<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Wednesday, October 26, 2005

திருமாவின் தலைவர்

கடந்த 24-ஆம் தேதி ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த 'எழுக தமிழ்' உரிமை முழக்கப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசி இருக்கிறார். அதில் அவர் சொன்னதாவது:

"ஒட்டு மொத்தத்திற்குமான தலைவன் பிரபாகரன்- தமிழீழத்துக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் தலைமை தாங்குகிற தலைவர் பிரபாகரன்தான்."

- புதினம் வலைத்தளம்



எனது கருத்து: திருமா தனது தலையை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் கொடுக்கட்டும்; அது அவரது உரிமை. ஆனால் ஏதோ சொந்த சொத்தைத் தூக்கிக் கொடுப்பது போல, மொத்தத் தமிழகத்தையும் தத்தம் செய்வது அநியாயம்.

அது சரி, தமிழகத்திற்கும் தலைவர் பிரபாகரன் என்றால், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, திண்ணியம் எல்லாவற்றிற்கு அவர்தான் பொறுப்பா? திருமாவுக்கே வெளிச்சம்!

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

29 Comments:

Blogger b said...

பிரபாகரன் அவர்கள் தமிழீழத்தின் தலைவர். கொஞ்சம் முயன்றால் இலங்கைக்கு வேண்டுமானாலும் தலைவராக முடியும். ஆனால் தமிழகத்தின் தலைவராக ஒட்டுமொத்த மக்களால் முழுமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டவரல்ல. திருமா பிரபாகரன் அவர்கள்மேல் கொண்டுள்ள மரியாதையால் அப்படிச் சொல்லி இருக்கலாம்.

அதுசரி, உங்களுக்கு பிரபாகரன் மற்றும் திருமா மேல் அப்படி என்ன கோபம் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?

October 26, 2005 8:21 PM  
Blogger Srikanth Meenakshi said...

மூர்த்தி, நான் சொன்னதைச் சொல்வதற்குக் கோபமெல்லாம் தேவையில்லை.

ஆயினும், திருமா இந்த விஷயத்தில் சொன்னது அதிகப்பிரசங்கித்தனம். திருமாவிற்கு பிரபாகரன் மீது என்ன மரியாதை வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல் பேசுவது தவறு.

ஒரு ஜெயலலிதா அபிமானி, தமிழகம் மட்டுமல்ல தமிழீழத்திற்கும் அவர் தான் தலைவி என்று சொன்னால் அந்தக் கருத்தோடு முரண்பட யாருக்கும் ஜெயலலிதா மீதோ சொன்னவர் மீதோ தனிப்பட்ட கோபம் எதுவும் இருக்கத் தேவையில்லை.

October 26, 2005 9:01 PM  
Anonymous Anonymous said...

அடுத்து தமிழ்மணத்திலிருந்து தூக்கப்படப்போவது யாரென்று தெரிந்துவிட்டது.

October 26, 2005 9:09 PM  
Blogger கொழுவி said...

//ஒரு ஜெயலலிதா அபிமானி, தமிழகம் மட்டுமல்ல தமிழீழத்திற்கும் அவர் தான் தலைவி என்று சொன்னால் அந்தக் கருத்தோடு முரண்பட யாருக்கும் ஜெயலலிதா மீதோ சொன்னவர் மீதோ தனிப்பட்ட கோபம் எதுவும் இருக்கத் தேவையில்லை. //


நன்றே சொன்னீர்கள்.
இருக்கும் சிக்கலை இவர்கள் இவர்களின் பேச்சுக்கள் இன்னும் பெரிதாக்கும்போலுள்ளது.


//அடுத்து தமிழ்மணத்திலிருந்து தூக்கப்படப்போவது யாரென்று தெரிந்துவிட்டது. //

இது விசமத்தனமான கருத்து. ஏற்கெனவே வோறொரு பெயரில் சொல்லப்பட்ட கருத்துத்தான்.

