<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, July 17, 2005

"வலைப்பதிவுகளைத் தவிருங்கள்" - சுஜாதா

"Avoid blogs, they are endless ego trips." - இந்தியன் எக்ஸ்பிரஸில் சுஜாதா

மாலனின் பதிவு அளித்த சுட்டியில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் சுஜாதா வலைப்பயனர்களுக்குக் கொடுத்திருக்கும் அறிவுரைதான் மேற்காணும் வாசகம்.

இந்த வாக்கியத்திற்கு எதிர்வினையாக எத்தகைய வலைப்பதிவுகள் வரும் என்று ஊகித்து சுஜாதா ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதி இருக்கலாம். அவரை நான் ஏமாற்ற விரும்பவில்லை.

எல்லாக் கட்டுரைகளுமே ஒரு விதத்தில் 'ego-trip' தான். தான் அறிந்தவற்றைக் கொண்டு, தனது கருத்துக்களை, தனது பாணியில் சொல்வதில், "தான்" இல்லாமல் இருக்க முடியாது. சுஜாதாவின் கட்டுரைகளில் இல்லாத சுய தம்பட்டங்களா? அவற்றையும் ரசித்துக் கொண்டு, அவரது கட்டுரைகளை மாய்ந்து மாய்ந்து படிப்பவன் என்ற வகையில், எத்தனையோ எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

"இளையராஜாவைச் சந்தித்தேன். வீட்டுக்கு வாருங்களேன், சாவகாசமாகப் பேசலாம், என்றார்" என்பதில் தொடங்கி, கமல், மணிரத்னம், ஷங்கர், முந்தா நேற்று பிரபலமான மெட்டி ஒலி மாமா வரை பிரபலங்களின் 'name-dropping' இல்லாத சுஜாதா கட்டுரையைக் கண்டுபிடிப்பதற்குள், 'bird-dropping' இல்லாத நேரு சிலையைக் கண்டுபிடித்து விடலாம். அப்துல் கலாம் இவரோடு படித்தவர் என்பதை எல்லாத் தமிழர்களுக்கும் லெட்டர் எழுதித் தெரிவிக்காத குறையாக, எத்தனையோ முறை எழுதி விட்டார்.

இருப்பினும், விஷயமும், நடையும் சுவையாக இருந்தால், படிப்பவர்கள் படிப்பார்கள் என்பதற்கு முதல் எடுத்துக்காட்டு சுஜாதாவேதான்.

பரவாயில்லை. சுஜாதா சொல்லி விட்டார் என்பதற்காக, வலைப்பதிவுகளைப் படிப்பவர்கள் நிறுத்தி விடப் போவதில்லை. வலைப்பதிவுகளைப் பற்றித் தெரியாதவர்கள், 'அதென்ன blog...' என்று எட்டிப் பார்த்து விட்டுத் தங்கி விடலாம்.

இணையத்தின் துணையோடு, எழுத்து வாசகர்களைச் சென்றடைவதில் ஒரு ஜனநாயகப் புரட்சி நிகழ்ந்து வருகிறது. வலைப்பதிவுகளுக்கு இதில் பெரும் பங்கு உண்டு. இதனால் கலவரப்பட வேண்டிய எழுத்தாளர்களின் வரிசையில் சுஜாதாவிற்கு இடமில்லை. இதை அவரும் அறிவார் என்று நம்புவோம்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

23 Comments:

Blogger -/பெயரிலி. said...

/'name-dropping' இல்லாத சுஜாதா கட்டுரையைக் கண்டுபிடிப்பதற்குள், 'bird-dropping' இல்லாத நேரு சிலையைக் கண்டுபிடித்து விடலாம். /

;-)))

July 17, 2005 11:42 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

This comment has been removed by a blog administrator.

