<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Thursday, December 01, 2005

நாணயம் விகடன்!


விகடன் பத்திரிக்கையினர் 'நாணயம் விகடன்' என்று ஒரு புதிய வர்த்தக சஞ்சிகை துவங்கி இருக்கிறார்கள். முதல் இதழை சற்று முன்பு அவர்களது வலைத்தளத்தில் வாசித்தேன். நன்றாகவே இருக்கிறது. பரிச்சயமான விகடன் நடையில் மருத்துவக் காப்பீடு, பங்குச் சந்தை, ம்யூச்சுவல் ஃபண்ட், தொழில் முனைவு, கேள்வி-பதில்கள் எனப் பல சங்கதிகள் உள்ளன.

முயற்சியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். வாழ்த்துக்கள். ஒரே ஒரு வேண்டுகோள் - பங்குச் சந்தை, பண முதலீடு போன்றவை மட்டுமின்றி, macro economics எனப்படும் பரந்த பொருளாதாரம் குறித்த செய்திகளும், கட்டுரைகளும் கூட அவ்வப்போதாவது இடம் பெற வேண்டும். அப்போதுதான், முதலீடுகளுக்கும் தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்பதும் தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கும் எல்லாத் தளத்து மக்கள் வாழ்வு நிலை உயர்விற்கும் என்ன சம்பந்தம் என்பதும் விளங்கும்.

(நடுக்குறிப்பு: இந்த முதல் இதழ் பற்றி 'உருப்படாதது' நாரயணன் உருப்படியான விமரிசனம் எழுதியிருக்கிறார். இங்கே.

கீழே சுய புராணம்.)

பங்குச் சந்தை விஷயங்களில் நான் மிகவும் திறமை வாய்ந்தவன். யாராலும் செய்ய முடியாத விஷயங்களை சர்வ சாதாரணமாக சாதித்துக் காட்டியவன்.

அமெரிக்க பங்குச் சந்தையின் பொற்காலம் 1995லிருந்து 2000 ஆண்டு வரை. எந்தக் கழிசடைக் கம்பெனியும் கொழித்துக் கொண்டிருந்த காலம். போட்ட பணம் ஆறு மாதங்களில் இரண்டு மடங்கானால் கூட பணம் போட்டவர் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்ட காலம். எல்லா பார்ட்டிகளிலும் பங்குச் சந்தைக் குறியீடுகள் மூன்றெழுத்து மந்திரங்களாக உச்சரிக்கப்பட்ட காலம்.

1995இல், நான் இங்கே வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. கையில் உபரியாய் பணம் இருப்பது கொஞ்சம் அபரிச்சயமான விஷயமாக இருந்தது. அதனால் எனது நண்பர் சார்ல்ஸ் ஷ்வாப் நடத்தும் நிறுவனத்தில் கொஞ்சம் போட்டு வைக்க முடிவு செய்தேன். ஒரு எட்டாயிரம் டாலர் தேற்றி புரோக்கர் கையில் கொடுத்த போது, 'மகனே, மார்ஜினில் மட்டும் விளையாடாதே!' என்று அன்போடு அறிவுரை கூறினார்.

ஆனால் எனது திறமைகளைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொழில்நுட்பக் கம்பெனிகளும் நாஸ்டாக்கும் ஏணியில் ஏறாமல், ஏரோப்ளேனில் ஏறிக்கொண்டிருந்தன. நானும் எனது பிரத்யேக தொழில்நுட்ப அறிவை வீணடிக்காமல் புகுந்து விளையாடினேன். வாங்கி விற்றேன், விற்று வாங்கினேன், நடுப்பக்கத்தில் வாங்கினேன், மார்ஜினில் வாங்கினேன்....

ஒரு வெள்ளிக்கிழமை, நியூயார்க் தெருவில் நடந்து கொண்டிருந்த போது, பொதுத்தொலைபேசி எடுத்து ஒரு கம்பெனியின் பங்கு விலையை விசாரித்து, அங்கேயே, அப்பொழுதே, அந்தப் ப்ளாட்ஃபாரத்திலிருந்தே அதை விற்றேன்.

2000ம் ஆண்டில் நான் ஒரு பங்குத் தரகர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்படிச் சேரும் போது மற்றொரு நிறுவனத்தில் பங்குகள் வைத்திருப்பது குற்றமாதாலால், எனது சார்ல்ஸ் ஷ்வாப் கணக்கை மூட வேண்டியிருந்தது. அவர்களோடு பேசிய போது எட்டாயிரம் போட்ட கணக்கில் எவ்வளவு மீதி இருக்கிறது என்று விசாரித்தேன்.

"நீங்கள் எங்களுக்கு இரண்டு டாலர் நாற்பது செண்ட் தர வேண்டும்."

"அப்படியா??"

"ஆமாம்"

"ம்ம்ம்..."

"Ok, பரவாயில்லை, நீங்கள் ஐந்து வருடங்கள் கணக்கு வைத்திருந்திருக்கிறீர்கள், இந்தத் தொகையை மன்னித்து விடுகிறோம். கணக்கை மூடி விடுகிறோம்."

"அப்படியா, ரொம்ப நன்றி!"

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger பரி (Pari) said...

பங்குச் சந்தை விஷயங்களில் நான் மிகவும் திறமை வாய்ந்தவன். யாராலும் செய்ய முடியாத விஷயங்களை சர்வ சாதாரணமாக சாதித்துக் காட்டியவன்.
....
எட்டாயிரம் போட்ட கணக்கில் எவ்வளவு மீதி இருக்கிறது என்று விசாரித்தேன்.
"நீங்கள் எங்களுக்கு இரண்டு டாலர் நாற்பது செண்ட் தர வேண்டும்."

முதலில் ஒட்டியிருப்பதைப் படித்ததுமே சிரிப்பு வந்துவிட்டது :)

நண்பர்களில் குறைந்தபட்சம் 10 "சாதனையாளர்களை"யாவது எனக்குத் தெரியும் :)

December 01, 2005 12:27 PM  
Blogger முகமூடி said...

இரண்டு டாலர் நாற்பது செண்ட் கணக்கை அடைய ஐந்து ஆண்டுகள் தாக்குபிடித்த திறமையை கொஞ்சம் விளக்கினீர்கள் என்றால் புண்ணியமா போகும்...

இன்னொரு திறமை/சாதனையாளன்

December 01, 2005 3:44 PM  
Blogger Srikanth Meenakshi said...

முகமூடி, இண்டெலை ஐம்பதுக்கு வாங்கி, ஐம்பத்தி மூன்றுக்கு விற்ற பிறகு அது இன்று ஐநூறு டாலரில் (split-adjusted) இருக்கிறது. இந்த சின்னச் சின்ன லாபங்களையெல்லாம், சில பெரிய இடங்களில் மொத்தமாய் விட்டேன் - RDRT கேள்விப்பட்டிருக்கிறீர்களா? IOM தெரிந்திருக்குமே? CYCH?

பல பங்குகளில் சறுக்குமரம் விளையாடியிருக்கிறேன் :-)

December 01, 2005 8:10 PM  

Post a Comment

<< Home