October 26, 2005 9:12 PM  
Anonymous Anonymous said...

Srikanth

you are right but you don't have to insult our leader (PRABAHARAN)
Ellam tamil nothing do with Tamil Nadu dirty politics. We are fighting for our lands and rights
We gave over 17,000 young lives and 100,000 civilians
which are killed by indian army and srilankan army so get away from our leader stick your own tamil nadu dirty politics
So far i know Prabaharan never say he wants be leader of tamil nadu
SO KISS=== KEEP IT SIMPLE STUPID

October 26, 2005 9:14 PM  
Blogger Muthu said...

அவர் சொன்னது திருமாவைப்பற்றித்தான். பிரபாகரன் ஆதரவாளர்கள் வருத்தப்பட தேவையில்லை என்று எனக்கு தோன்றுகிறது. எனக்கு பிரபாகரன் மீதும் திருமா மீதும் மரியாதை உள்ளது.ஆனால் அதற்காக திருமாவின் இந்த பேச்சை எப்படி நியாயப்படுத்த முடியும்?

October 27, 2005 12:25 AM  
Blogger b said...

நன்றி ஸ்ரீகாந்த் அவர்களே.

தமிழன்் கன்னிமேரி, மேரிமாதா, காளி, திரிசூலி போன்றவர்களோடு ஒப்புமைப் படுத்தி அழகு பார்த்தவன். ஒப்புக் கொள்கிறேன்.

October 27, 2005 12:28 AM  
Blogger ஜெ. ராம்கி said...

It's quite unfortunate. Srikanth, Thanks for ur info.

October 27, 2005 12:35 AM  
Blogger ஜோ/Joe said...

திருமா சொன்னது தவறு தான் ..கலைஞரை 'தமிழினத்தலைவர்' என்று சொல்லுவது எந்த அளவு தவறோ அந்த அளவுக்கு.தமிழகத்தில் கலைஞரை 'தமிழினத்தலைவர்' என்று சொன்ன போது ஈழத்தமிழர்கள் என்ன நினைத்திருப்பார்கள் ?அது எவ்வளவு உயர்வு நவிற்சியோ ,இதுவும் அது போல் தான்.

October 27, 2005 1:30 AM  
Anonymous Anonymous said...

This is called kissing the frog.

நட(டைய)க்கட்டும் நட(டைய)க்கட்டும்.

October 27, 2005 2:18 AM  
Anonymous Anonymous said...

Thirumaa ippadiyellam avvappothu unarchivasap paduvathu iyalbuthaan!

October 27, 2005 5:21 AM  
Blogger kirukan said...

Thiruma will come to Kadalur and say, Ramdoss is leader for all Tamils... He is just a normal politician.

// Ramki says..
It's quite unfortunate//

Rajni Vaazhthu== Tamil Thai Vaazhthu... is it fortunate??

October 27, 2005 6:16 AM  
Anonymous Anonymous said...

Rajni Vaazhthu equal to Ramki's Tamil Thai Vaazhthu.

But

Pirbhakaran Vaazhthu not equal to Tamilian's Vaazhthu.

It's only

Pirabhakaran Vaazhthu equal to Thiruma's Tamil Thai Vaazhuthu

kanakku correctaa?

October 27, 2005 8:01 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நண்பர் ஸ்ரீகாந்திற்கு
எழுச்சி தலைவன் திருமா தவறாக பேசினார் என்றே வைத்து கொள்வோம்.
ஆனால் உலகுகெங்கும் வாழும் தமிழ்ர்களுக்கு ஓர் பிரதிநிதி தேவைப் படுகிறார்கள்
அதற்கு பிரபாகரன் ஓர் உதாரணமாக கொள்ளலாம். வைகோ, திருமா, ஐய்யா நெடுமாறன்,
இராமதாசு எல்லாருமே பிரபாகரனை தலைவராக ஏற்று கொண்டவர்கள். இதில் தவறு
ஏதும் இல்லை என்பது தாழ்மையான கருத்து. தமிழனுக்கு என்று ஓர் நாடும் தமிழ் மொழி
அங்கீகாரம், தமிழனுக்கு என்று ஓர் கொடி ஏற்பட ஓர் சாத்தியம் உண்டு என்றால் அது
ஈழ நாடு வெற்றி மட்டுமே. அப்பொழுதாவது பிரபாகரனை ஒட்டு மொத்த தமிழ் சமுதாயம்
ஏற்று கொள்ளுமா என்பதை தங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

October 27, 2005 10:07 AM  
Blogger Boston Bala said...

