<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Friday, January 20, 2006

சுஜாதாவின் 'தம்பி'

சில நாட்களுக்கு முன்பு தேசிகன் தனது வலைப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தார்:

"நண்பர் அதியமான் சில வாரங்களுக்கு முன் அம்பலம் அரட்டையில் முன்பு எப்போதோ படித்த ஒரு விஞ்ஞான சிறுகதையை உயிர்மை வி.சி தொகுப்பில் காணவில்லை என்றார். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அந்த கதையின் அவுட்லைனையும் சொன்னார். பிறகு சுஜாதாவிடம் பேசிக்கொண்டிருந்த போது அது முன்பு கணையாழியில் எழுதியது என்று நினைக்கிறேன் என்றார்.

அடுத்தவாரம் அதிர்ஷ்டம் என் பக்கம் அடித்தது. 1977 ஆகஸ்ட் மாதம் கணையாழியில் அந்த கதை கண்டுபிடித்தேன். கதையின் பெயர் தம்பி.
படிக்க விரும்புபவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.
அடுத்த உயிர்மை வி.சி பதிப்பில் இந்த கதை இடம்பெறும். நண்பர் அதியமானுக்கு என் நன்றி."

இதைப் படித்த போது, நான் சிறு வயதில் இந்தக் கதையை முதல் முறையாகப் படித்ததும், இரண்டாவது முறையாகப் படித்ததும் நினைவுக்கு வந்தது.

நான் இதை முதல் முறையாகப் படித்தது, ஒரு பொழுது போகாத கோடை மதியத்தில். தேசிகன் பதிவில் பின்னூட்டமிடப்பட்டது போல் இதை 'வானத்தில் ஒரு மௌனத்தாரகை' தொகுப்பில் தான் படித்தேன் என்று நினைக்கிறேன். இதைப் படித்த சிலநாட்கள் கழித்து இன்னமும் கடுமையாக போரடித்த இன்னொரு மதிய நேரத்தில், எங்கள் வீட்டு பரணில் இருந்த ஒரு பழைய பெட்டியில் இருந்த சில புத்தகங்களைக் குடைந்த போது புதையல் போல ஒரு சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது. ஒரு கதையின் மையக்கரு அப்படியே 'தம்பி' கதையினது போல இருந்தது. இந்தக் கதை பல வருடங்களுக்கு முன்பு வெளியானது.

மீண்டும் வா.மௌ.தா வை எடுத்துப் படித்து ஊர்ஜிதம் செய்து கொண்டேன். சுஜாதாவின் கதையில், அது ஒரு ஆங்கிலக் கதையின் தழுவல் என்றெல்லாம் குறிப்பு எதுவும் இல்லை. ஒரு நமட்டுச் சிரிப்புடன் மொத்த விஷயத்தையும் மறந்து விட்டேன்.

தேசிகன் பதிவைப் படிக்கும் வரை. கணையாழியிலும் அக்கதை ஒரு தழுவல் என்று எதுவும் குறிப்பிருந்ததாக அவர் எழுதவில்லை. அப்பதிவைப் படித்ததும், சரி கொஞ்சம் குடைந்து பார்ப்போமே என்று கூகிளைத் துழாவினேன். ஒரு Sci-Fi இலக்கியப் புழு ஒருவர் கிடைத்தார். அவருக்குக் கதையின் கருவைச் சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். நான் அனுப்பிய கதைச் சுருக்கம் இது தான்:

Summary of the story: space ship gets wrecked somewhere out there,
lonely survivor sends message home for rescue, teaches a machine
to talk to relieve his boredom, the machine starts squeaking and
needs oil, man does not have any, the story ends with the machine
killing the man to extract oil from his fat as the rescue ship
arrives.

Does this story ring a bell? If it does, I would really appreciate if
you could let me know.

மறுநாள் அவரிடமிருந்து டாணென்று பதில் வந்தது:

The story is "Lubrication" by Robert Sheckley.

