<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Saturday, October 22, 2005

அசாதாரணமான கதைகள்

ஜும்பா லஹிரி இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த ஆங்கில எழுத்தாளர். இவரது முதல் புத்தகம் "Interpreter of Maladies" என்ற சிறுகதைத் தொகுப்பு. ஒன்பது சிறுகதைகள் கொண்ட இந்த இருநூறு பக்க புத்தகத்திற்குப் 2000ம் வருடத்திற்கான புலிட்சர் பரிசு கிடைத்தது. கொஞ்ச நேரம் முன்பு இப்புத்தகத்தைப் படித்து முடித்தேன்.


ஏகோபித்தமான வரவேற்பும், பெரும் பரிசையும் பெற்ற ஒரு புத்தகத்தைப் படிப்பதில் சில இடைஞ்சல்கள் உள்ளன. "ஒழுங்காப் படிக்கிறியா, புரிஞ்சு படிக்கிறியா இல்ல ஏனோ தானோன்னு படிக்கிறியா' என்று பக்கத்தில் நின்று கொண்டு யாரோ மிரட்டியவாறு இருப்பதைப் போன்ற பிரமை நீங்கக் கொஞ்சம் நேரமாயிற்று. முதல் சில பக்கங்களைப் பரீட்சைக்குப் படிப்பது போல் தான் படித்தேன்.

இதையெல்லாம் மீறி, ஆரவாரமில்லாத, எளிமையான மொழியில், மிகுந்த காருண்யத்துடனும், மனித நேயத்துடனும் எழுதப்பட்டுள்ள இக்கதைகள், என்னிடம் தோழமையுடன் பேசின. படிக்கப் படிக்க, லஹிரியின் கதைகள் என்னை முழுமையாக வசீகரித்தன.

எல்லாக் கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் அந்நியப்படுதலைப் பற்றிப் பேசுகின்றன. சில கதைகளில் மிக நேரடியாகவும், சிலவற்றில் அடிநாதமாகவும் இது இருக்கிறது. ஒன்பது கதைகளில் ஆறு, அமெரிக்காவில் இந்தியர்களின் வாழ்வைச் சித்தரிப்பதாய் உள்ளன; இரண்டு முழுவதும் இந்தியக் கதைகளாகவும், ஒன்று இந்தியா செல்லும் அமெரிக்க இந்திய சுற்றுலாக் குடும்பத்தைப் பற்றியும் உள்ளன. இந்தியர்கள் பெரும்பாலும் வங்காளிகள்; அவ்வப்போது தலைப்படும் பஞ்சாபியர்கள். அமெரிக்கா வந்தவர்கள் பல காலத்துக்கு முன்பு வந்தவர்களாகவோ, அவர்களது பிள்ளைகளாகவோ இருக்கின்றனர்; சமீபத்திய H1-Bக்கள் இல்லை.

லஹிரியின் பின்னணி காரணமாகவோ என்னவோ, அமெரிக்காவில் இந்தியர்களின் வாழ்வை ஒட்டிய கதைகள் மிகவும் நேர்த்தியாக உள்ளன. கவனமாகவும் நுணுக்கமாகவும் உள்ள விவரணைகள், (குறிப்பாக அமெரிக்கர்கள்-இந்தியர்கள் உராயும் தருணங்கள்) பாத்திரப் படைப்புகள், சம்பவங்கள் என்று பார்த்துப் பார்த்து எழுதியதாக இருக்கின்றன. இந்தியாவில் நிகழும் கதைகள் சிறப்பாக இருப்பினும், மற்ற கதைகளோடு சேர்த்து வாசிக்கையில் ஒரு மாற்று குறைவாகத் தான் தோன்றுகிறது.

எல்லாக் கதைகளுமே சாதாரண மக்களைச் சுற்றித் தான் இயங்குகின்றன. சாதாரண மக்களின் வாழ்வுகள் சின்னச்சின்ன சிக்கல்களும், சஞ்சலங்களும், சமாதானங்களும், சமரசங்களும் - in short சாதாரணங்கள் - நிரம்பியது. இதைக் குத்திக் கிளறி, நக்கலடித்து எழுதுவது சுலபம். இவர்களைப் புரிந்துணர்வுடன், பரிவுடனும் அணுக அன்பு நிறைந்த மனமும், நுட்பமான எழுத்துத் திறனும் வேண்டும். லஹிரியிடம் இவை உள்ளன என்பதற்கு இவரது கதைகளே சான்று. நமக்கு நெருங்கிய நண்பரொருவரைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லும் போது, அந்த நண்பரின் சிறிய குறைகளை மறைத்து, பெரிய குறைகளை சிறிதுபடுத்திச் சொல்வோம் அல்லவா? அந்தத் தன்மை கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் உள்ளது.

