<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, November 06, 2005

கலாசாரங்கள் கலந்துருகும் கலயம்?

நேற்றிரவு "Crash" படம் பார்த்தேன். போன வருடம் வந்த படம். அற்புதமாக இருந்தது. Magnolia meets The House of Sand and Fog. கட்டாயம் பாருங்கள். குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் வெளிநாட்டவர்கள் (you know what I mean....).


படம் அமெரிக்க நகரங்களில் கலந்தோடும் அந்நியக் கலாசாரங்களையும், அவை ஒன்றோடொன்று உராயும் தருணங்களையும் பற்றியது. படத்தின் முதல் வசனம் படத்தின் கருவை பளிச்சென்று சொல்லி விடுகிறது (Hotel Rwanda வில் நடித்த டான் சீடில் சொல்லும் வசனம்):

"தொடுதல்...ஒரு சாதாரண நகரத்தில் மக்கள் தெருக்களில் நடப்பார்கள்; அப்பொழுது ஒருவரோடு ஒருவர் உராய்வார்கள், இடித்துக் கொள்வார்கள். ஆனால் லாஸ் ஏஞ்சலசில் யாரும் யாரையும் தொடுவதில்லை. கண்ணாடிகளுக்குப் பின்னால் இருந்து கொள்கிறோம்.... நான் என்ன நினைக்கிறேன், அந்தத் தொடுதல் உணர்விற்காக நாம் ரொம்பவும் ஏங்குகிறோம், அதனால் தான் சில சமயம் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொள்கிறோம். அப்படியாவது யாரையாவது தொட மாட்டோமா என்று".

படம் என்னிடத்தில் எழுப்பிய சிந்தனை:

அமெரிக்காவை கலாச்சாரங்களை கலக்கியுருக்கும் கலயம் (melting pot) என்று வர்ணிப்பதுண்டு. பம்மாத்து. இந்தியாவின் Unity in Diversity போல. அப்படி இருக்க வேண்டும் என்ற நப்பாசை இருக்கிறது, ஆனால் நிஜம் என்னவோ அதற்கு வெகு தொலைவில் தான். அந்நியர்கள் அனைவரும் தமக்காக உருவாக்கிக் கொள்ளும் கற்பனைச் சமுதாயத்தில் வாழ்ந்து கொள்கிறார்கள். இங்கேயே பிறந்தவர்கள் கொஞ்சம் (கொஞ்சம் தான்) தேவலை. வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்து இங்கு வந்தவர்களுக்கு பிரச்னைகள் உண்டு:

1. தமது கலாசாரப் பின்னணி குறித்து ஒரு துளியூண்டு மேன்மைச்சிந்தனயாவது இவர்களுக்கு உண்டு - தொலைவில் வாழ்வதால் வரும் ஊர்ச்சோகம் இதைக் கொஞ்சம் மிகைப்படுத்தவும் செய்யும். இப்படி இருக்கையில் 'கலந்து உருகுவது' குறித்து 'இதெல்லாம் தேவையா' என்ற கேள்வி, 'இதனால் நமது வேர்களை இழந்து விடுவோமோ' என்ற பயம் இரண்டும் உண்டு.

2. இதற்குத் தேவைப்படும் வேலைப்பளுவும் மிக அதிகம். தனியாக ஒரு project plan போட்டு, அலுவலக நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் இதையே செய்தால் தான் சாத்தியம். ஒரு பொது அறிவிற்காக பல விதமான பண்பாடுகளைப் பற்றி நான்கு விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்கு மேல் போவது கடினம். பண்ணின முயற்சியெல்லாம் Thanksgiving பந்தியில் உட்கார்ந்து கொண்டு 'நான் வெஜிடேரியன்' என்று சொல்லும் போது பல்லிளித்து விடும்.

என்னிடம் யாராவது அமெரிக்காவில் என்னவெல்லாம் பார்த்தாய் என்று கேட்டால், நயாகரா ஃபால்ஸ் பார்த்தேன், ஃப்ளோரிடா பார்த்தேன், நியூ யார்க் பார்த்தேன், அமெரிக்க கலாச்சாரம் பார்த்தேன் என்று சொல்வேன்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

12 Comments:

Blogger rv said...

ஸ்ரீகாந்த்,
சமீபத்தில் பார்த்ததிலேயே மிகவும் பாதித்த படம். என்னை நானே பல கேள்விகள் கேட்டுக்கொள்ள உதவியது.

