<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Tuesday, November 08, 2005

ஃப்ரென்சுத்தனத்திற்கு எதிரான ஃப்ரென்சுப் புரட்சி?

ஃப்ரான்ஸில் நிகழ்ந்து வரும் கலவரங்கள் துவங்கிய போது, 'இவங்களுக்கு வேறு வேலை இல்லை' என்று நினைத்துக் கொண்டேன் - I mean, really, பொருளாதாரப் பிரச்னைகள், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற வழமையான காரணங்களுக்கான போராட்டம் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால், கலவரங்கள் தீவிரமடைந்து பாரீஸைத் தொடத்துவங்கியிருக்கும் இவ்வேளையில், இதற்கு அடிப்படைக் காரணங்கள் வேறு என்று செய்திகள் சொல்கின்றன.

வாஷிங்டன் போஸ்ட்:

"While many French leaders depict the rioters as simple criminals, political and social analysts and many French citizens see the fires that are burning across the country as reflecting a growing identity crisis in a nation where social policies have not kept up with rapidly changing profiles in religion, race and ethnicity."

நியூ யார்க் டைம்ஸ்:

"The government has been embarrassed by its inability to quell the disturbances, which have called into question its unique integration model"

ஆக, பிரச்னைகளின் மூலக் காரணம், அந்நாட்டில் வந்து குடியேறிய பல இனக்குழுக்களுக்கும் (குறிப்பாக ஐரோப்பா அல்லாத அரபு/ஆப்பிரிக்க மக்கள்), ப்ரென்சு/ஐரோப்பிய மக்களுக்கும் இடையில் புகைந்து கொண்டிருந்த பகைமை. இதற்கு நெய்யூற்றிப் பற்ற வைத்தது ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் நிக்கலஸ் சர்கோஸி. இவர் (அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கண்ணோடு) சமீபத்தில், விஜயகாந்த் போல 'மன்னிப்புங்கற வார்த்தையே எனக்குப் பிடிக்காது' என்று ஒரு zero tolerance விதிமுறையைக் கொண்டு வந்திருக்கிறார். இந்த போலீஸ்கார 'வேட்டையாடு விளையாடு' திட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது ஏழை அரபு/ஆப்பிரிக்க மக்கள் வாழும் பகுதிகள். அங்கே தொடங்கியது இந்தப் போராட்டங்கள்.

வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் குடியேற்றம் உள்நாட்டுச் சமுதாயத்தில் உண்டாக்கும் தாக்கங்களைச் சமாளிப்பது எப்படி என்பது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம். ஐரோப்பிய நாடுகள் இவ்விஷயத்தில் மூன்று அணுகுமுறைகளைக் கடைபிடிப்பதாக டைம்ஸ் கட்டுரை சொல்கிறது:

1. ஜெர்மனியின் முறை: குடியேறிகள் தற்காலிகமாகவே அனுமதிக்கப்படுகிறார்கள். தற்காலிக விசா முடிந்ததும் வீடு திரும்பும் மக்களாகவே பாவிக்கப்படுகின்றனர். நிரந்தரக் குடிமக்களாவதற்கும் சமஉரிமை பெறுவதற்கும் ரொம்பப் போராட வேண்டும்.

2. ப்ரான்ஸின் முறை: குடியேறிகள் வரலாம், பெறலாம், தரலாம்; ஆனால் வீட்டு வாசலில் செருப்பை விட்டு வருவது போல், நாட்டு வாசலில் சொந்தக் கலாசாரத்தை விட்டு விட வேண்டும். ஒரு மையமான ஃப்ரென்சுத்தனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். பொதுவில் மதச்சின்னங்களுக்குத் தடை என்பதில் துவங்கி எந்த ஒரு தனித்தன்மையையும் மறைக்கும் அணுகுமுறை. கோவில் கட்டுவது, சங்கம் ஆரம்பிப்பதெல்லாம் பிரம்ம பிரயத்தினம்.

3. இங்கிலாந்தின் முறை: கிட்டத்தட்ட அமெரிக்க முறை. வாருங்கள், முடிந்த வரை எங்கள் நாட்டு முறைகளைப் பின்பற்றுங்கள், மற்றபடி எப்படி வேண்டுமானாலும் இருங்கள். கொஞ்ச நாள் கழித்து குடிமக்களாகலாம், உங்களுக்குப் பிடித்தால்.

