அமெரிக்காவில் பிறந்த என் அற்புதமே!
'திண்ணை'யில் நண்பர் கோச்சாவின் கட்டுரையின்் வாயிலாக, இந்தப் பாடலைக் கேட்கவும் பார்க்கவும் முடிந்தது. (Caution: the file is 60 MB!)
கலிபோர்னியாவைச் சேர்ந்த முகுந்த் என்பவர், யாழ் என்ற இசைக்குழு மூலம் 'இதயப் பூக்கள்' என்ற ஒலித் தகடை சமீபத்தில் சென்னையில் (வைரமுத்து, விஸ்வனாதன் முன்னிலையில்) வெளியிட்டிருக்கிறார். அதன் முக்கியப் பாடல் தான் 'அமெரிக்கவில் பிறந்த என் அற்புதமே'.
அதன் முதல் வரிகள்:
அமெரிக்காவில் பிறந்த என் அற்புதமே!
ஐந்து மணிக்கு மேல் நான் உனக்கு அர்ப்பணமே!
சீக்கிரம் வரத்தான் நினைத்தேன் என் அஞ்சுகமே!
அடிக்கடி சிக்னல் விழுந்ததால் கொஞ்சம் தாமதமே!
குழந்தைக் காப்பகத்தில் தமது சிறார்களை விட்டுச் சென்று, அலுவல் முடிந்து வீடு திரும்பும் போது பெற்றோர்களின் மனதில் ஓடும் பாடலாய் உள்ளத்தைத் தொடும் வகையில் இது படம் பிடிக்கப் பட்டிருக்கிறது. மூன்று குழந்தைகளை நோக்கி அவர்களது தந்தையரும் (இருவர்), தாயும் போக்குவரத்து நெரிசலின் ஊடே பயணிக்கையில், அவர்கள் மனங்களில் தமது குழந்தை பற்றிய எண்ணங்கள் நிழலாடுகின்றன. சேட்டைகள், அழுகை, சிரிப்பு, கொஞ்சல் என்று பலவற்றை நினைத்தபடி அவர்கள் மேற்கொள்ளும் இசைப் பயணம் ரொம்ப அழகு.
அவசியம் பாருங்கள்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
1 Comments:
பாடல் நன்றாக இருந்தது ஸ்ரீகாந்த். நன்றி..
என் கருத்து :
சிக்னல் விழுந்ததனால் தாமதமே... இவ்வரியில் விழுந்ததனால் என்பதற்கு பதில் வெறுமே அதனால் என்று சொல்லியிருந்தால் மெட்டோடு ஒட்டி இருந்திருக்கும்...
பெற்றோரின் ஏக்கத்தை வெளிப்படுத்துவதுதான் இப்பாட்டின் நோக்கம் (படக்காட்சியில் பெற்றோர் முகங்களில் அது நன்றாகவே வெளிப்படுகிறது) எனினும் மெட்டு ஏக்கத்தை பிரதிபலிக்காமல் கொஞ்சம் டெம்போ அதிகமாக இருக்கிறது.. படக்காட்சியில் பிஞ்சுகள் (பேபி சிட்டிங் இடத்தில்) நேரம் ஆக ஆக கொஞ்சம் தவிப்பாக பெற்றோரை எதிர்பார்ப்பதாக காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..
Post a Comment
<< Home