<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Wednesday, October 05, 2005

காதரீனாவும் கிருஷ்ணனும்

இந்த மாத காலச்சுவடு இதழில், அமெரிக்கா காதரீனாவை எதிர்கொண்டது பற்றி எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

பொதுவாக அவர் முன்வைக்கும் கருத்துக்கள் மூன்று:

1. தடையில்லாச் சந்தை அடையாளம் கண்டு கொண்டு ஒடுக்கிய ஏழை எளியவர்கள், மூன்றாம் உலக நாட்டுப் பிரஜைகளைப் போல், இயற்கைச் சீற்றங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.
2. பாதிக்கப்பட்ட இடங்களின் நிலைமையும், மீட்பு நடவடிக்கைகளின் அலங்கோலமும் அமெரிக்க மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும், மைய அரசின் மெத்தனப் போக்கும் பாரபட்ச அணுகுமுறையும் தொடர்கின்றன.
3. அமெரிக்காவின் இந்நிலைக்கு ஒரு ஆதார காரணம், மக்கள் தீவுகளாக, சமூகப் பிணைப்புகள் இன்றி வாழ்வது. மற்றவை மாறாவிடினும், இது மாறக்கூடும்.

பொதுவான அளவில் இம்மூன்று கருத்துக்களுடனும் எனக்கு உடன்பாடுதான். குறிப்பாக, அமெரிக்கா வந்து வாழும் எந்த இந்தியப் பிரஜைக்கும் (குறிப்பாக பெற்றோர்/முதியவர்களுக்கு) தெளிவாகத் தெரியும் விஷயம் மூன்றாவது கருத்து. சார்புகளின்றி, தனி மனிதர்களாக, பெருமையுடன் வாழ்வது என்பது அமெரிக்க வாழ்வியல் கூறுகளில் ஒன்று. சாதாரண சூழ்நிலைகளில் சாதகமானதும், அசாதாரண சூழ்நிலையில் பாதகமானதுமான இவ்வியல்பு, 9/11 சமயத்தில் அண்டை வீட்டுக்காரர்கள் தீவிரவாதிகளா என்பதை அறிந்து கொள்ளத் தடையாக இருக்கிறது என்ற அர்த்தத்தில் பேசப்பட்டது. அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரை மாறாத இவ்விஷயம், இப்பொழுதிலிருந்து மாறும் என்பது கிருஷ்ணனின் நம்பிக்கை.

ஆயினும், கட்டுரையில் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கும் மேம்போக்கான 'பா.ராகவன்' தனமான வாக்கியங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

முதலில், கட்டுரையின் தலைப்பே, கட்டியம் கூறுகிறது. 'கத்ரீனா புயல்: அமெரிக்காவின் அவமானகரமான தோல்வி' என்பதில் தெரியும் schedenfreude சந்தோஷம், கட்டுரையிலும் அவ்வப்போது தெரிகிறது.

கட்டுரையின் ஆரம்பத்திலேயே, 'புயலைப் பற்றி தொலைக்காட்சி நிலையங்களும், பத்திரிக்கைகளும் ஓலமிட்டுக் கொண்டிருந்தாலும் அமெரிக்க மக்கள் அதை அதிகம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை' என்று மேம்போக்காகக் கூறுகிறார். எந்த ஆதாரத்தில் என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்த எல்லாரும் - இந்திய, அமெரிக்க, கறுப்பு, வெளுப்பு, சீனர் - இதைப் பற்றி கவலைப்பட்டார்கள், காசு கொடுத்தார்கள். எங்கள் அலுவலகத்தில், இதற்காக சிறப்பு விடுப்பு அளிக்கப்பட்டது (தன்னார்வத் தொண்டர்களுக்கு). அமெரிக்க மக்கள் கண்டு கொள்ளாத விஷயத்தைப் பற்றி தொலைக்காட்சி நிலையங்கள் பத்து நிமிஷத்திற்கு மேல் பேசாது என்பதுதான் இங்கு உண்மை.

இதன் பின்விளைவுகளை ஒரு கறுப்பு-வெளுப்பு பிரச்னையாக பல இடங்களில் சித்தரிக்கும் ஆசிரியர், புயலுக்கு முன்னால் பள்ளிப் பேருந்துகளை சரியாக உபயோகப்படுத்தாத நகர மேயர் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்பதைச் சொல்ல விட்டு விட்டார். இந்தத் தவிர்த்தல், இவ்விஷயம் அவரது கட்டுரையின் சாய்மானத்திற்கு எதிராக இருக்கும் என்பதினால் என்பது போல்தான் தோன்றுகிறது.

