<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d591562645360627291', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Saturday, May 27, 2006

சண்டே போஸ்ட் - 15

முதலில்...

நேற்று 'Water' திரைப்படம் பார்த்தேன். இந்தியாவில் விதவைகள் நேர்கொள்ளும் கடுமையான குடும்ப, சமூகப் புறக்கணிப்புகளை சித்தரிக்கும் வகையில் ஒரு அருமையான திரைப்படம் எடுக்க முடியும். இது அந்தப் படம் அல்ல. இந்த சமூக அவலத்தின் ஒரு குறிப்பிட்ட கொடூர முகத்தை மட்டும் ஒரு வசீகரமான ஒன்றே முக்கால் மணி நேர package-ஆகத் தயாரித்திருக்கிறார் தீபா மேத்தா. சுத்தமான அக்மார்க் நெய்யினால் செய்யப்பட்ட export quality material. பொத்தாம் பொதுவாக இந்தியாவின் சமூகக் கேடுகளைக் குறித்து எடுக்கப்படும் படங்களை எதிர்க்கும் ultra தேசியவாதி இல்லை நான். பல வருடங்களுக்கு முன் Bandit Queen திரைப்படம் வெளியான போது, அதற்கு ஆதரவாக நான் எழுதிய விமர்சனம் இப்பொழுதும் படிக்கக் கிடைக்கிறது. ஆயினும், இத்தகைய படங்களில் ஒரு அறிவு நேர்மை வேண்டும். இந்தியாவில் எந்த பிரச்னையுமே கறுப்பு-வெள்ளை இல்லை. இடைப்படும் shades of grey வண்ணங்களை வெளிக்கொண்டு வராமல், மட்டையடியாக இப்படி ஒரு படத்தை எடுத்தால், அதை எடுத்தவரின் நோக்கங்களை சந்தேகப்படத்தான் வைக்கிறது.

மேலும், தீபா மேத்தா நேர்முகங்களில் சொல்லியிருப்பனவற்றிற்கும், படத்தில் வருபவைகளுக்கும் முரண்பாடுகள் உள்ளன. உதாரணம், படத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வரும் வாக்கியங்கள் (படத்தில் வரும் வசனங்களும்) மனு நீதியை ஹிந்து மதத்தின் புனிதச் சட்டங்கள் என்று குறிக்கிறது. ஆனால், தீபா ஒரு நேர்முகத்தில் இவ்வாறு சொல்கிறார்:

CS: Is the traditional treatment of widows a fair interpretation--or a misreading of-ancient Hindu writings?

Mehta: It's ingrained in a moral code. It's not Hinduism, it's Manu-a moral text…Religion is a very easy ploy because it is so easy to use for personal benefit.

படத்தில் நல்ல அம்சங்கள் சில: ரஹ்மானின் பின்னணி இசையும் சரி, பாடல்களும் சரி மிக அருமை. சீமா பிஸ்வாஸ் பிரமாதமாக நடித்திருக்கிறார். மஹாத்மா காந்தி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் மக்களை எவ்வளவு ஆகர்ஷித்திருந்தார் என்பது நன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

நிற்க.

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:


 1. தொடரும் கொலைகள்: ஈராக்கில் அமெரிக்கப் படைவீரர்கள் நிகழ்த்தும் அராஜகச் செயல்கள் வளர்ந்து வருகின்றன என்று சொல்வது பொருந்தாது. மாறாக, அந்த அராஜகச் செயல்கள் குறித்த செய்திகள் வெளியே வருவது (அமெரிக்காவில் போருக்கான மக்கள் ஆதரவு குறையக் குறைய) அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வந்த செய்தி: சென்ற நவம்பர் மாதம், ஈராக்கின் ஹடிதா நகரில் ஒரு ரோட்டோர குண்டு வெடிப்பில் ஒரு அமெரிக்கப் போர் வீரன் இறக்க, மற்ற வீரர்கள் அதற்குப் பழி வாங்கும் விதமாக, இருபத்தி நான்கு அப்பாவி மக்களைக் (பெண்கள், குழந்தைகள் உட்பட) கொன்று குவித்தனர். இந்த நிகழ்ச்சி பல விசாரணைகளுக்குப் பின் அமெரிக்கப் படையினாலேயே ஊர்ஜிதப்படுத்தப் பட்டிருக்கிறது.

  இந்த நிகழ்ச்சியும் மறக்கப்படும். அமெரிக்க நீதி மன்றங்களில் அல்லது ராணுவ நீதி மன்றங்களில் ஒப்புக்கு ஒரு வழக்கு நடத்தப்பட்டு, போரின் மன அழுத்தத்தால் வீரர்கள் உணர்ச்சி வசப்பட்டு விட்டனர் என்ற ரீதியில் ஒரு குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்படும். Rule of law பின்பற்றப்பட்டு விட்டதாக அமெரிக்க மக்கள் தமக்குத் தாமே தட்டிக் கொடுத்துக் கொள்வார்கள்.

  என்ன நடக்க வேண்டும்? குற்றம் உறுதி செய்யப்பட்டு விட்டது. குற்றம் நடந்தது ஈராக்கில். இறந்தவர் ஈராக்கியர். இந்த அமெரிக்க வீரர்கள் ஈராக்கிடம் ஒப்படைக்கப் படவேண்டும். ஈராக்கிய நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு ஈராக்கிய தண்டனை வழங்கப்பட வேண்டும். நடக்குமா? வாய்ப்பே இல்லை!