---திருமா இந்த விஷயத்தில் சொன்னது அதிகப்பிரசங்கித்தனம்---

அரசியில்ல இதெல்லாம் சகஜமப்பா...


சில கூத்துகள் | இரான் அதிபர்: "Ahmadinejad quoted a remark from Iran's Ayatollah Khomeini, the founder of Iran's Islamic revolution, who said that Israel 'must be wiped out from the map of the world.'"

October 27, 2005 10:19 AM  
Blogger Srikanth Meenakshi said...

சிவா,

//எழுச்சி தலைவன் திருமா தவறாக பேசினார் என்றே வைத்து கொள்வோம்.//

அதை நான் ஏற்கனவே வைத்துக் கொண்டு விட்டேன், எனினும் நன்றி.

//ஆனால் உலகுகெங்கும் வாழும் தமிழ்ர்களுக்கு ஓர் பிரதிநிதி தேவைப் படுகிறார்கள்//

ஏன்? எதற்காக? ஈழத்தமிழர்களுக்கு என்று சொன்னால் கண்டிப்பாக என்று சொல்லலாம். நமக்கு எதற்கு தனியாக ஒரு பிரதிநிதி தேவை? உலகெங்கிலும் இருக்கும் தெலுங்கர்களுக்கு, யார், ராஜசேகர ரெட்டியா பிரதிநிதி?

//வைகோ, திருமா, ஐய்யா நெடுமாறன்,
இராமதாசு எல்லாருமே பிரபாகரனை தலைவராக ஏற்று கொண்டவர்கள். இதில் தவறு
ஏதும் இல்லை என்பது தாழ்மையான கருத்து.//

இந்தக் கருத்துக்கு தாழ்மை, மேன்மையெல்லாம் தேவையில்லை, சரியான கருத்து தான். எனது பதிவிலும் அவ்வாறே சொல்லியிருந்தேன்.

//தமிழனுக்கு என்று ஓர் நாடும் தமிழ் மொழி
அங்கீகாரம், தமிழனுக்கு என்று ஓர் கொடி ஏற்பட ஓர் சாத்தியம் உண்டு என்றால் அது
ஈழ நாடு வெற்றி மட்டுமே.//

ஈழத் தமிழர்களுக்கு ஒரு நாடு என்றால் ஈழ நாடு தான் என்பது உண்மைதான். அது உருவானால், அது தமிழகத்திற்கு அண்டை நாடாக இருக்கும்.

//அப்பொழுதாவது பிரபாகரனை ஒட்டு மொத்த தமிழ் சமுதாயம்
ஏற்று கொள்ளுமா என்பதை தங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். //

ஏற்றுக்கொள்ளுமா என்றால் தலைவனாகவா? ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? மேற்கு வங்காளிகளின் தலைவர் முஜிபூர் ரஹ்மானா?

October 27, 2005 10:47 AM  
Anonymous Anonymous said...

என்னால பிரபாகரனை எல்லாம் தமிழினத் தலைவனா ஏற்றுக் கொள்ள முடியாது ஏனெனில் அவர் பிள்ளை. ஜெயலலிதாவை ஏற்றுக் கொள்ளலாம் என்றால் அவரும் பெரியவா(ளை) தூக்கி உள்ள வைச்சிட்டார். அதனால் எனக்கு தலைவர் தேவையில்லை.

October 27, 2005 11:04 AM  
Blogger தாரா said...

ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை சிவாவுக்கு நன்றாக பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

தமிழீழ மக்கள் படாதபாடு பட்டு போராடி தங்களுக்கென்று தனி நாடும் தனி கொடியும் பெற்றபிறகு, அதுவரை சும்மா பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் வெற்றி பெற்ற பிறகு "ஒட்டுமொத்த தமிழர்களின் நாடு" என்றும் "ஒட்டுமொத்த தமிழர்களின் கொடி" என்றும் நாம் joint அடித்தால் அது எந்த வகையில் நியாயம்? அவர்களுடைய வெற்றி அவர்களுக்கு மட்டுமே சொந்தம்.

ஏற்கனவே அவர்கள் தங்கள் அடையாளத்தை சிங்களவர்களிடமிருந்து மீட்டு எடுக்கப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து வெளிவந்து பிறகு இந்தியத் தமிழர்களிடம் தங்கள் கொடியையும் அடையாளத்தையும் பங்கு போட்டுக்கொள்ளுங்கள் என்று கேட்பது அநியாயம் இல்லையா?

தாரா.

October 27, 2005 6:21 PM  
Blogger Srikanth Meenakshi said...

தாரா,

நல்ல கருத்து; நன்றி. இருப்பினும் குடும்பத்தில் குழப்பம் உண்டு பண்ண விரும்பவில்லை என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். :-)

நன்றி,

ஸ்ரீகாந்த்

October 27, 2005 7:12 PM  
Blogger Mookku Sundar said...

தமிழகத்தில் தலைமைப் பஞ்சமா..?? இல்லை தமிழகத்தில் உள்ள இத்த்னை கோடி பேர்களில் தமிழர்களின் தலைவராக இருக்க யாருக்குமே தகுதி இல்லையா..?? வைகோவாகட்டும், ராமதா"சு" ஆகட்டும், திருமாவாகட்டும், எல்லோரும் எதற்கு கடல் கடந்து தமிழனுக்கு தலைவர் தேடுகிறார்கள் என்பது புரியவில்லை. வி.புலிகளிடமிருந்து இந்த மனிதர்களுக்கு பணம் வருகிறது. அதனால்தான் இந்த "தாங்கு ..தாங்குகிறார்கள்" என்று நினைக்க வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது.

தமிழன் முன்பு தலைமைகளை மாநிலம் விட்டு மாநிலம் தேடிக் கொண்டிருந்தான். இப்போது நாடு விட்டு நாடு தேடுகிறான் :-(

திருமா முதலில் தன் மக்களுக்கு சமூக நீதி பெற்றுத் தரட்டும். பின்பு தமிழனைப் பற்றியும், கற்பு பற்றியும், கலாசாரம் பற்றியும் கவலைப்படலாம். ஏனெனில் இவை எல்லாவற்றையும் விட அதுதான் அதி முக்கியம்.

October 27, 2005 7:29 PM  
Anonymous Anonymous said...

பிரபாகரனை ஆதரிக்காதவங்க எல்லாம் தமிழன் இல்லை. இந்திக்காரங்க என்று சொன்ன
விசயகாந்தை இந்த நேரம் ஒரு திட்டு திட்டிக்கிறேன்.

October 28, 2005 10:32 AM  
Anonymous Anonymous said...

அட மூக்கு சுந்தர் ரொம்ப காலத்துக்கு அப்புறமா இப்போ தான் உருப்படியா ஒரு நல்ல கருத்து சொல்லிருக்காரு.ஆனா வேற யாரோ ஒருத்தருக்கு இங்கே மூக்கு ஒடஞ்சிருக்கு போலிருக்கே. சிரிகாந்து, சூப்பர் பதிவு தலை.

October 28, 2005 11:10 AM  
Anonymous Anonymous said...