July 17, 2005 12:02 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

வலைப்பதிவாளர்கள் பலர் சுஜாதவைப் படித்து வளர்ந்தவர்கள்.ஆனால் இன்று அவரைத் தாண்டிச்
சென்றுவிட்டார்கள்.அது மட்டுமின்றி இன்று அவரிடம் குறை காணவும், அவர் எழுத்துக்களை விமர்சிக்கவும் செய்கிறார்கள் -வலைப்பதிவுகளில்.இது அவருக்கு எரிச்சலூட்டுகிறது. அதுதான் இப்படி வெளிப்படுகிறது

July 17, 2005 12:03 PM  
Blogger Unknown said...

ºÃ¢Â¡¸î¦º¡ýÉ£÷¸û. þó¾Á¡¾¢Ã¢ ŨÄôÀ¾¢×¸¨ÇôÀüÈ¢ ¾¢ÕôÀ¢ò¾¢ÕôÀ¢ ¸£úò¾ÃÁ¡¸ ¸¦Áñð «ÊôÀ¾ýãÄõ ¦ÅÚô¨Àò¾¡ý ºõÀ¡¾¢òÐ즸¡ûÇô§À¡¸¢È¡÷ ̓¡¾¡. «Ð×õ ¾ý Å¢º¢È¢¸Ç¢¼§Á. ŨÄôÀ¾¢×¸Ç¡ø¾¡ý þ¨½Âò¾¨ÄӨȢø ¾Á¢ú ÒÆí¸ô§À¡¸¢ÈÐ. þôÀÊ ¦º¡øÖõ «§¾ºÁÂõ ¿õ ŨÄôÀ¾¢Å÷¸û º¢Äâ¼õ ¯ûÇ Ì¨È¨ÂÔõ ÍðÊ측ð¼§ÅñÊÔûÇÐ - ´ù¦Å¡Õ Å¡÷ò¨¾ìÌõ ¯ûÇ÷ò¾õ ¸ñÎÀ¢ÊôÀÐ, ¾É¢ôÀð¼ Å¢§Ã¡¾í¸¨Ç ŨÄôÀ¾¢×ìÌ þØôÀÐ, ºÁ£À¸¡ÄÁ¡¸ À¢ýëð¼ôÀì¸í¸¨Ç ¿¡ÈÊòÐ즸¡ñÊÕìÌõ º¢Ä ¿¡ö¸û. þÅü¨È츨Çó¾¡ø ŨÄôÀ¾¢× Å¡º¸÷ Åð¼ò¨¾ ¦Áý§ÁÖõ ¦ÀÕì¸ Å¡öôÒûÇÐ.

July 17, 2005 12:55 PM  
Blogger முகமூடி said...

/'name-dropping' இல்லாத சுஜாதா கட்டுரையைக் கண்டுபிடிப்பதற்குள், 'bird-dropping' இல்லாத நேரு சிலையைக் கண்டுபிடித்து விடலாம். /

:-))

July 17, 2005 1:02 PM  
Blogger Srikanth Meenakshi said...

ராமனின் கருத்து எனது கணினியில் சரியாகத் தெரியவில்லை. யூனிகோடில் அது:

"சரியாகச்சொன்னீர்கள். இந்தமாதிரி வலைப்பதிவுகளைப்பற்றி திருப்பித்திருப்பி கீழ்த்தரமாக கமெண்ட் அடிப்பதன்மூலம் வெறுப்பைத்தான் சம்பாதித்துக்கொள்ளப்போகிறார் சுஜாதா. அதுவும் தன் விசிறிகளிடமே. வலைப்பதிவுகளால்தான் இணையத்தலைமுறையில் தமிழ் புழங்கப்போகிறது. இப்படி சொல்லும் அதேசமயம் நம் வலைப்பதிவர்கள் சிலரிடம் உள்ள குறையையும் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது - ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ளர்த்தம் கண்டுபிடிப்பது, தனிப்பட்ட விரோதங்களை வலைப்பதிவுக்கு இழுப்பது, சமீபகாலமாக பின்னூட்டப்பக்கங்களை நாறடித்துக்கொண்டிருக்கும் சில நாய்கள். இவற்றைக்களைந்தால் வலைப்பதிவு வாசகர் வட்டத்தை மென்மேலும் பெருக்க வாய்ப்புள்ளது."

