<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

Sunday, March 05, 2006

சண்டே போஸ்ட் - 4

இன்றைய வாஷிங்டன் போஸ்டிலிருந்து சில சுவையான கட்டுரைகள்:

1. ஜனநாயகத்தை முன்வைத்து: தலையங்கம் - ஈராக்கில் ஜனநாயக அரசியலமைப்பை நிறுவுவதில் உள்ள சிக்கல்கள், மற்றும் பாலஸ்தீனியத்தில் ஹமாஸ் பெற்ற வெற்றி ஆகியவை, ஜனநாயகத்தின் கொடிதாங்கியான அமெரிக்காவிலேயே அது குறித்த கேள்விகளை எழுப்பி இருக்கிறது. எந்த சமுதாயத்தில் எந்த சூழ்நிலையில், எத்தகைய காலகட்டத்தில் ஜனநாயகம் தழைக்கும் என்று புதிய விதிகளும் கோட்பாடுகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. வாஷிங்டன் போஸ்ட் இன்றைய நீளமான தலையங்கத்தில் இக்கேள்விகளை ஆராய்ந்து, அதில் உள்ள நியாயங்களை அங்கீகரித்து, பதில் கேள்விகளை முன் வைக்கிறது. அதன் கருத்தின் சாராம்சம், சர்ச்சிலை நினைவுபடுத்துகிறது - “It has been said that democracy is the worst form of government except all the others that have been tried.”

2. பாட் டில்மனின் மரணத்தில் கிரிமினல் குற்றமா? - பாட் டில்மன் என்பவர் அமெரிக்காவில் பல மில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த விளையாட்டு வீரர். 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிற்காகப் போராட வேண்டும் என்ற தேச உணர்வுடன், தனது விளையாட்டுத் தொழிலை தியாகம் செய்து விட்டு, அமெரிக்கப் படையில் சேர்ந்து ஆஃப்கானிஸ்தான் சென்றவர். இரு வருடங்களுக்கு முன்பு அவர் போர்க்களத்தில் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. ஆரம்பத்தில், இது வீர மரணம் - அதாவது, எதிரியோடு போரிட்டு, அப்போராட்டத்தில் எதிரியின் கையால் மரணம் - என்று சொல்லப்பட்டது. அச்சமயத்தில் இது அமெரிக்காவில் ஒரு பெரும் தேசாபிமான உணர்வு ஏற்படுத்தியது. சில வாரங்களுக்குப் பிறகு, 'இலலை இல்லை, எதிரி கையால் சாகவில்லை, சக அமெரிக்க வீரர் ஒருவர் சுட்டதால் ஏற்பட்ட விபத்து' என்று சொல்லப்பட்டது. இப்பொழுது அப்படி அசந்தர்ப்பமாய் சுட்ட வீரர்கள் சரியான பாதுகாப்பு முறைகளைக் கையாளவில்லை, அதனால் இதில் கிரிமினல் குற்றம் (negligent homicide) இருக்கலாம் என்று சொல்லி, மீண்டும் இதை ஆராய இருக்கிறார்கள்.

"A defense official said that it will probably focus on potential charges of negligent homicide, which means investigators will try to determine whether soldiers fired recklessly without intending to kill their fellow soldier....the first Army investigator who looked into the shooting discovered within days of the incident that Tillman had been killed by fellow Rangers, in what he concluded was an act of "gross negligence," according to documents obtained by The Washington Post. Soldiers admitted emptying their high-powered weapons at an Afghan Militia Force soldier working with the Rangers and then on Tillman's position without knowing what exactly was in their sights. The Afghan soldier was also killed, while a U.S. soldier hiding near Tillman, behind a rock, survived.

இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. சக அமெரிக்க வீரர் மீதே இப்படி கவனமின்றி, தாறுமாறாக சுட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கப் படை ஆஃப்கானியர்கள் (ஈராக்கியர்கள்) மீது எத்தகைய "கவனத்தோடு" செயல்படுகிறார்கள் என்றும் தெரியவில்லை.

3. சில வார்த்தை சுயசரிதை - வாஷிங்டன் போஸ்டில் வாராவாரம் வரும் ஒரு தொடர் - "Life in short - Autobiography as haiku" என்ற பகுதி. நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் தமது வாழ்க்கையிலிருந்து ஒரு விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும். ஒவ்வொரு வாரமும் இரண்டு கட்டுரைகளைப் பிரசுரிப்பார்கள் (சில வருடங்களுக்கு முன்னால் நான் எழுதியதும் இதில் வெளிவந்தது). இன்றைய கட்டுரைகள் இரண்டும் நன்றாக இருக்கின்றன - குறிப்பாக இரண்டாவது.

4.ஏன் வலைப்பதிகிறோம் - வலைப்பதிவாளர்களிடம் சென்ற வாரம் "ஏன் வலைப்பதிகிறீர்கள்" என்று கேட்ட கேள்விக்கு வந்த பதில்களைத் தொகுத்தளிக்கிறார். கட்டுரையிலிருந்து, ஒரு பதில்:

"I blog for the same reason lots of 20-somethings blog -- if I didn't blog, I wouldn't have any friends. Blogs may be the most complex pen-pal system ever created. . . . As sad or self-indulgent as it may seem to an older generation (of mostly Luddites), the Web log is just one facet of a new kind of community and a changing world. My Web log is the family newsletter, the virtual refrigerator door, the rotary club meeting, the office water cooler, the love letter and the town newspaper."

5.ஆஸ்கர் இரவு: இன்று ஆஸ்கர் இரவு. அரங்கத்துக்குள் நடக்கும் கூத்துக்களுக்கு இணையாக அரங்கத்துக்கு வெளியேவும் நடக்கின்றன. நட்சத்திரங்கள் வந்திறங்கி, சிவப்புக் கம்பளத்தில் நடந்து உள்ளே நுழைந்து முடிக்கும் வரை நடக்கும் படாடோபங்களை படமாக வரைந்து பாகங்களைக் குறித்திருக்கிறார்கள்.


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

0 Comments:

Post a Comment

<< Home