<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, June 25, 2006

சண்டே போஸ்ட் - 19


“Scientists this week discovered that the Earth is currently at its hottest in the past 2000 years....what this means is the last time when somebody said, ”Jesus! it’s hot!“, they were, indeed, actually TALKING TO JESUS!”

- Jay Leno, The Late Night Show, Friday

தொடர்புடைய சுட்டி

நிற்க.

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:

  1. பேரழிவு ஆயுதங்கள்: அம்பலங்கள் தொடர்கின்றன: செப்டம்பர் பதினொன்று நிகழ்விற்குப் பின்னர் அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட கொள்கை மாற்றங்கள் குறித்து சென்ற வாரம் ரான் சஸ்கிண்ட் எழுதிய புத்தகம் வெளியானது. இப்புத்தகம் அமெரிக்க உளவுத்துறையிலிருந்து ரகசியமாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இன்றைய போஸ்டில், டைலர் ட்ரம்ஹெல்லர் என்னும் இன்னொரு முன்னாள் உளவுத்துறை அதிகாரி தனது அனுபவங்களைத் தொகுத்துக் கொண்டிருப்பதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. இவர் அளிக்கும் தகவல்கள் ஈராக் போர் முஸ்தீபுகளைப் பற்றியது. முக்கியமாக ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறிய காலின் பாவலின் ஐக்கிய நாட்டு சபை உரை எப்படி உருவானது என்பதை விவரமாகக் கூறுகிறார். பாவல் இந்த உரையில்தான் ஈராக்கில் நடமாடும் ஆயுதக் கிடங்குகள் இருப்பதாக முன்வைத்தார். ட்ரம்ஹெல்லர், உரையின் இந்தப் பகுதியைத் தான் கடுமையாக எதிர்த்ததாகவும், தனது (மற்றும் பலரது) எதிர்ப்பை மீறி உரையில் அது இடம் பெற்றதாகவும் கூறுகிறார்.

    ட்ரம்ஹெல்லரும் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார்.

    ஈராக் போரை நியாயப்படுத்த உதவிய காரணங்கள் ‘தயாரிக்கப்பட்டவை' என்பது குறித்து யாருக்கும் இன்றைய அளவில் சந்தேகமில்லை என்று நினைக்கிறேன். அமெரிக்க மக்கள் அதைக் குறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டார்கள் என்றும் நினைக்கிறேன்.

    கட்டுரையிலிருந்து:

    In late January 2003, as Secretary of State Colin Powell prepared to argue the Bush administration's case against Iraq at the United Nations, veteran CIA officer Tyler Drumheller sat down with a classified draft of Powell's speech to look for errors. He found a whopper: a claim about mobile biological labs built by Iraq for germ warfare.

    Drumheller instantly recognized the source, an Iraqi defector suspected of being mentally unstable and a liar. The CIA officer took his pen, he recounted in an interview, and crossed out the whole paragraph.

    A few days later, the lines were back in the speech. Powell stood before the U.N. Security Council on Feb. 5 and said: "We have first-hand descriptions of biological weapons factories on wheels and on rails."

  2. ஈரான் இன்று: ஈராக் போருக்கு முன்னால் அமெரிக்க ஊடகங்களில் அந்நாடு குறித்த செய்திகள் எந்த அளவுக்கு இடம் பெற்றதோ அந்த அளவுடன் ஒப்பிடக் கூடிய அளவில் இன்று ஈரான் இடம் பெற்று வருகிறது. இருந்தாலும், ஈராக்கை விட கொஞ்சம் அதிகம் எச்சரிக்கையோடு ஈரான் விஷயத்தில் பத்திரிக்கைகள் செயல்படுகின்றன. இன்றைய போஸ்ட் கருத்துக் கொத்தில், ஈரான் குறித்து பல கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. முக்கியமானவை இரண்டு: அமெரிக்காவை ஈரானிய மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பற்றியது ஒன்று, ஈரான் அரசாங்கத்தின் உள் அரசியல்கள் பற்றியது இன்னொன்று.

    எல்லா கட்டுரைகளுமே ஈரான் அமெரிக்காவின் எதிரி நம்பர் 1 என்ற வழக்கமான பல்லவியைக் கடந்து எழுதப்பட்டுள்ளன.

    The official spokesman of the Army of Martyrs of the International Islamic Movement struggled to summon a militant mien. At the time, in early 2004, U.S. troops were fighting in the Iraqi city of Najaf, and the leaders of the Shiite theocracy in Iran felt compelled to rattle a saber in the name of protecting Shiite Islam's holiest city. The group claimed to be signing up volunteer suicide bombers by the thousands. But as the discussion progressed, the spokesman acknowledged that the effort was essentially public relations, and that he, for one, was not about to blow himself up.

  3. லண்டன்ஸ்தானி: லண்டனின் மேற்கு புறநகர்ப் பகுதியில் வாழும் இந்திய வம்சாவளி இளைஞர்கள் பற்றி கௌதம் மல்கானி என்ற புதிய எழுத்தாளர் ‘லண்டன்ஸ்தானி' என்ற தலைப்பில் நாவல் ஒன்று எழுதியிருக்கிறார். Hip-hop கலாசாரத்தை வலிந்து சென்று அரவணைத்துக் கொண்டிருக்கும் இவர்களது நடை உடை பாஷை பாவனைகளை விவரிப்பதாக அமைந்திருக்கும் இந்நாவல் சுவாரசியத்தைத் தூண்டுகிறது.

    (இந்த நூல் விமரிசனம் இன்னமும் போஸ்டின் வலைத்தளத்தில் ஏற்றப்படவில்லை, மேற்காணும் சுட்டி பொதுவான புத்தக விமரிசனப் பக்கத்திற்கு இட்டுச் செல்லும்)


    They call themselves ‘rudeboys’, these Sikh and Hindu wannabe-hoodlums from the not-so-mean streets of West London. Or at least that’s how Jas, our narrator and guide, refers to the gang who have recently befriended him. But naming is a tricky business within the quicksilver world of urban youth culture. As Jas explains, “First we was rudeboys, then we be Indian niggas, then rajamuffins, then raggastanis, Britasians, ...Indobrits. these days we try an use our own word for homeboy an so we just call ourselves desis”

    அப்டி வாங்க வழிக்கு! :-)


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

0 Comments:

Post a Comment

<< Home