<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Sunday, July 09, 2006

ராஜா ராவ் (1908 - 2006)

முதுபெரும் இந்திய ஆங்கில எழுத்தாளர் ராஜா ராவ் நேற்று (சனிக்கிழமை) தனது தொண்ணூற்றி ஏழாம் வயதில் இறந்து விட்டார் என்று ஹிந்துவில் செய்தி கூறுகிறது.

இவரது சமகால எழுத்தாளர்களான ஆர்.கே.நாராயண், முல்க் ராஜ் ஆனந்த் ஆகியோர் எழுதிய அளவுக்கு இவர் அதிகமாக எழுதவில்லை. அவர் எழுதியவற்றுள்ளும் நான் அதிகம் படித்ததில்லை. சில கட்டுரைகளையும் ஒரு நாவலையும் மட்டுமே படித்திருக்கிறேன். இருந்தாலும், நான் படித்த அந்த ஒரு நாவலான 'காந்தபுரா' என்னை மிகவும் பாதித்த நாவல்களுள் ஒன்று.

காந்தபுரா ஒரு வித்தியாசமான நாவல் - அதன் கதை மட்டுமல்ல, அதைச் சொன்ன விதமும் நடையும் கூட மிகவும் பிரத்யேகமானது. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், ஒரு அத்துவான கர்நாடக கிராமம் எப்படி காந்தியின் சிந்தனைகளாலும் செயல்பாடுகளாலும் வசீகரிக்கப்பட்டு தன்னை போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டது என்பதை விவரிக்கும் இந்நாவல், முழுவதும் ஒரு முதிய மாது ஒருத்தி சொல்வது போல எழுதப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில்! நாவலின் முன்னுரையில் ராஜா ராவ், இந்த பாணியில் ஆங்கிலத்தில் எழுதுவதன் சிரமங்களைப் பற்றிச் சொல்கையில், ஆங்கிலத்தில் இருக்கும் infinitives, preposition, conjunction போன்றவை எப்படி ஒரு பேச்சுச் சொல்லோட்டத்திற்குத் தடையாக உள்ளன, இந்திய மொழிகளில் இவை இல்லாததால் ஆங்கிலத்தில் இந்திய உரையாடல்களை எழுதுவது எத்தனை கடினமானது என்றெல்லாம் சொல்லி அங்கலாய்த்திருப்பார். இப்புத்தகத்தைப் படிப்பது ஆரம்பத்தில் மிகக் கடினமாக இருக்கும் - அதன் வித்தியாசமான நடையால். ஆனால் போகப்போகப் பழகி விடும். அந்நாவலின் ஆரம்ப பத்திகளில் இருந்து சில வரிகளை அதன் நடைக்கு உதாரணமாகக் காட்டலாம்:

Kenchamma is our goddess. Great and bounteous is she. She killed a demon ages, ages ago, a demon that had come to demand our young sons as food and our young women as wives. Kenchamma came from the Heavens-it was the sage Tripura who had made penances to bring her down-and she waged such a battle and she fought so many a night that the blood soaked and soaked into the earth, and that is why the Kenchamma Hill is all red. If not, tell me, sister, why should it be red only from the Tippur stream upwards, for a foot down on the other side of the stream you have mud, black and brown, but never red. Tell me, how could this happen, if it were not for Kenchamma and her battle?

கதையில் என்னை வெகுவாக பாதித்தது, காந்தியின் ஆளுமை எந்த அளவுக்கு நாட்டின் மூலை முடுக்குகளில் வியாபித்திருந்தது என்பது பற்றிய தகவல்கள் தாம்். பி.ஏ.கிருஷ்ணன தனது் 'புலி நகக்கொன்றை' நாவலிலும் இந்த விஷயத்தை கொஞ்சம் தொட்டிருப்பார். 'காந்தபுரா'வில், மூர்த்தி என்ற கதாநாயகன் மட்டும் தான் காந்தியை நேரில் கண்டிருப்பான். காந்தியை சந்தித்து விட்டு திரும்பிய பின் அவனிடம் தெரியும் மாறுதல்களைக் கண்டு கிராமமே உத்வேகம் பெறும். கிராமத்தின் அருகில் இருக்கும் ஒரு மதுபான நிறுவனத்தை எதிர்த்து அறவழிப் போராட்டங்கள் நிகழ்த்தத் தொடங்கும். இது நடக்கையில், இன்னொரு பக்கம், மூர்த்தி காந்தி வழிச் சிந்தனைகளில் மிகுந்த தேர்ச்சி பெற்று சத்தியாகிரகம், உண்ணாவிரதம் ஆகியவற்றின் பல பரிமாணங்களை சுய பரிசோதனைகள் மூலம் கண்டடைவான். கதை இந்த இரு தளங்களான மூர்த்தியின் ஆன்மீக விழிப்பு, கிராமத்தின் அறவழிப் போராட்டங்கள் ஆகியவை எவ்வாறு ஒன்றையொன்று முன்னகர்த்துகின்றன என்பதாய் விரியும்.

'உலகில் எந்த மூலையில் ஒரு தவறு நிகழ்ந்தாலும், நானும் சற்று குற்ற உணர்வு கொள்கிறேன்' என்ற காந்தியக் கோட்பாட்டினை உள்வாங்கிக் கொண்டு அதையொட்டி வாழ முயன்ற ஒரு இளைஞனின் கதையாகவும், தங்களை மிஞ்சிய ஒரு பெரும் பொது நலப் போராட்டத்திற்குத் தம்மை ஈந்த ஒரு கிராம மக்களின் கதையாகவும் எழுதப்பட்ட இந்நாவல், வாசிக்கும் ஒவ்வொருவரையும் சமுதாயத்தில் தமது இடம் என்ன என்பதைப் பற்றி யோசிக்க வைக்கும். எந்த ஒரு தொழில் நுட்பத் தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லாத காலத்திலும் இந்திய விடுதலைப் போராட்டம் எப்படி நாடு தழுவியதாக இருந்தது என்பதை அறிய உதவுவதாகவும்் இருக்கும்.

தனது நிஜ வாழ்விலும் காந்திய சிந்தனைவாதியாக இருந்த ராஜா ராவ் "Great Indian Way: A Life of Mahatma Gandhi" என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். காந்தபுரா தான் அவரது ஆகச்சிறந்த நாவலாகக் கருதப்படுகிறது. அதைத் தவிரவும், "The Serpent and the Rope", "The Cat and Shakespeare" ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

அவரது நினைவிற்கு எனது அஞ்சலிகள்.

ராஜா ராவ் பற்றி மேலதிகத் தகவல்கள்


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

4 Comments:

Blogger Badri Seshadri said...

The Serpent and the Rope தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சாஹித்ய அகாதெமி மூலம் (கயிற்றரவு) கிடைக்கிறது.

July 09, 2006 9:02 PM  
Blogger Srikanth Meenakshi said...

பத்ரி, தகவலுக்கு நன்றி - ஸ்ரீகாந்த்

July 09, 2006 9:07 PM  
Blogger Boston Bala said...

fyi... Amardeep Singh: Raja Rao (RIP) and Czeslaw Milosz

July 13, 2006 4:02 PM  
Blogger Srikanth Meenakshi said...

BB, thanks for the link to the blog entry - it was a great read - beautifully written.

Thanks for sharing!

Srikanth

July 13, 2006 5:20 PM  

Post a Comment

<< Home