நடுவில் க்யூபாவிற்கு ஒரு ஷொட்டு வேறு. 2004-ல் நிகழ்ந்த புயலில் ஒருவர் கூட இறக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியவர், இதோ இப்பொழுது 2005-ல் டென்னிஸ் என்ற புயலில் 16 பேர் இறந்ததையும், $1.6 billion சேதம் விளைந்ததையும் மறந்து விட்டார். முதலில் க்யூபாவுடன் நியூ ஆர்லியன்சை ஒப்பிடுவதே தவறு. க்யூபா நம்மூர் நாகபட்டினம் மாதிரி, புயல் வராவிட்டால் தான் ஆச்சரியம். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்திலும் மிகப் பெரும் புயல்கள் வெறும் பொருட்சேதத்தோடு போய்ச் சேர்ந்திருக்கின்றன. அதனுடன் க்யூபாவை ஒப்பிட்டால் சரியாக் இருக்கும், கூடவே, ஒவ்வொரு வருடமும் டயர் ட்யூபில் காற்றடித்துக் கொண்டு நூற்றுக்கணக்கான பேர் க்யூபாவிலிருந்து ஃப்ளோரிடாவிற்கு கடலில் மிதந்து வருவது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்தாலும் உபயோகமாக இருக்கும்.

காத்ரீனா போன்ற நிகழ்வுகளிலிருந்து படிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. But, sometimes, just sometimes, you can read a little too much into it.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

15 Comments:

Blogger Kasi Arumugam said...

அதென்னவோ, பெரும்பாலான இந்திய இதழாளர்கள், ஆசிரியர்கள் 'இதுதான் சாக்கு என்று அமெரிக்காவை தாக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்தது' என்று எண்ணிக் கொன்டு எழுதுவதாகத் தெரிகிறது. (காலச்சுவடு கட்டுரை படிக்கவில்லை, பொதுவாக சொல்கிறேன்.)

அமெரிக்காவில் 4 வருடம் இருந்த அனுபவத்தில் எனக்குத் தோன்றுவது: இந்த நிகழ்வு அநியாயத்துக்கு ஊதிப் பெருக்கப்படுகிறது (உ.ம்.: வாஷிங்டன்:கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக சூறாவளியால் அமெரிக்கா சுக்கு நூறாகிவிட்டது. - தினமலர் 25 செப் தலைப்புச்செய்தி). ஒரு வசதியுள்ளவனோ, திறமைசாலியோ ஒரு சிறு விபத்தில் சிக்கிக்கொன்டு அடிபட்டு சிரமப்படும்போது, அவனளவுக்கு வளரமுடியாத (காரணம் என்னவாகவோ, நியாயமானதோ அநியாயமானதோ, இருந்துவிட்டுப் போகட்டும்) 'அவனுக்கு வேணும், என்ன ஆட்டம் போட்டான்' என்று ஆனந்தப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படியிருகிறது இந்த விமர்சனங்கள். அவன் அடுத்த நாளே பழைய நிலைக்குத்திரும்பி அதைவிடப்பெரிய காரில் போகப்போகிறான் அன்றும் என் காத்துப்போன டயர் சைக்கிளை உருட்டிக்கொன்டு பெருமுச்சு விட்டுக்கொண்டு நான் போகப்போகிறேன்.

நிற்க.

அவனை சிலாகித்து ஆராதிக்கச் சொல்லவில்லை. அவனளவுக்கு வளர என்ன வழி என்று சிந்தித்து நம்மை மேம்படுத்திக்கொள்ள எண்ணுவதுதானே சரியாக இருக்கும். அமெரிக்காவின் மேல் எனக்குக் கடும் விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்கெல்லாம் இந்த ஒரு காத்ரீனா சமாசாரத்தின் வழியாக நான் வடிகால் தேட முடியாது.

October 06, 2005 12:06 AM  
Blogger Jayaprakash Sampath said...

ஒங்க வலைப்பதிவுலே, anonymous comment போட முடியாதா? மொதல்ல அதை enable பண்ணுங்க... add a smilie here

October 06, 2005 12:16 AM  
Blogger வாசகன் said...

//அமெரிக்காவின் மேல் எனக்குக் கடும் விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்கெல்லாம் இந்த ஒரு காத்ரீனா சமாசாரத்தின் வழியாக நான் வடிகால் தேட முடியாது.//

That's it.

October 06, 2005 2:31 AM  
Blogger Srikanth Meenakshi said...

காசி, ஆணியை அதன் தலையில் அடித்து விட்டீர்கள் (நன்றி, சுஜாதா).

பிரகாஷ், யோசித்துக் கொண்டிருந்தேன், செய்து விடுகிறேன்...

October 06, 2005 8:22 AM  
Anonymous Anonymous said...

இணைய வசதியும் வீட்டில் நூறு புத்தகங்களும் இருந்தால் யார் எதைப் பற்றியும் எழுதிவிடலாம் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. வெகுஜன இதழ்கள், சிற்றிதழ்கள் இரண்டும் இத்தகைய எழுத்துக்களை ஊக்குவிக்கின்றன.

October 06, 2005 9:35 AM  
Blogger PKS said...

அக்டோபர் காலச்சுவடில் வந்திருக்கும் ஜார்ஜ் ஹார்ட் இண்டர்வியூ பற்றியும் எழுதப் போறீங்களா. கலக்கியிருக்காரே ஹார்ட் :-). விசிலடிச்சான் குஞ்சுகள் கொஞ்சம் தைய தைய என்று குதிக்கும் அந்த நேர்காணலைப் படித்தால். ஆனால், ஹார்ட்டின் அருமையான நேர்காணலை வெளிக் கொணர்ந்த அ. முத்துலிங்கத்துக்கும் காலச்சுவடுக்கும் நன்றி சொல்லத்தான் வேண்டும். அந்த நேர்காணலைப் பற்றி எழுதுங்க தலை. நான் எழுதலாம்தான். என்னத்த எழுதறது. எல்லாத்தையும்தான் ஹார்ட் சொல்லிட்டாரே :-)

அன்புடன், பி.கே. சிவகுமார்

October 06, 2005 11:23 AM  
Anonymous Anonymous said...

