<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Friday, November 11, 2005

குற்றம் இங்கே, தண்டனை எங்கே?

1993 பம்பாய் குண்டு வெடிப்பு உள்பட பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அபு சலேம் போர்ச்சுகலிலிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டிருக்கிறார். சந்தோஷம். ஆயினும், இப்படிக் கொண்டு வர இந்தியா சில ஷரத்துக்களுக்கு ஒத்துக் கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. அவை:

குற்றம் நிரூபணமானால்,

1. அபு சலேமுக்கு மரண தண்டனை வழங்கப்படாது
2. அதிக பட்சமாக 25 ஆண்டுகளுக்கான சிறைத் தண்டனையே வழங்கப்படும்.

இதெற்கெல்லாம் ஒத்துக்கொள்ளா விட்டால் அபு சலேமை வெளியேற்றியிருக்க முடியாது என்பதால், இந்தியா இவற்றிற்கு ஒத்துக் கொண்டதில் தவறில்லை. இதில் கண்டிக்கப்பட வேண்டியது போர்ச்சுகலும், அதன் தார்மீக மேன்மைவாதச் சிந்தனையும்தான்.

இது பற்றி நான் முன்வைப்பவை மரண தண்டனையைப் பற்றியோ, அபு சலேமின் மீது சாற்றப்பட்டிருக்கும் குற்றங்களுக்கு எத்தகைய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது பற்றியோ ஆன விவாதங்களில்லை. அவற்றை வேறொரு நாள் வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது நான் கேட்பது, ஒரு நாட்டிற்கு மற்றொரு நாட்டின் நீதி முறை மீது குறுக்கிட இருக்கும் உரிமைகளின் வரையறைகளைப் பற்றி.

ஐரோப்பாவில் இது ஒரு சாதாரணமான விஷயம் தான். அந்நாடுகள் இதர பிற நாடுகளோடு போட்டுக் கொண்டிருக்கும் வெளியேற்ற ஒப்பந்தங்களில் இத்தகைய நிபந்தனைகள் - குறிப்பாக மரண தண்டனை பற்றி - உண்டு. போர்ச்சுகல் அதையும் தாண்டிப் புனிதமானதாக, இத்தகைய ஒரு வரியை தனது அரசியல் சாசனத்திலேயே சேர்த்திருக்கிறது:

Article 33 Extradition, Deportation, Right to Asylum
(3) No one may be extradited for crimes which carry the death penalty under the law of the requesting State.

இது ஒரு வினோதமான கோட்பாடாக எனக்குப்படுகிறது. வெளியேற்ற ஒப்பந்தங்களின் அடிப்படைத் தேவை எனக்குப் புரிகிறது. அடிப்படை மனித சுதந்திரங்களை குற்றங்களாக பாவிக்கும் அரசாங்கங்களிடமிருந்து அவற்றின் குடிமக்களைக் காப்பது அவசியம் தான். உதாரணமாக, சைனாவிலிருந்து தப்பி வந்த Falun Gong ஆதரவாளர்கள். ஆனால், எது குற்றம் என்பதை நிர்ணயிப்பதிலிருந்து, என்ன தண்டனை என்பதை நிர்ணயிப்பதற்குச் செல்லும் போது சிக்கலாகிறது.

உதாரணமாக, கொலை செய்வது என்பது குற்றம் - அமெரிக்காவின் வர்ஜீனியாவிலும் சரி, போர்சுகலிலும் சரி. ஆனால், ஒரு அமெரிக்கர் வர்ஜீனியாவில் கொலை செய்து விட்டு போர்சுகல் சென்று விட்டால், மரணதண்டனையிலிருந்து தப்பி விடுகிறார். அமெரிக்க மண்ணில் ஒரு அமெரிக்கர் செய்த குற்றத்திற்கு அமெரிக்கா என்ன தண்டனை விதிக்கலாம் என்பதை நிர்ணயிப்பதற்கு போர்சுகலுக்கு என்ன உரிமை இருக்கிறது? முரண் நகையான விஷயம் என்னவென்றால் ஒரு போர்சுகீசியக் குடிமகன் கொலைக்குற்றத்திற்காக வர்ஜீனியாவில் பிடிபட்டால், அவரை மரணதணடனையிலிருந்து மீட்க போர்சுகலால் ஒன்றும் செய்ய முடியாது (இப்பொழுதும் கூட ஆஸ்திரேலியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே இப்படி ஒரு விவகாரம் நடந்து கொண்டிருக்கிறது). ஆக, வெளியேற்ற ஒப்பந்தங்கள் தமது குடிமக்களைக் காப்பதை விட, வெளிநாட்டவரின் குடிமக்களைக் காப்பதில் தான் முனைப்பாக இருக்கிறது.

இப்படிச் செய்வதினால் குற்றமற்றவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள் என்பதெல்லாம் இல்லை. போர்ச்சுகல் போன்ற நாடுகள் 'நான் எத்தனைப் புனிதம் பார்' என்று மார்தட்டிக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

தண்டனைச் சட்டங்கள் ஒரு சமுதாயம் தனக்குள் ஒழுங்கும் நீதியும் நிலைநாட்ட உருவாக்கியவை. அவை மனிதநேயச் செலாவணியாக மாற்றப்படும் போது உருவாகுபவை தான் இத்தகைய குதர்க்கமான சூழ்நிலைகள்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயும் ஒரு வெளியேற்ற ஒப்பந்தம் இருக்கிறது. அதன்படி, இரு நாட்டிலும் குற்றங்களாக பாவிக்கப்படும் செயல்களுக்குப் போதுமான ஆதாரம் இருந்தால், ஒரு நாட்டில் பிடிபட்ட குற்றவாளி மற்ற நாட்டிற்கு வெளியேற்றப்படலாம். அதாவது இந்தியாவில் குற்றமாகக் கருதப்படுவது அமெரிக்காவில் அப்படிக் கருதப்படாவிட்டால், அதைச்சுட்டி இந்தியா ஒரு குற்றவாளியை அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வர முடியாது. இத்தகைய அணுகுமுறை தான் எனக்குச் சரியாகப் படுகிறது.

