<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Wednesday, March 15, 2006

நலம்தானா?

அலுவலகம் ஆண்டுதோறும் அளிக்கும் இலவச உடல்நலப் பரிசோதனையில் கலந்து கொண்டேன். ஒரு குடம் ரத்தத்தை உருவிக் கொண்டு ஊருக்குப் போய் லெட்டர் போடுகிறோம் என்றார்கள். போட்டார்கள். கோடை விடுமுறையில் வீடு வந்து சேரும் பரிட்சை முடிவைத் திறப்பது போல் திறந்தேன். கொலஸ்ட்ரால் மொத்த எண்ணிக்கை பரவாயில்லை, கெட்ட கொலஸ்ட்ராலும் கட்டுக்குள் தான் இருந்தது. முழுப் பட்டியலில் இருந்த எழுபத்தி இரண்டு சோதனை முடிவுகளில் எழுபத்தி ஒன்று ஒகே. ஒன்றே ஒன்று - ட்ரைக்ளிசரைட் (Triglyceride) என்ற ஒரு துஷ்ட பதார்த்தம் மட்டும் - 150 என்ற அளவில் இருக்க வேண்டியது - 538-இல் இருந்தது. கொஞம் பக்கென்றது. மறு நாள் அலுவலகத்தில் ஒரு சக தமிழரிடம் சொன்ன போது சிரித்தார். இது எல்லா இந்தியர்களுக்கும் இருப்பதுதான், அதுவும் தென்னிந்தியர்களுக்கு என்று சொன்னார். 'சோத்தைக் குறை' என்றார். 'எக்சர்ஸைஸ் பண்ணு' என்றார். 'சரி' என்றேன்.

****

வசந்தம் வருகிறது (அடுத்த வாரம்). பூக்கள் மலரத் துடித்துக் கொண்டிருக்கின்றன. கூடவே மகரந்தத் துகள்களும் வரும். சுவாசிக்கும் காற்றின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் ஆயிரக்கணக்கில் ஆக்கிரமித்து கண், மூக்கு, வாய் என எல்லா வாசல் வழியாகவும் அழையா விருந்தாளிகளாக வந்து அழிச்சாட்டியம் செய்யும். Allegra என்ற ஒரு மருந்துக்குத் தான் கட்டுப்படும். அதற்கு மருத்துவர் சீட்டு வேண்டும்.


எனது மருத்துவர் டாக்டர் கூப்பர் நல்ல மனிதர். நிறைய இந்திய வாடிக்கையாளர்கள். ஒவ்வொருவரிடமும் இந்தியாவைப் பற்றி கொஞ்சம் விஷயம் தெரிந்து கொண்டு மற்றவர்களிடம் ஜல்லி அடிப்பார். போகும் போது எதற்கும் இருக்கட்டும் என்று எனது அலுவலகப் பரிசோதனைத் தகவலை எடுத்துச் சென்றேன்.

டாக்டரைப் பார்த்ததும் அதை அப்பாவிடம் ப்ராக்ரஸ் ரிபோர்ட்டை நீட்டுவது போல் நீட்டினேன். அவர் பட்டியலைப் பார்த்தார்; இரண்டாம் பக்கத்தில் இருந்த பெரிய எண்ணைப் பார்த்ததும் 'ஹா!" என்றார். என்னை நிமிரிந்து பார்த்தார். மறுபடியும் தாளைப் பார்த்தார், 'ஹா!' என்றார், என்னைப் பார்த்தார். மறுபடியும் தாள், 'ஹா!', நான்.

'போதுமா?' என்றேன்.

மறுபடியும் தாள், 'ஹா!' , நான்.

'சரி போதும்' என்றார்.

'என்னை பயமுறுத்துகிறீர்கள்' என்றேன்.

'நல்லது, அது தான் என் நோக்கம்' என்றார்.

இது ரொம்ப அதிகம், மருந்து கொடுக்கலாமா என்று யோசிக்கிறேன் என்றார். இந்தியர்களுக்கு இதெல்லாம் சகஜம் தானே என்றேன். இந்தியர்களின் மாரடைப்பு புள்ளி விவரம் தெரியுமா என்றார். தெரியாது என்றேன். எனக்கும் தெரியாது என்றார்.

ஒரு இரண்டு மாதம் அவகாசம் கொடுக்கிறேன், எண்ணையைக் குறை, எக்சர்ஸைஸ் பண்ணு, இல்லாவிட்டால் ஒரு ஸ்டாடினில் உட்கார வைத்து விடுவேன் என்றார். 'சரி' என்றேன்.

