<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Saturday, October 01, 2005

துயிலாத கண்கள்

தூக்கம் வரவில்லை. நேற்றிரவு விடிய விடிய அலுவலகத்தில் வேலை. பகலில் வீட்டிறைச்சலில் தூங்க முடியவில்லை. அப்படியும் இப்பொழுது (மணி பத்து) தூக்கம் வரவில்லை. உடம்பு தூங்கு என்கிறது. மனம் சாயந்திரம் ஏன் டீ குடித்தாய் என்று கேட்கிறது. யாரைக் கேட்கிறது?

ஆப்பிரிக்காவை நினைத்தால் கவலையாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு Constant Gardner படம் பார்த்தேன். இன்று Tears of Sun பார்த்தேன். படத்தின் முடிவில் கொஞ்சம் அமெரிக்கப் படைகளுக்காக எடுக்கப்பட்ட propaganda படம் போலிருந்தாலும், அதில் மக்கள் படும் அவதிகளைப் பார்க்கையில் அழுகை வந்தது. நோய், பஞ்சம், இனக்கலவரம் என்று வகை வாரியாக கஷ்டப்பட்டு செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது இந்தியாவைப் பற்றிக் கவலைப்படுவதை நினைத்தாலே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது.


சன் டிவி செய்திகளில் வானிலை அறிக்கை தவிர மீதியெல்லாம் வேஸ்ட். தயாநிதி மாறனைப் பார்க்கும் போதெல்லாம் எரிச்சலாக இருக்கிறது. தமிழ் முரசு பத்திரிக்கை வாங்கினால் பதினைந்து ரூபாய் ஐஸ்க்ரீம் கூப்பன் இலவசமாம். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வகையில் என்றாலும், கூப்பனின் மதிப்பு குறைந்தது ஐந்து - ஆறு ரூபாயாவது இருக்கும். பத்திரிக்கை விலை இரண்டு ரூபாய். கொசுறு செய்தி: இன்று (அக்டோபர் ஒன்று) உலக முதியோர் தினமாம்.

இன்று சிவாஜி கணேசன் பிறந்த நாள். அதற்கான விழாவில் பிரபு பேசும் போது, சிவாஜி வீட்டில் இல்லாத குறையை சிவாஜி ராவ் (ரஜினிகாந்த்) தீர்த்து வைப்பதாகக் கூறியது டூ மச். முன்பு சிவாஜி நடித்து வீட்டில் சோறு போட்டார், இன்று ரஜினிகாந்தின் சந்திரமுகி சோறு போடுகிறது என்று சொல்ல வருகிறாரா?

சின்ன வயசில் ஒரு முறை சிவாஜி பிறந்த நாளன்று அப்பாவுடன் அவர் வீட்டுக்குப் போய் வாழ்த்தி இருக்கிறேன். 'எந்த ஸ்கூல் போறீங்க?', 'ஷ்ரைன் வேளாங்கன்னி', 'ஓ, நல்ல ஸ்கூலாச்சே, காலம்பற வெள்ள டிரஸ் போட்டுக்கிட்டு பசங்கெல்லாம் போறதப் பார்த்திருக்கிறேனே...' அவ்வளவு தான் நினைவிருக்கிறது.

Speaking of Rajinikanth, நேற்று வீட்டில் ஒரு உரையாடல்:

"ஸ்ரீகாந்த், அப்பா சொன்னதக் கேட்டியா?"

"என்ன சொல்றார், நியூ ஆர்லியன்ஸ்ல வீடெல்லாம் செங்கல் சிமெண்டி வச்சுக் கட்டணும்னு மறுபடியும் ஆரம்பிக்கறாரா?'

(உச்சுக் கொட்டியவாறு) "அதில்ல, நம்ம கல்யாணத்துக்கு சமையல் பண்ணினவரை ஞாபகம் இருக்கா?"

