அஞ்சு ப்ளேடும் அமேசான் டீயும்
இரண்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சென்ற வாரம் நான் முதல் முதலாக உபயோகித்த இரு பொருட்களைப் பற்றிய பதிவு இது.
1. ஜில்லெட் ஃப்யூஷன் -
முதலில் கத்தி இருந்தது. முதலில் தாடி இருந்தது. தாடி போச்சு கத்தி வந்தது டும்டும்டும்டும், கத்தி போச்சு ப்ளேடு வந்தது டும்டும்டும்டும். பிறகு ஒரு ப்ளேடு இரண்டாகியது; பின் இரண்டு ப்ளேடுகள் மூன்றாகி, மூன்று நான்காகி, இப்போது - ஆச்சரியம்! - நான்கு ஐந்தாகியிருக்கிறது. ஜில்லெட் ஃப்யூஷன் என்று நாமகரணம் பெற்ற இந்த உபகரணத்தில் ஒரு குச்சியின் உச்சியில் கஷ்டப்பட்டு ஐந்து மெல்லிய ப்ளேடுகளைத் திணித்து அதுவும் போதாதென்று அவற்றின் பின்னே இலவச இணைப்பாக இன்னொரு ப்ளேடையும் (trimmer!) வைத்திருக்கிறார்கள். சென்ற வாரம் காஸ்கோ சென்று இருபது டாலர் தோராயத்திற்கு ஐந்து ப்ளேடு குச்சிகள் வாங்கி வந்தேன். ஒரு குச்சி = ஐந்து ப்ளேடு, ஐந்து குச்சி = இருபத்தைந்து ப்ளேடுகள்!
மறு நாள் காலை சனிக்கிழமை என்றும் பார்க்காமல், மனைவியின் சந்தேகம் கலந்த ஆச்சரியத்தையும் சட்டை செய்யாமல், சவரம் பண்ணத் துவங்கினேன். மதமதவென்று ஜெல்லை அப்பிக் கொண்டு, ப்ளேடை உட்கார வைத்து ஒரு இழு இழுத்தேன் - இல்லை, இழுக்க முயன்றேன். ஆனால், ஐந்து ப்ளேடுகளில் ஒன்று - எது என்று சரியாகத் தெரியவில்லை - வசமாக ஒரு தாடி முடிக்கும் தோலுக்கும் இடையே மாட்டிக் கொண்டு தோட்டத்தில் களை பிடுங்குவது போல் 'உனக்காச்சு, எனக்காச்சு, விட்டேனா பார்' என்று வெளியே வர மறுத்தது. சாதாரண ப்ளேடாய் இருந்தால் ரத்த வெட்டோடு முடியும், இதில் தோலே வழண்டு விடும் போலிருக்கிறதே என்று மெல்ல ரிவர்ஸ் கியர் போட்டு ப்ளேடை மீட்டெடுத்தேன். அதற்குப் பிறகு பாபா ரஜினி போல் 'பட்டும் படாமலே தொட்டும் தொடாமலே' சவரம் செய்து முடித்தேன். எனக்குத் தெரிந்த வரை ஜில்லெட் இந்த அதி நவீன ப்ளேட் கொத்தின் மூலம் ஒரு புதிய சவர முறையை அறிமுகம் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் - 'ஜெண்டில்மேன், மற்ற ப்ளேடுகளெல்லாம் முடியை மட்டுமே பிடுங்கும், நாங்கள் முடி வளரக் காரணமாயிருக்கும் தோலையே உருவி விடுவோம்' என்று சொல்லி விளம்பரப்படுத்தலாம்.
எனக்குத் தெரிந்து இந்த ப்ளேடில் ஒரு சௌகரியம் தான் இருக்கிறது. புதுப்பேட்டை ரவுடிகள் ப்ளேடை உடைத்து வாயில் போட்டுக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த ப்ளேடை வாங்கினால், அவர்களுக்கு ஒரு வேலை மிச்சம் - ஏற்கனவே அழகாக நறுக்கி வைத்திருக்கிறார்கள்; ஹார்லிக்ஸ் சிறுவன் சொல்வது போல், 'அப்படியே சாப்பிடலாம்'!
ப்ளேடு தொழில்நுட்பம் இதற்குப் பிறகு எங்கே போகும் என்று யூகிப்பது கடினமில்லை - வேறு என்ன, ஆறு ப்ளேடுதான். ஆனால் எங்கே முடியும் இது? Nano blade, anyone? (மனைவியின் குரல்: "wax-ஐ ஊத்தி ஒரு இழு இழுத்தாத் தெரியும்..." Ouch!)
2. 'சே' குடித்த தேநீர்
அகஸ்மாத்தாய் USA Today'இல் படித்த கட்டுரை ஒன்றில் 'Motorcycle diaries' படத்தில் சே குவேரா குடிப்பதாக வரும் தென்னமெரிக்கத் தேநீர் பானம் பற்றி எழுதப்பட்டிருந்தது. அப்படத்தினால் வட அமெரிக்காவில் யெர்பா மாட்டே (Yerba Mate) என்ற அத்தேநீர் பிரபலமாகி, அதைத் தயாரிக்கும் நிறுவனம் (Guayaki) பெரிதாக வளர்ந்து வருவதில் இருக்கும் முரண்நகை குறித்து பொறுமை உள்ளவர்கள் யோசிக்கலாம். நான் இதைப் போன வாரம் Wegmans சென்று வாங்கி வந்தேன் (கடைச் சிப்பந்தி - "You are like the third person that asked me about this today").
