<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, January 29, 2006

நூதனமான பரிசோதனை

உங்களது உள்மனது சாய்மானங்களை அறிவியற்பூர்வமாக உங்களுக்கு அறியத்தரும் பரிசோதனை ஒன்றை ஹார்வர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி வலையேற்றி இருக்கிறது. நீங்கள் இப்பரிட்சையை எவ்வளவு முறை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம், உங்களது உள்மனம் மாறும் வரை பரிட்சையின் முடிவுகள் மாறாது என்கிறார்கள்.

இந்தத் தளத்தில் இந்தியாவிற்கென்று ஒரு உப தளம் உள்ளது. இதில் ஹிந்து/முஸ்லிம், இந்தியா/பாகிஸ்தான் போன்ற விஷயங்களில் உங்களது சாய்மானங்கள் சோதிக்கப்படுகின்றன. இத்தளத்திற்கு சென்று உங்களைப் பரிசோதனை செய்து கொள்ளு முன் அது பற்றிய இந்த ஸ்லேட் கட்டுரையைப் படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

பரிசோதனைத் தளம் (இந்தியக் கொடி மீது சுட்டியைத் தட்டவும்).

Good luck...but luck won't help you with this.

(நான் ஹிந்து/முஸ்லிம் பரிட்சையை மேற்கொண்டேன். முடிவு: எனக்கு வளர்வதற்கு நிறைய இடமிருக்கிறது :-) )


மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

6 Comments:

Blogger Boston Bala said...

ஹ்ம்ம்ம் :-/

January 29, 2006 9:11 PM  
Blogger Voice on Wings said...

பாலினப் பாகுபாட்டைப் பற்றிய தேர்வில் பங்கு கொண்டேன். விரல்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, 'எந்த சாய்மானமுமில்லை' என்ற முடிவைக் கொண்டுவர முடிந்தாலும், (ஆண், அறிவியல்)் vs. (பெண், கலைகள்) என்ற விதத்தில் பிரித்தபோது சுலபமாக விடையளிக்க முடிவதை உணர முடிந்தது. நிச்சயமாக நல்ல சேதியல்ல.

January 29, 2006 11:34 PM  
Blogger Boston Bala said...

fyi: The Prejudice Map

January 30, 2006 12:34 AM  
Blogger Srikanth Meenakshi said...

பறக்கும் குரல், உங்களால் சோதனையின் முடிவை சாய்க்க முடிந்தது என்பது சுவாரசியமாக இருக்கிறது. இப்படிச் செய்ய முடியும் என்ற காரணத்தினாலேயே, இதை வேலைக்கான நேர்முகத்தேர்வு போன்ற விஷயங்களில் பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள்...(சாம் அலிடோவை உட்காரவைத்து 'தட்டுடா மவனே' என்றால் என்ன ஆகிறது என்று பார்க்க வேண்டும் :-) )

பாபா, நன்றி, ஆனால் Prejudice Map என்ன செய்தாலும் பார்க்க முடியவில்லை...:-( ஒரு jpeg கிடைத்தால் ஏற்றி விடுங்களேன்...

January 30, 2006 7:57 AM  
Blogger Boston Bala said...

http://blog.outer-court.com/prejudice/map.gif

January 30, 2006 11:36 AM  
Blogger கசி said...

This comment has been removed by a blog administrator.

February 08, 2006 9:14 PM  

Post a Comment

<< Home