பீஷ்மரும் வீழ்ந்தார்!
வாஷிங்டனில் PlameGate என்று நாமகரணம் பெற்றிருக்கும் சி.ஐ.ஏ கசிவு விவகாரம் முடியாது தொடர்கிறது. இதில் சம்பந்தப்பட்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் வரிசையில் இப்பொழுது பாப் வுட்வர்டும் சேர்ந்திருக்கிறார்.
வுட்வர்ட் அமெரிக்க பத்திரிக்கையாளர்களில் மிகவும் மதிக்கப்படும் மூத்த பிரஜை. இளைஞராக கார்ல் பெர்ன்ஸ்டைன் என்ற சகாவுடன் இணைந்து இவர் அம்பலப்படுத்திய வாட்டர்கேட் ஊழல் ஒரு ஜனாதிபதியை இறக்கி பல வருடங்களுக்கு அமெரிக்க அரசியலின் திசையை மாற்றியது. இதற்குப் பிறகு பெர்ன்ஸ்டைன் ஏறத்தாழ ஓய்வு பெற்று விட, வுட்வர்ட் விடாமல் பத்திரிக்கையாளராக செயல்பட்டு, ரேகன், புஷ், க்ளிண்டன், புஷ், ஈராக் போர் எனப் பல விஷயங்களிலும் சிறப்பாக உழைத்திருக்கிறார், எழுதியிருக்கிறார். இப்பொழுதும் தொடர்ந்து பணியாற்றுகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இவ்வளவு நாட்களாக சொல்லாத ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். அதாவது, வெளிப்படுத்தப்பட்ட சி.ஐ.ஏ அதிகாரியைப் பற்றி அது வெளியாவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே ஒரு அரசாங்க அதிகாரியிடமிருந்து தான் தெரிந்து கொண்டதாகக் கூறியிருக்கிறார். இது பற்றிய சிறப்பு விசாரணையில் இரு தினங்களுக்கு முன்பு சாட்சியும் சொல்லியிருக்கிறார்.
அந்த அரசாங்க அதிகாரி யார் என்று தான் விசாரணைக் கமிஷனிடம் சொல்லியிருப்பதாகவும், அதைப் பொதுவில் வெளியிட அந்த அதிகாரி அனுமதி மறுத்து விட்டதாகவும் சொல்கிறார்.
இந்த விஷயம் பற்றி தனது பத்திரிக்கையின் ஆசிரியர் உட்பட யாரிடமும் இது வரை சொல்லவில்லை. தனது ஆசிரியரிடம் சில வாரங்களுக்கு முன்பே பேசியிருக்கிறார். தான் கொடுத்த சாட்சியம் பற்றி வாஷிங்டன் போஸ்டில் கட்டுரை எழுதி இருக்கிறார். போஸ்டின் ஆசிரியர் வுட்வர்ட் இத்தனை நாள் மௌனமாய் இருந்தது தவறு என்று சொல்லியிருக்கிறார். வுட்வர்ட் ஒத்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
இந்த விஷயத்தை மறைத்து வைத்திருந்த இவ்வளவு நாட்களில் பல முறை இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்திருக்கிறார். 'இது பெரிய விஷயமல்ல, பிசுபிசுத்துப் போய் விடும்' என்ற ரீதியில் பேசியிருக்கிறார்.
'என்னிடம் ரகசியம் சொன்னவரின் பெயரை வெளியிட மாட்டேன்' என்று வாட்டர்கேட் சமயத்தில் சொன்னதும், தொடர்ந்து முப்பது வருடங்களுக்கு மேல் அந்த வார்த்தையைக் காப்பாற்றியதும், கம்பீரமாகத் தெரிந்தது. ஆனால் ரகசியத்தைச் சொன்னதே குற்றமாக பாவிக்கப்பட்டு, அது விசாரணையில் இருக்கையில் சொன்னது யாரென்று வெளிப்படுத்த மாட்டேன் என்று சொல்வது கயமையாகத் தெரிகிறது. பத்திரிக்கையாளர்கள் பொது மக்களின் சேவகர்களே. பொது மக்களின் நன்மை எதனால் விளைகிறது - பெயரைச் சொல்வதனாலா, சொல்லாமலிருப்பதாலா - என்ற கேள்விக்கு விடையை எழுதப்பட்ட பத்திரிக்கை தர்மத்தில் தேட முடியாது. மனசாட்சியில் தேட வேண்டும். தனது தர்மத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு இன்று கெட்டவர்கள் பக்கம் நிற்கிறார் இவர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு என்னுடைய ஆதர்ச பத்திரிக்கையாளர் யாரென்று கேட்டால், யோசிக்காமல் பாப் வுட்வர்ட் என்று சொல்லியிருப்பேன். இன்று, இந்த சி.ஐ.ஏ விவகாரத்தினால் எனது மதிப்பிலிருந்து வீழ்ந்தவர்கள் வரிசையில் இவரும் சேர்ந்திருக்கிறார்.
குறிப்பு: ஒரு விரிவான அலசலுக்கு இங்கே செல்லவும்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
1 Comments:
AMERICAN IS MORE SMARTER THAN INDIAN
================================
It is a minor setback for RAW – the CIA equivalent of India. Joint Secretary Rabinder Singh of the Research and Analysis Wing (RAW) has since been sacked, apparently after fleeing to the US via Nepal. He was actually a dual agent. However, India’s effort on spying on US-Pakistan relationship failed a little bit. It will not affect the India-US relationships will not get affected by this episode because Mr. Singh was actually spying on Pakistan. It is definitely a setback in India’s intelligence efforts. However, there are many such dual agents in RAW and India needs to spend much more to counter CIA or ISI’s budget. Will Natwar Singh bring this issue up while meeting Collin Powell? Absolutely not. You do not complain when you lose in a game. Play better next time and move on. BJP was complacent on managing the RAW and other intelligence services. The new Government has to spend more and manage more. This days it is more important to have a better RAW that have a better military.
Some reports say he came into notice after the CIA station chief in New Delhi inadvertently dropped his name during a conversation with RAW officials during a routine meeting.
Others assert it was not so, and that suspicion fell on him as he began raising questions within the agency he had no business to ask.
According to one account, the counter-intelligence unit of RAW confronted him April 19 - shortly after he returned from the US - and accused him of removing "sensitive files" from RAW headquarters in south Delhi.
On May 4, a report went up to RAW bosses saying Rabinder Singh, whose wife and other family members lived in the US, had bank accounts in Singapore, Brunei and the US and that he should be arrested.
Just what happened then is wrapped in mystery.
Newspaper accounts indicate Rabinder Singh was put under surveillance, and RAW officers began to build a watertight case against him. His phones were tapped.
While this high drama was on, the general elections in India threw up a stunning verdict on May 13, ousting the Bharatiya Janata Party (BJP) government.
The next day, it seems, Rabinder Singh disappeared - just how and where to no one has been able to coherently explain. Most RAW officers believe he managed to elude everyone and go over to neighbouring Nepal.
What will RAW do now? Nothing much. Just keep doing what it does. The Government has a larger duty of increasing RAW’s budget by many times to match that of other countries
Post a Comment
<< Home