நல்லவேளை, சின்னதா பதிவு போட்டுட்டீங்க. இந்தப்படத்த வச்சு ஒரு பெரிய பதிவு போடலாம்னு நினச்சுகிட்டிருந்தேன். நான் போட சான்ஸ் இன்னும் இருக்குல்ல? :)

November 06, 2005 11:40 AM  
Blogger வெளிகண்ட நாதர் said...

மல்டிகல்சுரலிஸம் என்பது அமெரிக்காவின் தத்துவமில்லையே, அது கனடா போன்ற நட்டிற்கு வேண்டுமானால் பொருத்தமானது, ஆனால் அடிப்படையில் அமெரிக்கனிஸம் என்ற ஒருபாங்கு கொள்கையே இங்கு முக்கியம். ஆதாலால் கலாசாரங்கள் கலந்துருகி கலயத்தில் ஒன்று சேரும் பொழுது அமெரிக்கன் என்ற ஆட்பாரிப்பு தான் அதிகமாக வேண்டும், தம் தம் காலாச்சார வேர்களை தேட கிடைப்பத்து ஒன்றுமில்லை

November 06, 2005 11:23 PM  
Blogger Boston Bala said...

Magnoliaவே இன்னும் பார்த்தபாடில்லை. லிஸ்டில் சேர்த்துக் கொள்கிறேன்...

November 07, 2005 2:46 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நல்ல படம் ஸீரிகாந்த், நானும் பார்த்தேன்.
இன்னும் கொஞ்சம் விரிவாகவே விமர்சனம் செய்து இருக்கலாம்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

November 07, 2005 3:42 PM  
Blogger Srikanth Meenakshi said...

This comment has been removed by a blog administrator.

November 07, 2005 4:15 PM  
Blogger Srikanth Meenakshi said...

//இராமநாதன்: இந்தப்படத்த வச்சு ஒரு பெரிய பதிவு போடலாம்னு நினச்சுகிட்டிருந்தேன்.//

//சிவா: இன்னும் கொஞ்சம் விரிவாகவே விமர்சனம் செய்து இருக்கலாம்.//

இராமநாதன், meet சிவா...சிவா, meet இராமநாதன்...

November 07, 2005 8:23 PM  
Blogger Unknown said...

This comment has been removed by a blog administrator.

November 07, 2005 9:28 PM  
Blogger Unknown said...

ஸ்ரீகாந்த்,
//பண்ணின முயற்சியெல்லாம் Thanksgiving பந்தியில் உட்கார்ந்து கொண்டு 'நான் வெஜிடேரியன்' என்று சொல்லும் போது பல்லிளித்து விடும்.//

இப்படிச் சொல்றதுனால நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல.
ஒரு வெஜிடேரியன் Thanksgiving கலந்துக்க முடியாது என்றா?
வெஜிடேரியன் என்று சொல்வது Thanksgiving-ல் நகைப்பான செயலா?
அல்லது வெஜிடேரியன் என்றால் Thanksgiving-ல் கலந்து கொள்ள முடியாதா?

வெஜிடேரியன் என்பது JUST A FOOD HABIT என்பது அனைத்து அமெரிக்கர்களுக்கும் தெரியும். நம்மூரில் தான் இதனை சாதி/மதத்துடன் இணைத்துப் பார்க்குகிறார்கள். பால் கூட சாப்பிடாத தாவர உண்ணி மனிதர்கள் இங்கு உண்டு. அவர்களும் வான்கோழி இல்லாத Thanksgiving கொண்டாடுகிறார்கள்.

சத்தியமா நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியல.

November 07, 2005 9:39 PM  
Blogger நற்கீரன் said...

This comment has been removed by a blog administrator.

November 07, 2005 10:09 PM  
Blogger நற்கீரன் said...

Personally, the idea of multi-culturalism is very appealing to me. Surely, it is not possible to explore all cultures in great depth, but if you want to explore certain aspect of a certain culture, a setting such as Toronto is more suitable than a homogenous town. Politically, there are only handful of countries (Australia, Canada, India!) where multi culturilism is officially a policy. America is not a multi – cultural country, instead it advocates for melting pot and the common American Dream. But, it seems that they end up as a multi cultural society any way.

