<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, October 23, 2005

அச்சடிக்க வேண்டிய அனைத்து செய்திகளும்

"Mirror, Mirror on the wall, who is the fairest of them all?"

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை தன்னைத் தானே தடுக்கிக் கொண்டிருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு ஜேசன் ப்ளேர் என்ற நிருபர் எழுதிய "செய்திக்கட்டுரைகள்" எல்லாம் புருடாக்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட போது, பாரம்பரியம் மிக்க அப்பத்திரிக்கைக்கு அது ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது. ஆனால் அதையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து கொண்டிருக்கிறது தற்போதைய ஜூடித் மில்லர் விவகாரம்.



வெளியூர்காரர்களுக்கு ஒரு முன்கதைச் சுருக்கம்:

2002, 2003 வருடங்களில் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக புஷ் அரசாங்கம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த பொழுது, அமெரிக்க ஊடகங்கள் பெரும்பாலும் கேள்வி கேட்காமல் ஜால்ரா தட்டிக் கொண்டிருந்தன. அரசாங்க அலுவலர்கள் சொல்லும் புரட்டுச் செய்திகளையெல்லாம் வேதவாக்காக எழுத்துப் பிசகாமல் பத்திரிக்கைகள் 'செய்திகளாக' வெளியிட்டன. நி.டை பத்திரிக்கையில் இந்தக் கைங்கரியத்தைச் செய்தவர்களுள் தலையானவர் ஜூடித் மில்லர் என்ற நிருபர்/பத்திரிக்கையாளர். அவர்கள் சொல்வதையெல்லாம் இவர் எழுத, எழுத வேண்டியதையெல்லாம் அவர்கள் சொல்லிக் கொடுக்க, வியாபாரம் கன ஜோராக நடந்தது.

2003 ஆரம்பத்தில் ஈராக் போரும் பத்திரிக்கைத் தலையங்களின் போர்ச்சங்கு ஊதலுடன் துவங்கியது.

அந்த சமயத்தில் ஜோ வில்சன் என்ற வெளியுறவுத் துறை அலுவலர் ஈராக் அணு ஆயுதங்கள் தயாரிக்க முயற்சி செய்வதாக வந்த அறிக்கைகளின் ஆதாரம் தவறு என்று ஆப்பிரிக்க நைஜர் நாட்டிற்குச் சென்று வந்து ஒரு கட்டுரை எழுதினார்.

ஏற்கனவே பேரழிவு ஆயுதங்கள் கண்டுபிடிக்காமல் தடவிக் கொண்டிருந்த புஷ் அரசாங்கத்திற்கு இது மேலும் ஒரு தலைவலி ஆயிற்று. உடனே அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள்? அரசியல் செய்வார்கள். இந்த ஜோ வில்சனின் நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் ஆராயத் துவங்கினார்கள். இதை முன்னின்று செய்யத் துவங்கியது புஷ் அரசாங்கத்தின் மூளைகளான கார்ல் ரோவும், 'ஸ்கூட்டர்' லிப்பியும்.

கொஞ்ச நாட்களில் ராபர்ட் நோவாக் என்ற எழுத்தாளர், ஜோ வில்சனின் மனைவி வேலரி ப்ளேம் ஒரு CIA operative என்றும் அவரது சிபாரிசின் பேரில் தான் ஜோ நைஜர் சென்று வந்தாரென்றும் ஒரு கட்டுரையில் போட்டு உடைத்தார். இந்தத் தகவல் தமக்கு எப்படிக் கிடைத்தது என்பதை எழுதவில்லை. அங்கு துவங்கியது வினை.

பிரச்னை என்னவென்றால் ஒரு பாதுகாக்கப்பட்டு வரும் சி.ஐ.ஏ ஊழியரின் பெயரை பொதுவில் வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றம். அதைத் தெரிந்து செய்வது ராஜத் துரோகத்திற்கு இணையானது. இந்தக் கட்டுரை எழுப்பிய அமளியைக் குறைக்க புஷ் அரசாங்கம் ஒரு விசாரணைக் குழு அமைத்தது.