"Are you kidding me, jet-lag-ல பண்ணிண்ட கல்யாணம், யாரு பொண்ணுன்னு கூட ஞாபகமில்ல..இதில சமையக்காரரா?"

"செல்லப்பான்னு ஒருத்தர், அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? ரீசண்டா ரஜினி பொண்ணு கல்யாணத்துக்கும் அவர்தானாம்!"

(சட்டென்று நிமிர்ந்து) "நிஜம்மாவா?"

"ஆமாம், அதுக்குன்னு ரொம்ப excite ஆகாத, அவர் பயங்கர பிஸி, நம்ம கல்யாணத்தில சும்மா வந்து ரசத்துக்கு தாளிச்சு கொட்டிட்டுப் போயிருப்பார்"

"who cares? நம்ம கல்யாணத்துல ரசம் பண்ணினவர் ரஜினி வீட்டு கல்யாணத்திலயும் ரசம் பண்ணி இருக்கார், இத வச்சு நான் எட்டூருக்கு அளப்பேன்..ஃபோன எடு..."

நாளைக்கு வாஷிங்டனுக்கும் சியாட்டிலுக்கும் ஃபுட்பால் மேட்ச். கண்டிப்பாக வாஷிங்டன் தோற்கும். எனது காரில் பறக்கும் வாஷிங்டன் அணிக் கொடியை கிண்டலடிக்க நண்பர்களுக்கு மற்றொரு வாய்ப்பு.

குழலி பதிவைப் படித்து விட்டு சின்னக்கருப்பன் கட்டுரையைப் படித்தேன். அவர் சொல்ல வந்த கருத்து சரியானதுதான் - when it comes to social values, both liberals and conservatives have parts to play in defining and redefining it - ஆனால் இதை கொஞ்சம் தத்து பித்தென்று சொல்லியிருக்கிறார். நடுவில் ஊடகங்கள், பெரியார், மனுநீதி என்று flame-baits வேறு. அவரது கட்டுரைகளே பொதுவாக இப்படித்தான். ஒரு contrarian கருத்தை கஷ்டப்பட்டு முன்வைக்கும். சில சமயம் ஜெயம், சில சமயம் அபஜெயம் என்பது par for the course.

தூக்கம் வரவில்லை, ஆனால் கை வலிக்கிறது.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

2 Comments:

Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//ஆப்பிரிக்காவை நினைத்தால் கவலையாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு Constant Gardner படம் பார்த்தேன். இன்று Tears of Sun பார்த்தேன்.//

tears of Sun - பழைய படம் இல்லையா? 2003இல் ப்ரூஸ் வில்லிஸுக்காகப் பார்த்தது. ஹவாய் லொகேஷன்கள் சிலது கண்டுபிடிக்கவும் முடிந்தது. 2003இல் பார்த்ததால், அப்போதைய நிகழ்வுகள்தான் மனதில் நின்றன.

constant gardnerகூட Lord of Warஐயும் பாருங்க.

தூக்கம் வராமல் பின்னூட்டம் கொடுக்கும் இன்னொரு கிழக்குக்கடற்கரையோர வாசி.

-மதி

October 01, 2005 11:33 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

//நடுவில் ஊடகங்கள், பெரியார், மனுநீதி என்று flame-baits வேறு. அவரது கட்டுரைகளே பொதுவாக இப்படித்தான்.//

இதெல்லாம் அவருடைய trade mark. அதை இப்போதெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை என்பதாலோ என்னவோ அம்பறாத்துணியிலிருந்து மரபணுவியல், பரிணாமவியல் என்றெல்லாம் உருவியிருக்கிறார். இவரை New England பகுதியிலிருந்து Kansas பக்கம் அனுப்பி Intelligent Design ம் கற்றுக்கொள்ளச் செய்தால் தமிழ்ச்சமூகவியல் அலசலுக்கு உதவியாக இருக்கும்.

October 01, 2005 11:56 PM  

Post a Comment

<< Home