<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Wednesday, July 12, 2006

தாவூத் = ஒசாமா

இறந்தவர்களுக்கு அஞ்சலிகளும், அவர்கள் குடும்பங்களுக்கு அனுதாபங்களும், மீண்டும் எழுந்து நின்று, தூசி தட்டிக் கொண்டு, முன்னகர்ந்து கொண்டிருக்கும் மும்பைக்கும், மும்பைக்கார்களுக்கும் ஒரு spirited சலாமும்.


இன்று நிகழ்த்திய உரையில், மன்மோகன் சிங் கூறியிருப்பது:

"மும்பை மற்றும் ஸ்ரீநகர் மக்கள் மீண்டும் தீவிரவாதத்தின் ரணத்தை தாங்கியுள்ளனர். இந்த துயரமான நேரத்தில் நாடே அவர்களின் பக்கம் இருக்கும். நமது நாட்டின் எதிரிகள் நமது அமைதி மற்றும் வளர்ச்சியை சீர்குலைக்க முற்படுவது இது முதல் முறையல்ல. இதுபோன்ற நேரங்களில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்பர் என்பதை அந்த தீய சக்திகள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. துயர சம்பவத்தை எதிர்கொள்வதில் போலீசார், பாதுகாப்புப் படையினர், ரயில்வே அலுவலர்கள், தீயணைப்பு படையினர், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இதர பலர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளை அரசு செய்யும். இந்த தீவிரவாத சவால்களை எதிர்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அரசு செய்யும். தீவிரவாதத்திற்கு எதிரான இந்த போரில் நாம் வெற்றி பெறுவோம்."

மொத்தத்தில் மன்மோகன் சிங்கின் அகராதிப்படி, தீவிரவாதத்தை எதிர்ப்பது என்பது தீவிரவாதிகள் நிகழ்த்தும் வன்முறைகளிலிருந்து வெற்றிகரமாக சுதாரித்துக் கொள்வது, அவ்வளவுதான்.

ஒரு உவமை சொல்லலாம். பள்ளிக்கூடத்தில் முரட்டுப்பையன்களிடம் (bullies) அடி வாங்கும் நோஞ்சான்கள் சொல்லும் வார்த்தை ஒன்று உண்டு. அவர்கள் அடிக்க அடிக்க, திருப்பி அடிக்கத் திராணி/தைரியம் இன்றி, அடி வாங்கிக் கொண்டே, 'எனக்கு வலிக்கவேயில்லையே' என்று கண்களில் நீர்மல்க ஜம்பம் பேசுவார்கள். ஏதோ ஓரளவுக்குத் தனது சுயமரியாதையை ஸ்தாபித்துக் கொண்டோம் என்ற ஒரு திருப்திக்காக. இந்தியப் பிரதமர் இப்பொழுது பேசுவது அது போலத்தான் இருக்கிறது.

இப்படியே இருக்கலாம்... என்றாவது ஒரு நாள் தீவிரவாதிகள் மனம் திருந்தி 'பிழைத்துப் போ' என்று விட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில். அல்லது செய்ய வேண்டியதைச் செய்யலாம்.

அமெரிக்காவின் 9/11 நிகழ்விற்குப் பிறகு இந்நாடு செய்த உருப்படியான விஷயம், ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடுத்து தாலிபானை ஓட ஓட விரட்டியது தான். அதன் பிறகு, அதை அரைகுறையாக விட்டு விட்டு ஈராக், ஈரான் என்று திசை திரும்பி விட்டாலும், முதலில் செய்த காரியம் சரியான, செய்யப்படவேண்டியிருந்த ஒன்று. அந்த சமயத்தில் சிந்தனைவாதிகளெல்லாம் இதை யார் செய்தது, ஆதாரம் என்ன என்றெல்லாம் மிதமிஞ்சிய schadenfreude-உடன் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த போது, அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தயங்காமல் எடுத்த நடவடிக்கை அது. ஏனெனில் அமெரிக்காவிடம் ஆதாரங்கள் இருந்தன; அவர்களுக்குத் தெரிந்திருந்தது யார் செய்தது என்று. வரலாறு அவர்களது எதிர்வினையை நியாயப்படுத்தியது.