எனக்கு எப்பொழுதுமே காப்பி குடிக்கும் வழக்கம் இருந்ததில்லை ("dude, are you sure you're from Madras?"). தேநீர் குடிக்க ஆரம்பித்ததும் சில வருடங்களுக்கு முன்புதான். ஆனால், குடிக்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே, தேநீரின் சுவையை விட, அதைக் குடித்ததும் வரும் உற்சாகச்சுரப்பிற்கு உடலும் மூளையும் பழக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு, புது வகையான தேநீர், புதிய சக்தி பானங்கள் என்றால், சும்மா ஒரு கை பார்க்கலாமே என்று தோன்றத் துவங்கியது. சமீபத்தில் ஸ்லேட் பத்திரிக்கையின் ஒரு கட்டுரையில் பிரபலமாய் இருக்கும் விதவித வினோத சக்தி பானங்களில் "Rockstar energy cola" என்ற பானத்தின் மகத்துவத்தை ரொம்பவும் சிலாகித்திருந்தார்கள். சரியென்று ஒரு நாள் மாலை ஒரு புட்டி வாங்கி 16 அவுன்சை கடகடவென்று விழுங்கி வைத்தேன். அவ்வளவு தான், அடுத்த இரண்டு மணிநேரம் தெறித்து விழுந்த ஸ்ப்ரிங் மாதிரி குதித்துக் கொண்டிருந்தேன். நட, ஓடு, நிற்காதே, உட்காராதே!!, பேசு, பேசு, வேகமாய்ப் பேசு, நடந்து கொண்டே பேசு - உடம்பின் ஒவ்வொரு பாகமும் தனியாய் அஜெண்டா போட்டுக் கொண்டு சுயேச்சையாய் என்ன என்னவோ செய்து கொண்டிருந்தன - கட கடவென்று. ஆனால், மூன்றாவது மணிநேரம் ஒரு தலைவலி வந்தது பாருங்கள்...unbelievable...அப்படியே தலை வீங்கி வெடித்து விடும் போல...anyways, that was the end of that.
ஆதலால், இந்த புதிய பானத்தை கொஞ்சம் சந்தேகோபாஸ்தமாகத் தான் அணுகினேன். சாதாரணமாக தேநீர் போடுவது போல் (பாலில்லாமல், கொதி நீர், இரண்டு ஸ்பூன் தேன்) போட்டுப் பருகினேன். வாசத்தில் கொஞ்சம் பச்சைத் தேநீர் சாயல் - ஒரு வித மண்ணும் மரமும் கலந்த வாசம் - ஆனால் பச்சைத் தேநீர் போல கடுமையாக இல்லை, கொஞ்சம் மிதமாக, பழக்கமான தேநீரின் வாசத்தை முழுதும் மறைக்காத விதத்தில். குடித்து முடித்ததும் உடல் முழுவதும் துடைத்து விட்டார்ப் போல ஒரு அப்பழுக்கில்லாத உற்சாகம் பரவியது. 'மதி தன்னை மிகத் தெளிவு செய்தது' போல் இருந்தது. இதைத் தினம் நாலு வேளை குடிப்பவர்கள் புரட்சி பண்ணாவிட்டால் தான் ஆச்சரியம் என்று தோன்றியது.
இத்தேநீரை, அமேசான் காடுகளின் ஒரு ஓரத்தில் சுற்றுச் சூழல் கெடாத வண்ணம் தயாரிப்பதாக குவாயாகி நிறுவனம் சொல்கிறது. இத்தேநீரைப் பல கஃபீன் அளவுகளில் பருக முடியும் என்பதால், உடல் நலத்துக்குத் தீங்கான காப்பிக்கு மாற்றாக அருந்தப்படக்கூடிய பானம் என்றும், இத்தேநீரில் இருக்கும் Anti-oxidant மற்றும் விட்டமின் சத்துகள் ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது என்றும் சொல்கிறது. தென்னமெரிக்காவில் இப்பானம் பருகப்படுவது எப்படி, இதைச் சார்ந்த சமூகப் பழக்கங்கள் என்னென்ன என்பன பற்றியும் செய்திகள் உள்ளன. பக்கத்தில் உள்ள படத்தைப் போல ஒரு குடுவையில் குடிப்பதுதான் சம்பிரதாயமாம்.
ஆகையால், இந்த இரண்டு பொருட்களில் ஒன்றுக்கு , மற்றொன்றிற்கு .
தமிழ்ப்பதிவுகள்

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
2 Comments:
கடந்த ஞாயிறு அன்று வோல்மார்ட் போக நேர்ந்த போது என் பிள்ளை இதே புது சவர பிளேடை வாங்கி கொள்ள சொல்லி வற்புறுத்தினார். இருக்கற 3 சரிவு வகை பிளேடே போதும் என்று இருந்து விட்டேன்.
தேநீர் பற்றிய தகவலுக்கு நன்றி. பலவகை தேநீர்களை குடித்து பார்த்தாயிற்று. இதையும் வாங்கி பார்க்க வேண்டும்.
i will try new varieties in Tea
but in shaving no trials and errors .I am more than
happy with Barun.
Post a Comment
<< Home