<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Sunday, July 09, 2006

'பிஞ்சு மனம்'

இந்த வருட மே மாத இறுதியில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் குறும்படக் கலைஞர் அஜீவன் அவர்கள் அமெரிக்கா வந்திருந்தார். நண்பர் பி.கே.சிவகுமார் மற்றும் 'திண்ணை' ராஜாராம் அவர்கள் துணையோடு ஏற்பாடாகியிருந்த இப்பயணத்தின் முதல் நிறுத்தமாக வாஷிங்டன் வந்தடைந்தார். இங்கே அவர் ஒரு குறும்படப் பயிற்சிப் பட்டறை நடத்துவதாகத் திட்டம். அவர் வாஷிங்டன் வந்திறங்கியது ஒரு திங்கள்கிழமை, இங்கே சனி காலை வரை இருப்பதாக ஏற்பாடு. இங்கே இருந்த நாட்கள் எல்லாம் வாரநாட்களாகையால், மாலைகளில் மட்டுமே பயிற்சியை நடத்த முடிந்தது. விருப்பம் தெரிவித்த பலராலும் கலந்து கொள்ள இயலவில்லை. ஐந்தே பேர் தான் இருந்தோம் - நான், 'மணிக்கூண்டு' சிவா, சங்கரபாண்டி, வெங்கடேஷ் பாபு - இவர்களோடு 'Smart cookie' என்றொரு குழந்தைகள் படத்தை உருவாக்கி கொஞ்சம் திரை இயக்க அனுபவம் பெற்றிருந்த தீபா ராஜகோபால் என்பவர். அவரைத் தவிர மற்ற எவருக்கும் ஆர்வமிருந்த அளவுக்கு அனுபவம் இல்லை.

மூன்று நாட்கள் பயிற்சி வகுப்புகள் சுவாரசியமாக நிகழ்ந்தன. நான்காவது நாள் ஒரு குறும்படத்தை எடுப்பதாகத் திட்டமிட்டிருந்தோம். மூன்றாவது நாளே இது பற்றி கொஞ்சம் பேசியிருந்தோம். குழந்தைகளின் உளவியலை மையமாக வைத்து தீபா சொன்ன ஒரு எளிமையான கதையைத் தேர்ந்தெடுத்து அஜீவன் இயக்கத்தில் படப்பிடிப்பை நிகழ்த்தினோம் (பயிற்சியும் படப்படிப்பும் நடந்தது என் வீட்டின் கீழ்நிலையிலும் வாழ்நிலையிலும்). எடுத்த படத்தை அவர் சுவிஸ் திரும்பிச் சென்று தொகுத்து, இசை சேர்த்து, சில நாட்களுக்கு முன்பு அனுப்பியிருந்தார். படம் எடுக்கையில் இது எப்படி வரும் என்ற ஐயப்பாடு இருந்தாலும், அஜீவனின் திறமையில் அழகாகவே வந்திருக்கின்றது என்று நினைக்கிறேன். படம் ஓடுவது ஒன்றரை நிமிடம்தான் - சின்ன கதையைச் சிக்கனமாகச் சொல்கிறது.



படத்திற்குப் பின்னால் ஒரு சின்ன கதை: படம் தனது இன்னொரு குழந்தை மீது ஒரு தாய் செலுத்தும் அன்பைக் கண்டு சலனமுறும் ஒரு மகளைப் பற்றியது. இப்படத்தில் நடித்த மகள் (காவ்யா), இப்படத்தில் வரும் தாயின் (தீபா) உண்மையான மகள். படத்தில் வரும் சிறு குழந்தை படத்திற்காக இரவல் பெறப்பட்டது. அக்குழந்தையின் தாயும், அக்காவும் (இன்னொரு காவ்யா வயது - சுமார் ஐந்து வயது - பெண்) படப்பிடிப்பின் போது வீட்டில் தான் இருந்தார்கள். அப்பெண்ணிற்கு தான் படத்தில் இல்லையே என்று ஒரு சின்ன வருத்தம் முதலில் இருந்தே இருந்தது. மேலும், தனது தங்கையை காவ்யா ஏன் தங்கையாக பாவிக்கிறாள் என்று வேறு ஒரு கேள்வி. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில் ஒரு பேப்பரும் பேனாவுமாக 'உர்'ரென்று முகத்தை வைத்துக் கொண்டு ஏதோ வரைந்து/எழுதிக் கொண்டிருந்தாள். படப்பிடிப்பெல்லாம் முடிந்த பிறகு எதேச்சையாக அந்தப் பெண் வரைந்த படத்தைப் பார்த்தால், அதில் ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு பெரிய பெண், ஒரு குழந்தை - அதன் கீழ் - "MY daddy, MY mommy, MY sister" என்று எழுதி அவற்றிற்குக் கீழே பெரிய எழுத்துக்களில், "MY OOWN FAMILY" என்று எழுதியிருந்தது! எங்களுக்கெல்லாம் அதைப் பார்த்ததும் கொஞ்சம் பாவமாக இருந்தது. அஜீவனும் 'சே, பாவம்' என்று சொல்லி விட்டு, கொஞ்ச நேரத்தில், 'அட, இதையே ஒரு படமாக்கலாம் போலிருக்கே' என்றார். :-)

