<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Tuesday, November 08, 2005

'நச்சென்று' இருப்பது தமிழ் முரசு இல்லை

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு தினமலர் ஆசிரியர் ஒருவர் பா.ஜ.க கட்சி மாநாட்டில் கலந்து கொண்டார் என்ற செய்தி படித்து விட்டு அந்த நாளிதழைப் புறக்கணிக்கத் துவங்கினேன். சில மாதங்களுக்கு முன்பு காவிரியில் வெள்ளம் கரை புரண்டோடுவதன் புகைப்படங்கள் தினமலரில் சிறப்பாக இருப்பதாகக் கேள்விப்பட்டு எட்டிப் பார்த்தேன். உள்ளடக்கம், சாய்மானங்கள் எதுவும் மாறவில்லை என்றாலும் புகைப்படங்கள் நன்றாகவே இருந்தன. காவிரியைத் தொடர்ந்த சென்னை வெள்ளங்கள் என்னை உட்கார வைத்தன.



இப்பொழுது, தீபாவளி துவக்கமாக, மின் நாளிதழ் (E-Paper) அறிமுகம் செய்திருக்கிறார்கள். இன்று தான் முதன் முறையாகப் பார்த்தேன். படு நேர்த்தியாக இருக்கிறது! காகித நாளிதழ் படிப்பது போன்றே வரும் உணர்வு மட்டுமில்லாமல், சுலபமாக பக்கங்கள் தாவவும், முந்தைய நாள் இதழ்களைப் பார்க்கவும் வசதிகள் இருக்கின்றன. ஏதோ AJAX மாய்மாலம் என்று நினைக்கிறேன் - செய்தித்தாள் பக்கத்தில் இருக்கும் கட்டுரையில் தட்டினால், படிக்க வசதியாக விரிகிறது!

இதன் அருமை புரிய ஒரு முறை தமிழ்முரசு நாளிதழின் தளத்திற்குப் போய்ப் பாருங்கள்.

தினமலர் மின் நாளிதழ்

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

15 Comments:

Blogger Boston Bala said...

Amazing experience. I had been fed up with e-paper technology, with using Dinamani, Thamizh Murasu, TOI versions.

November 08, 2005 6:18 PM  
Blogger முகமூடி said...

// தினமலர் ஆசிரியர் ஒருவர் பா.ஜ.க கட்சி மாநாட்டில் கலந்து கொண்டார் என்ற செய்தி படித்து விட்டு அந்த நாளிதழைப் புறக்கணிக்கத் துவங்கினேன்//

தமிழ்நாட்டுல அரசியல் சாரா நடுநிலை நாளிதழ் எதாவது வருதுங்களா?

தினமலர் - இன்றைய தேதிக்கு தினசரிகளின் சன் டிவி (தொழில்நுட்பத்தில்)

November 08, 2005 6:42 PM  
Anonymous Anonymous said...

So, will you boycott Dinakaran if its editor attended DMK meet, or will you boycott The Hindu if its editor is a card holding member of CPIM and attends its meet?

November 08, 2005 6:47 PM  
Blogger Srikanth Meenakshi said...

BB, Glad you liked it, the only downer (for the few like me) is that it craps out in my Apple's Safari browser :-(

முகமூடி, தினமணி எனக்குத் தெரிந்த வரை நடுநிலையாகத் தான் இருக்கிறது.

அனானி, I know NRam is a marxist by his opinions, but would be surprised/disappointed if he is actually a member of the party. I would definitely have serious objections to that - it would go against basic journalistic principles.

November 08, 2005 8:02 PM  
Blogger ஜென்ராம் said...

என்.ராம் வசம் சி.பி.ஐ.எம். கட்சி உறுப்பினர் அட்டை கிடையாது. மற்ற பத்திரிகைகளில் இடது சாரி செய்திகளுக்கு இடமே இருக்காது. ஹிந்துவில் ஓரளவு இடம் கொடுக்கிறார்கள்.. அவ்வளவுதான்..

November 08, 2005 8:38 PM  
Blogger அன்பு said...

