<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Tuesday, November 15, 2005

வே.வி.ப.த.க

நண்பர் தொலைபேசினார்.

"அண்ணே, நாளைக்கு காலம்பற கிளம்பறோம், வரீங்களா?".

"எப்போ திரும்பி வருவோம்?"

"நாளை நைட்டே..."

"கண்டிப்பா?"

"கண்டிப்பா"

"சரி, வீட்டுல மனு போட்டுப் பார்க்கிறேன்".

வீட்டில் மனு ஏற்றுக்கொள்ளப்பட, காலை எட்டு மணிக்குக் கிளம்பினோம். மூன்று பேர், ஒரு கார். செல்ல வேண்டிய இடம் தெரியாது. நான்கு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு ஓட்டலைச் சென்றடைந்தோம். அங்கு சந்தித்த மற்றொரு நண்பர், எங்கே போய்ச் சேர வேண்டும் என்று கண்டுபிடித்தார். இன்னொரு கார். தோராயமாகச் சொல்லப்பட்ட வழித்தடம், GPS, மற்றும் சொந்த அறிவு ஆகிய சந்தேகோபாஸ்தமான உபகரணங்களோடு நாங்கள் சுலபமாகத் தொலைந்து போனோம். நகரத்தின் ஒரு மர்மமான மூலையில் கொஞ்சம் திகிலோடு வேறு வழியில்லாமல் இஷ்டத்துக்கு ஓட்டிக் கொண்டிருக்கையில் திடீரென செல்ல வேண்டிய இலக்கிற்கு ஒரு திசைப்பலகை கிடைத்தது. ஒரு பொக்கிஷம் போல அதைத் தொடர்ந்து, பார்த்துப் பார்த்து ஓட்டி, கடைசியாகப் போய்ச்சேர்ந்தோம்.

காலையிலிருந்து சாப்பிடாமல் கடும் பசி. சென்ற இடத்தில் எல்லோரும் சாப்பிட்டு முடித்துக் கொண்டிருந்தார்கள். மீதி இருந்தது சில சிக்கன் பீட்சாத் துண்டுகள். எங்களில் அசைவர் ஒருவர். நானும் மற்றொருவரும் வெளியில் வந்தோம். ஒரு மேசையில் சில காலை டோநட்டுகளும் ஒன்றிரண்டு பிஸ்கெட்டுகளும் இருந்தன. காஞ்ச மாடு meets கம்பங்கொல்லை. சாப்பிட்டு முடித்து எல்லோரும் வெளியே வந்தார்கள். ஐம்பது டிகிரிக் குளிர். கோட்டெல்லாம் கொண்டு வரவில்லை உட்காருவதற்கெல்லாம் வசதியாக இடமில்லையாதலால், எல்லோருடனும் வெட வெடவென்று நடுங்கியபடி நின்று கொண்டிருந்தோம்.

சூரியன் சரியச்சரிய, குளிர் கூடக்கூட, அதே மாதிரி வெளியில் இன்னமும் ஐந்து மணி நேரம் நிற்கப்போகிறோம் என்பது அப்பொழுது தெரியவில்லை. அந்த டோநட்டுகளுக்குப் பிறகு, இரவில் ஒரே ஒரு புரிட்டோ மட்டும் தான் சாப்பிடப் போகிறோம் என்பது அப்பொழுது தெரியவில்லை. எல்லோர் வேலையும் ஒரு வழியாக முடிந்து கிளம்ப இரவு பனிரெண்டரை ஆகப்போவது அப்பொழுது தெரியவில்லை. மிகுந்த களைப்போடு வண்டி ஓட்டிக் கொண்டு வீடு போய்ச்சேரப்போவது மறுநாள் காலை ஐந்து மணிக்கு என்பதும் அப்பொழுது தெரியவில்லை.

தெரிந்ததெல்லாம், அந்தக் குளிரில் நிற்க ஆரம்பித்த சில நிமிடங்களில், ஒரு எதேச்சையான விநாடியில், சிநேகமான சுபாவத்தோடு எங்களை அணுகிய அவரைச் சந்திக்க முடிந்தது என்பதுதான்.

தலைப்பு இப்பொழுது புரிந்திருக்கும். :-)

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

16 Comments:

Blogger துளசி கோபால் said...

இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டீங்க?

சரிசரி. உங்களுக்காகவே ஒரு பதிவு போடறென்.

November 15, 2005 10:23 PM  
Blogger Jayaprakash Sampath said...