இம்மூன்றில் தெளிவாக அபத்தமாக இருப்பது ப்ரென்சு முறை தான் என்பதால், இப்படிக் கலவரங்கள் நடப்பதில் ஆச்சரியமில்லை.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

7 Comments:

Blogger வானம்பாடி said...

இதை புரட்சி என்றெல்லாம் சொல்லி புரட்சியை கொச்சைப்படுத்தாதீர்கள். வன்முறை வெறியாட்டம் போட இது ஒரு சாக்கு. பிரான்சின் கொள்கைகளில் தான் ஒட்டை என்றால், இந்த கலவரம் இப்போது பெல்ஜியத்தின் ப்ரஸ்ஸல்ஸ் வரை பரவியிருப்பதற்கு என்ன சொல்கிறீர்கள். இருப்பதிலேயே குடியேறிகளுக்கு மிகவும் அணுசரனையான நாடு பெல்ஜியம். வெறியர்களுக்கு நியாயமான் காரணம் எதுவும் தேவை இல்லை வெறியாட்டம் போட.

November 08, 2005 11:43 AM  
Blogger Srikanth Meenakshi said...

சுதர்சன், அப்படி பட்டை பிரஷ் வைத்து தீட்ட முடியாது என்று தோன்றுகிறது.

மாலி மோர், வாஷிங்டன் போஸ்டில் மதிக்கப்படும் பத்திரிக்கையாளர். அவரது ஒரு கேள்வி பதிலிலிருந்து:

Washington, D.C.: Any indication that Islamic terrorist elements are getting involved with the rioting?

Molly Moore: None whatsoever thusfar, though some politicians have tried to stir up that idea. Many Muslim leaders have been working hard to try to curb the violence because they are concerned about the image it is giving Islam. It is true that many of the participants in the violence are Muslim, but it is also true that they are African or Arab and are poor. Right now the violence is more directed at their social circumstances than their religious ones. It is also true, however, that many Muslims are angry that they are viewed with suspicion and distrust in France and elsewhere.

_______________________

Charleston, S.C.: Ms. Moore,

Is it possible to put this current situation in a broader perspective? Perhaps, what we are seeing in France is truly no different than what we amy see more of in the future. With porous borders and immigration as never before, this could be a prelude to coming difficulties in many other countries. Today, unlike the past, these immigrant communities value their own culture more than they value integrating into the predominant culture. Do you see this as a failure of multi culuturalism? What can the U.S. learn from this with respect to Mexican immigrant communities?

Molly Moore: Good questions. There are implications here for every country with large immigrant populations. But there are also some big differences. France has no such thing as affirmative action. In fact, it's illegal to designate anything in terms of ethnicity or race--therefore it's almost impossible to get figures on the percentage of minorities in the police department. But go into the communities where the violence is occurring and you see very, very few, if any brown or black faces in the police department. There is also not a single immigrant representative in the nation's parliment. So there is much discussion here of the pervasive discrimination the government should be attempting to resolve.

November 08, 2005 1:19 PM  
Blogger rv said...

ஸ்ரீகாந்த்,
சுதர்ஸன் சொல்வதுதான் சரியென்று படுகிறது. பல வழிகள் இருக்கையில் வெறும் hooliganism புரட்சியாகவோ, உரிமைகளை பெற ஒரு வழியாகவோ ஆகாது. இதனால், பிரென்சு மக்களிடையே இன்னும் பகையும் பிரிவினையும் தேவையில்லாமல் வளரும். அதனால், பாவம் பார்க்காமல், must be crushed.

அமைப்பாய் இருந்து நியாய வழியில் போராடாமல் வேலையற்ற, சலுகைகள் பெறாத தனிநபர்/சிறு குழுக்கள் எல்லோரும் 'சட்டம் என் கையில்' என்று எடுத்துக்கொண்டால் என்ன நடக்குமோ அதுதான் பாரிஸில் நடக்கிறது என்று எண்ணுகிறேன்.

