<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Tuesday, July 12, 2005

பரோபகாரத்துக்காகவே சிக்கனம்

கீழ்காணும் வரிகள் மறைந்த காஞ்சி மகா பெரியவர் சொன்னது. சின்ன வயதில் இதை நான் படித்த போதும் சரி, இப்போது படிக்கும் போதும் சரி, சட்டென்று மனதில் ஒரு தெளிவும், ஒரு புரிதலும் உண்டாகிறது. இந்த பாடத்தை முடிந்த வரை வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடிய வேண்டும் என்பது பிரார்த்தனை.

"பரோபகாரத்துக்காகவே சிக்கனம்"

சொந்த வாழ்க்கையில் சிக்கனமாக இருந்தால் தான் பிறத்தியாருக்கு உதவியாக திரவிய ஸஹாயம் செய்ய முடியும். அநாவசியங்களையெல்லாம் அத்யாவசியமாக்கிக் கொண்டு மேல்நாடுகளைப் பார்த்து material comfort, luxury என்று மேலே மேலே போய்க் கொண்டிருந்தால் தனக்கும் ஒரு நாளும் த்ருப்தி இராது; பிறத்தியாருக்கும் தான தர்மம் பண்ண முடியாது. மோட்டார் ஸைக்கிளுக்கு மேலே கார் வேணும், அப்புறம் அந்தக் காரிலும் இன்னம் பெரிசாக வேணும், அதற்கப்புறம் அதையே ஏர்-கன்டிஷன் பண்ணணும் என்கிறது போல, ஸிமென்ட் மொஸெய்க் ஆகணும், மொஸெய்க் மார்பிள் ஆகணும் என்கிறது போல ஒன்றுக்கு மேல் ஒன்று ஸெளகர்யத்தைத் தேடிக் கொண்டேயிருப்பதால் எப்போது பார்த்தாலும் அதிருப்தி என்ற பெரிய அஸெளகர்யத்திலேதான் ஒருத்தன் இருந்து கொண்டிருப்பான்! அது மட்டுமில்லை. எத்தனை ஸம்பாத்யம் வந்தாலும் போதவும் போதாது. அதனால்தான் இன்றைக்கு அத்தனை பணக்காரர்களும் கடனாளியாக - கடன் என்கிறதையே ஓவர்-ட்ராஃட் என்று கௌரவமான பெயரில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவனே கடனாளியாக இருந்தால் மற்றவர்களுக்கு எங்கேயிருந்து தர்மம் பண்ணுவது?

இப்போது பொதுவாக உள்ள பரிதாப நிலை என்னவென்றால், ஒன்று, சிக்கனமாக இருப்பவன் தானும் அநுபவிக்காமல் பிறத்தியானுக்கும் உதவி பண்ணாமல் கருமியாக இருக்கிறான்; செலவாளியாக இருப்பவனோ ஸெளகர்யம், இன்னும் ஸெளகர்யம் என்று பறப்பதில் தனக்கே போதாமல் கடனாளியாக நிற்பதால் இவனாலும் பரோபகாரம் நடப்பதில்லை.

பிறருக்குச் செய்வதற்காகவே சொந்த விஷயத்தில் சிக்கனமாயிருக்கவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை ஒவ்வொருவனும் கடைப்பிடித்தால் எவ்வளவோ புண்யத்துக்குப் புண்யம், நிம்மதிக்கு நிம்மதி, எத்தனையோ தீனர்களும் க்ஷேமமடைவார்கள்.

சிக்கனமாயிருந்தாலொழிய, இப்போது இருக்கிற போக போக்ய இழுப்பில், எவனுக்குமே மிச்சம் பிடிக்க முடியாது. அதனால் சிக்கன வாழ்க்கை நடத்தினால்தான் 'தனக்கு மிஞ்சி' தர்மம் பண்ண முடியும். அதாவது எத்தனை சிக்கனமாயிருக்க முடியுமோ அப்படியிருந்து தனக்கு மிஞ்சும்படியாகப் பண்ணிக்கொண்டு தர்மம் பண்ணணும்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

5 Comments:

Blogger -/சுடலை மாடன்/- said...

ஸ்ரீகாந்த், உள்வாங்கிக் கொள்ள வேண்டிய நல்ல கருத்து.
இதையே திருவள்ளுவரும் தமிழில் சொல்லியிருக்கிறார்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள் - 212)

(பொருள்: தான் முயற்சி செய்து ஈட்டிய செல்வமனைத்தும் தகுதியுடையவர்க்கு உதவிகள் செய்தற் பொருட்டேயாகும்.)

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான். (குறள் - 1006)

(பொருள்: தானும் நுகரமாட்டான், தக்கவர்க்கு அவர் வேண்டுவதைக் கொடுக்கும் இயல்புமில்லாதவன் பெற்ற செல்வம் பயனில்லாதது.)

நன்றி - சொ. சங்கரபாண்டி

(பின் குறிப்பு - திருக்குறள் மாநாட்டின் பாதிப்புதான்!)

July 13, 2005 12:12 AM  
Blogger Kannan said...

உள்ளது!

ஒரு புத்துணர்ச்சி வருகிறது. உங்களுக்கும் சங்கரபாண்டிக்கும் நன்றிகள்

July 13, 2005 3:57 AM  
Blogger Ramya Nageswaran said...

Sreekanth, எப்பவும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம். முக்கியமாக Great Singapore Sale வரும் மாதங்களில்!:-)

வெகு நாட்களாக உங்கள் பதிவிற்கு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று நான் பின்னூட்டம் இட வாய்ப்பு கிடைத்தது.

நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.

July 13, 2005 4:26 AM  
Blogger Srikanth Meenakshi said...

நன்றி, சங்கர், உங்க வலைப்பதிவு எப்போ?

ரம்யா, வருகைக்கும், வாசிப்பிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

July 13, 2005 8:12 PM  
Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

Dear Srikanth,
This posting is worth reading, pondering and following. very good one !
anbudan, JayanthiSankar

July 14, 2005 6:21 AM  

Post a Comment

<< Home