<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, July 16, 2006

சண்டே போஸ்ட் - 22

நேற்று முன் தினம் 'பட்டியல்' படம் பார்த்தேன். அட, வித்தியாசமான களம், சுவையான கதை, சுறுசுறுப்பான திரைக்கதை எல்லாம் சேர்ந்து சுவாரசியமான படமாக இருக்கிறதே, இதைப் பற்றி ஏதாவது எழுதலாமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், படம் பார்த்து முடித்ததும் நண்பர் ஒருவருடன் உரையாடுகையில் அவர், 'அண்ணே, இது ஒரு தாய்லாந்து படத்திலிருந்து முழுக் காப்பியண்ணே' என்று போட்டுடைக்க, ஆர்வம் கொஞ்சம் காற்றிறங்கிப் போனது. இருந்தாலும், கதை, திரைக்கதைத் தவிர படத்திலிருந்த சில அம்சங்களைச் சின்னதாய் ஒரு பட்டியலாக:

1. படத்தில் நடித்த பலரும் மிக நன்றாக நடித்திருந்தனர். பரத் உண்மையிலேயே பிரமாதமாகச் செய்திருந்தார். ஊமையாய் இருக்கும் ஒரு வடசென்னை மைனர் தாதா உண்மையில் எப்படி நடந்து கொள்வான் என்பதற்கு எனக்கு எந்த ஒரு frame of reference-உம் இல்லையென்றாலும், அவரது கண்களும், கைகளும், முகபாவங்களும் சொல்லும் செய்திகள் மிக கச்சிதமாக பார்ப்பவருக்குப் புரியுமாறு அமைந்திருப்பதை ரசிக்க முடிகிறது. இரண்டு நாயகிகளும் (பூஜா, பத்மப்ரியா) வெறுமனே வந்து போகாமல், அர்த்தமுள்ள பாத்திரங்களை அழகாகச் செய்திருக்கிறார்கள். ஹனீபா செய்த பாத்திரம் அவருக்கென்றே தைக்கப்பட்டது.

2. ஆர்யாவும் ஓரளவுக்கு நன்றாகவே நடித்திருந்தாலும், பரத் முன்பு சோடையாகத் தான் தெரிகிறார். மிகவும் எரிச்சலூட்டியது அவரது வசன உச்சரிப்பு. கொடுக்கப்பட்ட வசனங்களே கொஞ்சம் சுமார் ரகம் தான், அதையும் இவர் ஒரு சன் டிவித்தனமான மேல்தட்டு மழலையில் பேசி இன்னமும் கெடுக்கிறார்.

3. அடுத்த படத்திலாவது பரத் பைக் ஓட்டாமல் நடிக்க வேண்டும்.

4. இசை யுவன் சங்கர் ராஜா - ஒரு பாட்டு தேவலை.

5. படத்தின் முடிவும் 'தூக்கப்பட்டதா' என்று தெரியாது. இருந்தாலும், நான் பார்த்தவற்றுள், வித்தியாசமான அதே சமயம் நேர்த்தியான முடிவினைக் கொண்ட மிகச் சில படங்களில் ஒன்று.

நிற்க.

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:


  1. இஸ்ரேல், லெபனான், ஹெஸ்பொல்லா: சென்ற வாரம் தொடங்கி, கிடுகிடுவென்று தீவிரமடைந்திருக்கும் இஸ்ரேல்-லெபனான் போர் இன்றைய செய்திகளை ஆக்கிரமிக்கிறது. தலைப்புச் சுட்டியின் கட்டுரையில் தற்போதைய நிலை குறித்த செய்திகள் இருக்கின்றன. தெற்கில் காசாவில் ஹமாஸுடனும், வடக்கில் லெபனானில் ஹெஸ்பொல்லாவுடனும் இஸ்ரேல் நடத்தும் இருமுனைப் போரின் சமீபத்திய சம்பவங்களை இந்தக் கட்டுரையில் படம் போட்டு விளக்கியிருக்கிறார்கள்.