இந்தியாவிற்கு இன்று தெரியும் இந்த குண்டு வெடிப்புகளை யார் செய்தது என்று. பதிமூன்று வருடங்களுக்கு முன்னால் நடந்ததை செய்தது யாரென்று பதிமூன்று வருடங்களாகத் தெரியும். இன்றேனும் இந்தியா அமெரிக்கா ஆற்றிய எதிர்வினைக்கு நிகரான ஒரு எதிர்வினையை நிகழ்த்த வேண்டும்.

9/11 நிகழ்விற்குப் பிறகு அமெரிக்கா ஒசாமாவை தன்னிடம் ஒப்படைக்க ஆஃப்கானிஸ்தானுக்குக் கெடு வைத்தது போல், இந்தியா பாகிஸ்தானுக்கு தாவூத் இப்ராஹிமை ஒப்படைக்கக் கெடு வைக்க வேண்டும். இது வெற்று வார்த்தையாக இருக்கக் கூடாது. தாவூதை ஒப்படைக்காத பட்சத்தில், இந்தியா பாகிஸ்தான் மீது போர்த் தொடுக்க வேண்டும்.

இதை இப்பொழுதே செய்ய வேண்டும். மும்பை குண்டு வெடிப்பை ஒட்டிச் செய்ய வேண்டும். இப்பொழுது செய்தால் தான், உலக அரங்கில் இது ஒரு நியாயமான எதிர்வினையாகப் பார்க்கப்படும். பாகிஸ்தானை அமெரிக்கா தொடங்கி உலக நாடுகள் நெருக்கவும் முடியும். இந்த ஒரு தீவிரவாதியையும் அவனது கும்பலையும் காப்பாற்றுவதற்காகப் போருக்குச் செல்லத் தயாரா என்ற கேள்விக்குப் பாகிஸ்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

இதை ஏதோ ஒரு arm-chair general-தனமாகவோ, எந்த ஒரு neo-con வெறியுடனோ சொல்லவில்லை. இந்தியா தனது குடிமக்களை தீவிரவாதத்திலிருந்து பாதுகாக்க இந்த ஒரு முக்கியமான நடவடிக்கைத் தேவை என்ற தெளிவுடனேயே சொல்கிறேன்.

செய்யுமா இந்தியா?


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

12 Comments:

Blogger மயிலாடுதுறை சிவா said...

நீங்கள் சொல்வதுப் போல இந்தியா செய்தால்
நிச்சயம் அது மிகப் பெரிய விசயமாக பேசப் படும்.

ஆனால் தாவூத் பாக்கிஸ்தானில் உள்ளானா? அல்லது தூபாயில் உள்ளானா?

மேலும் பாக்கிஸ்தான் எந்த முன் அனுமதியும் இல்லாமல் அணுசக்தியை உபயோகப் படுத்தினால்
இழப்பு நமக்குதானே?

மயிலாடுதுறை சிவா...

July 12, 2006 11:14 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

இந்தியா செய்யாதுங்க. அதுதான் கசப்பான உண்மை.

July 12, 2006 11:14 PM  
Blogger பாலசந்தர் கணேசன். said...

ரொம்ப நாள் கழிச்சு, சன்டேன்னு ஒண்ணு அப்படின்னு இல்லாம, ஒரு பதிவு வந்துள்ளது.
ஒரு உவமை சொல்லலாம். பள்ளிக்கூடத்தில் முரட்டுப்பையன்களிடம் (புல்லிஎச்) அடி வாங்கும் நோஞ்சான்கள் சொல்லும் வார்த்தை ஒன்று உண்டு. அவர்கள் அடிக்க அடிக்க, திருப்பி அடிக்கத் திராணி/தைரியம் இன்றி, அடி வாங்கிக் கொண்டே, 'எனக்கு வலிக்கவேயில்லையே' என்று கண்களில் நீர்மல்க ஜம்பம் பேசுவார்கள்

முற்றிலும் உண்மை. இது வலிமை காட்ட வேண்டிய நேரம். இவர்களை தவிடு பொடியாக்கி ,நசுக்கி அழிப்போம் என்று வீரியமாக வீரமுழக்கம் காட்டவேண்டிய நேரம் இவர்கள் கையாலாகதவர்களாக குரல் கொடுக்கிறார்கள். நம்மிடத்தில் நம்மை பாதுகாக்க வலிமை உள்ளது. அரசியல் மனோதிடம்தான் இல்லை

July 12, 2006 11:41 PM  
Blogger வானம்பாடி said...

