந்த ஊர் மாணவர்களுக்கு இப்படித் தொலை தூரத்திலிருந்து கல்வி பெறுவதில் எந்த பிரச்னையும் இல்லையென்றாலும், இங்குள்ள ஆசிரியர்களுக்கு இந்த வெளியேற்றம் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்துவதில் ஆச்சரியமில்லை.

    இந்தியாவில் உள்ள ஆசிரியர்கள் இப்படிப் 'பசுமையான' வேலைக்கு மாறிக் கொண்டிருப்பதால் அங்கே பள்ளிக் கல்வியின் தரம் எப்படி பாதிக்கப்படுகின்றது என்பதை யாராவது ஆராய்ந்து எழுதினால் தேவலை.

    கட்டுரையிலிருந்து:


    Tutoring companies figure: If low-paid workers in China and India can sew your clothes, process your medical bills and answer your computer questions, why can't they teach your children, too?

    But educational outsourcing has sparked a fierce response from teachers and other critics who argue that some companies are using unqualified overseas tutors to increase their profit margins.

    "We don't believe that education should become a business of outsourcing," said Rob Weil, deputy director of educational issues at the American Federation of Teachers. "When you start talking about overseas people teaching children, it just doesn't seem right to me."

  2. சவூதி கற்காத பாடங்கள்: செப்டம்பர் பதினோராம் தேதி நிகழ்வில் பங்கேற்றவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் சவூதி அரேபியாவைத் தாய்நாடாகக் கொண்டவர்கள். அம்மக்களை இத்தகைய பாதையில் திருப்பியதில் அந்நாட்டின் கல்விக்குப் பெரும் பங்கு இருப்பதாக அப்பொழுது கண்டறியப்பட்டது. வெறுப்பும் கோபமும் நிறைந்த அடிப்படைவாதப் பார்வையை போதிக்கும் அப்பாடங்களை மாற்றி அமைக்கப் போவதாக சவூதி அரசாங்கம் வாக்களித்தது. நான்கு வருடங்களுக்கு மேல் ஆகி விட்ட இன்றைய நிலையில் சவூதியின் பாட புத்தகங்கள் இன்னமும் மாறவில்லை என்று இக்கட்டுரை தெரிவிக்கின்றது. சவூதியிலிருந்து சில ஆசிரியர்களால் ரகசியமாகக் கடத்தப்பட்ட பாடநூல்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டுகிறது.

    S audi Arabia's public schools have long been cited for demonizing the West as well as Christians, Jews and other "unbelievers." But after the attacks of Sept. 11, 2001 -- in which 15 of the 19 hijackers were Saudis -- that was all supposed to change.
    ...
    The problem is: These claims are not true.
    ...
    FIFTH GRADE

    "Whoever obeys the Prophet and accepts the oneness of God cannot maintain a loyal friendship with those who oppose God and His Prophet, even if they are his closest relatives."

    "It is forbidden for a Muslim to be a loyal friend to someone who does not believe in God and His Prophet, or someone who fights the religion of Islam."

  3. உள்நாட்டு உளவு: அமெரிக்க வாழ் மக்கள், வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்கா குறி வைத்திருக்கும் வெளிநாடுகளில், வசிக்கும் மக்களோடு நடத்தும் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்க அரசாங்கம் ஒட்டுக் கேட்பதாக சில மாதங்கள் முன்பு செய்தி வெளியானது. தீவிரவாதிகளோடு நடத்தும் உரையாடல்கள் மட்டுமே ஒட்டுக் கேட்கப் படுகின்றன என்று அரசாங்கம் சாதித்தாலும், இந்தச் செய்தி பலரை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. அதில் இந்த கட்டுரை ஆசிரியரும் ஒருவர். சூடானில் வாழும் தனது தகப்பனாரோடு இவர் நடத்தும் உரையாடல்கள் தீவிரவாத உரையாடல்களாகத் தோன்றலாம் என்று அஞ்சுகிறார்.

