<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, May 07, 2006

சண்டே போஸ்ட் - 12

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:


  1. ஆப்பிரிக்கா என்ற ஒரு மருந்துப் பரிசோதனைக் கூடம்: சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு அநியாயம் குறித்த உண்மைகள் இப்பொழுது முழுவடிவம் பெறத் துவங்கி இருக்கின்றன. 1996-ஆம் ஆண்டு நைஜீரியாவில் ஒரு வகையான மூளைக் காய்ச்சல் நோய் பரவியது. குறிப்பாகக் குழந்தைகளைக் குறி வைத்த இந்நோயைக் குணப்படுத்த ஃபைசர் (pfizer) என்ற பன்னாட்டு மருந்து நிறுவனம் குழந்தைகளின் மீது பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படாத ஒரு மருந்தினைப் பயன்படுத்தியது. இம்மருந்தினைப் பிரயோகிக்க நைஜீரிய அரசாங்கமும் குழந்தைகளின் பெற்றோர்களும் உடன்பாடு அளித்ததாக அந்நிறுவனம் கூறினாலும், அரசாங்க ஒப்புதலாகக் காண்பிக்கப்பட்ட கடிதம் போலி என்பதும், பெற்றோர்களிடம் பெற்ற ஒப்புதல் வாய்மொழியானது என்றும் இப்பொழுது தெரிய வந்துள்ளது.

    ஃபைசர் நடத்திய பரிசோதனையில் ஐந்து குழந்தைகள் இறந்தன என்றும், சில குழந்தைகளுக்கு ஆர்த்ரைடிஸ் நோய் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. மருந்துக்கும் இவைக்குமான தொடர்புகள் அறிவியற்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இப்பரிசோதனைகள் சர்வதேச சட்டத்தை மீறியவை என்பதில் சந்தேகமில்லை.

    இந்த நிகழ்ச்சி குறித்து புலனாய்வுச் செய்தியாக வாஷிங்டன் போஸ்ட் 2000த்தில் ஒரு கட்டுரை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து நைஜீரிய அரசாங்கம் உருவாக்கிய ஆய்வுக்குழுவின் அறிக்கை பல வருடங்கள் முடக்கப்பட்டிருந்தது. இன்று போஸ்ட் அதை ரகசியமாகக் கண்டெடுத்திருக்கிறது.

    சர்வதேச மருந்து கம்பெனிகளின் இத்தகைய பரிசோதனைகளுக்கு இந்திய கிராமங்களும் களன்களாக இருப்பதை சமீபத்திய வயர்ட் சஞ்சிகைக் கட்டுரை சுட்டிக்காட்டியது நினைவிருக்கலாம்.

    இன்றைய கட்டுரையிலிருந்து:

    Pfizer's experiment was "an illegal trial of an unregistered drug," the Nigerian panel concluded, and a "clear case of exploitation of the ignorant."

    The test came to public attention in December 2000, when The Post published the results of a year-long investigation into overseas pharmaceutical testing. The news was met in Nigeria with street demonstrations, lawsuits and demands for reform.

    Pfizer contended that its researchers traveled to Kano with a purely philanthropic motive, to help fight the epidemic, which ultimately killed more than 15,000 Africans. The committee rejected that explanation, pointing out that Pfizer physicians completed their trial and left while "the epidemic was still raging."

  2. வரிச்சட்டங்களும் சமத்துவ சமுதாயமும்: 'கம்யூனிசம்', 'சோஷலிசம்' போன்ற வார்த்தைகளைக் கெட்ட வார்த்தைகளாகக் கருதும்படி அமெரிக்க மக்கள் நாள்தோறும் போதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், இந்நாட்டின் வரிச்சட்டங்களிலும் ஒரு சோஷலிச சாயல் இருக்கத்த்தான் செய்கிறது. ஏழைகள் குறைந்த சதவிகிதமும், பணக்காரர்கள் அதிக சதவிகிதமும் தான் (theoretically) வரி செலுத்துகிறார்கள். இருப்பினும், இவ்வரிச்சட்டங்களில் அடைக்கப்படாத ஓட்டைகளும், பணக்காரர்களுக்குச் சாதகமாக உருவாக்கப்படும் ஓட்டைகளும், பொருளாதாரத்தின் வரிச்சுமையை கீழ், மத்திய தர வர்க்கத்தினரே பெரிதும் உணரும்படி வைத்துள்ளன. மேலும், இத்தலையங்கம் சுட்டிக் காட்டுவது போல், புஷ் அரசாங்கம் இந்த நிலைமையை இன்னமும் மோசமாக்கும் விதமாக வரிச்சலுகைகளை பெரும் மற்றும் மிகப் பெரும் பணக்காரர்களுக்கு அள்ளி வழங்கி இருக்கிறது.