இதைச் செய்யக் கூடிய தைரியமும் ஆண்மையும் சத்தியமாக இன்றைய அரசுக்கு இல்லை. இதுவரை இருந்த பிரதமர்களில் இதை செய்திருக்கக் கூடிய ஒரே ஒருவர் இந்திரா மட்டுமே..

July 13, 2006 2:39 AM  
Blogger வஜ்ரா said...

ஏங்க...உங்ககிட்ட...Proof இருக்கா....ஒரிஜினல் இருக்கா...அதை சங் பரிவாரங்கள் தான் செய்திருக்கவேண்டும்...என்றெல்லாம் இன்னமும் பேசிக்கிட்டு இருக்காங்க...நீங்க என்னன்னா...தாவூத்=ஓசாமா என்று எழுதுகிறீர்கள்...

தாவூத் பணம் கொடுத்து "neutral தீவிரவாதி" யை ஹீரோவாக்கி படம் எடுத்து அதை சூப்பர் ஹிட் ஆக்குபவர்கள் அதே மும்பை முட்டாள்கள்...(Dhimmitude at its best)

நீங்கள் சொல்வது போல் செய்யக்கூடியவர் பிரதமர் மன்மோகன் சிங்கோ, சூப்பர் PM சோனியாவோ அல்ல.

July 13, 2006 3:44 AM  
Blogger Boston Bala said...

நேற்றைய கார்டியனில் இருந்து:

Guardian Unlimited | Special reports | Sophistication suggests work of Sunni group: "The Times of India cited intelligence sources as pinning the blame on Lashkar-e-Taiba and a local Islamic student group. Lashkar-e-Taiba (Soldiers of the Pure) operated freely in Pakistan until shortly after September 11 2001. It recruited and raised funds openly, putting collection boxes in shops.

After George Bush pressed his Pakistani counterpart, Pervez Musharraf, to ban the group in January 2002, it split. One faction renamed itself Jama'at ud Dawa, while others worked more loosely; so the name, Lashkar-e-Taiba, is as vague an umbrella for militants focused on the Kashmir issue as al-Qaida is for anti-American jihadis.

The group denied killing civilians, claiming such an act went against its religious belief. Indian police accused the group of explosions in Mumbai in August 2003 which killed 55 people, and of a raid on the Indian parliament in 2001 that almost brought India and Pakistan to war. The group was blamed for attacks in October in Delhi which killed more than 60 people, and for explosions in the Hindu holy city of Varanasi this year which killed at least 15 people.

The earthquake in northern Pakistan and parts of Kashmir in October gave the group a new lease of life. Pakistan allowed it to collect funds openly again, officially for reconstruction work. Many of its offices reopened."

Bottomline: Unless and until some netha or his/her son/daughter is killed, India will never take preemptive action.

July 13, 2006 9:50 AM  
Blogger கால்கரி சிவா said...

நிச்சயம் செய்ய வேண்டும். உலக அரங்கில் நம் நிலையை நல்ல மார்க்கெட்டிங்க் செய்து. ஐநா உதவியுடன் பாகிஸ்தானில் ஒளிந்துள்ள தீவிரவாதிகளை பிடித்து வரவேண்டும் பாகிஸ்தான் முரண்டு பிடித்தால் அதையும் இரண்டு சாத்து சாத்தினால் அடங்கிவிடும் நம்மிடம் 3 முறை அடிவாங்கியவர் தானே. அங்கே மரண அடி கொடுத்தால் இங்கே உள்ள அறிவுசீவிகளும் கொஞ்சம் அடக்கி வாசிப்பர். எதிர்கட்சி, ஆளுங்கட்சி, மெஜாரிட்டி மைனாரிட்டி, காவி, தாடி, ஆரியன் திராவிடன் எல்லாம் ஒன்று சேரவேண்டும்.