  கட்டுரையிலிருந்து:

  Aws Fahmi, a Haditha resident who said he watched and listened from his home as Marines went from house to house killing members of three families, recalled hearing his neighbor across the street, Younis Salim Khafif, plead in English for his life and the lives of his family members. "I heard Younis speaking to the Americans, saying: 'I am a friend. I am good,' " Fahmi said. "But they killed him, and his wife and daughters."

  The 24 Iraqi civilians killed on Nov. 19 included children and the women who were trying to shield them, witnesses told a Washington Post special correspondent in Haditha this week and U.S. investigators said in Washington. The girls killed inside Khafif's house were ages 14, 10, 5, 3 and 1, according to death certificates.

 2. சூடேறும் பூமி: சர்ச்சை: உலகளவில் உஷ்ணம் அதிகமாவது குறித்த அல் கோரின் திரைப்படம் Inconvenient Truth வெளியாகி இருக்கும் இத்தருணத்தில், போஸ்ட் இந்த விஷயத்தின் பின்னிருக்கும் சர்ச்சையை மீண்டும் கிளறி இருக்கிறது. படித்து முடித்ததும் குழப்பம் தான் மிஞ்சுகிறது.

  பூமி நிரந்தரமாக சூடேறுகிறதா?
  மனிதர்களின் செயல்கள் அதற்குப் பொறுப்பா?
  மனிதர்கள் தமது செயல்களை மாற்றிக் கொள்வதன் மூலம், இதை நிவர்த்தி செய்ய முடியுமா?

  என்ற மூன்று கேள்விகளுக்கும் முறையா, இல்லை, இல்லை, முடியாது என்று பதில் சொல்லும் சில சந்தேகவாதிகளைப் பேட்டி கண்டு இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. நீளமான கட்டுரை.

  கட்டுரையில் மறுக்க முடியாத பத்திகள்:

  LET US BE HONEST about the intellectual culture of America in general: It has become almost impossible to have an intelligent discussion about anything.

  Everything is a war now. This is the age of lethal verbal combat, where even scientific issues involving measurements and molecules are somehow supernaturally polarizing. The controversy about global warming resides all too perfectly at the collision point of environmentalism and free market capitalism. It's bound to be not only politicized but twisted, mangled and beaten senseless in the process. The divisive nature of global warming isn't helped by the fact that the most powerful global-warming skeptic (at least by reputation) is President Bush, and the loudest warnings come from Al Gore.

  Human beings may be large of brain, but they are social animals, too, like wolves, and are prone to behave in packs. So when something like climate change comes up, the first thing people want to know is, whose side are you on? All those climatic variables and uncertainties and probabilities and "forcings" and "feedback loops," those cans of worms that Bill Gray talks about, get boiled down to their essence. Are you with us or against us?

 3. இந்தியாவின் எதிர்காலம்: பிரபல எழுத்தாளர் Ian Macdonald இந்தியாவை மையமாக வைத்து ஒரு அறிவியல் புனைகதை எழுதி இருக்கிறார். இன்னமும் நாற்பத்தியொரு வருடங்களில் இந்தியாவின் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவின் போது நாடு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறார்.

  பயமுறுத்துகிறார்.

  மதிப்புரையிலிருந்து:

  In River of Gods , the lives of nine characters, including a police officer, a journalist, an astronaut and the aide to a powerful politician, intertwine as India veers toward an apocalypse caused by a reckless search for cheap power. MacDonald predicts that India will be divided into several warring states, each with sophisticated robot armies. Gender switching -- and the abandonment of gender entirely -- will be commonplace. Artificial intelligence will be advanced enough so that machines will pass for humans most of the time.மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger Vajra said...

இந்தியாவின் எதிர்காலம்: பிரபல எழுத்தாளர் Ian Macdonald

//
MacDonald predicts that India will be divided into several warring states,
//

மற்ற எல்லாவற்றையும் சற்றே...மிகைப்படுத்துதல் என்று (with a pinch of salt) எடுத்துக் கொள்ளலாம்...

இந்த வரி தான் கொஞ்சம், சீரியஸான விஷயம்...இதை உண்மையாக்குவதற்கு பலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்...துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டு மைந்தர்களே இதற்கு துணை போவது கேவலமான விஷயம் (முக்கியமாக மார்க்ஸ்வாதிகள், மாவொவாதிகள், இஸ்லாமியத் தீவிரவாதிகள், இஸ்லாத்திற்கு முன்னால் நம் சகோதரர்களாக இருந்து 1947ல் நாட்டைக் கூறு போட்டு சந்தோஷப்பட்ட இன்றய பாகிஸ்தானியர்கள்..).

வஜ்ரா ஷங்கர்.

May 28, 2006 4:02 PM  
Blogger Srikanth said...

ஷங்கர்,

உண்மை தான். அவரது அறிவியல் புனைவு, அரசியல் புனைவு ஆகி விடுமோ என்பது யோசிக்க வேண்டிய விஷயம்...

உங்களது 'குஜராத்...' பின்னூட்டத்திற்கும் நன்றி!

ஸ்ரீகாந்த்

May 29, 2006 10:31 AM  
Blogger GeronimoThrust said...

Annae,

Thanks for the review of teh Sunday Post.. Are you planning on buying Ian's work?

May 30, 2006 6:33 PM  

Post a Comment

<< Home