<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, March 12, 2006

சண்டே போஸ்ட் - 5

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:

1. மிலோசவிச் மரணம் - வாழ்க்கைக் குறிப்பு: பல சக கொடுங்கோலர்களைப் போல அகாலமாக, மர்மமான முறையில் மரணமுற்ற முன்னாள் செர்பியத் தலைவர் மிலோசவிச்சைப் பற்றி ஒரு வாழ்க்கைக் குறிப்பு. சென்ற தசாப்தத்தில் முன்னாள் யுகோஸ்லாவிய மாநிலங்களுக்கிடையே நிகழ்ந்த இன/மத/நிலப் போர்களின் போது நடந்த அராஜக வன்முறைகளுக்கு மிலோசவிச் மட்டுமே பொறுப்பில்லை என்றாலும், அக்காலத்தின் கொடுங்கோன்மையையும் எதேச்சாதிகாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த வரலாற்றிற்கு மிலோசவிச் பயன்படுவார் என்று தோன்றுகிறது. கட்டுரையின் தொடக்கம்:

"Slobodan Milosevic rode nationalist pride and rage to power and led his Serb compatriots into four ethnic wars.

He lost them all."


2. ஈராக்கின் எதிர்காலம்: ஈராக் போர் துவங்கி மூன்று - மூன்று! - வருடங்கள் ஆகின்றன. ஆட்சியை மாற்றுவோம், ஆயுதங்களை ஒழிப்போம் என்று புறப்பட்டுப் போனவர்கள், போனவர்கள்தாம். இம்மூன்று வருடங்களில் போஸ்ட், டைம்ஸ் பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள் வசதியான நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு எழுதிய தலையங்கங்கள், ஈராக்கின் எதிர்காலத்தைப் பலவாகக் கற்பனை செய்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் அமெரிக்காவிற்கு வெற்றி சாத்தியங்கள் குறைந்து கொண்டே வந்திருக்கின்றன. அந்த வரிசையில் இன்னொரு தலையங்கம் இது என்றாலும், ஈராக் பலவாறாக துண்டிக்கப்படலாம் என்ற சாத்தியத்தைக் கோடிகாட்டி எழுதப்பட்ட முதல் தலையங்கம் இது என்று நினைக்கிறேன்.

3. இந்தியாவுடன் அணுமின் ஒப்பந்தம்: இந்தியாவுடனான அணுமின் ஒப்பந்தத்தை விமரிசிப்பதற்கு இருக்கும் காரணங்களிலேயே மிகவும் ஓட்டையான காரணம், இதனால் அமெரிக்கா உலக அணு ஆயுத அரங்கத்தில் இரட்டை நிலை எடுக்க நேரிடும் என்பது. வெளியுறவு விஷயங்களில் கிட்டத்தட்ட நூற்றிப்பதினாறு நிலைகளைக் கொண்ட அமெரிக்கா இந்த விஷயத்தில் இரண்டு நிலைகளோடு நிறுத்திக் கொண்டால் முன்னேற்றம் தான். இருப்பினும், இந்த இரட்டை நிலை வாதத்தை டாராக்கி நாராக்குகிறார் கார்னகி எண்டோமண்டைச் சேர்ந்த ராபர்ட் காகன்:

"As for double standards, yes, we have double standards. The nuclear Non-Proliferation Treaty erected a gargantuan double standard. It declared that possession of the world's most devastating and militarily decisive weapons would be limited to the five nations that already possessed them. And this was a particularly mindless kind of double standard, since membership in the nuclear "club" was not based on justice or morality or strategic judgment or politics but simply on circumstance: Whoever had figured out how to build nuclear weapons by 1968 was in. At least our double standard for India makes strategic, diplomatic, ideological and political sense."

4. உங்கள் சுற்றுச்சூழல் காலடித்தடம் எத்தனை பெரியது? - நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையில் தனிப்பட்ட அளவில் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கிறோம், நமது பாதிப்பு உண்டாகும் தீமையைக் குறைப்பது எவ்வாறு என்பதை விளக்கும்/ஆராயும் கட்டுரை. ஒரு புதிய அமைப்பை அறிமுகம் செய்கிறது - FreeCycleDC என்ற இந்த இணையக் குழுமம், உங்கள் வீட்டில் உங்களுக்கு உபயோகப்படாத விஷயங்கள் குப்பை மலையில்(landfill) சேர்வதைத் தடுத்து, அவற்றை இலவசமாக எடுத்துச் செல்லும் தன்னார்வ தொண்டமைப்பு.

