<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Sunday, November 27, 2005

"பிராமணர் vs. பிராமணரல்லாதார்" - எப்படி?

"சில நேரங்களில் கருத்து சொல்லும் போது விளக்குமாறு, செருப்பு ஆகியவற்றை விட மோசமான அளவுக்கு கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. தமிழனுக்கு கொம்பு முளைத்திருக்கிறதா? என்று கேட்பது செருப்பை விட, விளக்குமாற்றை விட மோசமான கருத்தல்லவா? இந்த விவகாரத்தில் தலையிட நான் விரும்பவில்லை. தற்போது இதில் பெரிய மனிதர்கள் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது. இது எங்கு போய் முடியும் என்றால் மீண்டும் பிராமணர் - பிராமணரல்லாதோர் என்ற இயக்கத்தை வளர்க்க எங்களுக்கு பயன்படும்." - கருணாநிதி

"...சம்பந்தமேயில்லாமல் இதில் பிராமணர் - பிராமணரல்லாதோர் பிரச்னையை கொண்டு வருவது..." - மாயவரத்தான்

"இதில் பிராமணர்- பிராமணரல்லாதோர் எங்கு வந்தது." - ரவி ஸ்ரீனிவாஸ்

மாயவரத்தான், ரவி, உங்கள் பதிவுகளும், கருணாநிதி சொன்னதும் என்னை இந்தச் சம்பந்தத்தை எப்படிக் கொண்டு வர முடியும் என்று யோசிக்க வைத்தது.

இப்படிக் கொண்டு வர முடியும்:

கருணாநிதிக்கு ஆதி காலம் தொட்டே இருக்கும் ஒரு axiomatic நம்பிக்கை ஒன்று உண்டு. அது வேதங்களும், புராண, இதிகாசங்களும் மக்களுக்கு தனிமனித ஒழுக்கக்குறைவை போதிக்கின்றன என்பது. அவரது 'வாழ முடியாதவர்கள்' என்ற ஒரு சிறுகதையைப் படியுங்கள், புரியும். அதற்கு நேர் எதிராக, பண்டை தமிழ் இலக்கியங்கள், நீதிநூல்கள் ஆகியவை தனிமனித ஒழுக்க போதனைகளின் சிகரங்கள் என்ற அதே போன்ற நம்பிக்கையும் உண்டு.

இந்த குஷ்பு-சுகாசினி விஷயத்தை ஒரு தனிமனித ஒழுக்க விவாதமாக மாற்றுவது, சரியில்லை என்றாலும், சுலபம்.

ஆக,

குஷ்பு கருத்து, சுஹாசினி ஆதரவு = தனிமனித ஒழுக்கக் குறைவு
வேதங்கள், புராணங்கள் = தனிமனித ஒழுக்கக் குறைவு
வேதங்கள், புராணங்கள் = பிராமணத்துவம் = பிராமணர்
தனிமனித ஒழுக்கக் குறைவு = பிராமணர்

கற்பு = தனிமனித ஒழுக்கம்
தமிழ் இலக்கியங்கள் = தனி மனித ஒழுக்கம்
தமிழ் இலக்கியங்கள் = பிராமணரல்லாதார்.
தனிமனித ஒழுக்கம் = பிராமணரல்லாதார்

ergo,

குஷ்பு கருத்து, சுஹாசினி ஆதரவு vs. கற்பு
=
பிராமணர் vs. பிராமணரல்லாதார்.

இந்த நாலுகால் தர்க்கப் பாய்ச்சல்களுக்குத் தமிழர்களைத் தயார்ப்படுத்தவே, இந்த கருத்து வெள்ளோட்டத்தை விட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்