<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Friday, June 24, 2005

ரோசா வசந்தின் 'அன்னியன்' விமர்சனம்

'அன்னியன்' படம் பற்றி ரோசா வசந்தின்அட்டகாசமான ஸடையர் விமர்சனத்தை சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்தேன் - என் பெயர் இடறிய வரை. But who cares... படம் பார்த்தவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய விமர்சனம்.

ஷங்கரின் சமூகப்பார்வையும், குறைகளை அவர் அணுகும் விதமும் கண்டிப்பாக விமர்சிக்கப்பட வேண்டியவை தான். தியேட்டரில் படம் பார்க்கும் போது, சமுதாயத்தின் கீழ் மட்டப் பிரஜை கெட்டவனாகச் சித்தரிக்கப்படும் ஒவ்வொரு முறையும், I cringed inside. ஷங்கரை ஒரு சாதிப் பற்றாளர் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், அவர் முன் வைக்கும் சமூக நியாயங்கள் ஒரு மத்திய தர/மேல் சாதிப் பார்வையில் இருந்து வைக்கப்படுபவை என்பதில் எனக்கு ஐயமில்லை. சமுதாயத்தில் எவ்வகையான மாற்றம் எம்முறையில் வர வேண்டும் என்பதில் ஒரு குறை முதிர்ச்சிப் பார்வை உள்ளவராகவே அவரை நான் பார்க்கிறேன்.

இவற்றை மீறி படத்தின் தொழில் நுட்ப சாகசங்களுக்காகவும், நடிப்பு, பாடல்கள் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் ரசிக்க வேண்டும் என்றால் பார்ப்பவர்கள் ஷங்கரின் நியாய வாதத்தை முன்வைப்பவர்களாகவோ, ஏற்றுக்கொள்பவர்களாகவோ, அல்லது அதை சகித்துக் கொள்ளக் கூடியவர்களாகவோ இருக்க வேண்டும். நான் மூன்றாம் வகை. ஆனால் இதைச் சகிக்க முடியாது என்று சொல்பவர்களின் நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

9 Comments:

Blogger மயிலாடுதுறை சிவா said...

வணக்கம் ஸ்ரீகாந்த்
வலைப் பூ உலகத்திற்கு வந்தமைக்கு பாராட்டுகள்!!!
புத்தக மீமீ சூப்பர்.
நேரம் கிடைக்கும் பொழுது நிறைய எழுதுங்கள்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

June 24, 2005 11:31 AM  
Blogger ROSAVASANTH said...

ஸ்ரீகாந்த நான் உங்களை பற்றி தவறாக எதுவும் சொல்ல நினைக்கவில்லை. அப்படி வாசிக்க உங்களுக்கு நேர்ந்தால் மன்னிக்கவும். அருணின் பதிவின் தொடக்கமும், நீங்கள் அருணின் கருத்தை ஒப்புகொள்வதாய் எழுதியதாலும் குறிப்பிட்டேன். உங்கள் கருத்துக்கு நன்றி.

June 24, 2005 11:53 AM  
Blogger ROSAVASANTH said...

உங்கள் கடைசி பத்தி எனக்கு ஒப்புதலானது. நான் இணையத்தில்தான் படம் பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்தியா செல்லும்போது நிச்சயம் தியேட்டரில் பார்பேன். இந்த என் கருத்தை என் பதிவில் பதிவும் செய்வேன். நன்றி.

June 24, 2005 11:57 AM  
Blogger -/சுடலை மாடன்/- said...

ஸ்ரீகாந்த்,

வலைப்பதிவு ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்!

//ஷங்கரை ஒரு சாதிப் பற்றாளர் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், அவர் முன் வைக்கும் சமூக நியாயங்கள் ஒரு மத்திய தர/மேல் சாதிப் பார்வையில் இருந்து வைக்கப்படுபவை என்பதில் எனக்கு ஐயமில்லை. சமுதாயத்தில் எவ்வகையான மாற்றம் எம்முறையில் வர வேண்டும் என்பதில் ஒரு குறை முதிர்ச்சிப் பார்வை உள்ளவராகவே அவரை நான் பார்க்கிறேன்.//

உங்களின் அனுமானம் சரியெனப் படுகிறது.