தகவலுக்கு நன்றி சுரேஷ்.
தொழில்நுட்பம் அருமையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது...
காசு கேட்கிறவரை பார்க்கலாம்:)

November 08, 2005 10:47 PM  
Blogger Kasi Arumugam said...

அருமையாக செய்திருக்கிறார்கள். தொழில்நுட்பத்தில் தமிழ் இணையப் பதிப்புகளை இன்னுமொரு கட்டத்துக்கு தினமலர் எடுத்துச் சென்றிருக்கிறது. பாராட்டுக்கள். ஆனால் யுனிகோடு எழுத்துருவாக்கி, கூகிள் தேடலில் அகப்படுமாறு எதாவது செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இன்றைய வலைப்பூ நுனிப்புல் தேவதை (ராட்சசி)!

//தகவலுக்கு நன்றி சுரேஷ்.//
சுரேஷுக்கு எதுக்கு நன்றி? :P

November 08, 2005 11:07 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

I think you are referring to the VHP pro-hindutva conference in Trichy. One of the grandsons of the founder of Dinamalar played a
major part in that.As far as I know the editor of Dinamalar did
not participate.My understanding is that Dinamalar is managed by members of the extended family with one member in control of one edition , e.g r will control madras edition, k will control madurai edition. So the concept of editor as commonly understood may not be applicable there.

Was not N.Ram a member of SFI
when he was a student.For all
practical purposes he is a member of CPI M politburo.So why would
he need a formal membership of Politburo. To call him as India's
answer to Chomsky is an insult to
Chomsky.Chomsky is a scholar. He was a professor in MIT.N.Ram is nowhere near him.

November 08, 2005 11:09 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

Dinamalar is like a slick snake full of venom.Technically it is good but content wise it is horrible as a news paper.

November 08, 2005 11:12 PM  
Blogger Kasi Arumugam said...

//Technically it is good but content wise it is horrible as a news paper. //
உண்மையே. 'வாசம்' சேர்க்காத செய்திகள் அரிதாகிவிட்டது. 'செய்தி'த்தாளாக மட்டும் இருந்தால், தினமலரின் தொழில்நுட்ப/நிர்வாக சிறப்புகள் இன்னும் அதிகமாக நம் சமூக நலனுக்கு உதவும்.

November 08, 2005 11:30 PM  
Blogger அன்பு said...

//தகவலுக்கு நன்றி சுரேஷ்.//
சுரேஷுக்கு எதுக்கு நன்றி? :P

sorry, நன்றி ஸ்ரீகாந்த்.

(பி.கு: காசி-க்கு எதுககு நன்றின்னலாம் கேட்கறமாதிரி வச்சுக்கமாட்டோம்:)

November 08, 2005 11:33 PM  
Blogger ஜெ. ராம்கி said...

It's obvious that there is a coldwar between Chennai Dinamalar & Madurai Dinamalar. So, we can't come to a conclusion easily. Dinamalar is always ready to criticize anybody at any circumstance... because their aim is to get money by making waves!

November 08, 2005 11:38 PM  
Blogger பாலசந்தர் கணேசன். said...

இது அஜாக்ஸ் கிடையாது. பொத்ட்ரீ யொட ப்ரொடக்ட் வச்சு வெப் சைட் டெவலப் பண்ணியுருக்காங்க. இந்த ப்ராடக்ட் வச்சு நிஜ பத்திக்கை அனுபவத்தை உருவாக்கலாம்.
யாருக்கு தெரியும் ப்ரொடக்டுக்குள்ள அஜாக்ஸ் இருக்கலாம்.

November 09, 2005 5:00 PM  
Blogger துளசி கோபால் said...

தகவலுக்கு நன்றி.
அருமையா இருக்கு.

'அன்பு' சொன்னதேதான், 'காசு கேக்கறவரை பார்க்கலாம்':-)

November 09, 2005 6:25 PM  
Anonymous Anonymous said...

இப்போதுதான் இப்பதிவைப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட இதேமாதிரியானதொரு வடிவத்தில் படிக்க முயற்சித்துப் பின் கைவிட்டுவிட்டேன் - எனக்கு தினமலர் அப்படிக் கிடைத்தது இங்கே

November 09, 2005 6:58 PM  

Post a Comment

<< Home