****

அல்லெக்ரா மருந்து வேண்டும் என்றேன். அதற்கென்ன கொடுத்தால் போச்சு என்றார். எந்த மருந்துக் கடை போகப் போகிறாய் என்றார். இதை எதற்குக் கேட்கிறார் என்று யோசித்தவாறு இன்ன கடை என்று சொன்னேன். ஒரு கணினியைத் திறந்து அல்லெக்ராவில் ஒரு சுட்டியைத் தட்டி, எனது மருந்துக் கடையில் ஒரு தட்டு தட்டினார். மருந்துச் சீட்டை உன் கடைக்கு அனுப்பி விட்டேன், சாயந்திரம் வீடு போகும் வழியில் கடைக்குப் போனால் கொடுத்து விடுவார்கள் என்றார். தாளை எடுத்துக் கொண்டு கடையில் கொடுத்து ஒரு மணி நேரம் காத்திருந்து மருந்தைப் பொறுக்கிக் கொள்வதெல்லாம் தேவையில்லை! 'புது சிஸ்டம், மூணு மாசமா இருக்கு' என்றார்.

****

'இன்னொன்று பார்க்கிறாயா' என்றார், பெருமையாக. என்ன என்றேன். ஒரு சுட்டியைத் தட்டி விட்டு, ஒரு மைக்கை எடுத்து என்னுடைய இந்த வருகை பற்றியும் எனது உடல் நலம் பற்றியும் குறிப்புகளைப் பேசினார். அவை கணினியில் நோட்ஸாகப் பதிவாகின. டாக்டருக்குப் பெருமை தாங்கவில்லை. நான் அவரைப் பார்த்து 'இதனால் இந்தியாவில் எத்தனை பேருக்கு வேலை போயிருக்கும் என்று தெரியுமா?' என்றேன். அவர் கபகபவென்று சிரித்து விட்டு 'அவர்களுக்கு வேலை கிடைத்தது இண்டர்நெட் என்ற தொழில் நுட்பத்தால், அவர்களுக்கு வேலை போனது வாய்ஸ் ரெகக்னிஷன் என்ற தொழில் நுட்பத்தால்' என்றார். 'What one technology giveth, another technology taketh away' என்றார்.

****

கிளம்பு முன் நினைவுபடுத்தினார். 'இரண்டு மாதத்தில் மீண்டும் வா' என்றார். 'எக்சர்ஸைஸ் பண்ணு' என்றார். 'சரி' என்றேன்.


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

6 Comments:

Blogger துளசி கோபால் said...

இனிமே தினமும் சப்பாத்தியா?( நெய் போட்டு?)

March 15, 2006 9:43 PM  
Blogger Boston Bala said...

538 is too too much! (என்னோட டாக்டர் 220-க்கே புருவம் உயர்த்தினார். தினசரி ஒரு கோப்பை வைன் பருகச் சொன்னார்; சிரமேற்கொண்டு உட்கொண்டு வருகிறேன்... நல்ல பலன் :D) செல்ஃப் ப்ரமோஷன்:

உடல் பருமன்

March 15, 2006 11:34 PM  
Blogger Srikanth Meenakshi said...

துளசி, நக்கல்தானே... :-)

பாலா, thanks for making me feel better...NOT! அது சரி, உங்கள் டாக்டர் ஜாலி பேர்வழியாக இருக்கிறாரே...triglyceride-க்கு வைன் என்றால், cholesterol கூடிப் போனால் என்ன தருவார்? Jim Beam-ஆ? ;-)

March 16, 2006 7:31 AM  
Blogger Srikanth Meenakshi said...

Thanks, Babu, now, that's the spirit I am looking for...:-)

March 16, 2006 4:03 PM  
Blogger ரங்கா - Ranga said...

இந்த ட்ரைகிளசரைட் காமெடி என்க்கு கொஞ்சம் அன்யோன்யமாய் தெரிந்த அத்தனை அமெரிக்க இந்திய (சிகப்பிந்திய அல்ல) இந்தியர்களுக்கும் இருக்கிறது - எனக்கு முதலில் பீனிக்ஸில் ஒரு ஜெர்மன் டாக்டர் பார்த்துவிட்டு, '378 எல்லாம் அதிகம் தான்; கொஞ்சம் உடற்பயிற்சி செய். நான் செய்வது கிடையாது; ஆகையால் உன்னை அதிகம் சொல்ல மாட்டேன். முடிந்தால் எண்ணையில் பொறித்து உண்பதைக் குறை. இப்போதே மாத்திரை என்றெல்லாம் ஆரம்பிக்காதே. நிதானமான அளவோடு சாப்பிடு; முடிந்தால் - உன் வீட்டில் அனுமதித்தால், தினம் ஒரே ஒரு கிளாஸ் ரெட் வைன் சாப்பிடு' என்றார். வீட்டில் அனுமதி கிடைக்கவில்லையாதலால் வைன் எல்லாம் இல்லை. உடற்பயிற்சி இல்லை; கொஞ்சம் எண்ணையைக் குறைத்தாயிற்று. மூன்று வேளையும் அரிசிச் சோறு என்பதிலிருந்து ஒரு வேளை மட்டும் (ஆனால் அந்த வேளை அளவு அதிகம்:-); வார இறுதியில் இரண்டு வேளை) என்றும் மாற்றியபின் இப்போது 170 - 180 என்று இருக்கிறது.

March 20, 2006 11:48 AM  
Blogger Srikanth Meenakshi said...

ரங்கா, நம்பிக்கை அளித்ததற்கு நன்றி :-)

March 20, 2006 1:11 PM  

Post a Comment

<< Home