திருமாவின் பேச்சு
---
நிகழ்வின் தொடக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் பேசியதாவது:
மாவீரன் நெப்போலியனையும் அலெக்சாண்டரையும் ஒன்றிணைந்த தலைவர் அண்ணன் பிரபாகரன்.
நம்மை அழிக்க ஒருவார காலத்தில் இந்தப் பொடியன்களை நசுக்கிக் காட்டுகிறோம் என்ற ஆணவத்தோடு கொக்கரித்துக் கொண்டு சிங்கள இராணுவத்துக்கு துணையாக வந்த இந்திய இராணுவத்தை துரத்தியடித்தோம்.
தப்பித்தால் போதும் என்று தப்பி ஓடியது இந்திய இராணுவம்.
பின்னர் தமிழர்களை நசுக்குவதற்கு அமெரிக்காவின் உதவியை சிறிலங்கா இராணுவம் நாடியது.
அமெரிக்காவின் முக்கிய தளபதிகள் போர்க் களத்தில் சிங்கள இராணுவத்துக்குப் பயிற்சி அளித்தனர். புலிப்படை இப்படித்தான் சிந்திக்கிறது- புலித் தலைவன் இப்படியெல்லாம் உத்தரவிடுகிறார் என்று கூறி பயிற்சி கொடுத்தது.
ஆனால் அமெரிக்க இராணுவத்தளபதிகளே புறமுதுகிட்டு ஓட ஆனையிறவில் வெற்றி பெற்றோம்.
அண்ணன் பிரபாகரன் இராணுவ ரீதியாக எடுத்த ஒவ்வொரு முடிவும் உலகத்தின் கண்களை அகல விரித்து காட்ட வைத்திருக்கிறது. வியப்பில் ஆழ்த்த வைத்திருக்கிறது.
ஒட்டு மொத்தத்திற்குமான தலைவன் பிரபாகரன்- தமிழீழத்துக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் தலைமை தாங்குகிற தலைவர் பிரபாகரன்தான்.
அவரது தலைமையின் கீழ் அவர் வாழுகிற காலத்திலேயே நாம் தமிழீழத்தை வென்றெடுப்போம்!
ஐரோப்பிய ஒன்றியமே! புலிகளின் போக்குவரத்து தடையை நீக்கு!
ஐரோப்பியக் கூட்டரசே! உன் செவிகளுக்கு எட்டுகிறதா? தடையை விலக்கு விலக்கு!!
தமிழர் வீரம் வெல்லும்! அதை காலம் சொல்லும்!! என்றார் திருமாவளவன்.
இதைத் தொடர்ந்து
எங்கள் மூச்சு தமிழீழமே!
எங்கள் நிலம் தமிழீழமே!
சூரியத் தேவன்! பிரபாகரன்!
தலைவா! நாம் இருக்கிறோம் தலைவா!
ஐரோப்பிய ஒன்றியமே தடையை நீக்கு!!
என்ற முழக்கங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் மீண்டும் எழுப்பப்பட்டன.
-------------------

வெற்றி பெற்றோம், இந்திய ராணுவத்தை ஓட வைத்தோம், என்று பேசுகிறாரே திருமா, இவர் அங்கு சென்று போர்க்களத்தில் நின்று போரிட்டாரா? இந்திய ராணுவத்துக்கு எதிராக இவர் போரிட்டதாக இவரது ஒப்புதல் வாக்குமூலம் தவிர வேறு சாட்சியம் ஏதும் உண்டா?
தமிழ்நாட்டு எம் எல் ஏவாக பதவிப்பிரமாணம் எடுக்கும்போது இவர் இந்தியாவுக்கு எதிராக போரிட்டதை சொன்னாரா?

இந்த பேச்சுக்காக திருமா கைது செய்யப்படுவாரா?
---
என்னவோ, ஆனால், திருமாவை கூட்டணியில் எவரும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் திருமாவின் அரசியலுக்கு சாவுமணி அடித்து புலிகள் தங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஓரிருவரையும் அரசியல் ரீதியாக சயனைட் கொடுத்துவிட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

(அதென்ன சூரியத்தேவன்? :-)))))))

October 28, 2005 7:59 PM  
Anonymous Anonymous said...