July 17, 2005 1:12 PM  
Blogger Thangamani said...

/'name-dropping' இல்லாத சுஜாதா கட்டுரையைக் கண்டுபிடிப்பதற்குள், 'bird-dropping' இல்லாத நேரு சிலையைக் கண்டுபிடித்து விடலாம். /


Nice!

July 17, 2005 4:02 PM  
Blogger வானம்பாடி said...

//'name-dropping' இல்லாத சுஜாதா கட்டுரையைக் கண்டுபிடிப்பதற்குள், 'bird-dropping' இல்லாத நேரு சிலையைக் கண்டுபிடித்து விடலாம். //

;-) மிகவும் ரசித்தேன்.

July 17, 2005 5:27 PM  
Blogger Ramya Nageswaran said...

இப்படி generalizedஆக சொன்னது disappointingஆகத் தான் இருக்கிறது. எவ்வளவோ அருமையாக எழுதுகிறவர்கள், so called mainstream பத்திரிக்கைகள் மூலம் தெரியப்படாதவர்களையெல்லாம் நான் blogsல் பார்க்கிறேன். அவர் இதை யோசித்து, நிறைய blogs சென்று பார்த்து விட்டு சொன்னதைப் போல் தோன்றவில்லை.

July 17, 2005 8:24 PM  
Blogger Boston Bala said...

Sujatha likes to get the complete world's attention periodically. (ego tour?) So he starts giving these debatable quotes and probably love seeing his name all over the blogs, english, tamil, hindi....

Some folks might wanna know what are blogs and why they will satisify their egos and can start blogging :))

July 17, 2005 9:42 PM  
Blogger ஜெ. ராம்கி said...

ஸ்ரீகாந்த், சுஜாதா பற்றிய உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.

ஆனால் ரவி ஸ்ரீனிவாஸ் சொல்வது போல வலைப்பதிவாளர்கள் சுஜாதாவை தாண்டி சென்றுவிட்டார்கள் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர். நாட்டுநடப்பு ஸாரி... இணைய நடப்பு நன்றாக தெரிந்துதான் பேசுகிறாரா?!

வயதானாலும் கலைஞரைப் போல இன்னும் லைம் லைட்டில் இருப்பதுதான் சுஜாதாவின் மீது வந்து விழும் விமர்சன அலைகளுக்கு காரணம். விமர்சனங்களுக்கு வெளிப்படையாக பதிலளிக்காமல் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ரியாக்ஷன் காட்டுவது எல்லா பெருந்தலைகளுக்கும் உள்ள குணம்தான். இதில் சுஜதாவுக்கு விதிவிலக்கல்ல.

இதையெல்லாம் பார்க்கும்போது இரண்டே இரண்டு விஷயங்கள்தான் என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன.
1. சுஜாதாவின் அங்கீகாரத்திற்காக ஏன்தான் அல்லாடுகிறார்கள்?

2. அப்படியென்னதான் இணைய உலகம் சுஜாதாவை விமர்சித்துவிட்டது?

July 18, 2005 5:35 AM  
Blogger Srikanth Meenakshi said...

ராம்கி, நீங்கள் சொல்வது சரிதான். எழுத்து என்பது ஒரு நேர்க்கோட்டு சமாச்சாரமல்ல, தாண்டிச் செல்வதற்கு. ஆனால், இந்தப் பதிவும், இதற்கான எதிர்வினைகளும், சுஜாதாவின் அங்கீகாரம் வேண்டி எழுதப் பட்டதல்ல. அவர் வெறுமனே, 'எனக்கு வலைப்பதிவுகள் பிடிப்பதில்லை' என்பதோடு விட்டிருந்தால் கேள்வியில்லை. ஆனால் அவர் இவை எவருமே படிக்கத் தகுந்தவை அல்ல என்று சொல்லும் போது அதை மறுதலிக்க வேண்டியிருக்கிறது.

July 18, 2005 8:45 AM  
Blogger Unknown said...