நிக்கோலாஸ் சார்கோஸியும் வந்தேறியவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்தான் என்று IHT யில் படித்ததாய் நினைவு. சுட்டி கிடைக்கவில்லை.

//it's almost impossible to get figures on the percentage of minorities in the police department//
இந்த ஒரு விஷயத்தாலே, இரண்டு பக்கமும் இடிதான் பிரஞ்சு போலீஸிற்கு.

November 08, 2005 1:47 PM  
Blogger Maya said...

இதுவே நம்(இந்தியா) நாட்டில் நடந்தால்..அதற்க்கு வேறு பெயர்..அடுத்த நாட்டில் நடந்தால் புரட்ச்சியா ??

நாம் ஒவ்வெரு முறையும் அண்டை நாட்டவரால் தாக்கப்படும் போது இந்த் பிரான்ச் அரசாங்கம் யாருக்கு சப்போர்ட் பண்ணியது என்பது அனைவரும் அறிந்தது.

தலைவலியும் , காய்ச்சலும் தன்க்கு வந்தால் தான் அதன் வலி தெரியும்.

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

November 08, 2005 2:19 PM  
Blogger Srikanth Meenakshi said...

//இதுவே நம்(இந்தியா) நாட்டில் நடந்தால்..அதற்க்கு வேறு பெயர்..அடுத்த நாட்டில் நடந்தால் புரட்ச்சியா ?? //

நியாயமான கேள்வி. ஆயினும், இந்தியாவில் மெத்தனம், ஊழல், சோம்பேறித்தனம் எனப்பல பிழைகள் இருந்தாலும், சட்ட ரீதியான, அரசியல் அமைப்பு ரீதியான குறைகள் அதிகம் இல்லை. இதனால், அமைப்புக்குள்ளிருந்து நியாயம் தேடுவது சுலபமில்லை என்றாலும் சாத்தியம்.

நான் படிக்கும் வரை, ப்ரான்ஸில் குடியேறிகளைப் பொறுத்தவரையில் அமைப்பு ரீதியான குறைகளைச் சந்திக்கிறார்கள். இதற்கு எதிர்வினையாக கலவரம்/வன்முறை என்பது ஒரு நிலைக்கு மேல் உருவாவது எதிர்பார்க்கக் கூடியது தான்.

குறிப்பாக, unorganized/spontaneous கலவரங்கள் - எந்த வெளித்தூண்டுதலும், ஆதரவும் இல்லாத கலவரங்கள்.

இது போன்ற விஷயங்களில், உறுதி என்ற பெயரிலோ, uniformity என்ற பெயரிலோ, ஒரு ஒற்றை நிலைப்பாட்டை எடுத்துக் கொள்வது எனக்குக் கடினமாக இருக்கிறது.

November 08, 2005 2:42 PM  
Blogger Boston Bala said...

ரீஸன்.காம்-இலிருந்து கடன் :

The Latest French Fashion

One tiny positive to flow from almost two weeks of rioting in Paris and across France is that maybe, just maybe, would-be city planners from America will pause for a second before simply assuming that Euro-style living is the best thing ever. Or to put it bluntly, would some front-load garages come in handy when the New Urbanist, pedestrian-friendly on-street parking is just a bull's-eye for a firebomb?

The occasional three-day trip to the French countryside is probably responsible for more bad ideas about zoning and land-use than all advanced degrees put together. The ugly images of the past few days should not be more persuasive than common sense, but they might puncture Euro trendiness among America's planner set all the same.

That might at least balance out the truly senseless violence that was met by an almost Katrina-esque response from French officials. Presumably Jacques Chirac had a reason for waiting 11 days to comment on the riots, but needing time to come up with great oratory surely was not among them. The situation seems ripe for some real leadership to bubble up from below the ossified political structure and point France back toward sanity.

November 08, 2005 2:44 PM  
Blogger Srikanth Meenakshi said...

yav,

Very interesting. Thanks. I don't think I would characterize it as "resigned to" as in a defeat. In my world view, these differences do exist and to pretend either that they do not or to try to meld them together using artificial devices would be the route to much detriment.

As in France today, me thinks.

Srikanth

November 10, 2005 10:29 AM  

Post a Comment

<< Home