<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Sunday, June 18, 2006

சண்டே போஸ்ட் - 18

உலகளாவிய வெம்மையேற்றம் குறித்த அல் கோரின் ஆவணப்படமான ‘அசௌகரியமான உண்மை' பரவலான கவனம் பெற்றிருக்கிறது. திரையரங்குகளில் எதிர்பார்த்ததை விட நன்றாக ஓடிக்கொண்டும் இருக்கிறது. இந்நிலையில், இவ்விஷயத்தில் பல விஞ்ஞானிகள் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கத் துவங்கியிருக்கின்றனர். இவர்களில் பலர் அரசியல் மற்றும் வணிக உள்நோக்கங்கள் கொண்ட நிறுவனங்களின் சார்பில் பேசுபவர்கள் என்பதால் அவர்களது கருத்துக்களை உதாசீனம் செய்வது சுலபமாகவும் அவசியமாகவும் இருந்தது. ஆனால், சென்ற வாரம் Slashdot-இல் வெளியான ஒரு குறிப்பில் அத்தகைய எந்த ஒரு உள்நோக்கமுமற்ற ஒரு அமைப்பு எழுப்பும் சந்தேகங்கள் வெளியாகியிருக்கின்றன. இவர்கள், அல் கோர் திரைப்படத்திலும், அதற்கு வெளியிலும் சொல்வது போல், வெம்மையேற்றம் குறித்த விஷயத்தில் அறிவியல் உலகத்தில் ஒரு ஏகோபித்த கருத்து இருப்பது உண்மையில்லை என்கின்றனர். குறிப்பாக, அல் கோர் முன் நிறுத்தும் விஞ்ஞானிகள் எவரும் சீதோஷ்ணவியலாளர்கள் (Climatologist) இல்லை என்றும், அந்த விஞ்ஞானிகள் உபயோகப்படுத்தும் கணினி மாதிரிகள் (Models) நம்பகத்தன்மை இல்லாதவை என்றும் கூறுகின்றனர்.

கட்டுரையிலிருந்து:

Carter is one of hundreds of highly qualified non-governmental, non-industry, non-lobby group climate experts who contest the hypothesis that human emissions of carbon dioxide (CO2) are causing significant global climate change. "Climate experts" is the operative term here. Why? Because what Gore's "majority of scientists" think is immaterial when only a very small fraction of them actually work in the climate field.
Even among that fraction, many focus their studies on the impacts of climate change; biologists, for example, who study everything from insects to polar bears to poison ivy. "While many are highly skilled researchers, they generally do not have special knowledge about the causes of global climate change," explains former University of Winnipeg climatology professor Dr. Tim Ball. "They usually can tell us only about the effects of changes in the local environment where they conduct their studies."

சந்தேகமற நிறுவப்பட்ட உண்மை என்று சொல்லப்படும் விஷயத்தில் இத்தனைக் குழப்பமிருப்பது சுவாரசியமாகவும் சங்கடமாகவும் இருக்கிறது. ‘அசௌகரியமான உண்மை’ என்று கோர் குறிப்பிட்டது எதை?

இன்றைய அளவில், Slashdot விவாதத்தில் (வெம்மையேற்றம் என்பது உண்மையில்லை என்றாகி விட்டால், அதற்காக செலவு செய்யப்படும் பணமெல்லாம் விரயமாகும் என்ற வாதத்தை மறுத்து)ஒருவர் குறிப்பிட்டதை மட்டுமே வழிமொழிய முடிகிறது:

The notion that there's no gain from reducing carbon emissions - even in the unlikely event that there turns out to be no effect on long-term global temperatures - is patently absurd. Offhand I can name benefits: improved air quality with attendant lower of non-carbon aerosols like mercury and uranium (which would lead to lower incidence of many diseases), less acidification of lakes and other bodies of water, reduction of ecosystem damage in bodies of water like the Gulf of Mexico (large stretches of which are now hypoxic to anoxic), an extraordinary leap in energy efficiency as a generation of industrial machines are upgraded to modern versions, and finally a reduction in global economic instability as energy sources are made more distributed.


நிற்க.