//Avoid blogs, they are endless ego trips. Be very choosy in adding to your favourites list. It becomes too big.//

இது தானே சுஜாதா சொன்னது?

அவர் முழுவதுமாக விலக்கச் சொல்லிச் சொன்னதாகத் தெரியவில்லையே!! இரண்டாம் வரியிலேயே கவனமாக தேர்ந்தெடுக்கச் சொல்லி இருக்கிறாரே. நம்மால் இன்றைய தேதியில் எல்லா வலைப்பதிவுகளையும் படிக்க முடிகிறதா? தேர்ந்தெடுத்துப் படிக்கச் சொல்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

அப்படியே முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டாலும் ego trip வலைப்பதிவுகளில் இல்லை என்று சொல்லிவிட முடியுமா என்ன?

ரவி ஸ்ரீனிவாஸ் சொல்வது போல வலைப்பதிவாளர்கள் சுஜாதாவை தாண்டி சென்றுவிட்டது போல தோன்றினாலும் நம்மில் பலருக்கும் சொல்லவரும் விஷயத்தை அவரை போல சுவைப்பட சொல்லத் தெரியவில்லை என்பதையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

//எல்லாக் கட்டுரைகளுமே ஒரு விதத்தில் 'ego-trip' தான். தான் அறிந்தவற்றைக் கொண்டு, தனது கருத்துக்களை, தனது பாணியில் சொல்வதில், "தான்" இல்லாமல் இருக்க முடியாது. சுஜாதாவின் கட்டுரைகளில் இல்லாத சுய தம்பட்டங்களா? அவற்றையும் ரசித்துக் கொண்டு, அவரது கட்டுரைகளை மாய்ந்து மாய்ந்து படிப்பவன் என்ற வகையில், எத்தனையோ எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.
//

இதனை ஒத்துக்கொள்கிறேன் :-)

July 18, 2005 11:31 AM  
Blogger வானம்பாடி said...

அந்த இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பக்கத்தை இப்போதுதான் படித்தேன். அது பொதுவாக வலைப்பதிவுகளைப் பற்றி சுஜாதா சொல்லியிருக்கும் கருத்து. ஆங்கிலம், தமிழ் என்றெல்லாம் அவர் இனம் பிரிக்கவில்லை. இந்த சூழலில் ரவியின் இந்த கருத்து
//வலைப்பதிவாளர்கள் பலர் சுஜாதவைப் படித்து வளர்ந்தவர்கள்.ஆனால் இன்று அவரைத் தாண்டிச்
சென்றுவிட்டார்கள்.//
சற்று அதிகமாகப் படுகிறது.

July 18, 2005 12:10 PM  
Blogger Sriks said...

வலைப்பதிவாளர்கள் பலர் சுஜாதவைப் படித்து வளர்ந்தவர்கள்.ஆனால் இன்று அவரைத் தாண்டிச்
சென்றுவிட்டார்கள்.


ha ha... just chat with him for about 10 minutes and you will know where you stand. At 70+ I really doubt the so called "வலைப்பதிவாளர்கள்" will be the same.

"Avoid blogs, they are endless ego trips. Be very choosy in adding to your favourites list. It becomes too big" this is what he told.
but his views were twisted to max by blogs :)) :)

July 19, 2005 1:40 PM  
Blogger Anand V said...

Next stage for ego-trips.. SPACE.

check this website
BloginSpace.com

"We are giving bloggers the opportunity to send a piece of their lives into space to potentially connect with extraterrestrials," said Ted Murphy, president and CEO of the Florida-based firm MindComet.

July 19, 2005 2:11 PM  
Blogger Arun Vaidyanathan said...

"வலைப்பதிவாளர்கள் பலர் சுஜாதவைப் படித்து வளர்ந்தவர்கள்.ஆனால் இன்று அவரைத் தாண்டிச்
சென்றுவிட்டார்கள்."
This is a joke. Srikanth, after reading the whole thing said by Sujatha, I guess his intent was twisted. Anyways, Sujatha doesn't need any new attention by blasting blogs...he already has many admirers and readers. But I agree with most of your views!

