<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, June 04, 2006

சண்டே போஸ்ட் - 16

முதலில்...

தி ஹிந்து நாளிதழின் சனிக்கிழமை இதழில் முதல் பக்கச் செய்தியிலிருந்து:

“Rahul Mahajan, son of the murdered Bharatiya Janata Party leader Pramod Mahajan, was hospitalised in a critical condition on Friday after snorting cocaine. Pramod Mahajan's personal secretary Bibek Moitra, who also took cocaine, died.”

அதே நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இதழின் முதல் பக்கச் செய்தியிலிருந்து:

“Rahul Mahajan was hospitalised in a critical condition and Pramod Mahajan's personal secretary Bibek Moitra died under mysterious circumstances early on Friday.”

வதந்தி செய்தியாகலாம், செய்தி வதந்தி ஆகலாமா?

நிற்க.

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:



  1. ஹீரோவா, வில்லனா?: வெனிசுவெலாவின் ஹூகோ சாவேஸ் குழப்புகிறார். ஒரு பக்கம் வெனிசுவெலாவில் சமூகச் சீரமைப்பு, எண்ணெய் வளத்தை தேசியமயமாக்கல் என்றெல்லாம் நல்ல விதமாகவும், இன்னொரு பக்கம் பத்திரிக்கைகளைக் கட்டுப்படுத்துதல், மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியலில் தலையிடல் என்றெல்லாம் மோசமாகவும் நடந்து கொள்ளும் இவரிடம் ‘நாயகன்' ஸ்டைலில் தான் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. நேற்றைய போஸ்டில் வெளியான தலையங்கத்தில் அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்பட்டுவரும் இவரது ‘மறுபக்கத்தை' ஆராய்ந்திருந்தார்கள்.

    குறிப்பாக மற்ற தென்னமரிக்க நாடுகளில் இவரது புகழ் மங்கி வருவது பற்றியும், அது ஏற்படுத்தும் அரசியல் தாக்கத்தைப் பற்றியும் சுவையான தகவல்கள் தந்திருந்தார்கள்.

    கட்டுரையிலிருந்து:

    Now at last, Mr. Chavez is the object of a growing backlash from leaders around Latin America -- from Brazil, Peru, Colombia, Mexico and Nicaragua, among other countries. In part, the politicians are responding to foolish overreaching by Mr. Chavez, who has been busy trying to turn Bolivia into a satellite state while suggesting he has similar plans for much of the rest of the continent. Latin Americans don't like imperialism, whether it comes from Washington or Caracas. And even leftist leaders, like those who rule in Brazil and elsewhere in South America, find it hard to imagine themselves prospering in a Venezuela-led economic bloc that includes Cuba but shuns the United States.

  2. ஈரானும் புஷ் அரசாங்கத்தின் உள்குத்துக்களும்: சில நாட்களுக்கு முன்பு ஈரானின் தலைவர் அகமதிநிஜாத் அமெரிக்காவிற்கு ஒரு அரைவேக்காட்டுத்தனமான கடிதம் எழுதியிருந்தார். உலகத்தில் ஜனநாயகத்தின் தோல்வி, பொது வாழ்வில் மதத்தின் தேவை என்று மனம் போன போக்கில் எழுதப்பட்டிருந்த அக்கடிதத்திற்கு புஷ் அரசாங்கம் எத்தகைய எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது பற்றி பெரிய சர்ச்சை நடந்தது. ‘கடிதம் எழுதியது தான் முக்கியமே ஒழிய அதில் எழுதப்பட்டிருப்பது முக்கியமல்ல' என்று சொன்னவர்கள், அமெரிக்கா அதற்குக் கொஞ்சம் சமரசமான பதில் கொடுக்க வேண்டும் என்று விரும்பினர். அமெரிக்கா சில நாட்களுக்கு முன்பு ஈரானுடன் பேச்சு வார்த்தைக்குத் தயார் (சில விதிமுறைகளுக்கு உட்பட்டு) என்று சொன்னது இதன் விளைவே என்று கருதப்படுகின்றது.
    மேலும், ஈராக்கில் நிலவரம் படு மோசமாக இருக்கும் இன்றைய நிலையில் சேனி, ரம்ஸ்பெல்டு கோஷ்டியினரின் பேச்சுக்கள் புஷ்ஷிடம் எடுபடுவதில்லை என்றும், முக்கிய முடிவுகளில் அவர்கள் ஓரம்கட்டப் படுகிறார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது. இக்கட்டுரை இவ்விரண்டு நிகழ்வுகளையும் தொடர்புபடுத்தி, எப்படி ஈரான் ஒரு சமரச சூழலுக்கு வருவதற்கு இந்த நிலையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.