தீவிரவாதிகளை வக்காலத்து வாங்கும் அறிவிசீவிகள் மிகச் சிறிய மைனாரிட்டி தான் அவர்களை புறம் தள்ளி நாம் பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டி இந்தியாவின் "Operation Enduring Freedom" ஆரம்பிக்க தருணம் இதுதான்.

நம் பலத்தை நீருப்பிக்கும் இந்த தருணத்தை தவறவிட்டால்......

July 13, 2006 11:22 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

India has to act tough and show them that it means business.India
should give an ultimatum to Pakistan for hanover of wanted
criminals and for ending cross
border terrorism.If that fails
India should bomb terrorist training camps unilaterally
as a defense measure.India
should learn certain things
from Israel and USA.I would
suggest that India should seek
the help of Israel in countering
terrorism.But with Mulayams certifying SIMI these may sound
impossible.But there are not many
options.When will the Indian
govt. realise this and spring
into action.

When I wrote on similar lines when IIsc was attacked many bloggers
opposed me.Even now they fail to
realise the dangers of islamic
terrorism, globally as well as
locally.

July 13, 2006 1:17 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

http://www.ibnlive.com/news/no-evidence-of-simi-activities-in-up/15401-3.html

July 13, 2006 1:25 PM  
Blogger commenter said...

திருப்பி அடிப்பது மிக இலகுவானது.
அதன் பின்விளைவுகளை நாம் நேரடியாக சந்திக்கவேண்டியிருக்காதவரை!

My Personal openion is ........ Life in America in 1999 was much better than 2006

-பின்னூட்டி

July 13, 2006 2:44 PM  
Blogger -/சுடலை மாடன்/- said...

இரயிலிலும், பொது இடங்களிலும் பொது மக்களை இப்படி ஒட்டு மொத்தமாக கொன்று குவிக்கும் அமைப்புகள் எல்லாம் அழித்தொழிக்கப் பட வேண்டிய பயங்கரவாதிகளே.

பயங்கரவாத அமைப்புக்களை தங்கள் தேவைக்கு ஏற்ப உருவாக்கியும், பயன்படுத்தியும் வரும் பெருவாரியான அரசுகள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று சவால் விடுவதும், அவ்வரசுகளின் அயோக்கியத்தனத்தை எப்பொழுதுமே தேசபக்தி என்ற போர்வைக்குள் மூடி மறைத்து விட்டு தம் மக்கள் பாதிக்கப் படும் போது மட்டும் அவ்வரசுகளின் குடிமக்கள் தற்காலிகமாக வெகுண்டெழுவதும் தொடர்ந்து நடக்கும்/நடக்கவிருக்கும் நாடகத்தின் காட்சிகள்.

இப்படிப் பட்ட இரட்டை வேட அரசுகளால் மக்கள் விடுதலைப் போராட்டங்களை வேண்டுமானால் நசுக்க முடியும், பயங்கரவாதத்தை ஒருக்காலும் ஒழிக்கவே முடியாது. ஆப்கானிஸ்தானை விட்டுத் துரத்தினால் என்ன இன்னொரு அரசு ஆதரவு அளிக்கப் போகிறது. ஆப்கானிஸ்தானில் அப்பயங்கரவாதிகள் உருவாகவும், ஒளிந்து கொள்ளவும் அதே அமெரிக்க அரசுதானே முதற்காரணம்.
ஆப்கானிஸ்தானின் மீது போர் தொடுத்தது பயங்கரவாதத்தை ஒழித்ததா?

