<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Tuesday, November 22, 2005

மெல்லத் திறக்குமா கதவு?


கடந்த சில நாட்களில் வாஷிங்டனில், அமெரிக்கா ஈராக்கிலிருந்து வெளியேறுவதற்கு முகூர்த்த நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் மர்த்தா என்ற எதிர்கட்சி காங்கிரஸ் உறுப்பினர். பல வருடங்கள் அமெரிக்கப் படைகளில் பணியாற்றி, வியட்நாம் போர்க்களம் கண்டவர்; இப்பொழுது வயதானவர் என்றாலும் போர் என்று வந்தால், ஏன், எதற்கு, எங்கே போன்ற அநாவசியக் கேள்விகளெல்லாம் கேட்காமல் சங்கு ஊதி, முரசு கொட்டுபவர். இந்த ஊர் பெரிய பழுவேட்டரையர்.

ஈராக் போருக்கு தீவிர, தொடர்ந்த ஆதரவளித்த சில எதிர்கட்சி உறுப்பினர்களில் ஒருவர்.


இவர் சென்ற வெள்ளியன்று திடுதிப்பென்று அமெரிக்கா உடனடியாக ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஈராக்கில் அமெரிக்க இருப்பு எந்த ஒரு பயனையும் தராது, வெறுமனே தீவிரவாதிகளுக்குத் தீனி போட மட்டுமே பயன்படுகிறது என்றிருக்கிறார். அமெரிக்கா வெளியேறினால் ஈராக் என்ன கதியாகும் என்பது பற்றி மட்டும் மூச்.

எதிர்பார்த்தது போலவே, இதைச் சிலர் ஆதரித்திருக்கிறார்கள். மிகப் பலர் (ஹில்லரி உட்பட) எதிர்த்திருக்கிறார்கள். வாய் மெல்லுவதற்கு கொஞ்ச நாட்களுக்கு இது பயன்படும்.

என்னைக் கேட்டால், அமெரிக்கா இப்பொழுது வெளியேறக் கூடாது. ஈராக் படைகளும் சட்ட ஒழுங்கு அமைப்புகளும் ஓரளவேனும் சுதாரித்துக் கொண்ட பிறகே வெளியேற வேண்டும்.

அமெரிக்கா ஈராக் மீது பொய்யான காரணங்களுக்காகப் படையெடுத்து வென்றது என்பது தெளிவு. அந்த சமயம் அவர்களுக்குத் தேவைப்பட்டது ஓங்கி அடிக்க ஒரு நாடு - சதாம் மாட்டினான், போட்டுத் தாக்கினார்கள். ஆனால் அப்படிச் செய்ய பேரழிவு ஆயுதங்கள், அல்கைதா தொடர்பு என்றெல்லாம் பூச்சாண்டி காட்டினார்கள். அரபு ஜனநாயகம், அமைதிப் பூங்கா என்றெல்லாம் ஆசை காட்டினார்கள். இப்பொழுது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஓடுவது என்பது பொய்க் காரணங்களுக்காகப் போர்த் தொடுத்ததை விட அநியாயமாக இருக்கும். சென்ற வருடத் தேர்தலில் கெர்ரி வென்றிருந்தால் அமெரிக்க அரசாங்கத்தின் உறுதி எத்தகையதாக இருந்திருக்கும் என்பது ஐயப்பாட்டிற்குரியது. தனது கடமைகளிலிருந்து அமெரிக்கா தப்பித்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுத்தியிருக்கும். அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் நான் புஷ் வென்றதை வரவேற்றேன்.

இப்பொழுது அமெரிக்கா உடனடியாக வெளியேறினால், ஈராக் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாகும், வேறொரு சர்வாதிகாரி வரக்கூடும். இதெல்லாம் நடந்து விடுமே என்பது பற்றி கூடக் கவலையில்லை. ஆனால், இப்படி நடந்து முடிவதற்குள், நாடு ரணகளமாகும். சாதாரண மக்கள் மிகவும் துயருறுவர். ஆங்கிலேயர் வெளியேறிய பின், நாடு இரண்டான போது இந்தியா பட்ட வேதனை அறிவோம். ஈராக் உள்நாட்டுக் கலவரங்கள் அவற்றை ஒன்றுமில்லாமல் செய்து விடலாம்.