    Cheney still has strong allies in the administration, particularly Defense Secretary Donald Rumsfeld. But the Pentagon is increasingly seen as the source of problems rather than solutions for this administration as Iraq goes from bad to worse, with the military, financial and moral costs of the American effort mounting toward unbearable levels.
    ...
    Bush is more open to a diplomatic outcome for the Iranian crisis than he was on Iraq. He knows he can muster no significant international support for intervention in Iran. But the Iranians have the capacity to bring about the return of Dick Cheney to policy dominance if they continue to overplay their hand.

  3. மால்டா மாறுகிறது: இத்தாலிக்கும் ஆப்பிரிக்க நாடுகளான டுனிஷியா, லிப்யா ஆகியவைகளுக்கும் மத்தியிலான மெடிட்டரேனியன் கடலில் இருக்கும் சின்னஞ்சிறு தீவு நாடான மால்டாவில் குடியேற்றப் பிரச்னை கடுமையாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இத்தாலி செல்ல விரும்பி படகேறும் ஆப்பிரிக்கர்கள் தொலைந்து போயோ, படகு பழுதாகியோ, மால்டாவில் தரையிறங்கி விடுகிறார்கள். நான்கு லட்சம் பேர்களே கொண்ட இந்த நாட்டில் இவர்கள் வரவேற்கப்படுவதில்லை. மாறாக வந்தவுடன் நாற்பத்தி ஐந்து நாட்கள் கட்டாய சிறைத்தண்டனை (மோசமான சூழலில்) அனுபவிக்க வைக்கப்படுகிறார்கள். அதன் பிறகும் கடும் சமுதாயப் புறக்கணிப்புடன் வாழ வேண்டிய சூழலில் உள்ளனர்.

    மால்டா நாட்டு மக்களோ, ‘இவர்கள் எங்களுக்குத் தேவையில்லை, இங்கே வந்தது அவர்களது தவறு’ என்ற ரீதியில் வெளிப்படையான இனவாதம் பேசுகிறார்கள்.

    கட்டுரையிலிருந்து:

    Nearly all were aiming for Italy and mainland Europe. But when their skiffs foundered or ran out of gas, they found themselves in a nation of just 400,000 people, more densely populated than Bangladesh, where families have known each other for generations and people from the next village are considered outsiders.
    "There is a feeling of 'My God, we are being invaded!' " said Katrine Camilleri, a lawyer with the Jesuit Refugee Service, which aids the boat people. "It's becoming more and more acceptable for people to openly say, 'We don't want them.' "
    ...
    We don't want a multicultural society," said Martin Degiorgio, a leader of the Republican National Alliance, an anti-immigrant group formed last year. "Haven't you seen the problems it has brought to France and Britain?"


  4. ஃபுட்பால் எனப்படும் சாக்கர்: காற்பந்து உலகக்கோப்பை வந்தே விட்டது. எனக்கு காற்பந்துப் போட்டியில் அவ்வளவு ஆர்வமில்லை என்றாலும், இந்த உலகக் கோப்பைப் போட்டிகளை மட்டும் தவறாமல் பார்ப்பேன்.

    இன்றைய போஸ்டில் இப்போட்டிகளை ஒரு சுவாரசியமான கோணத்தில் அணுகியிருக்கிறார்கள். வாஷிங்டனில் இருக்கும் (விளையாடும் நாடுகளின்) தூதரகங்களின் அதிகாரிகளைப் பேட்டி கண்டு அவர்கள் கருத்துக்களைக் கேட்டிருக்கிறார்கள். சில பதில்கள் diplomatic-ஆக உள்ளன. மற்றவை all is fair in love, war and football என்ற ரகத்தில் உள்ளன.

    கட்டுரையிலிருந்து:

    Q: Okay, we don't want to provoke an international incident, but what team would you least like to see win the World Cup?
    Argentina: Oh, I can't answer that. It is not a question for a diplomat.
    Brazil: Argentina, for sure. I'm sure if you ask an Argentinian, they will say Brazil. Our countries are good friends which is probably why the rivalry is so strong.



மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

7 Comments:

Blogger ROSAVASANTH said...

