சண்டே போஸ்ட்
(முன் பதிவு: ரங்க் தே பசந்தி - அட்டகாசமான படம், பாருங்கள். வித்தியாசமான கதை, தேர்ந்த நடிப்பு, திறமையான ஒளிப்பதிவு, பிரமாதமான இசை. ஒரே ஒரு பிரச்னை - முடிவு கொஞ்சம் சொதப்பல். The movie deserved a better ending - or rather a better executed ending (no pun intended). இருந்தாலும் (Alice Patten-னுக்காக மட்டுமாவது) பார்க்க வேண்டிய படம்)
கடந்த பன்னிரெண்டு வருடங்களாக, இந்தியாவில் விடுமுறையாக இருந்த நாட்கள் தவிர்த்து, தினமும் தவறாமல் வாஷிங்டன் போஸ்ட் படித்து வருகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் போஸ்ட் விரிவான செய்திகளுடனும், அலசல்களுடனும் வெளிவரும். இன்று காலை, வெளியே ஒரு அடிக்கு மேல் பனி பெய்திருப்பதால், வேறு வேலையில்லாமல் நிதானமாய் மேய்ந்ததில் சில பரிந்துரைக்கக் கூடிய கட்டுரைகள் கண்ணில் பட்டன(சீக்கிரம் படியுங்கள், சுட்டிகள் ஒரு வாரத்திற்குப் பிறகு "இறந்து" விடலாம்):
1. மங்கோலியாவின் தற்கால அரசியல் நிலவரம் - மேலே ரஷியா, கீழே சைனா என்று சூழப்பட்டு கடல் காணாத நாடான மங்கோலியா, இன்று இவ்விரு அண்டை நாடுகளுக்கு அப்பால் தனது உறவுகளை பலப்படுத்த முனைந்து கொண்டிருக்கிறது. அம்முயற்சிகளைப் பற்றி ஒரு சுருக்கமான அலசல். சுவாரசியமான தகவல் - ஒரு பழைய ரஷிய நினைவகத்தைத் தகர்த்து விட்டு புதிதாக ஒரு சிலை எழுப்ப முயன்று கொண்டிருக்கிறார்கள். யாருக்கு சிலை - கெங்கிஸ் கானுக்கு! உலகத்துக்கெல்லாம் வில்லனாக இருந்தாலும், உள்ளூரில் ஹீரோ தான்!
2. வால்மார்ட் வங்கி? - வால்மார்ட் அமெரிக்க சட்டத்தில் இருக்கும் ஒரு சிறு ஓட்டையை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு வங்கி வர்த்தகத்தில் நுழைய முற்படுகிறது. முயற்சி வெற்றி பெறுமா? இதனால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்று அலசும் கட்டுரை.
3. Why we fight? - இப்பொழுது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் அரசியல் ஆவணப்படம் (பார்க்க - பாலாஜியின் அருமையான விமர்சனம்) பற்றி அப்படத்தின் இயக்குனருடன் சிறிய பேட்டி. சுவாரசியமான மேற்கோள் -
Q. With "Fahrenheit 9/11," I felt like I was being manipulated in places. But with your film, there's not that sense. You're not in it, your voice isn't in it. It's very measured.
A. I hope it's measured. And at the same time, no one should lie to anyone and pretend their films are objective. My film is a subjective film like all films. What I hope is clear about my film, though, is that I am rigorous in challenging my own inclinations.
4. ஸ்டாலின் பற்றி குருஷேவின் கொள்ளுப் பேத்தி - இன்றைய ரஷியாவில் ஸ்டாலினின் புகழ் ஏன் மங்கவில்லை என்பது பற்றி குருஷேவின் கொள்ளூப் பேத்தி நீனா குருஷேவ் எழுதியுள்ள கட்டுரை.
5. வாலண்டைன் தினம் சிறப்புக் கட்டுரை - சற்றே பெரியது - ஈராக்கிலிருக்கும் ஒரு அமெரிக்கப் போர் வீரனுக்கும் ஒரு கலிஃபோர்னியா யுவதிக்கும் இடையேயான தொலைதூரக் காதல் (காதல் கோட்டை ஸ்டைல்), மற்றும் அவர்கள் முதல் முறை சந்தித்துக் கொண்ட விதம் ஆகியவை பற்றிய சுவையான கட்டுரை - A little sappy, but you know, it is THAT time of the year...

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
0 Comments:
Post a Comment
<< Home