படத்தைப் பற்றி கானாபிரபுவின் பதிவு.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

10 Comments:

Blogger VSK said...

நன்றாகத் தெளிவாக வந்திருக்கிறது!
எடுத்த காட்சிகள் குறைவில்லாமல் இருந்தன.
வாழ்த்துகள்!

-பெரியவர் கோபம்தான் எளிதில் மறையாது!
பிஞ்சுகளின் கோபம் கணப்பொழுதில் மறையக்கூடியது என்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறீர்கள்!

July 09, 2006 7:01 PM  
Blogger Ravichandran Somu said...

ஸ்ரீகாந்த்,

குறும்படம் மிகவும் நன்று. பிண்ணனி இசை, கேமரா கோணம் அருமை.

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

என் வீட்டில் எனது மகளுக்கும், மனைவிக்கும் அவ்வப்போது நடக்கும் உரையாடல் "Mama, you like only thambi not me....".

I make sure that I spend my time equally with both kids.

-ரவிச்சந்திரன்

July 09, 2006 7:17 PM  
Blogger Srikanth Meenakshi said...

ரவி, எஸ்கே - நன்றி, உங்கள் புகழுரைகள் மிகப் பெரும்பான்மையும் அஜீவனுக்கும் தீபாவுக்குமே உரித்தானவை.

ஸ்ரீகாந்த்

July 09, 2006 9:00 PM  
Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ஸ்ரீகாந்த், குறும்படம் அருமை. பரிச்சயமான பின்னணி. சம்பந்தப்பட்டவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

July 10, 2006 9:15 AM  
Blogger Boston Bala said...

Nanraaga vanthirukkirathu

July 10, 2006 2:48 PM  
Blogger கருப்பு said...

ஸ்ரீகாந்த்,

குறும்படம் அபாரம்!

குறும்படத்தில் நடித்த ஒருவர் பெயர் ஷ்ரியா ஐயர்!!!

ஏன் ஷ்ரியா என்று மட்டும் போட்டால் என்னவாம்? குறும்படத்திலுமா உங்கள் ஐயர் சாதியைக் காட்டிக்கொள்ள வேண்டும்? அமெரிக்கா என்ன அந்த நிலவுக்கே சென்றாலும் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதியை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. வாங்கி கட்டிக் கொள்வதையும் நிறுத்தப் போவதில்லை!!!

கேவலம்!

July 10, 2006 9:22 PM  
Blogger Srikanth Meenakshi said...

வி.க,

நன்றி.

பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை ஒட்டிக் கொள்வதில் எனக்கும் உடன்பாடில்லை தான். ஆயினும், அக்குழந்தையின் பெற்றோர்களுக்க்கு இவ்விஷயத்தில் இருக்கும் உரிமையில் குறுக்கிட விரும்பவில்லை.

ஸ்ரீகாந்த்

July 11, 2006 8:15 AM  
Blogger Jeevan said...

ஸ்ரீகாந்த்தின் பக்கத்தில்
இருக்கும் விடயங்களை பார்த்தேன்.

யதார்த்தத்தின் பிரதிபிம்பங்கள்........

மேலும் கருத்துகளை முன் வைத்த உறவுகள்:-
எஸ்.கே
ரவிச்சந்திரன்
செல்வராஜ்
போஸ்டன் பாலா
மற்றும்
விடாது கறுப்பு
ஆகியோருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்..........

இங்கே என் மனதை உறுத்திய கருத்துக்கு என் கருத்தை வைக்கலாமா? கூடாதா? என
என் மனம் கேள்விகளை எழுப்பினாலும்
இக் கருத்து உங்கள் இதயத்தில்
எழுவதற்கு நானும் காரணம்தான்............

இன்னொருவர் வலைப்பின்னலுக்குள்
நான் வலை விரித்து
யாரையும் இரையாக்கி விடக் கூடாது என்றாலும் என்னால் என் கருத்தை பகிராமல்
இருக்க முடியவில்லை.

