ஒரு அமெரிக்க செய்தியின் பயணக்கதை
[அமெரிக்காவின் ஒரு அநாமதேய மூலையில் உருவாகும் ஒரு செய்தி, எப்படி வலுப்பெற்று, தெற்கு-கிழக்கு திசைகளில் நகர்ந்து, இந்தியப்பெருங்கடலில் மையம் கொண்டு, சென்னைக் கரையினை பெரும் சீற்றத்தோடு கடக்கிறது என்பதை விளக்கும் கற்பனைச் சித்திரம்]
காட்சி - ஒன்று
அமெரிக்காவில் ஒரு நெடுஞ்சாலை, காரில் கணவன், மனைவி.
கணவன்: கடங்காரன், எவ்வளவு மெதுவாப் போறான் பாரு, ரோட்டை block பண்ணிண்டு...
மனைவி: நல்ல கார் இல்ல இது?
கணவன்: ஔடி கார், சூப்பர் கார், ஓட்டத் தெரியாம ஓட்டறான்..
மனைவி: அப்பா! வழி கிடைச்சுது, முன்னாடி போங்க...
கணவன்: யார் ஓட்டறது பாரு...
மனைவி: தேசி மாதிரி இருக்கு!!
கணவன்: நிஜமாவா?
மனைவி: அப்டித்தான் இருந்ததுன்னு நினைக்கறேன்..
கணவன்: தேசி, ஔடி கார் வாங்கி இருக்கானா? ஆச்சரியமா இருக்கு...you know what...ரவி சாஸ்திரி fan-ஆ இருப்பான்...
காட்சி - இரண்டு
அமெரிக்காவில் ஒரு பார்ட்டி, மேற்கண்ட கணவனுடன் மற்றொருவர்.
மற்றொருவர்: காஸ் விலை பார்த்தீங்களா?
கணவன்: அநியாயம்! மூணேகால் டாலர், பேசாம hybrid கார் வாங்க வேண்டியது தான்...
மற்றொருவர்: அதெல்லாம் எங்க...நமக்கெல்லாம் civic-கும் corolla-வும் தான் லாயக்கு...
கணவன்: you know what...நேத்து ஒரு தேசி ஔடி கார் ஓட்டறதப் பார்த்தோம்!
மற்றொருவர்: ஆடி காரா? ஆச்சரியமா இருக்கு..you know what I think...அந்தாளு ரவி சாஸ்திரி ஃபேனோ என்னவோ, remember champions trophy?
கணவன்: you won't believe, that's exactly what I thought...
(சிரிக்கிறார்கள்)
காட்சி - மூன்று
இந்தியா, ஒரு பத்திரிக்கை ஆபீஸ்
ஆசிரியர்: ஒரு ரெண்டு பக்கம் ரொப்பணும், கட்டுர மேட்டர் ஏதாவது வச்சுரிக்கியா?
எழுத்தாளர்: அமெரிக்காவுல என் கஸின் இருக்கான், அவன் கிட்ட போன வாரம் ஃபோன்ல பேசிட்டிருந்தேன், அமெரிக்க இந்தியர்களின் நுகர்பொருள் கலாச்சாரம் பத்தி எழுதலாம்னு இருக்கேன்...என்ன சொல்றீங்க?
ஆசிரியர்: சூப்பர், நல்ல ஷார்ப்பா எழுதுங்க
மேற்கூறிய பத்திரிக்கை ஆபீஸ் எந்தப் பத்திரிக்கை என்பதைப் பொறுத்து, அடுத்த வாரத்தில் மூன்று சாத்தியங்கள்:
ஜூனியர் விகடன்:
அமெரிக்கா, அமெரிக்கா என்று வாயைப்பிளந்து கொண்டு போய் விட்டாலும், அங்கு சென்ற இந்தியர்கள் இன்னமும் தமது தாய்மண்ணை மறக்காமல் இருக்கிறார்கள் என்பது தான் நிஜம். உதாரணம் - இருபது வருடங்களுக்கு முன்பு ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியாவில் ஜெயித்த ஆடி கார் நினைவிருக்கிறதா? நம்மில் பலரே அதை மறந்து விட்டோம், ஆனால் அந்த நாட்களை பாசத்தோடு நினைவு கூறும் அமெரிக்க இந்தியர்கள் இன்று பெருமளவில் வாங்கிக் குவிப்பது ஆடி கார்களை தானாம்!
காலச்சுவடு:
மரபுவழிப்பட்ட நுகர்வோர் கலாசாரமானது ஊடக இயக்கிகளால் தொடர்ந்து மறுவரையறைகளுக்கு உட்படுத்தப் படுவது வெறுமனே ஒரு தடையற்ற சந்தையின் ஆரம்பகாலகட்டத்தின் குறைகளின் பிரதிபலிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதற்கு இன்று 'வளர்ச்சி' பெற்ற சந்தையான அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களும் தமது பால்ய வயது ஊடக பிம்பங்களின் பிடியில் இருப்பதே உதாரணம். அமெரிக்க இந்தியர்களிடையே இன்றும் ஆடி கார்கள் மிகப் பிரபலமாக இருப்பதற்கான காரணம் என்ன என்பதை உணரும் போது சில உண்மைகள் தெரிய வரலாம்.