DAI INDIA PRAMANIYA NAYUGALA

TAMIL EELA POOARAATHAI PAATEE UNNKALUU ENNA THEREEYUMM

GO AND WORK ON YOUR GREEN CARD

INDAI ONLY GOOD FOR DIRTY POLITICS AND LUNCHUMMM

October 28, 2005 11:34 PM  
Blogger Mookku Sundar said...

//விடுதலை எலி said...
அட மூக்கு சுந்தர் ரொம்ப காலத்துக்கு அப்புறமா இப்போ தான் உருப்படியா ஒரு நல்ல கருத்து சொல்லிருக்காரு//

எலியண்ணே, உங்களுக்கு புடிச்சா மாதிரி பேசினா இப்படி சொல்லுவீங்க. இல்லன்னா, சம்பந்தம் இல்லாம என் பேர நாறடிப்பிங்க. இநத சலசலப்புக்கெல்லாம் நான் கவலையே பட மாட்டேண்ணே. எப்பவுமே, எனக்கு தோணுறதை, மறைக்காம, எந்த சார்பும் இல்லாம, எந்த "சபையிலயும்" கேட்டுட்டு வந்து கக்காம, பேசறதுதான் வயக்கம். அதையே நியூட்ரல் ஜல்லின்னும், உருப்படின்னும் மாறி மாறி கொயப்புறது உங்க கோஷ்டிதான். எந்தக் கண்ணாடி போட்டிருந்தாலும், அதைக் கயட்டி கடாசீட்டு, நேரா பாருங்க. எல்லாம் வெளங்கும் :-)

October 29, 2005 5:56 PM  
Blogger முகமூடி said...

இப்ப எனக்கு யார் தலைவர்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்கப்பா.. இப்படி பல பேர சொல்லி கொயப்பிட்டீங்களே...

தலைவன் இல்லாம கை கால் எல்லாம் நடுங்குது எனக்கு.. உடனடியா எனக்கு ஒரு தலைவன் வேணும்...

***

ஒரு "சிறந்த" அரசியல்வாதியாக ஒளிர்வதற்கான தகுதி இங்கு பின்னூட்டம் இட்ட ஒரு நண்பருக்கு இருக்கிறது... வாழ்த்துக்கள்.

October 29, 2005 9:33 PM  
Anonymous Anonymous said...

"தலைவன் இல்லாம கை கால் எல்லாம் நடுங்குது எனக்கு.. உடனடியா எனக்கு ஒரு தலைவன் வேணும்..."

நண்பா, அடிச்சீங்களே ஒரு சிக்ஸர். பச்சோந்தியெல்லாம் பணால்.. அப்படியே அரசியல் விபச்சாரிகளுக்கும் ஒரு வேட்டு வயிங்க நண்பரே.

October 29, 2005 10:44 PM  
Anonymous Anonymous said...

//எந்தக் கண்ணாடி போட்டிருந்தாலும், அதைக் கயட்டி கடாசீட்டு, நேரா பாருங்க. எல்லாம் வெளங்கும் :-)//

மூக்கு, நல்லவேளை நியாபகப்படுத்துனீங்க. எப்பவும் நீங்க போட்டுகிட்டுருக்கிற கண்ணாடியை போட்டுகிட்டே இருந்திட்டேன். நீங்க சொன்ன உடனே நியாபகம் வந்திடிச்சி. இதோ கழட்டி உங்ககிட்டயே கொடுத்திடறேன். கோச்சுக்காதீங்க.

October 29, 2005 11:37 PM  
Anonymous Anonymous said...

//தலைவன் இல்லாம கை கால் எல்லாம் நடுங்குது எனக்கு.. உடனடியா எனக்கு ஒரு தலைவன் வேணும்...//

த்தோடா, 'கராத்தே' வந்திட்டாரு.

October 29, 2005 11:40 PM  

Post a Comment

<< Home