    இஸ்ரேல் சம்பந்தப்பட்டுள்ள போர்களில் எப்பொழுதுமே முழுத் தவறு யார் பக்கம் என்று சொல்ல முடியாது. இந்த இரு போர்களில், காசாவில் நடப்பதற்குப் பெருமளவு பொறுப்பு இஸ்ரேல் என்றும், லெபனானில் நடப்பதற்குப் பெருமளவு பொறுப்பு ஹெஸ்பொல்லா என்றும் சொல்லலாம்.

    இந்த சண்டைகள் தொடங்குவதற்கு முன்பாக ஹெஸ்பொல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவுடன் எடுக்கப்பட்ட பேட்டியை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை ஒன்றும் இன்று வெளியாகி இருக்கிறது.

    அந்தக் கட்டுரையிலிருந்து:

    Nasrallah is a man of God, gun and government, a cross between Ayatollah Khomeini and Che Guevera, an Islamic populist as well as a charismatic guerrilla tactician. The black head wrap -- signifying his descent from the prophet Muhammad -- is now his trademark, and he is Lebanon's best known politician. Lines from his speeches are popular ring tones on cellphones. His face is a common computer screensaver. Wall posters, key rings and even phone cards bear his image. Taxis play his speeches instead of music.

    At 46, Nasrallah is also the most controversial leader in the Arab world, at the center of the most vicious new confrontation between Israel and its neighbors in a quarter-century. Yet he is not the prototypical militant. His career has straddled the complex line between Islamic extremist and secular politician. "He is the shrewdest leader in the Arab world," Israeli Ambassador to the United States Daniel Ayalon told me on Friday, "and the most dangerous."

  2. அமெரிக்காவின் அணுசக்தித் திட்டங்கள்: அணுமின் உற்பத்தி தொழில்நுட்பப் பரிமாற்றம் குறித்து இந்தியாவுடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அதே போன்ற ஒரு ஒப்பந்தத்தை ரஷியாவுடனும் செய்து கொள்ள அமெரிக்கா முனைந்து வருகிறது. இரண்டும் வெவ்வேறு அமெரிக்க நலன் சார்ந்த காரணங்களுக்காக என்றாலும், அணுமின் உற்பத்தித் தொழில்நுட்பத்தை அமெரிக்கா ஒரு அரசியல்/வர்த்தகத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது தெளிவாகியிருக்கிறது. தொலைநோக்குடன் பார்க்கையில் சர்வதேச அளவில் முக்கிய மற்றும் அளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தப் போகும் அணுகுமுறை இது.

    இந்தக் கருத்துப் பத்தியின் ஆசிரியர் இந்த அணுகுமுறையை வரவேற்கிறார்.

    New nuclear plants will help to reduce global warming, prevent energy shortages and -- most urgently -- curb atomic arsenals from being covertly acquired by rogue countries. That is the vision the American and Russian presidents have developed and which they hinted at in a joint statement after their bilateral summit.
    ...
    Driven by events, rather than by any grand concept of his own, Bush has correctly identified nuclear energy as an important component in reducing global warming and pollution, combating proliferation and cutting the unhealthy dependence of industrial and developing nations alike on suppliers such as Saudi Arabia and Venezuela. Bush must now show that his turn to nuclear is not simply short-term opportunism and ad hoc reaction to crisis but a well-integrated approach to a safer future.

  3. சைனாவின் கலாசாரப் புரட்சி: பங்கெடுத்தவர் சொல்லும் கதை: இது கொஞ்சம் நீளமான கட்டுரை என்றாலும், அவசியம் படிக்கப்பட வேண்டியது. 1966-ஆம் ஆண்டு முதல் 1970-ஆம் ஆண்டு வரை சைனாவில் சர்வாதிகாரி மாவோவின் தலைமையில் நடந்த கொடுங்கோல் ஆட்சியையும், கலாசாரப் புரட்சி என்ற பெயரில் அது நிகழ்த்திய நாடு தழுவிய வன்முறையையும் அதில் படைவீரராகப் பங்கெடுத்த ஒருவர் ஆவணப்படுத்துகிறார். அதே மனிதர் இன்றைய சைனாவில் ஒரு தொழிலதிபராக இருக்கிறார். அவரது வாழ்க்கைப் பயணக்கதையில் ஒரு நாட்டின் வரலாற்றுப் பயணக்கதை அடங்கியிருக்கிறது.

