நூறு டாலர் மடிக்கணினி?
சுஜாதாவினால் எதிர்காலவியலாளர் என்று வர்ணிக்கப்பட்ட நிக்கலஸ் நெக்ரோபாண்டே எதிர்காலத்தைக் கணிப்பதோடு, கொஞ்சம் அதை உருவாக்கவும் செய்கிறார். பல நிறுவனங்களின் உதவியுடன் ஒரு நூறு டாலர் மடிக்கணினி உருவாக்கி, வளரும் நாடுகளின் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க முயன்று வருகிறார். பிரேசில், தாய்லாந்து போன்ற நாடுகள் ஆர்வமாய் இருக்கின்றன.
இந்தக் கணினியின் அம்சங்கள் சில:
1. இதில் இருக்கும் பேட்டரியை ஒரு கைச்சுழற்றியால் சார்ஜ் செய்ய முடியும் (படம்)
2. ஆதார மென்பொருளாக லினக்ஸ் இருக்கும் - மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் ஆர்வமாய் இருந்தாலும், திறமூல மென்பொருள் என்பதால் லினக்ஸ்.
3. இத்துடன் ஒரு வலை உலாவி, word processor
இந்தத் திட்டத்திற்கு, "ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மடிக்கணினி" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்தக் கணினியின் அம்சங்கள் சில:
1. இதில் இருக்கும் பேட்டரியை ஒரு கைச்சுழற்றியால் சார்ஜ் செய்ய முடியும் (படம்)
2. ஆதார மென்பொருளாக லினக்ஸ் இருக்கும் - மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் ஆர்வமாய் இருந்தாலும், திறமூல மென்பொருள் என்பதால் லினக்ஸ்.
3. இத்துடன் ஒரு வலை உலாவி, word processor
இந்தத் திட்டத்திற்கு, "ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மடிக்கணினி" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
7 Comments:
இந்தத் திட்டத்தில் எனக்கு நம்பிக்கை குறைவாகவே உள்ளது. என்னதென்று சரியாகச் சொல்லமுடியவில்லை, ஆனால் ஏதோ சரியாக இல்லையென்று மட்டும் தோன்றுகிறது.
இதைப்போன்ற அனைத்துத் திட்டங்களையும் ஆதரிக்க வேண்டும்தான்! முக்கியமாக தியரெடிகலாக இந்த ஐடியா நன்றாக உள்ளது. TFT display, battery powered box, battery chargeable through hand action - அத்தனையும் அற்புதமான விஷயங்கள். நெக்ரோபாண்டேயின் திட்டம் முழுவதுமாக வெற்றிபெறாவிட்டாலும் இந்தக் கடைசி விஷயம் குறைந்த விலைக்குக் கிடைத்தாலும் போதுமானது. பலரும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால் இதுபோன்ற கணினிகளை தேவைக்கு அதிகமான features வைத்து ஆரம்பத்திலேயே சொதப்பிவிடக்கூடாது. டேப்லட் வசதிகள் ஆரம்பத்தில் தேவையா என்று தெரியவில்லை.
மிகவும் நல்லதோர் முயற்சி; திட்டம் செயல்பட்டு வெற்றியடைய வாழ்த்துக்கள்
என்னளவில் பத்ரியினைப் போலவே நம்பிக்கை குறைவாக உள்ளது. இந்த திட்டத்தினை முழுமையாக செயலாற்ற குறைந்தது 6 மில்லியன் மடிக்கணினிகளுக்கான ஆர்டர்கள் இருக்க வேண்டும். இந்திய அரசு ஒன்றும் செய்யாமல் இப்போதைக்கு கையினை விரித்துவிட்டது.
"Negroponte's pilot project requires commitments for at least six million orders. So far, China has expressed an interest in buying two million machines, and Brazil one million. At least at first, the machines would be built in China, where Negroponte has been talking to manufacturers."
URL: http://www.technologyreview.com/articles/05/08/issue/editor.asp
ஆனாலும் இது ஒரு முன்மாதிரியான திட்டம். இதைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். சமீபத்தில் ஸ்கைப்-பும் இதில் இணைத்திருக்கிறார்கள். ஆனால், ஏழை நாடுகளில் இணையத் தொடர்பு மந்தம் மட்டுமல்ல. விலையும் அதிகம்.
பொருளாதார ரீதியில் ஒரு கணினிக்கு லாபமாய் $10 மட்டுமே கிடைக்கும். குறைந்த பட்சம் நெக்ரோபாண்டே சொல்வதுப் போல 6 மில்லியன் கணினிகள் இருப்பின் "economies of scale" கணக்கில் இதை செயல்படுத்த வாய்ப்புள்ளது. ஆனாலும், கையில் இப்போது வெறும் 3 மில்லியன் ஆர்டர்கள் மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது.
என்னதான் சீனாவில் உற்பத்தி செய்தாலும், அங்கேயும் volume game தான். அப்படியிருக்கையில் மீத 3 மில்லியன் ஆர்டர்களை யார் தருவார்கள் என்பது முதல் கேள்வி. இது தாண்டி, $100 மடிக்கணினியின் "மாதிரி கணினி" இருக்கிறதா என்று தெரியவில்லை. அது இல்லாமல், திட்டம் புரட்சிகரமாக இருந்தாலும், அரசாங்கங்கள் இதில் முதலீடு செய்யுமா என்பது இன்னொரு கேள்வி.
