<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Wednesday, November 09, 2005

திட்டமிடப்பட்ட வானிலை

[அமெரிக்கா கான்சாஸ் மாநிலத்தில் நேற்று நடந்த தேர்தலில், டார்வினின் பரிணாம வளர்ச்சிக்கு இணையாக 'திட்டமிடப்பட்ட வடிவம்' (Intelligent Design) என்ற திரி(ப்)பும் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படும் என்று முடிவாகி இருக்கிறது. அமெரிக்காவில் நடப்பதெல்லாம் அமெரிக்காவோடு நின்று விட்டால் உலகம் முழுவதும் சுபிட்சமாக இருக்கும் என்பதால் அப்படி நடப்பதற்கு சாத்தியங்கள் அதிகம் இல்லை.]

திட்டமிடப்பட்ட வானிலை

நவம்பர் 8, 2005

தமிழகத்தின் அறிவியல் பாடத்திட்டத்தில் ஒரு புதிய மாறுதல் கொண்டு வரப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அதன்படி, 'மழை பெய்வது எப்படி' என்ற பாடத்தில் 'திட்டமிடப்பட்ட வானிலை' என்ற புதிய பகுதியும் சேர்த்துக் கொள்ளப்படும்.

இது பற்றி அவர் கூறியதாவது:

'தமிழகத்தில் இந்த வருடம் கடும் மழை பெய்யும் என்று நான் ஆறு மாதங்களுக்கு முன்பே சொன்னேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். நான் சொன்னபடியே பெரும் மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். சோதிடமும் பஞ்சாங்கமும் சொன்னபடி பெய்திருப்பதால், மழை பெய்வதற்கு ஒரு மாற்று விளக்கமாக அவற்றைக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடுகிறேன். கடலின் நீர் ஆவியாகி, மேகமாகி, காற்றில் மிதந்து வந்து மழை பெய்கிறது என்றெல்லாம் கருத்துக்கள் நிலவி வருவதை நான் அறிவேன். அதுவும் உண்மையாக இருக்கலாம். பஞ்சாங்கம் சொன்னபடி நடக்கிறது என்பதும் உண்மையாக இருக்கலாம். ஆதலால், இனி, இரண்டும் பாடபுத்தகங்களில் இடம் பெறும். இதனால், மாணவர்கள் முழுமையான அறிவியல் கல்வி பெறுவார்கள்.'

இதையடுத்து பாடபுத்தகங்களில் புதிதாக பக்கங்கள் சேர்க்கப்பட உள்ளன. அதில், மாணவர்களுக்குப் புரியும் வண்ணம், வருண பகவான் எந்த எந்த இடத்தில் எவ்வளவு மழை பொழிய வேண்டும் என்று திட்டமிடுவது ஒரு படமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த முடிவு குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் விவரங்கள் வருமாறு:

விகடன்:

முதல்வரின் முடிவு சரி: 25%
முதல்வரின் முடிவு தவறு: 15%
கருத்துக் கூற விரும்பவில்லை: 60%

(கருத்துக் கூற விரும்பாதவர்களிடம் ஏன் என்று கேட்ட பொழுது, "நாங்கள் 'உலகம் உருண்டையா, தட்டையா?' என்று கேட்டாலே கருத்து சொல்ல மாட்டோம், இதெல்லாம் எங்களுக்கு ஜுஜூபி" என்று கூறினர்)

தினமலர்:

முதல்வர் சொல்வதிலும் ஓரளவுக்கு நியாயம் இருக்கத்தான் செய்கிறது: 95%
கடவுள் இல்லை: 5%

கருணாநிதி கருத்து

திமுக தலைவர் கருணாநிதி, 'பெரியாரும் அண்ணாவும் இருந்த தமிழ் நாட்டில் இப்படி நடப்பது வேதனை அளிக்கிறது' என்று கூறினார். கருத்துக் கணிப்பு விவரத்தைச் சுட்டிக் காட்டியதும், 'ஏன் இதை முதலிலேயே சொல்லவில்லை?' என்று கடிந்து கொண்டார். பின்னர் அவர் 'மழை பெய்வதற்குப் பல காரணங்கள் உண்டு என்பது தமிழன் பல நாட்களாக அறிந்தது தான். இதில் புதிதாக ஒன்றும் இல்லை. அய்யன் வள்ளுவன் இதை அன்றே சொல்லி இருக்கிறான். மழை பெய்வதற்கு மேகங்கள் எல்லாம் தேவையில்லை, ஒரு நல்லார், சில பத்தினிப் பெண்கள் இருந்தால் போதும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதையும் பாடப்புத்தகத்தில் சேர்ப்போம்' என்று சொன்னார்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

5 Comments:

Blogger Maya said...

நம்ம ஆட்கள் எதை வேண்டுமாலும் அரசியல் ஆக்குவார்கள்..வேண்டுமானால் நம் அருணை விட்டு யார் யார் என்ன எப்படி சொல்வார்கள் என்பதை ஒரு மிமிக்கிரி பண்ணச் சொல்லாம்...
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

November 09, 2005 8:52 PM  
Anonymous Anonymous said...

Please don't even say such a thing as a joke. You are giving ideas where none exist.

November 10, 2005 6:17 AM  
Blogger Ganesh Gopalasubramanian said...

நோக்கம் சிறந்ததாக இருக்கும் வரை எதை வேண்டுமானாலும் வரவேற்கலாம் தானே.

November 10, 2005 6:28 AM  
Anonymous Anonymous said...

> Go.Ganesh said...
> நோக்கம் சிறந்ததாக இருக்கும்
> வரை எதை வேண்டுமானாலும்
> வரவேற்கலாம் தானே.

See what I mean?

You are playing with fire here Srikanth!

November 10, 2005 6:57 AM  
Blogger Srikanth Meenakshi said...

Ganesh, dude, I was just kidding.

Anony, it scares my pants off to think that you may be right...

November 10, 2005 2:39 PM  

Post a Comment

<< Home