இந்த விசாரணைக் குழு, தோண்டித் துருவிப் பார்த்ததில், ராபர்ட் நோவாக் தவிரவும் பல பத்திரிக்கையாளர்கள் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. செய்தியை வெளிப்படுத்துவதில் நோவாக் முந்திக் கொண்டாரே ஒழிய, இந்த சிபாரிசு விஷயத்தை வெளியில் சொல்லி ஜோ வில்சனை அவமானப்படுத்துவதில் அரசாங்கத்தில் பலர் முனைப்பாக இருந்தனர். இப்படி சம்பந்தப்பட்ட நிருபர்களில் டைம்ஸ் வாரைதழைச் சேர்ந்த ஒருவர், பிரபல தொலைக்காட்சிப் பேட்டியாளர் டிம் ரஸ்ஸர்ட் ஆகியோருடன் நமது கதாநாயகி ஜூடித் மில்லரும் ஒருவர்.

விசாரண மேற்கொண்ட பாட்ரிக் ஃபிட்ச்ஜெரால்ட் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்து பலரை சாட்சி சொல்ல அழைத்தார். ராபர்ட் நோவாக், டிம் ரஸ்ஸர்ட் உட்பட பலர் வந்து சாட்சி சொன்னார்கள். கொஞ்சம் முரண்டு பிடித்து பின்னர் டைம்ஸ் நிருபரும் சாட்சி சொன்னார். ஆனாலும் ஜூடித் மில்லர் தான் பத்திரிக்கை தர்மத்தைக் காப்பாற்றுவதாகவும், தனது செய்தி மூலம் யார் என்பதை வெளியிட மறுப்பதாகவும் சொல்லி சாட்சி சொல்ல மறுத்தார். சிறப்பு நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்லமல் இருப்பது குற்றமாதலால், இவர் சிறைக்கு அனுப்பப்பட்டார் (சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தில் தலையிட மறுத்து விட்டது). நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை இவருக்காக வெகுவாகப் போராடியது. பல தலையங்கங்கள் எழுதியது.

சிறையில் சில மாதங்கள் இருந்து விட்டு, திடீரென மனம் மாறி தான் சாட்சி சொல்ல சம்மதிப்பதாகக் கூறினார். தனது செய்தி மூலமான நபர், தன்னை ரகசியக் காப்பிலிருந்து விடுவித்து விட்டதாகக் கூறி, நீதிமன்றத்தின் முன் ஆஜரானார். இந்த செய்தி மூலம், வேறு யாருமல்ல, நாம் முன்கண்ட "ஸ்கூட்டர்" பேர்வழி தான், இதை முன்னமேயே கூட சொல்லி இருப்பேனே என்று கூறுகிறார்.

வெளியில் வந்த மில்லர் பல நாட்கள் மௌனமாயிருந்து விட்டு ஒரு நீண்ட தன்னிலை விளக்கக் கட்டுரை எழுதினார். ஆனால், இக்கட்டுரையில் விளக்கங்களை விட கேள்விகளே அதிகமாயிருந்தன. அவரது 2003ம் வருடக் குறிப்புகளில் வாலரி ப்ளேமின் பெயர் இருக்கிறது. அது எப்படி அங்கு வந்தது என்பது மறந்து விட்டது என்கிறார். "ஸ்கூட்டர்" லிப்பி அதை தன்னிடம் சொல்லவில்லை என்று சாதிக்கிறார். பேரழிவு ஆயுதங்கள் குறித்துத் தவறாக எழுதியது தான் மட்டுமல்ல என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்.

பத்திரிக்கையின் ஆசிரியர், இந்த விவகாரத்தின் சகல அம்சங்களும் தம்மை வேதனைப் படுத்துகின்றன என்று சொல்லியிருக்கிறார். மில்லர் தம்மிடமிருந்து பல விஷயங்களை மறைத்ததாகவும், ஈராக் விஷயத்தில் எந்த மேற்பார்வையுமின்றி தான் தோன்றித் தனமாக அவர் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார். பத்திரிக்கையின் நம்பகத்தன்மையை இது குலைத்திருப்பதாக பத்திரிக்கையின் ஊழியர்களே நினைப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன.

பொதுவாக புஷ் அரசை எதிர்க்கும் இப்பத்திரிக்கை, அதை ஆதரித்த ஒரு விஷயத்தில் இப்படி மாட்டிக் கொண்டது முரண்நகையாக இருக்கிறது.

அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தின் இறுதிக்கட்டம், இந்த வாரம் நிகழும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நிக்ஸனின் இரண்டாவது ஆட்சி காலத்திற்கு Watergate, ரேகனுக்கு Iran-Contra, க்ளிண்டனுக்கு Lewinsky போல் புஷ்ஷிற்கு இது உருவாகும் என்பது ஹேஷ்யமாக இருக்கிறது.

ஆயினும் செய்திகளை பிரசுரிக்கும் நிறுவனங்கள் செய்திகளின் பாடுபொருளாக ஆகியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

"Silence of the Lambs" திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது:

"Why don't you turn that high-powered perception at yourself and tell us what you see, or, maybe you're afraid to."

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

4 Comments:

Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//ஆயினும் செய்திகளை பிரசுரிக்கும் நிறுவனங்கள் செய்திகளின் பாடுபொருளாக ஆகியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. //

very true.

-Mathy

October 23, 2005 9:24 PM  
Blogger -/பெயரிலி. said...

ஜூடித் மில்லர் பெண்டகனுடனும் அகமட் ஸலாபியுடனும் மிக ஒட்டுதலாகவிருந்து செய்தி வெளியிட்டவர். செப் 11 இற்குப் பின்னால், ஈராக் நுழைவுவரை எங்கெங்கும் இவரே பாதுகாப்பு சம்பந்தப்பட்டசெய்தியாளராகத் தொலைக்காட்சிகளிலே. இவருக்கும் அந்த்ராக்ஸ் வந்திருந்த நேரமது.
ஒரு முறை இவரையும் அல் ஜஸீரா செய்தித்தாபனத்தினைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் (சி என் என் என ஞாபகம்) செவ்வி கண்டபோது, அரபுசெய்திதாபனங்களின் பக்கச்சார்பினைப் பற்றி செவ்வி கண்டவரை மீறி இவர் நேரடியாகக் கேள்வி கேட்டு அடித்துத்தள்ளினார். இவருடைய இந்த விவகாரம் வெளிவரமுன்னரே, இவருடைய செய்தித்தன்மை குறித்து ஸலூன் (அல்லது ஸ்லேட்?) ஒரு கட்டுரை வெளியிட்டிருந்ததாக ஞாபகமிருக்கிறது. ஸலாபியின் பெயர் கறை விழுந்தவுடன், இவரது கஷ்டகாலம் தொடங்கியது. ஸலாபி மீண்டு விட்டார். இவர் முயற்சிக்கின்றார்.

ஆனால், செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து குறைந்தது அமெரிக்க ஊடகங்களிலே ஒப்புக்கேனும் விவாதிக்கின்றார்களே. நமது ஊடகங்களிலே நடக்குமா? ஊடகங்களின் தவறைச்சுட்டிக்காட்டிய பதிவுகளையே மூடும்படி தேசியப்பத்திரிகைகளூம் நடுநிலைப்பத்திரிகைகளும் நடந்துகொள்ளும் நிலைதான் இருக்கின்றது. அது பற்றி வெளியான விவாதங்கள் பதிவுகளிலேகூட ஊடகக்கோணல்களைத் திட்டுதல் துப்புதலுக்கு அப்பால் பெருமளவு நடப்பதேயில்லையென்றே சொல்லலாம்..

October 23, 2005 11:41 PM  
Blogger Ganesh said...

Meenax

True, good post.

October 24, 2005 12:47 PM  
Blogger Boston Bala said...

ஆதியோடு அந்தமாய் அவ்வப்போது படித்து வந்தாலும், மொத்த நடப்பையும் விளக்கிய பதிவு.

The special counsels law has expired in 1999 without protest from either party. Republicans control both houses of Congress. The General Accounting Office, the investigative arm of Congress, has stepped back from challenging the White House after losing a court case that sought to open the records of Vice President Cheney's energy task force.

During the Bush administration, several special counsels have been requested: Rep. John Conyers, D-Mich., asked for a special counsel to investigate campaign contributions to Republicans by Westar Energy, a Kansas utility seeking exemption from some regulations. Environmental groups wanted an inquiry into whether the No. 2 official at the Interior Department violated ethics laws to help his former lobbying firm. Sen. Fritz Hollings, D-S.C., requested one to pursue possible conflicts of interest in the administration's inquiry into Enron's collapse.

Each time, the Justice Department declined. (Ashcroft recused himself from the Enron case because he had received Enron contributions as a Senate candidate.)

October 26, 2005 11:00 AM  

Post a Comment

<< Home