<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Thursday, November 10, 2005

புல்ஷிட்

"புல்ஷிட் புல்லட்!" - ஜனகராஜ், 'அபூர்வ சகோதரர்கள்'

[மேற்காணும் வசனத்துக்கும் கீழ்காணும் கட்டுரையின் சாரத்திற்கும் சம்பந்தமே இல்லையென்றாலும், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்த வசனத்திற்கு இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்]

'On bullshit'
Harry G. Frankfurt
Princeton University Press

இது ஒரு மிக, மிகச் சிறிய புத்தகம் - பெரிய கட்டுரை என்று சொல்லலாம். கையடக்க வடிவத்தில், பெரிய எழுத்துக்களில், 67 பக்கங்கள், அவ்வளவுதான். புத்தகத்தின் ஆர்வமூட்டும் தலைப்பு தவிர, இந்த சிறிய அளவும் அதன் பரபரப்பான விற்பனைக்கு காரணமாக இருக்கலாம்.


ஹாரி ஃப்ராங்க்பர்ட் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவ இயல் பேராசிரியர். இப்புத்தகத்தில் அவரது நோக்கம், புல்ஷிட் என்றால் என்ன, அதன் தன்மைகள் என்ன, மற்ற வகையான போலிப் பேச்சுக்களிடமிருந்து இது எப்படி வேறுபடுகிறது போன்ற விஷயங்களை ஆராய்வது. அவரது ஆராய்ச்சியின் மொத்த சாரத்தையும் நான்கைந்து வரிகளில் சொல்லி, இப்புத்தகத்தைப் படிக்க நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடிய பதினைந்து நிமிடங்களை சேமிக்கும் கைங்கரியத்தைச் செய்யலாம் என்று உத்தேசம்.

"நமது அன்றாட வாழ்வில் புல்ஷிட் எங்கெங்கும் வியாபித்திருக்கிறது - இதை நாம் அறிவோம், இதில் நாமும் பங்களிக்கிறோம்" என்று சொல்லித் துவங்கும் கட்டுரை, முக்கியமாக முன்வைப்பது ஒரு பொய்யிற்கும் புல்ஷிட்டிற்கும் உள்ள வேறுபாட்டை. ஒரு பொய் சொல்பவர் உண்மை என்றால் என்ன என்பதை அறிந்து, அதற்குப் புறம்பான ஒன்றை உருவாக்கி, அதைச் சொல்கிறார். புல்ஷிட் பேசுபவருக்கோ அத்தகைய கட்டுப்பாடுகளெல்லாம் கிடையாது - உண்மை என்ன பொய் என்ன என்பதை விட எதையோ ஒன்றைச் சொல்ல வேண்டும், சொல்வது கவர்ச்சியாக, டாம்பீகமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். பொய் சொல்பவர் இரண்டு காரணத்திற்காகப் பொய் சொல்லலாம் - அந்தப் பொய் சொல்வதன் மூலம் ஒரு தவறான செய்தியை விதைப்பது, அல்லது அந்தப் பொய் சொல்வதன் விளைவாக வரும் ஒரு காரியத்தைச் சாதிக்க முனைவது. ஆனால், புல்ஷிட் செய்பவருக்கு இருக்கும் ஒரே நோக்கம், *தன்னைப்* பற்றி ஒரு போலியான ஒரு தோற்றத்தை, பிம்பத்தை ஏற்படுத்துவதே - அவர் சொல்வதை கேட்பவர் நம்புகிறாரா இல்லையா என்பதைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை.

"Telling a lie is an act with a sharp focus. It is designed to insert a particular falsehood at a specific point in a set or system of beliefs, in order to avoid the consequences of having that point occupied by the truth...On the other hand, a person who undertakes to bullshit his way through has much more freedom."

புல்ஷிட் என்றால் என்ன என்பதற்கு ஒரு உதாரணம் கொடுக்கிறார்:

"Consider a Fourth of July orator who goes on bombastically about 'our great and blessed country, whose Founding Fathers under divine guidance created a new beginning for mankind'...What he cares about is what people think of *him*. He wants them to think of him as a patriot..."

ஆக, உண்மை எது என்பது குறித்த கவலையின்மையும், தன்னைப்பற்றி ஒரு போலித்தோற்றத்தை ஏற்படுத்த முனைவதுமே புல்ஷிட்டின் ஆதார குணாதிசியங்கள் என்று சொல்கிறார்.