அமெரிக்கப் படைகள் தொடர்ந்து ஈராக்கில் இருந்தால், இவையெல்லாம் தவிர்க்கப்படுமா என்ற கேள்விக்கு உத்தரவாதமான பதிலில்லை. இருப்பினும், அவர்கள் வெளியேறினால் என்ன கொடுமைகள் நடக்கும் என்பது உத்தரவாதமாகத் தெரிவதால், வேறு வழியில்லை. ஆங்கிலத்தில் 'attrition warfare' என்று சொல்வார்கள். போரில் இருபக்கங்களும் இழப்புகளைச் சந்தித்து வந்தாலும், எந்தப் பக்கம் பொறுமையாகவும் விடாப்பிடியாகவும் உள்ளதோ, எந்தப் பக்கத்தில் படை பலம் அதிகம் உள்ளதோ அந்தப் பக்கம் இறுதியில் வெல்லும் என்பதைக் குறிக்கும் கோட்பாடு. ஈராக்கியர் அல்லாத தீவிரவாதிகளுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே நடக்கும் போர் இத்தகையதாக உள்ளது. அமெரிக்கப் படைகள் விடாப்பிடியாக நின்றால் கடைசியில் ஜெயிக்கும். அதுதான் ஈராக்கிற்கு நல்லது.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

8 Comments:

Blogger Badri Seshadri said...

அமெரிக்கப் படைகள் ஈராக்கை விட்டு இப்பொழுது வெளியேறக் குடாது என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்கா ஓர் ஆக்ரமிப்புப் படையாகத்தான் உள்ளே வந்தது. அமெரிக்கப் படைகள் மீதோ, அமெரிக்கா மீதோ சாதாரண ஈராக்கியர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஃபலூஜா போன்ற இடங்களில் வெண் பாஸ்பரஸ் ஆயுதங்களை ஏவிக் கொன்றவர்கள் மீது எப்படி ஒருவர் நம்பிக்கை வைக்க முடியும்?

ஈராக் துண்டாக வாய்ப்புகள் அதிகம், அதில் தவறொன்றுமில்லைதான். குர்துக்கள், ஷியா, சன்னி முஸ்லிம்கள் என்று மூன்று துண்டாவதில் தப்பில்லை. உள்நாட்டுக் கலவரங்களைத் தடுக்க, ஐ.நா படையொன்றை அனுப்பலாம். அதில் அமெரிக்கர்களும் பிரிட்டானியர்களும் பிற "நேச" நாடுகளான ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகியவையும் இல்லாதிருத்தல் நலம்.

November 22, 2005 10:33 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

I think even an international peace keeping force will have limited success in iraq and
not many countries will be
interested in participating
in it.iraq may end up in a
condition where ethnic and
group clashes will continue
for many years to come and
the govt. will be too weak
to do anything about it.
the situation might become
similar to what happens in
many african countries
a weak govt and internal
war for many years or
a fragile peace thanks
to some agreement mediated
by a third country.

November 22, 2005 11:11 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஈராக் துண்டாக வாய்ப்புகள் அதிகம், அதில் தவறொன்றுமில்லைதான். குர்துக்கள், ஷியா, சன்னி முஸ்லிம்கள் என்று மூன்று துண்டாவதில் தப்பில்லை.
even then those states will
be fighting among themselves
with or without external
support

November 22, 2005 11:12 PM  
Blogger Badri Seshadri said...

ரவி: உண்மைதான். ஆனாலும்

1. அமெரிக்கப்படை தொடர்ந்து ஈராக்கில் இருக்கும்; 'அமைதி' என்ற ஒன்றை அமெரிக்கா அங்கீகரிக்கும்போது வெளியேறும்

2. அமெரிக்கா உடனடியாக வெளியேறும்; உள்ளூர்க் குழப்பம், அடிதடி, கொலை.

