<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, February 19, 2006

சண்டே போஸ்ட் - 2

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையிலிருந்து சுவாரசியமான சில கட்டுரைகள்:

1. சைனாவில் இணையம், ஊடகம், தணிக்கை - இன்றைய சைனாவில் இணையப் போக்குவரத்தின் தணிக்கை கடுமை கூடியிருப்பது முதல் பக்கச் செய்தி ஆகியிருக்கிறது. சைனாவில் இணையத்தில் எந்தத் தளங்கள், எந்தப் பக்கங்கள் படிக்கப் படலாம் என்பது தொடர்ந்து, தீவிரமாகக் கட்டுப்படுத்தபடுகிறது(பார்க்க படம்).

(யோசித்துப் பார்த்தால், நாம் வேண்டாத மின்னஞ்சல்களைத்(spam) தவிர்க்கப் பயன்படுத்தும் bayesian filtering போன்ற தொழில் நுட்பங்கள், சைனா போன்ற நாடுகளின் தணிக்கை முயற்சிகளுக்கும் பயன்படுகின்றன. இந்தத் யுக்திகள் வளர வளர, அவர்களது செயல் திறனும் வளர்கிறது). இந்த முக்கியமான கருத்துச் சுதந்திர விஷயத்தில் சைனாவின் போக்கைக் கண்டித்து ஹிந்துவில் சீக்கிரமே ஒரு தலையங்கம் வரும் என்று எதிர்பார்க்கலாம் (just kidding).

2. 'கார்ட்டூன்கள் வெளியிட்டது சரியே' - டென்மார்க் பத்திரிக்கையாசிரியர் - உலகெங்கும் இஸ்லாமியர்களைப் போராட்டத்தில் ஈடுபட வைத்த முகமது நபி கார்ட்டூன்களை வெளியிட்டது சரியான முடிவுதான் என்று டென்மார்க் பத்திரிக்கையான ஹைலாண்ட் போஸ்டன்ஸின் ஆசிரியர் ஃப்ளெமிங் ரோஸ் வாதிடுகிறார். இக்கட்டுரையைப் படித்த பின்னும், அவற்றை வெளியிட்டது தவறு என்று தான் நான் நினைக்கிறேன். கட்டுரையிலிருந்து:

"I agree that the freedom to publish things doesn't mean you publish everything. Jyllands-Posten would not publish pornographic images or graphic details of dead bodies; swear words rarely make it into our pages. So we are not fundamentalists in our support for freedom of expression....The idea wasn't to provoke gratuitously -- and we certainly didn't intend to trigger violent demonstrations throughout the Muslim world. Our goal was simply to push back self-imposed limits on expression that seemed to be closing in tighter."

3. புதிய விற்பனை யுத்திகள் - பொருட்களின், குறிப்பாக உணவுப் பொருட்களின், விளம்பர, விற்பனை யுத்திகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன. Literally. இப்பொழுது கூட இன்னொன்றும் சேர்ந்து கொண்டிருக்கிறது. வடிவம், வண்ணம் இவை தவிர இப்பொழுது வாசத்தையும் வைத்து எப்படி வாடிக்கையாளர்களைக் கவர்வது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்:

"Soon, just strolling the aisles at a grocery, drug or big-box store could cause sensory overload. Manufacturers are spending more to design packages that blink, beep, yell and waft scents at shoppers. Though some companies have created paper-thin, flexible video displays and tiny speakers, aroma seems to be the biggest payoff in packaging, thanks to its powerful link to memory and emotion."

நுகர்வோரை, நுகர்வோராக மாற்றும் என்று நம்புகிறார்கள் போலும் :-)

4. ஒரு அமெரிக்கப் பெண்ணின் இந்தியப் பயணக்கதை - I'm a sucker for stories of western tourists' experiences in India. இந்தக் கட்டுரை ஒரு பயணக்குழுவில் சேர்ந்து பயணித்த ஒரு பெண்ணின் கதையைச் சுவையாகச் சொல்கிறது. இந்தியாவைப் பற்றிப் பேசும் அளவிற்கு, பயணக்குழுக்களைப் பற்றியும் பேசுகிறது.

5. கொந்துதல் (hacking), அடையாளம் திருடுதல் ஆகியவை பற்றி சற்று நீளமான ஒரு கட்டுரை - கரப்பான்பூச்சி போல் எத்தனை அடித்தாலும் சாகாது, துள்ளித் துள்ளி வந்து உங்கள் கணினியின் திரையை ஆக்கிரமிக்கும் விளம்பரங்கள் எப்படி உருவாகுகின்றன? 'எங்கிருந்து வருகுவதோ, இவ்விளம்பரங்கள் யாவர் செய்குவதோ?' என்று நீங்கள் யோசித்தால், இக்கட்டுரை விடை தருகிறது. முக்கியமாக இத்தகைய ஒரு கொந்தனைக் கண்டுபிடித்து, பேட்டி கண்டு, அந்த நிழலுலகம் எப்படிச் செயல்படுகிறது என்று விளக்குகிறது. இங்கேயும் நடுத்தெருவில் கேரம் போர்ட் ஆடுவார்களா என்று விசாரிக்க வேண்டும். :-)

6. வாஷிங்டனில் ஒரு புதிய இந்திய உணவகம் பற்றி மதிப்பீடு - ரசிகா என்னும் ஒரு புதிய இந்திய உணவகம் பற்றி புரியாத வார்த்தைகளில் ஒரு மதிப்பீடு. சொதப்பல் மேற்கோள் - "While the griddle and the barbecue are hyped at Rasika -- which means "flavors" in Sanskrit -- that shouldn't stop you from venturing into other territory." அமெரிக்கன் ஆங்கிலம் போல அமெரிக்க சமஸ்கிருதமும் இருக்கிறது போலும்!

வாசிங்க, வாசிங்க, வாசிச்சுக்கிட்டே இருங்க!


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger Boston Bala said...

Thanks Srikanth. I look fwd to this consolidated picks every week now.

---நடுத்தெருவில் கேரம் போர்ட் ---

U meant online Doom games? :P ;-)

February 19, 2006 2:35 PM  
Blogger Srikanth Meenakshi said...

//I look fwd to this consolidated picks every week now.//

நன்றி. அது தான் உத்தேசம், பார்ப்போம்.

//U meant online Doom games?//

There you go! :-)

February 19, 2006 2:48 PM  
Blogger GeronimoThrust said...

Annae,

If you haven't tried Rasika yet, I would recommend that to be included in your next Dining-Out plans..

Boy! I fell in love with their food, ambience, etc, etc..Yet another fan that can go on singing his ode to that Coconut Chutney served at Rasika..If you know that or not, the chef, Mr. Sundaram, is a Mumbai Tamilan (Doesn't speak Tamil though)..He sure has a deft handle of things and knows how to work the magic..A must Try..But be prepared to deal with a hit on your wallet as its a bit on the expensive side..But it would be WELL WORTH IT!
Andy

February 21, 2006 6:44 PM  

Post a Comment

<< Home