July 19, 2005 11:32 PM  
Blogger Srikanth Meenakshi said...

Arun, Sriks,

On the specific notion that Sujatha merely asked readers to be choosy about blogs and not totally avoid them, I disagree. I read the "Avoid blogs.." and "Be very choosy..." comments disjointedly, as two separate pieces of advices. Only when I felt convinced that the "Avoid blogs..." statement could stand on its own, did I highlight it without context. If asking readers to be choosy was his intent, he would have written, "Avoid blogs, they are mostly endless ego-trips. If you are going to read them, then be choosy in adding them to your favorites list...". The bookmarks advice is, as it is now written, a separate, general note on bookmarks of websites.

Arun, Sujatha's article is obviously well-written otherwise and is on the money.

It drives me nuts to see people's words get twisted and taken out of context, and it would mortify me if I should be doing that. There simply is no reason for me to. It gave me no pleasure or pride to criticize an opinion of a writer I admire immensely.

July 20, 2005 7:48 AM  
Blogger Arun Vaidyanathan said...

Thalaivaaa...
I didnt say that you twisted it...Who knows, the intention of big writers (7 outta 10 cases) is twisted by media most of the times. May be Sujatha intended what you have written above and let's give the benefit of doubt to Sujatha.
As I said, regarding suyathambattam in Sujatha's articles, I agree with your views and I also overlook that, enjoy his writing skills and content.
Nowdays, Its better for writers just to write instead of giving interviews, What you say :)

July 20, 2005 8:15 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

Srikanth, thanks for making this clear.i wanted to do that.now that you have done that i will not repeat it.
Arun, the article appears in the name of Sujatha.
It is not an interview. The sentence is very clear.It is those who defend Sujatha are trying to twist it by saying 'Srikanth, after reading the whole thing said by Sujatha, I guess his intent was twisted.'. Unfortunately Sujatha has written his views on blogs very clearly.Had a politician made this statement most of those who defend Sujatha now would have criticised that politician in strong terms. But these bloggers
while defending Sujatha sound like fans who cannot take any well meaning criticism in the right spirit.

July 20, 2005 9:43 AM  
Blogger Arun Vaidyanathan said...

Ravi,
I clearly told I agree with Srikanth Views...What I told as a big joke is you quoting 'Some bloggers even went ahead of Sujatha in writing'....Come on! Do you think that's a valid statement?
Regarding the article, I wrote the following lines 'May be Sujatha intended what you have written above and let's give the benefit of doubt to Sujatha.' Even if he said that Blogs are avoidable, nobody is going to listen and stop reading blogs. Even his Kattradhum Petrradhum is a blog style writing only!

July 20, 2005 10:57 AM  
Blogger Sriks said...

srikanth , true. :)

One other thing,,
how many will be blogging
if
google starts charging..
:)

July 20, 2005 11:18 AM  
Blogger தெருத்தொண்டன் said...

உங்கள் பதிவை பார்க்காமல் நான் வெளிப்படுத்திய எதிர்வினை.

http://theruththondan.blogspot.com
வலைப்பதிவுகளில் நேரத்தை வீணாக்காதீர்கள்,அங்கே ஈகோ தான் ஆட்சி செலுத்துகிறது என்கிறார் இண்டெர்நெட் பற்றி புத்தகம் எழுதிய விஞ்ஞான எழுத்தாளர். அவர் யார் என்று சொல்லாமலேயே தரம் எளிதில் விளங்கும். தமிழில் எழுதுபவர்களுக்கு ஈகோ இருக்கலாமோ? இருந்தால் கமலுடனும் ஷங்கருடனும் “குப்பை” கொட்ட முடியுமோ?
(கேள்வியில் ஓகார இறுதி ஈழத் தமிழுக்கு உரியது என்று ஒரு பதிவில் படித்தேன். Break the rules!)