SHECKLEY, ROBERT
Lubrication, (vi) Playboy May 1959; Triplication, gp.
Store of Infinity, Bantam 1960
The Bedside Playboy, ed. Hugh M. Hefner, Playboy 1963
From the "S" File, ed. Editors of Playboy, Playboy 1971
The Collected Short Stories of Robert Sheckley Book Four, Pulphouse
1991

இந்தக் கதை முதலில் வெளியானது 1959 ப்ளேபாயில். பின்னர் பல தொகுப்புகளில் வெளிவந்தது. இந்தத் தகவலைக் கொண்டு கொஞ்சம் கூகிள், பின்னர் கொஞ்சம் ஈபே என்று மேய்ந்ததில், கதை இருந்த புத்தகம் ஒன்று (Store of Infinity) கிடைத்தது. புத்தகம் வீடு வந்து சேர்ந்ததும், பல வருடங்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்த்தேன். கதையின் மையக்கருவும் முக்கியத்திருப்பமும் ஒன்றாய் இருந்தாலும், சுஜாதா அவற்றில் பல விஷயங்களைச் சேர்த்து ஒரு புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறார் என்று தோன்றியது. மூலக்கதை வெளிவந்த வருடம், சுஜாதா எழுதிய வருடம், கதைகளின் வித்தியாசமான முடிவில் இருக்கும் முழு ஒற்றுமை இவற்றைக் கொண்டு பார்க்கையில் சுஜாதா இந்தக் கதையிலிருந்து inspire ஆகி எழுதியிருக்கிறார் என்பதில் *எனக்கு* சந்தேகமில்லை. இன்னொரு சின்ன விஷயம்: மூலத்தில் ரோபோட்டின் பெயர் 'அக்கா' (Akka), சுஜாதாவின் கதையில், தம்பி :-)

ஒரு சுவாரசியத்துக்காகத்தான் இவற்றை பதிக்கிறேன். சுஜாதா மீது இதன் மூலம் எந்த ஒரு பெரும் குற்றச்சாட்டு எதையும் வைப்பது என் நோக்கமல்ல.

சுஜாதாவின் 'தம்பி'

Robert Sheckleyயின் 'Lubrication' (Image) - இடது பக்கத்தில், கீழே, "Professor Bolton..." என்று துவங்கும் இடத்திலிருந்து படிக்கவும் - மூன்று கதைகள் அடங்கிய சிறுகதை ஒன்றின் மூன்றாவது கதை இது.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

4 Comments:

Blogger Yagna said...

அப்படியே நம்ம ராபின்சன் க்ரூசோ கதையும் எடுத்துக்கோங்க, அப்புறம் இந்த கதையும் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி...

விடுங்க, எனக்கு சுஜாதாமேல இருக்கற ஒரு குறை எப்பவுமே மூலத்தை[சுட்ட இடத்தை] குறிப்பிடறதில்லை.

January 20, 2006 4:59 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

காப்பி அடித்தே பேர்வாங்கும் புலவர்கள், இப்போதாவது திருந்தியிருப்பார்களென நம்புகிறேன். நல்ல பதிப்பு.

January 20, 2006 5:20 PM  
Blogger Desikan said...

ஸ்ரீகாந்த், நல்ல அலசல், தகவலுக்கு நன்றி. 'வானத்தில் ஒரு மெளன தாரகை' என்ற புத்தகத்தில் மொத்தம் ஒன்பது கதைகள் இருக்கிறது ஆனால் 'தம்பி' என்ற கதை இல்லை.
அன்புடன்,
தேசிகன்
http://www.desikan.com/blogcms/

January 20, 2006 8:54 PM  
Blogger Srikanth Meenakshi said...

Desikan,

thanks for the info. I must have read it in a different collection then...

Srikanth

January 20, 2006 9:11 PM  

Post a Comment

<< Home