    இக்கட்டுரை அமெரிக்கப் பொருளாதாரத்தில் சமச்சீரின்மை குறித்த தலையங்கத் தொடரில் ஐந்தாவது கட்டுரை.

    Our chart shows the combined effect of the Bush tax cuts. It leaves no doubt that the tax system has become less progressive, even as the need for progressivity has grown. Over the past quarter of a century, the tide of the American economy has failed to lift the bottom half of society, damaging the faith on which capitalism depends. Seven out of ten say the nation is headed in the wrong direction even though economic growth is galloping, and many are hostile to trade, immigration and big business. But rather than crafting a tax policy that responds to those sentiments, the administration has done the opposite.

  3. United we fall: செப்டம்பர் பதினோராம் தேதி கடத்தப்பட்ட விமானங்கள் நான்கு. அவற்றுள் மூன்று தமது இலக்கைச் சென்றடைந்தன. அமெரிக்கப் பாராளுமன்றத்தைக் குறிவைத்து வந்து கொண்டிருந்த நான்காவது விமானம் அதன் பிரயாணிகளால் பென்சில்வேனியாவின் காட்டு வெளியில் தரையிறக்கப்பட்டது, இல்லை, தரையில் மோதப்பட்டது. இந்த நான்காவது விமானத்தின் கதையைச் சொல்லும் United 93 என்ற படம் சென்ற வாரம் வெளியானது. மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக, இதுவரை வந்துள்ள விமரிசனங்கள் கூறுகின்றன.

    அவ்விமர்கர்கள் வரிசையில் ஜார்ஜ் வில்லும் சேர்ந்து கொள்கிறார்.

    In most movies made to convey dread, the tension flows from uncertainty about what will happen. In "United 93," terror comes from knowing exactly what will happen.
    ...
    To the long list of Britain's contributions to American cinema -- Charles Chaplin, Bob Hope, Cary Grant, Stan Laurel, Deborah Kerr, Vivien Leigh, Maureen O'Hara, Ronald Colman, David Niven, Boris Karloff, Alfred Hitchcock and others -- add Paul Greengrass, writer and director of "United 93." He imported into Hollywood the commodity most foreign to it: good taste.

  4. தீபா மேத்தாவின் 'Water': இந்து மதத்தின் விதவைகள் குறித்து எடுக்கப்பட்ட 'வாட்டர்' திரைப்படம் வாஷிங்டனின் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இதன் தொடர்பாக, தீபா மேத்தாவைப் பேட்டி கண்டு எழுதப்பட்டுள்ள கட்டுரை.

    Mehta had been through a public ordeal with "Fire," the first movie in her "trilogy of elements." "Fire," which involved two women who gradually develop a lesbian relationship, inflamed Hindu fundamentalists. Protesters trashed theaters when the film opened in 1997.

    Yet Mehta's next installment in the trilogy, "Earth," was thoroughly embraced by her native country. Based on Bapsi Sidhwa's "Cracking India," the film chronicles the ethnic violence that emerged during the 1947 partition of India that created Pakistan. That movie was so highly regarded that India -- which has the busiest film industry in the world -- submitted "Earth" as its entry in the Oscar race.

    "I'm telling you," Mehta says with a deep, smoky laugh, "India's very confusing."



மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

4 Comments:

Blogger வஜ்ரா said...

நல்ல பதிவு,

1. ஆப்பிரிக்கா என்ற ஒரு மருந்துப் பரிசோதனைக் கூடம்:

இந்தியாவில் பல மருந்துப் பரிசோதனைகள், தெரியாத கிராம மக்களிடயே பரிசோதிக்கப் படுகிறது. Tuberculosis, Malaria போன்ற வியாதிகளுக்கு. ஆனால், இன்நிருவனங்கள் போலி ஆவனங்களைக் காட்டி பரிசோதனையில் ஈடுபடுகிறது என்பதை நிரூபிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முக்கிய காரணம், இந்திய அறிவியலாளர்கள் இவர்களுடன் துணை போவது. மக்களுக்கு தாம் படித்த அறிவியல் துணையாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செயல்படுகிறார்கள்.

