<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Monday, July 04, 2005

ராஜாவின் 'திருவாசகம்'

இளையராஜாவின் சிம்பொனி திருவாசகம் கேட்டேன் (MP3 போலீஸ் கவனத்திற்கு: இந்தியாவிலிருந்து ஒலித்தகடு வாங்கி வருவித்துத்தான் கேட்டேன்).

முதலில் நான் இளையராஜாவின் ரசிகன். என் இளமைக்கு இசையமைத்தவர் என்று நன்றி பொங்கச் சொல்லிக் கொள்பவன். இறை நம்பிக்கை உள்ளவன்; ஓரளவுக்கு திருவாசகமும் படித்தவன். ஒரு காலத்தில் எனது தமிழ் உரைகளையெல்லாம் 'நமசிவாய வாழ்க' என்று சொல்லித்தான் துவங்குவேன்.

நிற்க.

சில வருடங்களுக்கு முன்னால் விகடனில் ராஜாவைப் பேட்டி கண்ட போது அவரது லண்டன் சிம்பொனி பற்றிக் கேட்டார்கள். அப்போது அவர் அந்த இசையை ரசிக்கும் அளவிற்கு தமிழ் இசை ரசிகர்களின் ரசனை பக்குவப்படவில்லை என்ற அளவில் பதில் சொன்னார்.

திருவாசகத்தை சிம்பொனியாகக் கேட்ட போது அவர் சொன்னதின் அர்த்தம், குறைந்தபட்சம் என்னளவிலாவது எனக்கு விளங்கியது.

ஒலித்தகட்டில் கடைசி இரு பாடல்களை என்னால் ரசிக்க முடிந்தது. அதற்கு முன், ஒரு அடர்ந்த மரத்தின் இலைகளினூடே தோன்றி மறையும் சூரியக் கதிர்கள் போல, எனக்குப் பரிச்சயமான இளையராஜா இசை தோன்றி மறைந்தது.

மற்றபடி எனக்கு எதுவும் புரியவில்லை.

இதை இருளில், தனிமையில், ஒரு நல்ல இசைப்பெட்டியின் மூலம் கேட்டால் தான் புரியும் என்று யாராவது சொன்னால் 'சரி' என்று தலையாட்டி விட்டு பழைய இளையராஜா பாடல்கள் கேட்கப் போய் விடுவேன்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

4 Comments:

Blogger rajkumar said...

நண்பரே,

மிகவும் நேர்மையான விமர்சனம்.ராஜாவின் புதிய இசைப் பரிசோதனை இது.

ஆனால் மேற்கத்திய இசையின் அடிப்படைகள் இதை ரசிக்க தேவைப்படும் பட்சத்தில், இப்பாடல்கள் தரும் ரசனை அனுபவத்தை தெளிவாக வகைப்படுத்த முடியவில்லை.

எனவே ராஜா நன்றாக செய்திருக்கிறார் அல்லது இல்லை என்பதை அறுதியிட்டு கூற இயலாத நிலைக்குத்தான் பெரும்பாலான ராஜா ரசிகர்கள் தள்ளப்படுவார்கள் என நினைக்கிறேன்.

அன்புடன்

ராஜ்குமார்

July 05, 2005 1:21 AM  
Blogger ஜெ. ராம்கி said...

ஸ்ரீகாந்த்,

நல்ல பதிவு. என் இளமைக்கு இசையமைத்தவர் என்கிற வாக்கியம், கவர்ச்சிகரம்.

ராஜ்குமார்,

குழப்பமே வேண்டாம். ராஜா செய்திருப்பது பரிசோதனை அல்ல. நிச்சயம் பெரிய சாதனைதான். உள்ளூர் ரசிகர்கள் கொஞ்சம் குழம்பியிருப்பதற்கு காரணம் பர்ஸ் மேட்டர்தான். ஒரு ஆடியோ சிடியை நூறு ரூபாய்க்கு மேல் விற்பது என்பது கொஞ்சம் ரிஸ்க்கான் விஷயம். இதுவரை ஒரு கோடி செலவாகியிருக்கிறதாம். திருவாசகத்து நாயகன், ஆடியா நிறுவனத்தின் கை கடிபட விடமாட்டார் என்று நம்புவோமாக!

July 05, 2005 2:23 AM  
Blogger rajkumar said...

ராம்கி,

நான் பரிசோதனை என்று கூறியிருப்பதால் இது சாதனையல்ல என்று அர்த்தமாகது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜ்குமார்

July 05, 2005 4:30 AM  
Blogger -L-L-D-a-s-u said...

நேர்மை நேர்மை நேர்மைதான்

July 05, 2005 8:27 AM  

Post a Comment

<< Home