இப்படிப்பட்ட போர்கள் எல்லாம் தம் மக்களின் தேசபக்தி என்ற வெறிக்குத் தீனி போடவே உதவும். பயங்கரவாதத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். அது மட்டுமல்லாமல், போரின் பொருளாதார ரீதியான இழப்பை அதே அப்பாவி மக்கள்தான் சுமக்க வேண்டும். அமெரிக்காவாவது அடுத்த கண்டத்தில் போய் போரை நடத்திக் கொண்டிருக்கிறது, அவர்கள் இழக்கும் உயிர்கள் இராணுவத்தினர் மட்டுமே. ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நடத்தினால் அப்பாவி உயிர்களின் இழப்பு பல மடங்கு இருக்கும். அதற்கு இந்தியா பயப்படும் என்று தெரிந்துதான் பாகிஸ்தானும் இப்படிப் பட்ட விளையாட்டுகளை நடத்தி வருகின்றது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதன் ஆரம்பப் புள்ளி தன்னுடைய நாட்டின் (சரியாகச் சொன்னால் ஆளும் வர்க்கத்தின்) நலன்களுக்காக, மற்ற நாடுகளில் மூக்கை நுழைத்து வம்பு செய்யாமல் இருப்பது. எல்லா நாடுகளும் சேர்ந்து (தன்னிச்சையாக அல்ல) கையாளாகாத ஐ.நா. சபையினைப் பலப்படுத்தி இதற்கு ஒரு முடிவு காண வேண்டும். இதுவரை பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்ட எந்த நாடும் இதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. பாதிக்கப் படாத நாடுகள் நமக்கேன் வம்பு என்றிருக்கின்றன. முணுமுணுத்த ஒருசில ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்கா, "with us or against us" என்று கூறி ஓரங்கட்டி விட்டது. பயங்கரவாதம் உச்சக் கட்டத்துக்குப் போகும் பொழுதுதான் இவ்வரசுகள் கீழிறங்கி வருமோ என்னவோ.

நன்றி - சொ. சங்கரபாண்டி

July 13, 2006 7:39 PM  
Blogger Srikanth Meenakshi said...

சங்கர்,

//ஆப்கானிஸ்தானின் மீது போர் தொடுத்தது பயங்கரவாதத்தை ஒழித்ததா? //

அந்தப் போரும், அதற்குப் பிறகு அமெரிக்கா மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளும், அமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாதத்தை (இது நாள் வரை) ஒழித்து தான் இருக்கிறது. அமெரிக்காவின் முதல்/முக்கியக் குறிக்கோள் அது தானே.

//பயங்கரவாதத்தை ஒழிப்பதன் ஆரம்பப் புள்ளி தன்னுடைய நாட்டின் (சரியாகச் சொன்னால் ஆளும் வர்க்கத்தின்) நலன்களுக்காக, மற்ற நாடுகளில் மூக்கை நுழைத்து வம்பு செய்யாமல் இருப்பது. //

இந்தியா எந்த நாட்டில் மூக்கை நுழைத்து வம்பு செய்ததால் இந்த வன்முறை நிகழ்ந்தது என்று நினைக்கிறீர்கள்?

சங்கர், உங்களுக்கு 'தேசபக்தி' என்ற கோட்பாட்டுடன் தத்துவ ரீதியான கருத்து வேறுபாடு இருப்பது புரிகிறது. அரசியல்வாதிகளாலும், அதிகார வர்க்கத்தினராலும் அத்தகைய உணர்வு cynical-ஆக சுயலாபத்திற்காகப் பயன்படுத்தப்படுவதுடன் எனக்கும் உடன்பாடில்லை தான். ஆயினும், தொடர்ந்து இந்தியா மீது, பாகிஸ்தானில் உறைந்திருக்கும் சக்திகளால், நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிர்வினையாற்ற கோருவதற்கு எந்த ஒரு அதீத தேச பக்தியும் தேவையில்லை. அப்பாவி உயிர்களைப் பாதுகாக்க ஒரு அரசாங்கத்திற்கு இருக்கும் கடமையைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்ற சாதாரண குடிமகனுக்கான உணர்வு போதும். அப்படிச் செய்ய ஒரு அரசாங்கம் முனையும் என்றால், அத்தருணத்தில் மக்களின் தேசபக்தி என்ற உணர்வைப் பயன்படுத்துவது என்பது அவ்வுணர்வின் சரியான பயன்பாடாகவே அமைந்திருக்கும்.

நன்றி,

ஸ்ரீகாந்த்

குறிப்பு: கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

July 13, 2006 9:11 PM  

Post a Comment

<< Home