    கட்டுரையிலிருந்து:

    "May Allah guide you in whatever you do. May Allah protect you from evil. May Allah destroy your enemies."

    These were the words I heard from my eightysomething father one recent morning as his frail voice came over the phone from a Sudanese village about 6,000 miles away. To each sentence I replied "Amen," and as I hung up, I felt the soothing effect of his prayer come over me at the start of another day.

    But at the same time, as I readied myself for work here in the tension-filled capital of the United States, I couldn't help but wonder: What if the National Security Agency were listening to my phone calls to Sudan?

  4. உதவியா? உபத்திரவமா?: உலக நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு வரும் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி அமைப்பு (IMF) உண்மையிலேயே அந்நாடுகளுக்கு உதவுவதில்லை என்றும், மாறாக அவற்றின் திட்டமிடும் முறை அந்நாடுகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் குந்தகமாகவே உள்ளது என்றும் ஒரு புதிய புத்தகம் வாதிடுகிறது. வில்லியம் ஈஸ்டர்லி என்பவர் எழுதியிருக்கும் 'The White Man's Burden' என்ற இப்புத்தகத்தை போஸ்டின் டேவிட் இக்னேஷியஸ் மதிப்பிடுகிறார்.

    மதிப்புரையிலிருந்து:

    This is the season for critiques of global misadventures, and William Easterly has written a valuable one. His target in his puckishly titled The White Man's Burden is the spirit of benign meddling that lies behind foreign aid, foreign military interventions and such do-gooder institutions as the World Bank, the International Monetary Fund (IMF) and the United Nations.
    ...
    The do-gooders' fundamental flaw, he argues, is that they are "Planners," who seek to impose solutions from the top down, rather than "Searchers," who adapt to the real life and culture of foreign lands from the bottom up. The Planners believe in "the Big Push" -- an infusion of foreign aid and economic advice that will lift poor countries past the poverty trap and into prosperity. But the Planners are almost always wrong, Easterly contends, because they ignore the cultural, political and bureaucratic obstacles that impede the delivery of real assistance (as opposed to plans for such assistance) to the world's poor.



மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

4 Comments:

Blogger வஜ்ரா said...

சவூதி கற்காத பாடங்கள்:

இதைப் படிக்கும் போது ஔரங்கசீப்பிடம் மாட்டிய அர்மேனிய யூதன் ஸர்மத் "ஷஹீத்" கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
ஸர்மதிடம் "There is no god but allah, and Mohammend is his last prophet" என்று கூறச் சொல்ல, ஸர்மத் "There is no God" என்பதுடன் நிறுத்திக் கொண்டுவிட்டார்.

விளைவு, தலை துண்டானது.

இன்னும் அதே போன்றதொரு பாடம் தான் சவூதியில் கற்பிக்கப் படுகிறது. சவூதியில் மட்டுமல்ல, கிட்டத்தட்ட அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் இதே தான்.

வஜ்ரா ஷங்கர்.

May 22, 2006 3:54 AM  
Blogger PKS said...

Fannie Mae Fined 400 Million.
http://money.cnn.com/2006/05/23/news/companies/fannie.reut/index.htm?cnn=yes

Enna Nadanthathu? :-) Oru post edu pathi podunga annachi. (Ethical conflict varum enraal venaam. vazhakam pola politically correct update onnavathu kodunga.)

Anbudan, PK Sivakumar

May 23, 2006 1:05 PM  
Blogger Syam said...

Srikanth, pakathulaye irundhutu adiakadi paarthitu ungaluku oru blog irukunnu ivalo naala theriama poche...

May 23, 2006 1:59 PM  
Blogger Srikanth Meenakshi said...

PKS, It is not an ethical conflict, but a very professional conflict - we (employees) are not allowed to comment publicly on this issue while there are pending litigations (including class-action law suits). We are also not allowed to trade the stock.

Also, I know precious little in terms of real news other than what has been reported in the papers. So no dirt to dish out here :-)

Syam, Welcome...I did not know that you had one either :-)

May 23, 2006 3:59 PM  

Post a Comment

<< Home