Although, multi-culturalism has its share of shortcomings, such as lack of sufficient integration within the mainstream society, segregation, and ethnic enclaves. When it works optimally it is a beautiful thing. From what I hear, Chennai and Bombay can be considered multi cultural societies, where multi culturalism works.

I was looking for the Tamil word for melting pot, where did you come across it or did you make it up?

November 07, 2005 10:12 PM  
Blogger Srikanth Meenakshi said...

//சத்தியமா நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியல.//

கல்வெட்டு, வெஜிடேரியனாக இருப்பது உணவுப் பழக்கம் தான், ஆயினும் thanksgiving போன்ற (இது மத ரீதியான விழா அல்ல) நிகழ்வுகளில் கலாசாரப் பழக்கமும் உணவுப் பழக்கமும் இணைந்து இருக்கின்றன. இங்கு அசைவம் சாப்பிட மாட்டேன் என்று சொல்வதில் தவறில்லை - சாப்பாடு போட மாட்டேன் என்று யாரும் சொல்லப் போவதில்லை - என்றாலும் ஒரு கலாசார நிகழ்வில் முழுமையாக கலந்து கொண்ட நிறைவு உங்களுக்கும் இருக்காது, அவர்களுக்கும் இருக்காது. பொங்கல் பந்தியில் உட்கார்ந்து 'எனக்கு அரிசிச்சாப்பாடு ஒத்துக் கொள்ளாது' என்று சொல்வதைப் போல.

கலாசாரப் பகிர்தலுக்குத் தடையாக பல விஷயங்கள் இருப்பதைக் குறிப்பதற்காக அந்த உதாரணத்தைப் பயன்படுத்தினேன்.

//பால் கூட சாப்பிடாத தாவர உண்ணி மனிதர்கள் இங்கு உண்டு. அவர்களும் வான்கோழி இல்லாத Thanksgiving கொண்டாடுகிறார்கள்.//

உண்மை தான். ஆனால், அவர்கள் Mainstream கலாசாரம் இல்லை என்பதும் உண்மை. அவர்களும் நம்மைப் போல ஒரு உபகலாசாரம் தான்.

//When it works optimally it is a beautiful thing. //

நற்கீரன், I agree that when it works, it can be quite nice. My point is that practically, it does not - due to pretty significant obstacles in its path.

//I was looking for the Tamil word for melting pot, where did you come across it or did you make it up? //

I made it up, but can't believe someone else does not have a better phrase for it...

November 07, 2005 10:43 PM  
Blogger Unknown said...

ஸ்ரீகாந்த்,
//என்றாலும் ஒரு கலாசார நிகழ்வில் முழுமையாக கலந்து கொண்ட நிறைவு உங்களுக்கும் இருக்காது, அவர்களுக்கும் இருக்காது. பொங்கல் பந்தியில் உட்கார்ந்து 'எனக்கு அரிசிச்சாப்பாடு ஒத்துக் கொள்ளாது' என்று சொல்வதைப் போல.//

நீங்கள் சொல்ல வந்த முழுமையான பகிர்தல் விசயம் புரிந்தது. Thanksgiving concept எனக்குப் பிடித்தமான ஒன்று.அதனால் தான் கேட்டேன்.
(குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
http://kalvetu.blogspot.com/2005/10/12-thanks-giving-day.html)

//கலாசாரப் பகிர்தலுக்குத் தடையாக பல விஷயங்கள் இருப்பதைக் குறிப்பதற்காக அந்த உதாரணத்தைப் பயன்படுத்தினேன்.//

மாற்று மக்களின் பழக்க வழக்கம்/கலாச்சாரத்தை முற்றிலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளு(பவர்கள்)ம் இன்னொரு கலாச்சாரம் எங்கும் இல்லை என்றே எண்ணுகிறேன். கலாச்சாரம்1 கலாச்சாரம்2 ஐ உள்வாங்கும் போது முழுமையாக ஏற்காமல் சிறிது மாற்றத்துடனேயே ஏற்றுக் கொள்ளும்.ரொம்ப சின்ன உதாரணம். இந்தியா,அமெரிக்கா கிடைக்கும் சைனா உணவு வகைகள் உ ண் மை யா ன (100 %) சைனா உணவு வகையாக இல்லாமல் அந்த அந்த பிராந்திய சுவையுடன் இருக்கும்.

விளக்கத்திற்கு நன்றி ஸ்ரீகாந்த்!

November 07, 2005 11:19 PM  

Post a Comment

<< Home