வலைப்பதிவுகளில் நேரம் செலவழிப்பது வீண்தானோ? சில விவகாரமான பின்னூட்டங்கள் வந்த காலத்தில்(அது இறந்த காலம் தானே?) சில நண்பர்கள் “இதற்குத்தானா ஆசைப்பட்டாய்” என்று வெறுத்தும், படிப்பதற்கு நேரம் செலவழிக்கிறேன் என்றும் தங்கள் பதிவுகளுக்குத் தற்காலிக விடுமுறை அளித்தனர்.
படிக்கும்போது பரீட்சை வந்துவிட்டால் வழக்கமாக நண்பர்கள் கூடிப் பேசும் ஸ்டேஷன் பெஞ்ச், மணிக்கூண்டு, மரத்தடி, திண்ணை, தேரடி, குட்டிச்சுவர், வாகையடி முக்கு (ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு இடம்) ஆகிய இடங்களுக்குப் போய் படிக்கிற நேரத்தை வீணாக்காதே என்று அம்மா சொல்வது மாதிரி இவர்களும் வலைப்பதிவுகளில் நேரத்தை வீணாக்க்காதீர்கள் என்று சொல்கிறார்களோ?
சரி..வலைப்பதிவுகளில் நேரத்தை வீணாக்க வேண்டாம். வேறென்ன செய்வது? உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டாமோ?
கணேஷ், வசந்த் அரட்டையில் வல்கர் ஜோக்ஸ் படிக்கலாம்; உலக மகா இலக்கியம் சலவைக் குறிப்பு பார்க்கலாம்; சென்னை நகர வீதிகளில் ‘பையன்கள்’ (வலையில் உள்ள பொடியன்கள் இல்லை) அடிக்கும் லூட்டியை ரசிக்கலாம்; ஜவுளிக்கடைகளில் அம்மாவைப் போன்ற பெண்களின் பின்புறம் இடிக்கும் பையன்களின் ‘குறும்பை’ப் பார்த்து மகிழலாம்; வாழ வழியின்றிப் பாலியல் தொழில் செய்யும் பெண்ணைப் பள்ளி மாணவர்கள் பக்கத்து வீட்டுப் ‘பள்ளி’க்கு அழைத்து வருவதை ஓரக்கண்ணால் பார்த்து ‘மலரும் நினைவுகளில்’ மூழ்கித் திளைக்கலாம்.
“ச்சீ” என்று இதையெல்லாம் ஒதுக்கி எறிந்து வீதிக்கு வந்தால், காலில் மிதிபட்ட எறும்பை மிருக மருத்துவமனைக்கு அழைத்துப் போ என்று யாரேனும் அம்பி உங்களிடம் கெஞ்சிக் கூத்தாடலாம். இதென்ன பைத்தியக்காரத்தனம் என்று நீங்கள் உதாசீனப்படுத்தினால் தலையை விரித்துப் போட்ட அந்நியன் உங்களைத் தாக்கக் கூடும். (தாக்குதலில் நீங்கள் உயிர் பிழைப்பதும் பிழைக்காததும் உங்கள் பிறப்பைப் பொறுத்தது என்பார் உண்மை விளம்பும் காஞ்சி பிலிம்சார்)
லாஸ் ஏஞ்சல் ராம்/மயிலாடுதுறை சிவா கும்பகோணம் கொழுந்து வெற்றிலையைக் காம்பு கிள்ளிக் கீழே போட முடியாது. வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மிஞ்சுவதைக் கடையைத் தாங்கும் கம்பில் தடவ முடியாது. இவற்றிற்கெல்லாம் தண்டனைகளாகக் கருட புராணத்தில் தீர்ப்புகள் இருக்கலாம்.
ஆலோசனையை மீறி (அதுவும் கறுப்பி போன்ற அற்புதக் கலைஞர் விடைபெற்ற பின்) வலைப்பதிவுகளில் “வீணாக” நேரத்தைச் செலவழிப்பவர்களுக்கு என்ன தண்டனை?

July 23, 2005 3:53 AM  

Post a Comment

<< Home