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:


  1. சீரழிக்கும் சிறைகள்: புஷ் அரசாங்கத்தின் அதிகார துஷ்பிரயோகங்களை எழுதி முடிக்க ஒரு பட்டியல் போதாது; வகை வகையாக பல பட்டியல்கள் வேண்டும். அறிவியல், கல்வி, வெளியுறவுத்துறை, ராணுவத்துறை, உளவுத்துறை, மக்கள் உரிமைகள் என்று பல பட்டியல்களை இவற்றால் நிரப்ப முடியும். இவற்றுள் மிக மோசமான ஒன்று போர்க்கைதிகள் விஷயத்தில் இவர்கள் நிறுவியுள்ள புதிய அணுகுமுறைகள். ரகசியச் சிறைகள், விசாரணையற்ற சிறைத்தண்டனைகள், சித்திரவதைக்கு ‘நூதனமான’ புதிய விளக்கங்கள், குற்றவாளிகளை பிற நாடுகளுக்கு ‘ஏற்றுமதி' செய்தல் என பல துஷ்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    இவை குறித்து வாஷிங்டன் போஸ்ட் ஒரு தலையங்கத் தொடர் எழுதத் தீர்மானித்திருக்கிறது. அத்தொடரின் முதல் தலையங்கம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த அரசாங்கத்தின் பல கேள்விக்குரிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுத் துவங்கியிருக்கிறார்கள்.

    கட்டுரையிலிருந்து:

    NEARLY FIVE years into a war between the United States and Islamic extremists, U.S. policies and practices for arresting, holding, interrogating and trying enemy militants are in a state of disarray unprecedented in modern American history. They shame the nation and violate its fundamental values.
    ...
    Guantanamo Bay has become a toxic symbol around the world of U.S. human rights violations, a status magnified by recent suicides. No detainees have been transferred there in 21 months, and President Bush has said he would like to close the facility. But the Pentagon is spending millions to build a state-of-the-art penitentiary at the base.

  2. ஈரான் நாட்டின் முன்னாள் பெருமையும் இந்நாள் சிறுமையும்: சில மாதங்களுக்கு முன்பு, எனது அலுவலகத்தில் புதிதாக சந்திக்க நேர்ந்த ஒருவரிடம் பேச்சுவாக்கில் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கேட்டேன். அவர் ‘ஈரான்' என்று சொல்லி விட்டு, உடனேயே ‘but I am a Zoroastrian’ என்றார். ‘இது ஏதோ எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் படித்த சங்கதி போல் இருக்கிறதே' என்று நான் யோசித்துக் கொண்டிருக்கையில், அவர் சுருக்கமாக ஈரான் எப்படி ஜொராஸ்டிரியர்கள் நிறைந்த நாடாக இருந்தது, இஸ்லாம் வந்த பின்பும் கூட எவ்வாறு அம்மதம் தழைத்துக் கொண்டிருந்தது என்பதையும், பின்பு எவ்வாறு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு நாட்டின் மாறிவிட்ட மதச்சூழலில் ஜொராஸ்டிரியர்கள் புலம்பெயரத் துவங்கினர் என்பதையும் விளக்கினார்.

    இன்றைய போஸ்டில், ஈரானில் குறைந்து வரும் இந்தப் பன்முகத்தன்மை குறித்து ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. ஜொராஸ்டிரியர்கள் மட்டுமில்லாமல் கிறித்துவர்கள், யூதர்கள் (!!) ஆகியோரும் இன்று ஈரானில் இருப்பதாகவும், இருப்பினும் இவர்களது எண்ணிக்கைகள் மிகவும் குறைந்து வருவதாகவும் சொல்கிறது. ஜொராஸ்டிரியர்கள் குறித்த குறிப்புகள் சுவாரசியமாக உள்ளன.

    In Yazd, a pleasant, desert city in the dead center of Iran, Zoroastrians enjoy a vivid reputation for honesty. Prices in a shop owned by a Zoroastrian are regarded as the benchmark that competing shops are compared against. Children are told that when arriving in a strange town near dark, seek out a Zoroastrian home to spend the night in.
    "I'm sorry to say it and it might sound offensive, but these Zoroastrians are better Muslims than we are," said Mohammad Pardehbaff, a Yazd driver.
    ...
    Yet Zoroastrians are leaving Iran as well; perhaps 10,000 remain. In Taft, 10 miles south of Yazd, only the elderly linger in the mud-walled warren of houses identifiable as Zoroastrian by the tiny oil lamps burning in glass cases fitted into walls. "It's like we have leprosy, the way they've evacuated!" said Ardeshir Rostami, 83.