இதற்கு சம்பந்தமில்லாவிட்டாலும், இன்னொரு விதயத்தினை பேசலாம். இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் செல் பேசிகள் $75 க்கும் குறைவு. இதில் நோக்கியா, மோட்டரோலா போன்ற ஜாம்பவான்களும், சீகேம் போன்றவர்களும் அடங்கும். செல்பேசிகளின் ப்ராசசர்களின் சக்தி முன்னேறிக் கொண்டே வருகிறது. வளரும்/ஏழை நாடுகளின் பெரிய பிரச்சனை connectivity தான். அப்படியிருக்கையில் ஒரு $100 செல்பேசி கணினி சாத்தியக் கூறுகளோடு கிடைத்தால்?
Lunchumm arasial and laptop
funny people
பத்ரி, இந்தப் பதிவின் இறுதியில் எனது கருத்துக்களை எழுதி editorialize பண்ணியிருந்தேன். இருப்பினும் யோசித்துப் பார்த்ததில், நீங்கள் சொன்னது போலவே, இது ஒரு ஆதரிக்க வேண்டிய முயற்சியாக இருந்ததாலும், எனது கருத்துக்கள் கொஞ்சம் negative-ஆக தொனித்ததாலும், வெறும் செய்திப் பதிவாக மட்டும் இருக்கட்டும் என்று நீக்கி விட்டேன். இருப்பினும் எனக்கும் சந்தேகங்கள் இருக்கின்றன.
டேப்லட் எல்லாம் ஆரம்பத்தில் தேவையில்லைதான். It might compromise the ruggedness of the screen.
இதற்கும் இப்பொழுதைய "பள்ளிகளில் கணினி" திட்டங்களுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு, இதில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கணினி கிடைப்பது தான். பள்ளிகள் செல்லும் கணினிகள் பெரும்பாலும் ஏதோ ஒரு ரூமில் பூட்டுக்குப் பின்னால் தூங்கும்.
Narain, இணைய இணைப்பு குறித்த கவலைகள் உண்மை. இந்தக் கணினிகளில் ஒரு சின்ன wikipedia இறக்கப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் இணைப்பு இல்லாமலும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏதோ, நல்ல முயற்சி, வாழ்த்துவோம்!
Srikanth,
இது சாத்தியம்தான். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால், கருப்பு வெள்ளைக் கணிணியில் ஓரிரு எம்பி ராம்மும் நாற்பது ஐம்பது எம்பி ஹார்ட்டிஸ்க்கும் இருந்தாலே அது 'பெரிய கம்ப்யூட்டர்'ஆக இருந்தது. அந்தக் கால சர்வர்களைவிட பலமடங்கு திறன் படைத்த கணிணிகளை நாம் இப்போது வீட்டிலேயே உபயோகிக்கிறோம்.
நூறு டாலருக்குக் குறைந்தபட்ச வசதிகளோடு குழந்தைகளுக்கும் மாண்வர்களுக்கும் கணிணியைத் தருவது சாத்தியப் படும் என்று நான் நினைக்கிறேன்.
ஜனவரியிலிருந்து இந்தியா முழுவதும் உள்ளூர் அழைப்பாமே. ஐந்து வருடங்களுகு முன்பு நாம் இது சாத்தியம் என்று நினைத்திருப்போமா? கற்காலத்தில் இல்லை - தற்காலத்தில்தான் - கொஞ்ச வருடங்களுக்கு முன்புவரை நாம் Trunk Call பதிவு செய்துகொண்டு ஹலோ ஹலோ என்று அலறிக்கொண்டிருந்தோமே! :)
இதே போல அகலப்பாட்டை இணையத் தொடர்பு வசதியும் தரை டிக்கெட் விலைக்கு விரைவில் வந்துவிடும். அப்படி வரும்போது, மென்பொருள்களைக் கணிணியில் வைத்திருக்க வேண்டிய தேவையும் குறைந்து போகும். Online-இல் குழந்தைகள் மாணவர்களுக்குத் தேவையான கல்வி தொடர்புள்ள மென்பொருள்களை Browser based apps-ஆகவே உபயோகித்துக்கொள்ள முடியும்.
இன்னும் சில சாத்தியங்கள்:
1. அரசு அனைத்து கல்வி நிறுவனங்க்ளையும், அரசாங்கத்தின் தகவல்தொழில்நுட்ப அமைச்சகத்தைக் கொண்டு, அகலப்பாட்டையில் இணைக்கலாம். சாலை, குடி நீர், கழிவு நீர் போன்ற உள்கட்டுமான வசதிகளை அரசு ஏற்றுச் செய்வது போல, இணையத் தொடர்பையும் - அரசாங்கம் நடத்தும் பள்ளி கல்லூரிகளுக்காவது - ஏற்படுத்தலாம். இதில் செலவு ஒரு பொருட்டே அல்ல.
2. நம் நாட்டு மக்கள் தொகையையும் குழந்தைகள் மாணவர்கள் தொகையையும் பார்க்கும்போது 3 மில்லியன் கணிணிகளெல்லாம் பிஸ்கோத்து. நாமே கோடிக்கணக்கில் உற்பத்தி செய்து கொள்ள முடியும். தயாரிப்புச் செலவும் குறைவு.
இன்றைய அசுர விஞ்ஞான வசதியில் 100 டாலர் கணிணி சாத்தியம். சாத்தியமாக வெண்டும்.
பத்தாயிரம் ரூபாய் கணனி திட்டத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு நம் நாடு இதில் இறங்கலாம்.
Post a Comment
<< Home