<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Wednesday, November 23, 2005

கறுப்பு வெள்ளி

"அப்பா அப்பா, கடைக்குப் போறியா?"
"ஆமாங்கண்ணு, உனக்கு என்ன வேணும் சொல்லு!"

[மேற்காணும் வரிகளை நீங்கள் ராகத்தோடு படித்திருந்தால், உங்களுக்கு வயதாகி விட்டதென்று அர்த்தம்]

நாளை இந்த ஊரில் நன்றி அறிவித்தல் தினம். லட்சக்கணக்கான வான்கோழிகள் வானுலகம் அனுப்பப்படும். நான் லீவு விட்ட கம்பெனிக்கு நன்றி சொல்லி விட்டு வீட்டில் உட்கார்ந்து ஃபுட்பால் பார்க்கும் தினம்.

சுவாரசியமான நாள் நாளை மறு நாள் - வெள்ளிக்கிழமை. அன்று தான் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் விரல் மேல் விரல் போட்டுக் கொண்டு (seriously, I don't think I will ever get over this Sujatha habit), கிறிஸ்துமஸ் விற்பனைகளுக்குப் போணி போடுவார்கள். ஏதோ ஒரு கிறுக்குத்தனமான காரணத்துக்காக இதை அபசகுனமாக கறுப்பு வெள்ளி என்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் தான் அமெரிக்காவின் கடைகளில் மிக அதிகமாக விற்பனைகளாகின்றன. காரணம், சகட்டுமேனிக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள். ஒரு நாள் மட்டும், சில மணி நேரம் மட்டும், முதல் நூறு பேருக்கு மட்டும் என்று மட்டுப்படுத்தப்பட்டாலும், இவற்றிற்காக கடைகளில் அதிகாலை சுபவேளையில் அலைமோதும் கூட்டங்கள் அமெரிக்க நுகர்வோர் கலாசாரத்தின் முழுப் பிரதிபலிப்பாக இருக்கும்.


இதற்காக மிகத்தீவிரமாக திட்டமிட்டு வழித்தடங்கள், வரைபடங்கள், பட்டியல்கள், புள்ளி விவரங்களோடு வந்து சேரும் மக்களைப் பார்த்தால் கொஞ்சம் பீதியாகக் கூட இருக்கும். இன்னொரு விஷயம் - எந்த வகையில் கலாசாரங்கள் கலந்துருகுகின்றனவோ இல்லையோ இந்த வகையில் எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் நிறம், எல்லோரும் இந்நாட்டு மக்கள். எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் (இந்தியர்) மனைவி இந்த விற்பனை நாளுக்கு முதல் நாளிரவு தன்னால் தூங்கவே முடியவில்லை என்று சொன்னது கவலையுடனா, பெருமையுடனா என்று எனக்குப் விளங்கவில்லை.

கடைகளும் இந்த கலாசாரத்திற்குத் தன்னால் இயன்ற வரை தூபம் போடுகின்றன. டார்கெட் கடைகள் வெள்ளியன்று காலை ஆறு மணிக்குத் தாழ் திறக்கின்றன. அதற்கு உங்களைத் தொலைபேசி அழைப்போடு படுக்கையிலிருந்து எழுப்ப பிரபலங்களின் குரல்கள் காத்திருக்கின்றன. எல்லா நிறுவனங்களும் கொஞ்சமேனும் தள்ளுபடி கொடுக்கும். சாதாரணமாக பத்து ரூபாய் சமாசாரத்தை நூறு ரூபாய்க்கு விற்கும் ஆப்பிள் நிறுவனம் கூட மனமிறங்கி தொண்ணூறு ரூபாய்க்கு விற்பார்கள்.

இந்த வருட விற்பனைகளிலிருந்து சில உதாரணங்கள்:

1. Kodak 5MP Digital camera (3x optical zoom) - $130 (Best Buy)
2. Panasonic camcorder - $250 (Best Buy)
3. Toshiba Progressive Scan DVD Player - $30 (Best buy) (இதை நான் ஆறு மாதங்களுக்கு முன் 80 டாலருக்கு வாங்கினேன் :-( )
4. 12 cup coffee maker - $4.25 (Walmart)
5. Panasonic 2.4GHz Cordless Phone with 2 Handsets - $50 (Costco)
6. Men's, Women's, Kids' Insulated Ski Gloves - Free (Dicks' sporting goods)

இது போல் நூற்றுக் கணக்கில் உள்ளன, இந்த வலைத்தளத்தில்.

இதை நீங்கள் இந்தியாவிலிருந்து படிக்கிறீர்களென்றால், டிசம்பரில் விடுமுறைக்கு வரும் அமெரிக்க உறவினர்களிடம் 'உங்கள் ஊரில் நாளைக்குப் பெரிய Sale-ஆமே' என்று விசாரித்துப் பாருங்கள்.

என் கடன் பணி செய்து கிடப்பதே.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

6 Comments:

Blogger Jayaprakash Sampath said...

//மேற்காணும் வரிகளை நீங்கள் ராகத்தோடு படித்திருந்தால், உங்களுக்கு வயதாகி விட்டதென்று அர்த்தம்//

அய்யய்யோ.. ராகம் போட்டு பாடித் தொலச்சுட்டனே...

November 23, 2005 9:51 PM  
Blogger Boston Bala said...

---நீங்கள் இந்தியாவிலிருந்து படிக்கிறீர்களென்றால்---

Manasu Indiavil irunthaalum okay-vaaa ;;-)

November 23, 2005 10:19 PM  
Anonymous Anonymous said...

dollar biscuit,
dollar biscuit,
dollar biscuit vEnum!

AyyayO!!

November 24, 2005 2:32 AM  
Anonymous Anonymous said...

Since the sale of the stores going on black ink (Profit), they call it as black friday.

November 27, 2005 9:57 AM  
Blogger பரி (Pari) said...

சாதாரணமாக பத்து ரூபாய் சமாசாரத்தை நூறு ரூபாய்க்கு விற்கும் ஆப்பிள் நிறுவனம் கூட மனமிறங்கி தொண்ணூறு ரூபாய்க்கு விற்பார்கள்.
>>>>
:)))

Apple = Outrageous

November 29, 2005 10:57 AM  
Blogger மாயவரத்தான் said...

//மேற்காணும் வரிகளை நீங்கள் ராகத்தோடு படித்திருந்தால், உங்களுக்கு வயதாகி விட்டதென்று அர்த்தம்//

அய்யய்யோ.. அய்யய்யோ.. அய்யய்யோ.. அய்யய்யோ.. அய்யய்யோ.. ராகம் போட்டு பாடித் தொலச்சுட்டனே...

November 29, 2005 11:32 AM  

Post a Comment

<< Home