போர்ச்சுகீசிய அணுகுமுறையினால், பம்பாயில் நிகழ்ந்த குற்றத்திற்கு லிஸ்பனில் நீதி வரையறுக்கப்பட்டிருக்கிறது. இது தவறு; கண்டனத்துக்குரியது.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

8 Comments:

Anonymous Anonymous said...

pappan.. you are crossing the limit... you will soon be banned from tamilmanam...
Your anti-muslim talk will not be tolerated...

November 11, 2005 11:35 PM  
Anonymous Anonymous said...

Where were you when the dalits were given malam in papparapatti keeripatti. go and take care of that first. then worry about muslim extradition. You want to drive away the poor dalits who embrace the peaceful religion by this kind of propaganda. The muslims are prosecuted minority in India. That is why all their acts are labelled as criminal acts. Tamilnadu needs one more partition for the muslims to practice their religion peacefully without interference from the BJP and othe pappans.

November 11, 2005 11:39 PM  
Blogger Voice on Wings said...

//இப்பொழுது நான் கேட்பது, ஒரு நாட்டிற்கு மற்றொரு நாட்டின் நீதி முறை மீது குறுக்கிட இருக்கும் உரிமைகளின் வரையறைகளைப் பற்றி.//

காட்டுமிராண்டிகளை காட்டுமிராண்டிகளிடம் ஒப்படைக்க மாட்டோம் என்பது அவர்களது நிலைப்பாடோ, என்னவோ.

November 12, 2005 12:33 AM  
Blogger Muthu said...

நல்ல பதிவுதான். அவர் கூறிய விஷயத்தை விட்டுவிட்டு விஷயத்தை திசைதிருப்புவது சரியல்ல. அவர் கூறியது குற்றம் ஓரிடம். தண்டனை ஓரிடம் என்பதைபற்றித்தான். சலீம் குற்றவாளியா இல்லையா என்பதைப்பற்றி அல்லவே

November 12, 2005 1:50 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

This is not a simple issue. Some countries are against death penalty, torture etc and insist
that the country to which the person is extradited should have a judicial system that is fair and
should respect human rights. The intention here is to protect those who seek asylum and those who esacpe from countries where dictatorship prevails and land in countries like Portugal. It is easy to claim that such persons are criminals or terrorists.But to ensure that they are not awarded death penalty which is common in
most countries where there will be a mock trial to 'prove' that they deserve death penalty such rules are made part of the extradition treaty. This will safegurad many innocents who otherwise would have been put to death by dictators.So look at from a broader perspective. In Europe human rights are taken seriously and Blair learnt it only recently.
I wont find fault with Portugal.

November 12, 2005 5:53 AM  
Blogger rv said...

ஸ்ரீகாந்த்,
ரவி ஸ்ரீநிவாஸ் சொன்னது சரிதான். political prisoners இவ்வகையில் மட்டும்தான் பாதுகாப்பு கிடைக்கும்.

ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். இந்த மரண தண்டனை கூடாது என்பது இந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும் பொருந்துமா? இல்லை குற்றவாளியின் வாழ்நாள் முழுவதற்குமா? நாளை சிபிஐ அபு சலேம் மீது இன்னொரு வழக்கு போட்டு அதில் மரண தண்டனை வாங்கித்தர முடியுமா?

November 12, 2005 7:02 AM  
Blogger Srikanth Meenakshi said...

Ravi,

Torture is a red herring in this issue. Now that Portugal has extradited to India, are you telling me that India does not torture?

A society determines punishment, in many instances, as a deterrent to police itself in a situation that it finds itself in. For example, if India passes mandatory death sentences for caste-motivated killings, while one may debate its effectivenness/correctness, no one can question its right to do so. Portugal cannot determine jurisprudence in a society 8000 miles away.

Or did I just wake up in a time and place where it is the white man's burden to civilize me?

இராமநாதன், நல்ல கேள்வி, எனக்கு விடை தெரியவில்லை.

November 12, 2005 7:12 AM  
Anonymous Anonymous said...

இனி ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தீச்செயல் செய்துவிட்டு போர்ச்சுகல் சென்றால் அவரது தலை தப்பி விடும் என கொள்கை வந்து விடும் தூக்குத் தண்டனை தானே கொடுக்கக் கூடாது கைகால்களை வாங்கலாமல்லவா?. இல்லை யென்றால் அவனை விடுதலை செய்துவிடவேண்டும் பாதிக்கப்
பட்டவர்கள் கவணித்துக் கொள்வர். ஐ பி.கொடுப்பவர்கள் போல அனாதையான இந்தியப்பிரஜை என அறிவித் துவிடவேண்டும் வெளிநாடு செல்லக்கூடாது யார் உடதைத்தாலும் கொலைசெய்தாலும் இந்த அரசாங்கம் கேட்காது என அறிவித்து விடவேண்டும்
ஒரு குற்றவாளிக்கு எதற்கு தண்டனை கொடுப்பது அடுத்தவன் இதைச் செய்யக்கூடாது என்பதற்காகத்தானே.

November 12, 2005 9:25 PM  

Post a Comment

<< Home