    Mao launched what became known as the Cultural Revolution as a way to regain power in the wake of the disastrous Great Leap Forward, his economic program of the late 1950s/early '60s, which had brought China to the verge of collapse.
    ...
    Nationwide, during the Great Leap Forward more than 30 million perished of starvation. Zhou and his family survived on weeds, seeds and the runny gruel served at the communal canteen. Whenever they sat down to eat, Zhou recalls, he would cry at the sight of the paltry meal before him.
    ...
    At 15, Zhou was given a group of 11 people on whom to single-handedly undertake "thought work," a euphemism for torture and humiliation. One of those on the list was Big Mama, who, while not his biological mother, was the woman who had raised him as her son. Zhou took up the task of denouncing his mother without the slightest hesitation. Under the watchful eye of his revolutionary elders, Zhou forced her to spew a Maoist catechism that neither of them quite understood. "The party is always correct. Long live the Dictatorship of the Proletariat. Long live Chairman Mao."



மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

5 Comments:

Blogger Boston Bala said...

கில்லி - Gilli » Pattiyal : blatant copy ? - Pradeep

July 16, 2006 1:46 PM  
Blogger Srikanth Meenakshi said...

BB,

நண்பர் சொன்ன பிறகு நினைவுக்கு வந்தது...ஹி.ஹி..

:-)

நன்றி,

ஸ்ரீகாந்த்

July 16, 2006 3:22 PM  
Blogger வஜ்ரா said...

எப்பவும் நூல்நயம்/இதழியல் பகுதியில் வரும் சண்டே போஸ்ட், அரசிய/சமூகம் பகுதியில் இடம் மாற்றம் பெற்றது ஏனோ?


இஸ்ரேல், லெபனான், ஹெஸ்பொல்லா:

இஸ்ரேல் பிரச்சனை பற்றி ஒரு "ஸயனிஸ்ட்" ஆன நான் என்ன சொல்வேன் என்பது உலகறிந்த உண்மை? :D

சைனாவின் கலாசாரப் புரட்சி: பங்கெடுத்தவர் சொல்லும் கதை:

மாவோ போன்ற தீவிரவாதிகளை ஹீரோவாக்கிய, பீகிங்கில் மழை பெய்தால் தில்லியில் குடை பிடிக்கும் கூஜாக்களை அரியணை அமர்த்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவின் அணுசக்தித் திட்டங்கள்:
..
curb atomic arsenals from being covertly acquired by rogue countries.
..

இவ்வளாவு பேசும் அமேரிக்கர்கள், இன்னும் அந்த முஷரப்புடன் முதலிறவு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களே...!!

பாகிஸ்தான் பற்றி அதே ஜிம் ஹோக்லண்ட் வாஷிங்டன் போஸ்டில் 2002

July 16, 2006 4:30 PM  
Blogger Koothu said...

4. இசை யுவன் சங்கர் ராஜா - ஒரு பாட்டு தேவலை
Nice review! I totally disagree with this observation though. How many times did you listen to the songs of Pattiyal? If it was just once while watching the movie, I suggest you continue to listen to them. They'd grow on you and you'd start liking the songs more than the movie! Pattiyal is a great album from Yuvan.

July 16, 2006 5:13 PM  
Blogger Srikanth Meenakshi said...

கூத்து, படத்தோடு சேர்த்து ஒரு முறை கேட்டது தான். மீண்டும் கேட்டுப் பார்க்கிறேன்.

சங்கர்,

//நூல்நயம்/அரசியல்//

ஒரு புடலங்காய் காரணமும் கிடையாது. :-) முன்பும் ஒரு முறை இப்படிச் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். எங்கு தோன்றுகிறதோ அங்கு ஒரு குத்து, அவ்வளவுதான்.

நன்றி,

ஸ்ரீகாந்த்

July 16, 2006 5:29 PM  

Post a Comment

<< Home