<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Thursday, May 11, 2006

பேச இயலாதவர்களின் மொழிப் பற்று

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது.

வாஷிங்டன் நகரத்தில் இருக்கும் காலடட் பல்கலைக்கழகம் காது கேளாதோர் மற்றும் பேசவியலாதவர்களுக்கான பிரத்யேக பல்கலைக்கழகம். நாடெங்கிலும் உள்ள இத்தகைய பல்கலைக்கழகங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இந்த அமைப்பு, கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

சர்ச்சைகள் இங்கே புதிதல்ல. 1987ஆம் ஆண்டு தலைவராக இருந்த லீ என்பவர் பதவி விலகிய போது, ஒரு காது கேளாதவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்களிடையே எழுந்தது. பல்கலைக்கழகச் செயலாளர்கள் அக்கோரிக்கையை மீறி ஒரு ஊனமில்லாதவரை நியமித்த போது, பெரும் போராட்டங்கள் நடந்தன - நாடெங்கிலும் இருந்து மக்கள் திரண்டு வந்துப் போராடி, மாணவர்களது கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதில் வெற்றி கண்டனர்.

அப்படி அன்று நியமிக்கப்பட்ட கிங் என்பவர் இப்பொழுது பதவி விலகப் போகிறார். புதிய தலைவராக ஜேன் ஃபெர்னாண்டஸ் என்பவர் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவரும் காது கேளாதவரே. இருப்பினும் ஆச்சரியம் என்னவென்றால் இவரது நியமனத்தையும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்க்கின்றனர். காரணம், இவர் பிறவி ஊமையாக இருந்த போதும், சிறு வயது முதலே அறிவியற் சாதனங்கள் மற்றும் பயிற்சி மூலமாக ஓரளவுக்கு கேள்வி மற்றும் பேச்சுத் திறனை வளர்த்துக் கொண்டிருக்கிறார். (இவர் பேசுவதை நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன், ஓரளவுக்குப் புரிகிறது). மேலும், உதட்டசைவினை கவனிப்பது மூலமும் பேசுவதை அறிய இவரால் முடியும்.

இவரது நியமனத்தை இதற்காக எதிர்க்க வேண்டுமா, சற்று மிகையான எதிர்வினையாக இருக்கிறதே என்று தோன்றலாம். ஆனால், மாணவர்கள் முன்வைக்கும் முக்கிய வாதம் அவர்களது சங்கேத மொழியைப் பற்றியது. ஜேன் தனது இருபத்தி மூன்றாவது வயதில் தான் சங்கேத மொழி பயிலத் துவங்கினார். அவரது 'தாய் மொழி' சங்கேத மொழி இல்லை. ஆதலால், இவரது தலைமையில் இம்மொழியின் எதிர்காலம் குறித்தும், அம்மொழி சார்ந்த வாழ்வியலின் எதிர்காலம் குறித்தும் மாணவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஊமைப் பெற்றொர்களுக்குப் பிறந்து, ஊமையாகப் படித்து வளர்ந்து, ஊமையை மணம் புரிந்து, ஊமைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே தமது உபகலாசார வாழ்வியலாகக் கருதும் இவர்களுக்கு அந்த வாழ்க்கை முறையின் ஆதாரமான சங்கேத மொழி வழக்கொழியக் கூடுமோ என்ற கவலைப் பிரதானமாக இருக்கிறது.

ஜேன் பதவி விலகப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறார். பல்கலைக்கழகத்தின் கலாசாரத்தைத் தான் மாற்றப் போவதில்லை என்றும் சொல்கிறார்.

"There's a kind of perfect deaf person," said Fernandes, who described that as someone who is born deaf to deaf parents, learns ASL at home, attends deaf schools, marries a deaf person and has deaf children. "People like that will remain the core of the university."

என்ன நடக்கப் போகிறது என்பது போகப் போகத் தெரியும்.

இந்த சர்ச்சையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது நிலைப்பாடு சரியானதா இல்லையா என்று சொல்வதற்கு எனக்கு சற்றும் அருகதையில்லை. ஆனால், எனக்கு அவர்களது மொழிப் பற்று ஆச்சரியமாகவும், மிகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஓசை, இசை, எதுகை, மோனை, தளை, அசை என்று எந்த ஒரு செவிப்புலன் சார்ந்த விஷயமும் இல்லாத ஒரு சங்கேத மொழியை தமது கலாசாரத்தின் மையப் புள்ளியாக அவர்கள் காண்கிறார்கள் என்ற செய்தி யோசிக்க வைக்கிறது.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger Boston Bala said...

---சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது---

ஆமாம்.

பாஸ்டனில் காவல்துறை ஆணையர் பதவி விலகினார் (அயர்லாந்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டிருக்கிறார்.)

தொடர்ந்து எழும் விவாதத்தில்...

* பாஸ்டன் காவல்துறையில் இருந்தே அடுத்த கமிஷனர் தேர்ந்தெடுக்க வேண்டுமா?

* இல்லை... வெளியில் இருந்து வந்தால்தான் புத்துணர்வோடும் வித்தியாசமாகவும் செயல்படுவாரா?

* எந்த இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்? ஆப்பிரிக்க-அமெரிக்கராக இருக்க வேண்டுமா... அல்லது வன்முறை குறைவாக நிகழ்ந்தாலும் அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஐரிஷ் குடியை சார்ந்தவராக இருக்கணுமா அல்லது தற்போதையவர் பெண் என்பதால் புதிதாக அமரப்போகிறவரும் பெண்ணாகவே அமையணுமா???

விவாதிக்கிறார்கள்.

May 13, 2006 12:19 AM  
Blogger Boston Bala said...

சொல்ல மறந்தது... பொலிடிகலி சென்சிடிவ் டாபிக்கில் அடிபிழறாமல் பிரச்சினையையும் தொட்டு, முடிவும் கொடுக்காமல் நல்லா எழுதியிருக்கீங்க

May 13, 2006 12:22 AM  
Blogger Srikanth Meenakshi said...

BB, thx!

May 13, 2006 9:28 AM  

Post a Comment

<< Home