மாயா பஜார்
எனது நண்பரொருவர் தமிழகத்தில் ஒரு பிரபல நடிகரின் நண்பர். சமீபத்தில் இந்தியா சென்று வந்திருந்தார். பேச்சு வாக்கில் அவர் சொன்ன சம்பவங்கள் இரண்டு (அவர் அனுமதியோடு):
"ரீசண்டா சரத்குமாரோட நூறாவது படம் வந்தது தெரியுமா? தலைமகன்.. அதுக்கு ஒரு விழா நடந்தது, நம்ம ஃப்ரெண்டு என்னையும் வாங்கன்னார், சரின்னு கூடப் போனேன். அங்க உள்ள போனா, மேடையில சரத்குமார் நிக்கறாரு, எல்லாரும் போய் வாழ்த்துச் சொல்றாங்க, இவர் பொன்னாடை போத்தி நன்றி சொல்றாரு. நம்ம நண்பர் நைசா அங்கெல்லாம் போக வேண்டாம்னு நழுவப் பார்த்தாரு, ஆனால் சரத் மேடையிலிருந்து 'சார், (பெயர் சொல்லி) இங்க வாங்க!' அப்டீன்னார். இவர் என்னப் பார்த்து 'நீங்களும் வாங்க'ன்னு இழுத்திட்டுப் போனாரு...மேடையில போனதும், நண்பர் சரத்குமார கங்கிராஜுலேட் பண்ணினார், என்னை introduce பண்ணினார்...'
'என்ன சொன்னார், அமெரிக்காவில தொழிலதிபர்-ன்னாரா? ஹி ஹி..'
'டேய், கதையக் கேளுடா...அப்புறம் இவருக்கு பொன்னாடை போர்த்தினார்...'
'உங்களுக்கு?'
'என்ன மேல விட்டதே பெரிய விஷயம்...நான் சும்மா 'கங்கிராஜுலேஷன்ஸ்' அப்டின்னு சரத் கையக் குலுக்கிட்டுத் திரும்பினா , பக்கத்துல ராதிகா இருந்தாங்க, நான் அவங்க கிட்டயும் 'ஹலோ' அப்டீன்னு கைகுலுக்கிட்டு ஸ்டேஜ விட்டு நடந்தேன்...திடீர்னு பார்த்தா, எல்லா காமெரா லைட்டும் என் மேல! எல்லாக் காமராவும் என்னயே ஃபாலோ பண்ணி நான் சீட்டுல வந்து உட்கார்ர வரைக்கும் பின்னாடியே வராங்க! என்னடான்னு பார்த்தா, எல்லாரும் ராதிகாக்கு வணக்கம் சொல்றப்போ நான் மட்டும் கைகுலுக்கிட்டேனாம்! சரி, இவரு எதோ பெரிய பார்ட்டி அப்டின்னு கவர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க, அதுக்கப்புறம் ஸ்டேஜ்-லேர்ந்து இறங்கறவங்க எல்லாரும் எனக்கு ஒரு வணக்கம் வெச்சுட்டுப் போறாங்க, பக்கத்துல நண்பர் 'இதான் யோகங்கறது...என்னக் கூடக் கண்டுக்க மாட்டேங்கறாங்க பாரு' அப்டீன்னாரு!
அது மட்டும் இல்ல, அந்த விழாவில பார்த்த ஒரு ஆள் எங்கியோ பார்த்த மாதிரி இருந்தது...மறுநாள் காலைல முடிவெட்டப் போனா, அவர் தான் என்னோட பார்பர்! ஒரு சரத்குமார் சங்கத்துல இருக்காராம். அவர் என்னப் பார்த்துட்டு, 'சார், உங்களுக்கு இவ்வளவு நாளா முடி வெட்டறேன், நீங்க இவ்ளோ பெரிய ஆளுன்னு தெரியாமப் போச்சே சார்' அப்டீங்கறார்! அவர் கிட்ட என்னோட பிஸினஸ் கார்டெல்லாம் காமிச்சு, நான் யாருன்னு நம்ப வைக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆச்சு!'
'நல்ல கத...'
'இன்னொண்ணு கேளு...ஒரு நாள் ஒரு கிஃப்ட் வாங்கணும்னு வாட்ச் கடை ஒண்ணுக்குக் கிளம்பினேன்..நண்பரும் கூட வரேன்னார். ராத்திரி பத்து மணி சுமார் இருக்கும். நாங்க போன சமயம் வாட்ச் கடைய மூடிட்டிருந்தான்..இவரப் பார்த்ததும் டென்ஷனாகி தொறந்துட்டான். நாங்க போய் ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டு ஒரு வாட்ச் செலக்ட் பண்ணினோம். நான் பைசா கொடுக்கப் போனேன், நண்பர் காருக்குப் போயிட்டார். கௌண்டர்ல அந்த கடை காஷியர் 'சார், ஒரு ஆட்டோகிராப் வாங்கிக் கொடுங்க சார்' அப்டீன்னான். நான் 'சரிப்பா, பில்லப் போட்டு முடிச்சதும், வெளிய வா, கார்ல இருக்கார், கேட்டாப் போட்டுத்தருவார்' அப்டீன்னேன். பில் போட்டதும், நான் கார்ல போய் உட்கார்ந்தேன். இவன் வந்து 'சார் ஒரு ஆட்டொகிராப்' ன்னு ஒரு புக்க நீட்டினான். நண்பர் போட்டுக் கொடுத்தார். அவன் உடனே, 'சார் நீங்க...' அப்டீன்னு எங்கிட்ட புக்க நீட்டறான்! நான் 'தம்பி, நான்லாம் யாருமில்ல' அப்டின்னேன். அதுக்கு அவன், 'பரவாயில்ல சார், என்னிக்காவது ஒரு நாள் நீங்க பெரிய ஆள் ஆகிடுவீங்க, அப்பொ நான் சான்ஸ் மிஸ் பண்ணிட்டேன்னு வருத்தப்படக்கூடாதில்ல' அப்டீங்கறான்!'
'ஆட்டொகிராப் போட்டீங்களா?'
'வேற வழி? போட்டுட்டு கிளம்பறச்சே எங்களுக்கு சிரிக்கறதா அழறதான்னு தெரியல...'
பி.கு: இதைப் படித்து வேறொரு வலைப்பதிவுக்குப் போட்டியாக ஏதாவது கிளம்புகிறேனா என்று கேட்டால், with all due respect, இல்லை. :-)

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
15 Comments:
///பி.கு: இதைப் படித்து வேறொரு வலைப்பதிவுக்குப் போட்டியாக ஏதாவது கிளம்புகிறேனா என்று கேட்டால், with all due respect, இல்லை. :-) ///
Which blog? No suspense pls.
appuram..article is funny..
நண்பரோட நண்பர் யாருங்க? ஒரு ஆட்டோகிராப் வாங்கிடலாம். நண்பர் சரின்னா அவருக்கிட்டயும் ஒரு ஆட்டோகிராப் வேணும்.
கடை காஷியருக்கு உள்ள ஒரு முன்யோசனை நமக்கும் வேணுமில்ல.
ha haaa haaa!!!
சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்கின்றது!!!
//மறுநாள் காலைல முடிவெட்டப் போனா, அவர் தான் என்னோட பார்பர்! //
முடிவெட்டப் போனா ??? :-(((((
kodambakkam calling?:-))
லதா, *வெட்டிக்கப் * போனா :-) thanks for the catch...
kirukan, if you don't know, you don't want to know :)
This comment has been removed by a blog administrator.

Post a Comment
<< Home