தினமலர்:
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்தியர்கள் எங்கு சென்றாலும் தனது கலாச்சார மரபுகளை மீற மாட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணமாக அமெரிக்காவிலிருந்து ஒரு ஆச்சரியமான செய்தி வந்திருக்கிறது!
அமெரிக்க இந்தியர்கள் ஆடி மாதத்தில் தான் கார்கள் உட்பட எல்லாப் புதுப் பொருள்களையும் வாங்குகிறார்களாம்!!

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
21 Comments:
Pinnitel Pongo
:)))))))
LOL :)))
Can you add english mags too like Frontline, TOI ;-)
//அமெரிக்க இந்தியர்கள் ஆடி மாதத்தில் தான் கார்கள் உட்பட எல்லாப் புதுப் பொருள்களையும் வாங்குகிறார்களாம்!!//
இது..இது...அசத்தல்...ரகம் !!!!!!
அசத்திட்டீங்க ஸ்ரீகாந்த்....
நல்ல படைப்பிது! வாழ்த்துக்கள் ஸ்ரீகாந்த்.
நல்ல ரசனை ஸ்ரீகாந்த் மீனாட்சி
LOL :)))
ஆடி.....ஹா ஹா ஹா....நல்ல நகைச்சுவை. கிண்டலோ கிண்டல்.
:-))
-:)
Good one :-)))
விட்டால் அமெரிக்காவிலும் 'ஆடித்தள்ளுபடி'யில் கார்களை விற்பதாக 'தினமலரில்' செய்தி வந்துவிடப்போகிறது...;))))...
நல்ல பதிவு...
ஜூவி, தினமலர் சூப்பர். காலச்சுவடு parody-ல் வெறும் நீள வாக்கியங்கள் தான் இருக்கின்றன. நான் கொஞ்சம் ட்ரை பண்ரேன்
"மரபுவழிப்பட்ட நுகர்வோர் கலாச்சாரம் ஊடகங்களால் தொடர்ந்து மறுவரையறைக்கு உட்படுத்தப்படுவதை தடையற்ற ஒரு சந்தையின் ஆரம்ப காலகட்டக் குறைகளின் பிரதிபலிப்பாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. இதற்கு இன்று 'வளர்ச்சி' பெற்ற சந்தையான அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களும் தமது பால்ய காலத்திய ஊடக பிம்பங்களின் பிடியில் இருப்பதே ஓர் உதாரணம். அமெரிக்க இந்தியர்களிடையே இன்றும் ஆடி கார்கள் மிகப் பிரபலமாக இருப்பதற்கான காரணம் என்ன என்பதை உணரும் போது சில உண்மைகள் தெரிய வரலாம்."
மற்றபடி ஓக்கே :)
நண்பர்களே,
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி...கடைசி அனானி, உங்கள் திருத்தத்திற்கும்...
ரொம்ப நாளாய் குடைந்து கொண்டிருந்த விஷயத்தை வெளியில் கொண்டு வந்து போட்டதில் எனக்கும் ஒரு நிம்மதி :-)
ஸ்ரீகாந்த்.
Srikanth,
Dinamalar take was too good.
I guess, kaalachuvadu "meipporul kandu" gives a anti-capitalistic twist.
JV and Dinamalar doesn't know what is "meiporul" and never bothers about it.
kalakal :)
pbbnvco - vera onnum illa, apart from my one line comment, i had to type this meaningless string to post, or for now i would call it a souvenir from your blog:)
:)
PA.RA
"கடங்காரன்", "எவ்வளவு மெதுவாப் போறான் பாரு"
PA.RA: Road Rage, - அமெரிக்கா சொலித்தந்த bad word
தேசி, ஔடி கார் வாங்கி இருக்கானா? ஆச்சரியமா இருக்கு - ரவி சாஸ்திரி fan-ஆ இருப்பான்...
pa.ra: ரவி sastri நல்ல காஜ் அடிசி vangina கார் அதை எவனாவது ஓட்டுவனா. America மொகம் நம் மக்க்ளை விடவில்லை
(இன்னும் ஊளருவேன்.......வர்டா)
Good one Srikanth
தினமலருக்கு விட்ட குத்து அசத்தல்!
///அமெரிக்க இந்தியர்கள் ஆடி மாதத்தில் தான் கார்கள் உட்பட எல்லாப் புதுப் பொருள்களையும் வாங்குகிறார்களாம்///
Still laughing :-)
Post a Comment
<< Home