//ஷங்கரின் நியாய வாதத்தை முன்வைப்பவர்களாகவோ, ஏற்றுக்கொள்பவர்களாகவோ, அல்லது அதை சகித்துக் கொள்ளக் கூடியவர்களாகவோ இருக்க வேண்டும். நான் மூன்றாம் வகை. ஆனால் இதைச் சகிக்க முடியாது என்று சொல்பவர்களின் நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது.//

உங்களின் அணுகுமுறை சரியெனப் படுகிறது.

நன்றி - சொ. சங்கரபாண்டி

June 24, 2005 5:53 PM  
Blogger Arun Vaidyanathan said...

Vanakkamungannaa...;)
Unga kadaisi para, sokkaaa keedhu!

June 24, 2005 7:11 PM  
Blogger Arun Vaidyanathan said...

Vanakkamungannaa...;)
Unga kadaisi para, sokkaaa keedhu!

June 24, 2005 7:11 PM  
Blogger Srikanth Meenakshi said...

சிவா, வசந்த், சங்கர், அருண், உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. ஏதோ எழுதுகிறேன்; ரொம்பவும் வம்பில் மாட்டிக் கொள்ளாவிட்டால் தேவலை. இல்லையேல், ஜூட்! :-)

June 25, 2005 2:19 AM  
Blogger ROSAVASANTH said...

//இவற்றை மீறி படத்தின் தொழில் நுட்ப சாகசங்களுக்காகவும், நடிப்பு, பாடல்கள் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் ரசிக்க வேண்டும் என்றால் பார்ப்பவர்கள் ஷங்கரின் நியாய வாதத்தை முன்வைப்பவர்களாகவோ, ஏற்றுக்கொள்பவர்களாகவோ, அல்லது அதை சகித்துக் கொள்ளக் கூடியவர்களாகவோ இருக்க வேண்டும். நான் மூன்றாம் வகை. ஆனால் இதைச் சகிக்க முடியாது என்று சொல்பவர்களின் நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது.//

மேலே உள்ள கருத்தினை நான் அப்படியே ஏற்றுகொள்ளவில்லை. ஆனால் அதன் சாரம்சத்தை ஏற்றுகொள்கிறேன். ஒரு திரைப்படம் அல்லது இலக்கிய படைப்பு நாம் எதிர்க்கும், கண்டிப்பதாக இருந்தாலும், அதில் ரசிப்பதற்கும், இன்பமடைவதற்கும், அறிவு பெறவும், இன்னபிறவற்றை துய்பதற்கும் ஏதேனும் இருக்கலாம். அதை துய்ப்பவர்கள் எல்லோரும் ஷங்கரின் நியாய வாதத்தை முன்வைப்பவர்களாகவோ, ஏற்றுக்கொள்பவர்களாகவோ இருக்க வேண்டும் என்று இல்லை. ஸ்ரீகாந்த சொல்வது போல சகித்து கொள்பவர்ளாக இருக்கலாம். இந்த மூன்று வகையிலும் முழுவதும் சேராமல் இடைபட்டதாகவோ, மூன்றையும் பகிர்ந்து கொள்பவர்களாகவோ இருக்கலாம். பிரச்சனைகுரியவைகளை கண்டுகொள்ளாத சமரசம் மிக்கவர்களாக இருக்கலாம். அதைவிட முக்கியமாய் தங்கள் மீது படர முயலும் ஊடக திணிப்பை உள்வாங்காமல் பிரதிபலித்து திருப்பி அனுப்புபவர்களாக இருக்கலாம். பெரும்பாலான பார்வையாளர்கள் இந்த வகையை சேர்ந்தவர்களாகவே எனக்கு தோன்றுகிறது. இந்த பிரதிபலித்து அனுபும் தன்மையே சிறந்த அணுகுமுறையாய் எனக்கு படுகிறது.