3. ஐ.நா அமைதிப்படை; அமைதியாக மூன்று நாடுகளாகப் பிரிக்கப்படுதல்

என்று மூன்றையும் பார்த்தால் (3) தான் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் உள்ளது.

November 23, 2005 12:25 AM  
Blogger Srikanth Meenakshi said...

பத்ரி,

ஆக்ரமிப்புப் படையாகத்தான் உள்ளே வந்தது என்பதில் ஐயமில்லை. இருந்தாலும், ஈராக் உள்நாட்டுக் கலவரங்களைத் தடுக்க மற்ற நாடுகள் ஏன் தமது வீரர்களை பலி கொடுக்க வேண்டும்? ரவி சொல்வது சரிதான். யார் அனுப்புவார்கள்? இதை அமெரிக்காவின் கடமையாகத்தான் நான் பார்க்கிறேன்.

ஈராக் மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பது குறித்து மாறுபடும் செய்திகள் வருகின்றன. ஆனாலும், கொஞ்சமும் தெளிவில்லாத ஒரு ஐ.நா படையை விட அமெரிக்கப் படைகள் தேவலாம் என்று நினைக்கிறேன். அதை விட, அமைதி காப்பதற்கு முன்பு அமைதி என்று ஒன்று வேண்டும். அது உருவாகும் வரையிலாவது அமெரிக்கப் படைகள் தான் வேண்டும்.

ஈராக் இரண்டாவதோ மூன்றாவதோ தப்பில்லைதான். ஆனால் நீங்கள் சொல்வது போல் ஐ.நா படைகள் இருந்தால் இது அமைதியாக நடக்கும் என்று எனக்குச் சிறிதும் நம்பிக்கையில்லை.

பத்ரி, உங்களைச் சொல்லவில்லை; இருந்தாலும் அமெரிக்கா இப்பொழுது வெளியேற வேண்டும் என்று சொல்லும் பலர், அப்படி நடந்தால் இந்தப் போரை அமெரிக்காவிற்கு (வியட்நாம் போல) மற்றுமொரு தோல்வி என்று அறிவிக்கலாம் என்ற நப்பாசையில் தான் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த இறக்குமதி வீரர்களை 'insurgents' என்று ஹிந்து போன்றவை தொடர்ந்து எழுதுவதற்குக் காரணம் என்ன? அப்பொழுது தானே அமெரிக்காவை ஈராக் மக்கள் தோற்கடித்து விரட்டினார்கள் என்று முழக்கலாம்!

எனக்கு, இதில் அமெரிக்கா தோற்றால், அதற்கான விலையை (ஏற்கனவே கொடுத்ததை விடவும்) மிக அதிகமாக ஈராக் மக்களே கொடுப்பார்கள் என்பது தான் முக்கியக் கவலை.

November 23, 2005 8:36 AM  
Blogger Ganesh said...

Srikanth

sorry for posting something off the topic, I wanted to mail you since I couldnt find your mailid in the profile, I am writing here. (I met you during Srikanths' H1Bees Album release function)

I am writing a series of post on new talents from music and arts both here in US and India in my blog, recently I have featured a friend of mine, please do listen to the music and let me know your thoughts

thanks

November 23, 2005 10:55 AM  
Anonymous Anonymous said...

Annae, Sorry to respond in English, but wanted to share with you something that I read this past week. Please get a copy of the latest "Economist" magainze and you will be treated to a very interesting argument on "Why the US should stay in Iraq". http://www.economist.com/printedition/displayCover.cfm?url=/images/20051126/20051126issuecovUS400.jpg

Andy

November 29, 2005 12:24 PM  
Anonymous Anonymous said...

Yet another related link:
Andy

http://www.economist.com/world/na/displaystory.cfm?story_id=5218557

November 29, 2005 12:25 PM  

Post a Comment

<< Home