கட்டுரையின்/புத்தகத்தின் முடிவில் இன்றைய உலகில் புல்ஷிட் அதிகரித்திருப்பது ஏன் என்று யோசிக்கிறார். இதற்கு ஒரு முக்கியமான காரணம், இன்றைய குழப்பமான சமூகச் சூழலில் உண்மையான உண்மை என்பது ஒரு அறியப்பட முடியாத ஒன்றாகக் கருதப்படுவது என்கிறார். அதனால், புல்ஷிட் பேச முனையாத இன்றைய மனிதர்களும் கூட உண்மை என்ன என்பதை ஆராய்வதை விட்டு விட்டு, தனது மனசாட்சிக்கு விரோதமாக இல்லாமல் இருப்பதே (sincerity) போதுமான உண்மை என்று கொள்வகிறார்கள். ஆனால் மனிதருக்கு உலகைப்பற்றி உத்தரவாதமாக அறிவதை விட, தன்னைப்பற்றி அறிவது இன்னமும் கடினமாதலால், இந்த மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இருப்பது என்பதே புல்ஷிட்டாக இருக்கலாம் என்று சொல்லி முடிக்கிறார்.

இதுதான் மொத்தப் புத்தகமும். இந்த சாராம்சத்தைப் படித்து முடித்த உங்களிடம் இனி யாராவது இந்தப் புத்தகத்தைப் படித்தாயா என்று கேட்டால், தைரியமாகக் கதையளந்து உங்களை அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ளலாம்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

2 Comments:

Blogger Srikanth Meenakshi said...

yav, Thanks, and thanks for suggesting Lakoff. His book on Republican use of language sounds fascinating. Another book in this line would be the highly regarded "The language instinct: how mind creates language" by Stephen Pinker.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு நான் C++ கற்க முனைந்த பொழுது, Stroustrup இன் புத்தகத்தைப் படித்தேன். அதில் ஆரம்பத்தில் ஒரு மேற்கோள் காட்டியிருந்தார்:

"Language shapes the way we think, and determines what we think about"

"மொழி நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதையும் எதைப்பற்றி சிந்திக்கிறோம் என்பதையும் நிர்ணயிக்கிறது"

இத்தனை வருடங்களுக்குப் பின்னர், C++ மொழி மறந்து விட்டாலும் இந்த மேற்கோள் மறக்கவில்லை. அடிக்கடி யோசிக்க வைத்தது. அன்றாட வாழ்வில் மொழி, குறிப்பாக தமிழ் மொழி, எப்படி நாம் பேசும் வார்த்தைகளை, நமது சிந்தனையை, அதன் வாயிலாக சில செயல்களையெல்லாம் வடிவமைக்கிறது என்பது மிகவும் வியக்க வைக்கும் ஆராய்ச்சி.

நமது வாழ்வில் பல சின்ன/பெரிய குடும்பப்பிரச்னைகள் கூட 'அவன் என்ன பேசினான் தெரியுமா?' என்பதில் ஆரம்பிக்கிறது. பேசினவர் சொன்னது அவரது மொழித்திறனின் குறைபாடாகவோ, அல்லது தற்காலம் பயன்பாட்டில் இருக்கும் மொழியின் குறைபாடாகவோ இருந்திருக்கலாம் என்பது புரியும் போது நமது சமூக ஊடாடல்களுக்கு ஒரு புதிய பரிணாமம் கிடைக்கிறது.

சில சமயம் எழுத்திலும் இப்படி நடக்கிறது. ஜார்ஜ் ஆர்வெல் ஒரு முறை 'நாம் சிந்திக்கிறோம், பின் எழுதுகிறோம். பெரும்பாலும், நாம் எழுதுவது நாம் சிந்தித்ததின் முழு, உண்மையான வெளிப்பாடாக இருப்பதில்லை. ஆனால், நாம் எழுதியது நமக்கே பிடித்து விடுவதால் அதையே நமது சிந்தனையாக பாவித்துக் கொள்கிறோம்' என்று கூறினார். ஆர்வெலுக்கே அந்த நிலை என்றால், நாமெல்லாம் எந்த மூலை என்று தோன்றுகிறது.

அன்றாட வாழ்வில் மொழியின் பயன்பாட்டின் மாற்றங்கள், தேய்மானம், வளர்ச்சி இவை பற்றியும், கதை, கவிதை ஆகியவை இதை எப்படி பாதிக்கின்றன என்பது பற்றியும் ஒரு வாழ்நாள் முழுவதும் யோசிக்கலாம்.

November 11, 2005 12:36 PM  
Blogger Boston Bala said...

---கதையளந்து உங்களை அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ளலாம்---

நீங்க ஷட்டப் சொல்லாதவரைக்கும் உங்ககிட்டேயே புல்ஷிட் விட்டுடுவோம் ;-)

November 11, 2005 1:42 PM  

Post a Comment

<< Home