'ஜெண்டில்மேன்' படத்தை அத்தனை பெரிய ஹிட்டாக்கிய அத்தனை மக்களையும் அயோக்கியர்களாக நினைக்க முடியாது. அப்படி பார்பதும் பாசிச சிந்தனையாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. திரைப்படத்தை எவ்வளவு புத்திசாலித்தனமாய் பொழுதுபோக்கு அம்சங்களை கலந்து எடுத்தாலும், யாரும் சொல்லப்பட்ட 'மெஸேஜை' அப்படியே எடுத்துகொள்வதில்லை. அதில் மிக குழப்பமான ஒரு negotiation இருக்கிறது. ஏதோ ஒரு புள்ளியில் சமரசமாகி, பிரதிபலித்து, சிலதை உள்வாங்கி தனக்கு தேவையானதை மட்டும் துய்த்துகொள்ளும் வேலை நடக்கிறது. ஆனால் பொதுவாய் யாரும் அத்தனை குழம்புவதில்லை. அந்த கணத்தில் தோன்றிய விதத்தில் முடிவு எடுக்கப்பட்டு துய்க்கப்டுகிறது.

நானும் அதையே செய்கிறேன். ஜெண்டில்மேன் படத்தின் 'மெஸேஜ்' எப்படியிருந்தாலும் 'சிக்கு புக்கு ரயிலே' பாடலையும் அது போன்ற இன்ன பிற சமாச்சாரங்களையும் இன்று வரை மிகவும் ரசித்து இன்பமுற்று வருகிறேன். அதை எந்த விதத்திலும் இழந்தது கிடையாது. அன்னியன் படம் இணையத்தில்தான் பார்த்தேன். மேற்சொன்ன காரணங்களுக்காக நிச்சயம் இந்தியா செல்லும்போது தியேட்டரில் பார்பேன்.

ஆனால் பிரச்சனைகளை பேசவே கூடாது, படத்தை 'இப்படி பார்க்க வேண்டும்' என்று சொல்லும் குரலுக்கு மட்டுமே எதிர்ப்பு காட்டவேண்டியுள்ளது.

June 26, 2005 3:44 AM  
Blogger Srikanth Meenakshi said...

//யாரும் சொல்லப்பட்ட 'மெஸேஜை' அப்படியே எடுத்துகொள்வதில்லை. அதில் மிக குழப்பமான ஒரு negotiation இருக்கிறது. ஏதோ ஒரு புள்ளியில் சமரசமாகி, பிரதிபலித்து, சிலதை உள்வாங்கி தனக்கு தேவையானதை மட்டும் துய்த்துகொள்ளும் வேலை நடக்கிறது. ஆனால் பொதுவாய் யாரும் அத்தனை குழம்புவதில்லை. அந்த கணத்தில் தோன்றிய விதத்தில் முடிவு எடுக்கப்பட்டு துய்க்கப்டுகிறது. //

ரொம்ப சரியாக சொன்னீர்கள். எனக்கு இதை தொலைக்காட்சியின் விளம்பரங்களோடு ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது - அதாவது, நான் உனக்கு இவ்வளவு நிகழ்ச்சி காட்டுவேன், நீ இவ்வளவு விளம்பரங்களைப் பார்க்க சம்மதித்தால். ஒரு வித்தியாசம் - எது விளம்பரம், எது நிகழ்ச்சி என்பது தொலைக்காட்சியில் தெளிவு. திரைப்படத்தில் இல்லை. இந்த விஷயத்தில் திரைப்படம் ஒரு பூடகமான ஊடகம் ஆகி விடுகிறது (sorry, couldn't resist getting cute :-))

//ஆனால் பிரச்சனைகளை பேசவே கூடாது, படத்தை 'இப்படி பார்க்க வேண்டும்' என்று சொல்லும் குரலுக்கு மட்டுமே எதிர்ப்பு காட்டவேண்டியுள்ளது.//

எப்பொழுதும், எப்பொழுதும்...

June 26, 2005 8:05 AM  

Post a Comment

<< Home