<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Saturday, December 03, 2005

சென்னை வெள்ளம்: ஒரு தூரப் பார்வை

வாஷிங்டனில் உட்கார்ந்து கொண்டு சென்னை வெள்ளச் செய்திகளை கிரகித்துக் கொள்வதற்கு ஒரு suspension of disbelief தேவைப்படுகிறது; திரைப்படங்களில் அசாதாரணமான காட்சிகளைப் பார்க்கும் போது 'இதெல்லாம் சும்மா கிராஃபிக்ஸ்' என்பது போல இருக்கிறது. வானம் பார்த்த வறண்ட சென்னையில் மழை, வெள்ளம், பின் பெரு வெள்ளம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை.


நாராயணன், பிரகாஷ், பத்ரி ஆகியோர் பிரமாதமான வெள்ளப் பதிவுகளை எழுதி வருகிறார்கள். சென்னைக்கு மிக அண்மையில் இருப்பது போன்ற பிரமை உண்டாகிறது. சன் செய்திகள், தினமணி/ஹிந்து/தினமலர் ஆகியவற்றைக் கடந்த citizen's journalism. ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்து விட்டு வந்து உட்கார்ந்து கொண்டு பதிவெழுதும் அவர்களைப் பார்க்கையில் ஒரு வகையில் கொஞ்சம் weird பொறாமையாகவும் இருக்கிறது.

இங்கு எங்களோடு இருக்கும் எனது மாமனார் நீண்ட நாள் சென்னை வாசி, விசுவாசி. சன் செய்திகள், இந்தியப் பத்திரிக்கைகள், செய்தித் தளங்கள் இவற்றைப் படிக்கும் இடையில், இடைவெளியில், இந்த வெள்ளப் பதிவுகளையும் விடாமல் படித்துக் கொண்டிருக்கிறார் - படித்து விட்டு அவர் சொல்வதையெல்லாம் பின்னூட்டமிட்டால், மூன்றாம் வலைப்பதிவுலகப் போர் துவங்கலாம். என்னதான் வெள்ளம், கஷ்டம் என்றாலும், இத்தனை நீர்ப்பெருக்கிருக்கும் சென்னையின் அலங்கோலாகலத்தைப் பார்க்காமல் இங்கு இருக்கிறோமே என்ற ஆற்றாமை அவர் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது.

இந்த வருடமாவது பொய்க்காமல் மழை வருமா என்ற வழக்கமான சந்தேகத்தில் தொடக்கம்; மழை சீக்கிரமே பெய்யத் தொடங்கியதும் நம்பிக்கை; பெரு மழை பெய்ததும் நிம்மதி; ஏரிகள் விடுவிடுவென நிரம்பத்துவங்கியதும் சந்தோஷம்; மழை வெள்ளமாகி, தெருக்கள் ஆறுகளாகத் துவங்கியதும் கவலை; வீட்டுக்குள் நீர்ப்புகுந்ததும் 'எப்போ நிற்கும் இந்த சனியன் பிடித்த மழை' என்ற எரிச்சல் - நாற்பது நாட்களில் சென்னைவாசிகள் ஒரு 180 டிகிரி மாற்றத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

யோசித்துப் பார்த்தால், வாஷிங்டனில் இருந்தாலும், ஒவ்வொரு சென்னைச் செய்தியையும் அணு அணுவாகத் தொடர்ந்து வருவதால், அதே மாற்றத்தை நாங்களும் - சென்னையில் இருப்பவர்கள் கொஞ்சம் ஈரமாக இருக்கிறார்கள், நாங்கள் உலர்ந்து இருக்கிறோம் என்ற ஒரு சின்ன technical difference-ஐக் கடந்து பார்த்தால் - அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

சென்னைவாசிகள் வீட்டிலிருக்கும் நீரை வெளியில் இறைத்து முடித்து விட்டு, அப்புறம் அடிக்க வாருங்கள். :-)

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger Narain Rajagopalan said...

யோவ், எங்க தெரு மட்டும் ட்ரையாகட்டும் அப்புறம் வரேன் அடிக்க ;))))))

December 04, 2005 3:03 AM  
Blogger ஜெ. ராம்கி said...

Appadi onnum seriouis issue ille!

(Just come back from my native! :-))

December 05, 2005 6:36 AM  
Anonymous Anonymous said...

உங்கள் "template" ல் letter-spacing: என்று தொடங்கும் வரிகளை நீக்கிவிட்டுங்கள்...

Preview கண்டபின் templateஐச் சேமிக்கவும்

December 06, 2005 2:37 PM  

Post a Comment

<< Home