எல்லாம் சரி, நீங்களும் உங்க நண்பர்களும் போட்டோவுக்கு ·போஸ் குடுக்கிறீங்க... உங்க பக்கத்துல நல்ல செவேல்னு கருப்பு சட்டை, கருப்பு பேண்ட் போட்டுக்கிட்டு நிக்கறவர் யார்னே சொல்லலியே? :-).

-ரஜினிபிரகாஷ் :-)

November 15, 2005 10:44 PM  
Blogger ஜெ. ராம்கி said...

Wow... kalakkal Srikanth!

//இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டீங்க?

sema nakkalu!

//ரஜினிபிரகாஷ் :-)

over nakkalu!

November 15, 2005 11:17 PM  
Blogger Nirmala. said...

ஓஓஓ.... இதுக்கா?! லவ்லி! தாராளமா நிக்கலாம்... தப்பேயில்லை.

நிர்மலா.

November 15, 2005 11:27 PM  
Blogger Ramya Nageswaran said...

நல்ல ட்ரிப் தான்! என்ன பேசினீங்கன்னு தனி பதிவா?
இவர் தான் நம்ம கூல் பாபுவா?

அது சரி, அது என்ன உங்களுக்கு ஃபோன் பண்ற எல்லோருமே "அண்ணே"ன்னு பேச்சை ஆரம்பிக்கிறாங்க??

November 16, 2005 1:40 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

அது சரி, அது என்ன உங்களுக்கு ஃபோன் பண்ற எல்லோருமே "அண்ணே"ன்னு பேச்சை ஆரம்பிக்கிறாங்க??

:-).

நீங்க எல்லாம் எங்கியோ பாக்கறீங்க?
When they were with Kamal they just did not know what to do where to look, they were either so excited or found something or
someone very exciting on the opposite side :-).

that is not rajni prakash
that is rajni ramarajan p
rakash :-).

November 16, 2005 2:37 AM  
Blogger Muthu said...

someone very exciting on the opposite side :-).///////

May be engkal thanga thalaivi "Jo".
I am sure she is more attractive then kaml :-)

November 16, 2005 3:07 AM  
Blogger Srikanth Meenakshi said...

//அதென்ன அவர் மட்டும் என்னைப் பார்க்கறாரு(சரி சரி கேமராவை); நீங்க எல்லாம் எங்கியோ பாக்கறீங்க?

அங்க தாங்க அவர் நிக்கறாரு!

//என்ன பேசினீங்கன்னு தனி பதிவா?

தனிப்பதிவாப் போடற அளவுக்கெல்லாம் ஒண்ணும் பேசிக் கொட்டல...அலோ, அலோ, அவ்வளவு தான். :-)

//May be engkal thanga thalaivi "Jo".

Jo was not in the set. She had returned to India...some wedding to attend apparently :-)

November 16, 2005 8:30 AM  
Blogger Srikanth Meenakshi said...

JSri,

உங்களுக்காக இந்த ஃபோட்டோ:

http://www.flickr.com/photos/srikanthmeenakshi/63903218/

November 16, 2005 10:26 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

some wedding to attend apparently :-)

OK OK we know that

November 16, 2005 10:41 AM  
Blogger Boston Bala said...

ஆபீஸுக்கு என்ன சிக் டே-வா :P

வேலைக்காரன் விடுதலை பணக்காரன் தளபதி கழுகு என்பதுதானே தலைப்பின் விரிவு?

November 16, 2005 1:07 PM  
Blogger Srikanth Meenakshi said...

//ஆபீஸுக்கு என்ன சிக் டே-வா :P

இதெல்லாம் நடந்தது சனிக்கிழமை, புகைப்படம் நேற்று தான் கிடைத்தது...

//வேலைக்காரன் விடுதலை பணக்காரன் தளபதி கழுகு என்பதுதானே தலைப்பின் விரிவு? //

லொள்ளு தானே? :-)

November 16, 2005 1:21 PM  
Blogger Sriks said...

APA...
super :)

November 16, 2005 2:55 PM  
Blogger ஜெ. ராம்கி said...

//நீங்க எல்லாம் எங்கியோ பாக்கறீங்க?

Yes. Kamal also doesn't know where to look, when to look & how to look... :-)

November 17, 2005 2:47 AM  
Blogger அன்பு said...

some wedding to attend apparently :-)
OK OK we know that


வந்த மாதிரியே தெரியலை...மனைவி வருத்தப்பட்டிருந்தாங்க...:)

November 17, 2005 3:13 AM  
Blogger theevu said...

//GPS, மற்றும் சொந்த அறிவு ஆகிய சந்தேகோபாஸ்தமான உபகரணங்களோடு நாங்கள் சுலபமாகத் தொலைந்து போனோம்//

:)

September 03, 2006 5:50 PM  

Post a Comment

<< Home