இந்து மட்டும் அப்படி சொல்லவில்லை. எல்லா பத்திரிகைகளும், தொலைக்காட்சியிலும் முதலில் அப்படித்தான் சொன்னார்கள். அடுத்த நாள்தான் கொக்கேன் இல்லை விஷம் என்று கதை மாறியது. தவறு பத்திரிகைகளினுடையது என்று தோன்றவில்லை, விசாரணை செய்தவர்கள் அளித்த செய்தியினுடையதாக இருக்கலாம்.

June 04, 2006 12:48 PM  
Blogger Srikanth Meenakshi said...

ரோசா, மற்ற பத்திரிக்கைகள் செய்திருந்தாலும், அது ஹிந்து செய்ததை நியாயப்படுத்தாது. நான் அதை மட்டும் சுட்டிக் காட்டியதற்கு நான் அதை மட்டும் வாசித்தது தான் காரணம். என்னைப் பொறுத்த வரை இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்த ஒரு மருத்துவரோ, போலீஸ் அதிகாரியோ அதிகார பூர்வமாக ஒரு தவறான தகவலைத் தந்திருந்தால் நான் பத்திரிக்கையை (அல்லது 'களை') குறை சொல்ல மாட்டேன். மாறாக, இவர்களே ஏதோ கண்டுபிடித்தாற்போல ஒரு சந்தேகமான தகவலைச் செய்தியாக வெளியிட்டது தான் எரிச்சலூட்டியது.

மேலும், ஹிந்துவில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட 'snorting cocaine' என்ற பதமும் கடுப்படித்தது. 'Drug abuse' என்று சொல்லாமல் இப்படிச் சொன்னது வெறும் sensationalism ஆகத் தான் தோன்றியது.

நன்றி.

June 04, 2006 2:56 PM  
Blogger Jayaprakash Sampath said...

ஆமாம். ஏஜென்ஸி முதல்கொண்டு எல்லாரும் அப்படித்தான் சொன்னார்கள். அடுத்த நாள், எல்லாரும் பல்டி அடித்தார்கள். ஐபிஎன் லைவ் தளத்தில், போய் இந்த விவகாரத்தின் டைம்லைனை வாசித்தால், மணிக்கொருதரம், வெவ்வேறு வகையான செய்திகள் வந்தவண்ணம் இருந்தது தெரியவரும்.

ஏகப்ப்பட்ட ஊகங்கள், வதந்திகள், சந்தேகங்கள். இதிலே ஒதுக்க முடியாத ஒரே ஒரு வதந்தி, ப்ரமோத் மகாஜனின் கட்டுப்பாட்டில் இருந்ததாகச் சொல்லப்படுகிற கட்சியின் நிதி மற்றும் சொத்துக்களுக்கும், நடக்கிற குழப்பத்துக்கும் இருக்கும் தொடர்பு.

பார்க்கலாம்...

June 04, 2006 2:56 PM  
Blogger வஜ்ரா said...

//
வதந்தி செய்தியாகலாம், செய்தி வதந்தி ஆகலாமா?
//

ஹிண்டு பத்திரிக்கைக்கு ப.ஜ.க மேல் ஒரு "அலாதி" பிரியம்.

(பொதுவாக இந்தியப் பத்திரிக்கைகள் இப்படி "அலாதி" பிரியத்தை வெளிப்படுத்துவது தெரிந்தது தானே.)

ஹீரோவா, வில்லனா?:

சந்தேகமே இல்லை. சாவெஸ், கம்யூனிஸ்டு தானே, வில்லன்தான். கம்யூனிசத்தால் உலகில் வில்லனைத் தவிர வேறு யாரையும் உருவாக்க முடியாது.

அமேரிக்கா என்றவுடன் காலில் வென்னீர் ஊற்றியது போல் குதிக்கும் நமது இடதுசாரிகள் இந்த விஷயத்தை நிச்சயம் "வெள்ளையடிப்பார்கள்" சீய், இருட்டடிப்பார்கள்.

June 04, 2006 3:58 PM  
Blogger Boston Bala said...

Two of the articles from the best of the british media...

The world according to Chávez: Guardian Unlimited | Special reports | Interview with Venezuelan Premier Chávez

Guardian Unlimited | Comment is free | Not a difficult choice at all

June 04, 2006 6:57 PM  
Blogger Srikanth Meenakshi said...

BB, Gracias!

June 04, 2006 7:15 PM  
Blogger வஜ்ரா said...

பாஸ்டன் பாலா அவர்களே,

"கார்டியன்" - "best of the british media" என்பது யாருடய கருத்து?

June 05, 2006 3:38 AM  

Post a Comment

<< Home