அவர்கள் என்ன எழுதித் தந்தாலும்
படத்தின் டைட்டலில் நான் அதை தவிர்த்திருக்கலாம்.
அதை யாரும் தடுத்திருக் மாட்டார்கள்.

ஐயர் என்று அந்தக் குழந்தைக்கு பின்னால் வந்த
வரிகள் எனக்கு ஒன்றும் பொரிதாகத் தெரியவில்லை.

நாம் புலம் பெயர்ந்து வந்தாலும்
இன்னும் மனதளவில் ஊரில்தான் வாழ்கிறோம்.
பல மூட நம்பிக்கைகள் மற்றும்
நடவடிக்கைகள்
எதிர்கால சந்ததியால் ஒதுக்கித் தள்ளப்படும்.

நாம் வெட்டி சாய்க்கப் பார்க்கிறோம்.
அங்கே வடுகள் இருக்கும்.
நீரோடையால் சில அழிந்து
போகின்றன.
அங்கே வடுக்கள் தெரிவதில்லை.

புலம் பெயர்ந்து வந்த குழந்தைகளிடம்
நம் எண்ணங்கள் நீரோடை போல
மறைகின்றன.
எனவேதான் தம்மை வெஸ்டர்ன் என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் போலும்.........
(என் அனுபவத்தில் பார்த்தவை இவை........)

எனக்கும் பார்ப்னியத்துக்கும் சம்பந்தமில்லை.
மனித நேயத்தை தவிர வேறெதும் என் மதமேயில்லை.

ஒவ்வொருவருக்குள்ளும்
ஒவ்வொரு நம்பிக்கை........
உலகப் புகழ் பெற்ற
கார் ஓட்ப்பந்தயக் காரன் சூமாக்கர் (ஜெர்மனியானாலும்) வாழும் நாடு சுவிஸ். என் வீட்டுக்கு அருகே!

சூமாக்கர் என்றால் சூ செய்பவர் ( பாதணிகளை செய்பவர்)
அவரோடு பழகியிருக்கிறேன்.
அவரோடு உணவருந்தியிருக்கிறேன்.
அவரை என்னால் ஏளனப்படுத்த முடியாது.


என் நண்பர்கள் அதிகமிருக்கும் இணையதளம் யாழ்களம்.
அதில் இங்கே வந்தது போன்ற கருத்துகள் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
என் கருத்து ஒன்றுக்குள் ஒரு காட்டமான அணல் வந்த போது நான் பகிர்ந்த விடையை
உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்:-

தமிழர் என்றால் விடுதலைப் புலிகள்
விடுதலைப் புலிகள் என்றால் தமிழர்கள் என்கிறீர்கள்.
அப்படியானால் ஏன் இன்னும்
பழசுகளை கிண்டி அவர்கள் மனதை வேதனைப்படுத்துகிறீர்கள்?

சாதியை ஒழிக்க வேண்டும் என்கிறீர்கள்.
ஆனால்
வார்த்தைக்கு வார்த்தை
பார்ப்பனியத்துக்கு எதிராகப் பேசுகிறீர்கள்?
அப்போ நீங்கள் என்ன
உங்களை தலித்துகள் என்று
முத்திரை குத்திக் கொள்கிறீர்களா?
அல்லது
அதை வைத்து பிழைப்பு நடத்துகிறீர்களா?

புலம் பெயர் நாடுகளில்
உங்களால் உருவாக்கப்பட்ட ஆலங்களில்
பார்ப்பனர்கள்தான் பூஜை செய்கிறார்கள்.
அதை ஒழுங்கு செய்தவர்களே நீங்கள்தானே?
ஏன் இன்னொரு நாட்டு அரசியல் தன்மைகளை
அரிதாரமாக்கிக் கொள்கிறீர்கள்?

தேவையற்ற நாற்றங்களை நுகராமல்
தேவையான நறுமணத்துக்கு எப்போது
முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

அன்றுதான் நீங்கள் ஒட்டு மொத்த தமிழர் மனங்களை வென்று நட்புகளை தனதாக்கிக் கொள்வீர்கள்!


நன்றி - வணக்கம்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11820&postdays=0&postorder=asc&&start=30
_________________
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன்
www.ajeevan.com

July 12, 2006 6:06 PM  
Blogger ராபின் ஹூட் said...

This comment has been removed by a blog administrator.

July 12, 2006 11:51 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

Nice film.Why are you giving space to Viadathu Karuppu here.Let him
publish his stupid thoughts in
his blog.

July 13, 2006 1:20 PM  

Post a Comment

<< Home