ஆனால், Pfizer போல் வெள்ளைகாரனைத்தவிர மற்றவரெல்லாம் சோதனை மிருகங்கள் தான் என்று ஒரு Hidden agenda உடன் செயல் படும் நிருவனங்கள் எத்தனயோ?

தீபா மேத்தாவின் 'Water':

படம் பார்த்தேன், அவர் மனு ஸ்ம்ருதி தான் இந்தியாவில் நிலவும் சட்டம் போல் தொடக்கத்திலும் முடிவிலும் காட்டுவது அபத்தத்திலும் அபத்தம். 1940 களில் நடக்கும் கதையில், கதாநாயகணின் தகப்பனாரே தன் காமப் பசி அடங்க விதவைகளைப் பயன்படுத்துவதும், அதற்கு விதவைக் கூடம் நடத்தும் கிழட்டு பெண் துணையாக இருப்பதும் போல் காட்டபடுவதும், குழந்தை விதவைகள் - அவர்களுக்கு இந்த கூடத்தை விட்டால் வேறு நாதி இல்லை என்பது போல் சமுதாயம் இயங்கியதாகக் காட்டப்படுவதும், கொஞ்சம் ஓவர் தான். Fire அதைவிட மகா கூத்து, சமகாலத்தில் நடக்கும் கதையில், Lesbianism த்தில் ஈடு படும், இரு மங்கயரில் ஒருவர் பெயர் சீதா, (இது கொஞ்சம் நக்கல் அதிகம் தானே!!)

இந்து சமுதாயத்தில் நல்லவைகளே இல்லையா? என்ற கேள்வியய் தவிர மெஹ்தா படங்கள் வேறு கெள்விகள் எழுப்புவதாகத் தெரியவில்லை.

இதை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் இந்து அடிப்படைவாதிகள் என்ற முத்திரைகுத்தப் படுவார்கள் (அல்லாஹ்பவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் காபிர்கள் என்று முத்திரை குத்தப்படுவது போல்!).

உலகில் எந்த அமைப்பு இந்து சமுதாயத்திற்காகப் போராடுகிறதோ அதை உடனடியாக Hindu Fundamentalist (இந்து அடிப்படைவாத) அமைப்பு என்று முத்திரைகுத்தப்டுவது ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது.

"தேடிப்பார்த்து, உலகில் இருக்கும் ஏதாவது ஒரு இந்துக்களுக்காகப் போராடும் அமைப்பு இன்னும் இந்து அடிப்படைவாதிகள் என்ற முத்திரை குத்தப்படாமல் இருந்தால் சொல்லவும் என்சார்பில் 100$ இனாமாக அளிக்கபடும்." என்று, Newsinsight என்ற இதளில் அரவிந்த் குமார் என்ற பத்திருக்கையாளர் கேட்டிருக்கிறார்.

blogger மட்டுமே பின்னுட்டம் இடும்வகையில் இருந்தும் Word verfication ஏன்? தூக்கி விடலாமே?

ஷங்கர்.

May 07, 2006 3:54 PM  
Blogger Srikanth Meenakshi said...

ஷங்கர், நன்றி.

//blogger மட்டுமே பின்னுட்டம் இடும்வகையில் இருந்தும் Word verfication ஏன்? தூக்கி விடலாமே?
//

செய்யலாம் தான், ஆனால் டோண்டு மாமா திட்டுவாரோ என்று பயமாக இருக்கிறத்Hஊ ;-)

May 08, 2006 9:08 AM  
Blogger Sivabalan said...

நல்ல பதிவு!! நன்றி!!

May 08, 2006 9:44 AM  
Blogger வஜ்ரா said...

பின்னுட்டத்தை வெளியிட்டதற்கு நன்றி,
//
/blogger மட்டுமே பின்னுட்டம் இடும்வகையில் இருந்தும் Word verfication ஏன்? தூக்கி விடலாமே?
//

செய்யலாம் தான், ஆனால் டோண்டு மாமா திட்டுவாரோ என்று பயமாக இருக்கிறத்Hஊ ;-)
//

பரவாஇல்லைங்க தூக்கிவிடுங்க...சரியான தலைவலி அது...

ஷங்கர்.

May 12, 2006 8:45 AM  

Post a Comment

<< Home