'"I discovered Freecycle while redoing my front porch last summer," Ridgley says. "I had perfectly reusable deck wood that I didn't need anymore, and a neighbor told me Freecycle would ensure it wouldn't get sent to a landfill." With more than 9,300 local members, FreecycleDC ( http://groups.yahoo.com/group/FreecycleDC ) is a bustle of activity, with members posting regularly to offer unwanted goods. The only hard and fast rule is that all items must be offered for free.'

5. இதைப் படிக்க வேண்டும் - சென்ற வருடம் பொருளாதார நோபல் பரிசு பெற்ற தாமஸ் ஷெல்லிங் எழுதி வெளியாகியுள்ள புதிய புத்தகத்தின் அறிமுகம் மிக சுவாரசியமாக இருக்கிறது:

"Long before Freakonomics or Tipping Points, there was Thomas C. Schelling, whose contributions to the understanding of economics, game theory and strategic human behavior were belatedly recognized with last year's award of the Nobel prize in economics. At a time when ideology and fuzzy thinking dominate the world of policy making, reading through 50 years of Schelling speeches and essays in Strategies of Commitment (Harvard), a collection that spans his years at Harvard and the University of Maryland, is a sheer delight. His style is so spare, straightforward and elegant, only hinting at the complexity of the logic behind it. Schelling's subjects range from nuclear deterrence and global warming to segregation, euthanasia, substance abuse and wars that cannot be won. His conclusions are invariably wise."

6. சோப்ரானோஸ் புதிய சீஸன்!! - எனது உள்ளங்கவர் கள்வன் டோனி சோப்ரானோ இன்று HBO-வில் மீண்டும் அவதரிக்கிறார் - ஆறாவது சீசன் இன்று துவங்குகிறது. நியூ ஜெர்சியில் வாழும் ஒரு மாஃபியாக் கும்பலைப் பற்றிய இந்தத் தொடர் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு மைல்கல் தொடர் என்று சொன்னால் சத்தியமாய் மிகையில்லை. ஆரம்பத்தில் இதை நான் அவ்வளவாகப் பார்க்கவில்லை. ஆனால், பலர் சொல்லக் கேட்டு, இரு வருடங்களுக்கு முன்பு மனைவி-மகள் இந்தியாவில் இருந்த சமயம், ஒரு இரு வார அவகாசத்தில், netflix உபயத்தில், ஐம்பத்தி இரண்டு மணிநேரம் ஊன் - உறக்கம் மறந்து பார்த்து முடித்தேன். முடித்ததும், ஏன் இவ்வளவு அவசரப்பட்டு முடித்தேன் என்று நொந்து கொண்டேன். இத்தொடரின் அதி தீவிர ஈர்ப்பு சக்தி பார்த்தால் தான் புரியும் என்றாலும், இதன் ஆறாவது சீசன் பற்றி போஸ்ட் எப்படி சிலாகிக்கிறது பாருங்கள்:

"Tony's journey, which will occupy 12 weekly episodes this year and an additional eight starting in January, already has been one of the most rewarding and enthralling in the history of the medium. But wait, it gets better. Or, in terms of putting a viewer through the proverbial emotional wringer, it gets worse. It might even call for some newly minted accolades, because it truly is a television landmark that leaves lots of other landmarks in the dust."


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

2 Comments:

Blogger பாலசந்தர் கணேசன். said...

என்ன ஸ்றிகாந்த் அவர்களே,

பதிவுகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றது. வாஷிங்டன் போஸ்ட் தவிர வேறு ஒன்றையும் காணோம். தேர்தல் சூடு பிடிக்கிற வேளையில் சின்ன பசங்க நாங்க நிறைய பேர் எழுதி குமிக்கும் போது, நீங்கள் ஒதுங்கி இருப்பது ஏன்?

March 12, 2006 11:23 AM  
Blogger Srikanth Meenakshi said...

>>சின்ன பசங்க நாங்க நிறைய பேர்

hmmm...I am going to let this one slide... :-)

>>நீங்கள் ஒதுங்கி இருப்பது ஏன்?

ஒரு தனிமனிதனாக, தமிழகத்தின் நலனுக்கு என்னால் இவ்வளவுதான் செய்ய முடியும்.

March 12, 2006 11:49 AM  

Post a Comment

<< Home