  3. அலுவல் ஹைக்கூ: நிலா, பட்டாம்பூச்சி, இலையுதிர்காலம், கண்ணீர், குளம் இவையெல்லாம் குறித்த அசாதாரணமான அவதானங்களைச் சுருக்கி மடக்கி ஹைக்கூ ஆக்கி விடலாம். ஆனால், அலுவலகம், பழுப்புச் சுவர்கள், பழைய diet pepsi பாட்டில்கள், ஊசிப்போன maintenance manual-கள் இவற்றைப் பற்றி கவிதை செய்ய முடியுமா? முடியும் என்கிறார் ‘Office Haiku’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஜேம்ஸ் ருகாஸ்கஸ்.

    Concept சுவையாக இருக்கிறது; கவிதைகள் சுமாராக இருக்கின்றன:


    If you'd read my note
    You would know the answers to
    These stupid questions.

    Windowless office.
    Some days it would be
    Nice to see the rain.

    Great literature it ain't. But it's not bad as poetry for Dilbert-san.

  4. ஐரோப்பா காணும் அமெரிக்கா: இன்றைய, 9/11/2001-க்குப் பிறகான அமெரிக்காவை ஐரோப்பியர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி ‘Uberpower’ என்று ஜோசஃப் ஜாஃப்பி என்பவர் எழுதி ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. அட்லாண்டிக் பெருங்குளத்தின் இருகரைகளையும் நன்கறிந்த நூலாசிரியர் பெரும்பாலும் அமெரிக்காவிற்குச் சாதகமாகவே பேசுகிறார் என்று இப்புத்தகத்தின் நூல் விமரிசனம் கூறுகிறது.

    புத்தக விமரிசனத்திலிருந்து:

    At one point, drawing on his own experiences, Joffe reduces European debates about the United States to a single composite conversation: a long, hilarious exchange between a pro-American X and an anti-American Y. An excerpt:
    "Y: Just look at [American] TV.
    "X: And we [Europeans] don't have reality TV, soaps, and afternoon talk shows that deal with sexual perversions?
    "Y: These are all American imports, which they are inflicting on us.
    "X: Who Wants To Be a Millionaire is a British and Big Brother a Dutch invention.
    "Y: (escaping into circularity): This just goes to show how much American vulgarity has seeped into European sensibilities.
    "X: What about the inundation of European TV with hard-core porn movies and telephone-sex ads, which are strictly homemade.
    "Y: (shifting ground again): Americans are too Puritan to confront sex honestly."



மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

1 Comments:

Blogger வஜ்ரா said...

ஈரான் நாட்டின் முன்னாள் பெருமையும் இந்நாள் சிறுமையும்:

இந்தக் கட்டுரையை படித்தேன்...ஸொராஸ்ட்ரியர்கள்...(குஜராத்தில் பார்சீக்கள்..) இஸ்லாம் என்றைக்கு ஈரானில் காலடி எடுத்துவைத்ததோ அன்றிலிருந்தே அழியத் தொடங்கியது சரித்திரம். அவர்களை அரவணைத்துக் கொண்டு சென்ற ஒரே நாடு இந்தியா தான்...(இங்கே அவர்கள், Fire temple, tower of silence எல்லாமே இருக்கின்றது...)

பார்சீக்களைக் கேட்டால் தெரியும்...பார்சீக்களான ஜாம்ஷெட்ஜி டாடா போன்றவர்கள் 1979க்குப்(ஈரானில் இஸ்லாமியப் புரட்சி) பிறகா இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்?

ஏதோ, ஈரானில் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு தான் சிறுபான்மையினர் மேல் காழ்புணர்ச்சி அதிகரித்ததாக கூறுகிறது...ஆனால், இஸ்லாம் எங்கே பெரும்பான்மையான மதமாக உள்ளதோ அங்கெல்லாம் சிறுபான்மையினர் விரட்டப்படுவது / பட்டது சரித்திர உண்மை, இதை வெகு சுலபமாக "வெள்ளைப்பூச்சு" செய்துவிட்டது போல் தெரிகிறது அந்த ரிபோர்ட்.

June 19, 2006 2:49 AM  

Post a Comment

<< Home