எனக்கு எல்லாக் கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் மிகவும் பிடித்திருந்தது. ஒரு கதை - "Interpreter of Maladies" என்ற புத்தகத் தலைப்புக் கதை - தவிர. மற்ற கதைகளில் இல்லாத செயற்கைத்தனம் - பாத்திரங்கள், நிகழ்வுகள் இரண்டிலும் - இதில் இருப்பதாகப் பட்டது. எனக்கு மிகவும் பிடித்த கதைகள் - "When Mr. Pirzada came to dine", "Mrs. Sen's" மற்றும் "The third and final continent". புத்தகத்தின் ஐந்தாவது கதையைப் படித்ததும் பாஸ்டன் பாலாஜி இதைப் படிக்கக் கூடாது என்று தோன்றியது.

புத்தகத்திலிருந்து சில மேற்கோள்கள்:

அமெரிக்காவை இந்திய வாசகர்களுக்கும், இந்தியாவை அமெரிக்க வாசகர்களுக்கும் அறிமுகம் செய்ய ஒரு குழந்தைப் பாத்திரத்தின் பார்வையை ஒரு உத்தியாக சில கதைகளில் பயன்படுத்துகிறார் லஹிரி. அந்த வகையில் இரு இடங்கள்:

இந்தியா எங்கே இருக்கிறது?

"Mr. Pirzada is Bengali, but he is a Muslim", my father informed me. "Therefore he lives in East Pakistan, not India." His finger trailed across the Atlantic, through Europe, the Mediterranean, the Middle East, and finally to the sprawling orange diamond my mother once told me resembled a woman wearing a sari with her left arm extended....Pakistan was yellow, not orange. I noticed that there were two distinct parts to it, one much larger than the other, separated by an expanse of Indian territory; it was as if California and Connecticut constituted a nation apart from the US.

அரிவாள்மணை

Instead of a knife, she used a blade that curved like the prow of a Viking ship, sailing to battle in distant seas. The blade was hinged at one end to a narrow wooden base. the steel, more black than silver, lacked a uniform polish, and had a serrated crest, she told Eliot, for grating.

பாஸ்டன் பாலாஜி படிக்கக் கூடாத கதையில் ஒரு அழகான வர்ணனை:

She stared at some bottles, some short, others tall, arranged on an oval tray, like a family posing for a photograph.

முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்டனில் ஒரு நூறு வயது பெண்மணி வாழ்ந்த இல்லத்தின் வருணனையின் நுட்பம் பிரமிக்க வைக்கிறது:

Next to the bench on which the woman sat was a small round table, its legs fully concealed, much like the woman's, by a skirt of lace. The table held a lamp, a transistor radio, a leather change purse with a silver clasp, and a telephone. A thick wooden cane coated with a layer of dust was propped against one side. There was a parlor to my right, lined with bookcases and filled with shabby claw-footed furniture. In the corner of the parlor I saw a grand piano with its top down, piled with papers. The piano's bench was missing; it seemed to be the one in which the woman was sitting. Somewhere in the house a clock chimed seven times.

இதே கதையின் முடிவில் ஒரு பாத்திரம் சொல்வதாக வரும் வரி:

Still, there are times I am bewildered by each mile I have traveled, each meal I have eaten, each person I have known, each room in which I have slept. As ordinary as it all appears, there are times when it is beyond my imagination.

இதை ஜும்பா லஹிரியே சொல்வதாகக் கொள்ளலாம் - கடைசி வரியைத் தவிர.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

2 Comments:

Anonymous Anonymous said...

http://fifth-beatle.blogspot.com/2005/10/it-is-long-time-since-i-posted.html

October 23, 2005 12:47 AM  
Blogger Srikanth Meenakshi said...

Anon,

Quite evidently, I disagree with Shwe's opinion about Lahiri. Agreed, her writing is not fast-paced and might not be everyone's cup of tea, but to say her narration is needlessly detailed betrays a lack of patience for good reading. Many of Lahiri's stories analyse fine human emotions, analysis that cannot be rushed through at a frenetic pace. Da Vinci code, this is not.

October 23, 2005 10:05 AM  

Post a Comment

<< Home