ஒரு விசிலடிச்சான் குஞ்சுவின் தைய தைய :-
ஜார்ஜ் ஹார்ட் வெள்ளைக்காரரா இருந்தாலும் கவுசல்யா பாப்பாத்தியைக் கட்டினதிலிருந்தே அவருடைய பார்ப்பனீய இந்துத்துவ வெறியை புரிந்து கொண்டு அவருடைய தமிழின வெறுப்பை கட்டுடைப்பு செய்து விடலாமே. இந்த ஆள் ஈழத்தமிழனைப் பற்றி வேறு என்ன உருப்படியாகச் சொல்லப் போறாரு?

October 06, 2005 1:22 PM  
Blogger PKS said...

காலச்சுவடின் அந்த நேர்காணலிலே, தமிழ் மற்றும் சமஸ்கிருதம் பற்றிய கருத்துகள், நீலகண்ட சாஸ்திரியைப் பற்றிய கருத்துகள், ஆரியர் வருகைக்கு முன்னே ஜாதிகள் தென்னாசியாவில் இருந்தன என்ற கருத்து என்று இன்னும் பல முக்கிய கருத்துகள் உள்ளன. இலங்கைத் தமிழரைப் பற்றிய கருத்தும் இருக்கிறது. என்னளவில், அதைவிட முக்கியமான கருத்துகள் அந்த நேர்காணலில் உள்ளன. அனானிமஸ் தனக்கு எது முக்கியம் என்பதை இங்கே சொல்லியிருக்கிறார் போல. அதை அவர் சொன்னதன் மூலம் அவர் யார் என்பதை அடையாளம் காட்டியிருக்கிறார். அதற்கு நன்றி!

- பி.கே. சிவகுமார்

October 06, 2005 3:29 PM  
Blogger Boston Bala said...

---schedenfreude

நீங்களும் 'பாஸ்டன் லீகல்' பார்த்ததின் விளைவா! அல்லது தற்செயலான பிரயோகமா?

இந்தத் தலைப்பில் குஷ்புவில் ஆரம்பித்து பா.ரா./சுஜாதா விமர்சனங்கள் வரை கோர்த்து விடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் :-))

October 06, 2005 4:23 PM  
Blogger Srikanth Meenakshi said...

PKS, ஹார்ட் பேட்டி படித்தேன், அதைப்பற்றிக் கருத்து சொல்வதற்கெலாம் ஞானம் வேண்டுமய்யா...அதைச் செய்கிறேன் என்று நானெல்லாம் புறப்பட்டால், தமிழன்னை துடைப்பக்கட்டையோடு வருவாள்...

ஆனால், அவரது தாராளமான, தயக்கமில்லாத சிந்தனை வெளிப்பாடுகள் refreshing-ஆக இருந்தது. பாரதி பற்றிய கேள்விக்கு மட்டும் அந்த அளவுக்கு நெளிந்து நழுவி இருக்க வேண்டாம்.

பாபா, Boston Legal-எல்லாம் பார்க்கவில்லை, பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு முறை தேவையில்லாமல் NY Yankees-ஐ கிண்டலடித்த போது ஒரு அமெரிக்க நண்பர் அந்த ஜெர்மானிய சொல்லை அறிமுகம் செய்து வைத்தார் :) இன்னமும் விலாவாரியாக அதைப்பற்றி எழுதலாம்...ஜமாயுங்கள்! BTW, Red Sox என்ன, கடையை மூடி விட்டார்களா?

October 06, 2005 4:47 PM  
Anonymous Anonymous said...

பி கே எஸ்

எப்படி இவ்வளவு சரியாக விசிலடிச்சான் குஞ்சுகள் வருவார்கள் என்று சொன்னீர்கள்? சொல்லி முடித்தவுடன் தங்களது ஈன புத்தியைக் காட்ட வந்து நிற்கிறார்களே? வி கு என்பதெல்லாம் இவர்களுக்கு ரொம்ப அதிகம். இவர்களை அவ்வளவு கண்யமாகவெல்லாம் அழைக்கத் தேவையில்லை. பாருங்கள் போட்ட பதிலில் இருந்தே இவர்களது இழிபிறப்புத் தெரியவில்லை? ஜார்ஜ் கார்ட் தமிழைச் செம்மொழி என்று அறிவிக்க உதவி செய்த பொழுது இந்த கீழ்ப்பிறப்புகளுக்கு அவரது மனைவி யார் என்று தெரியவில்லையோ? இந்த அசிங்கள் த்லையில் வைத்துக் கொண்டு கூத்தாடும் பத்மநாப ஐயர் யார் என்று மறந்து விட்டதோ? அல்லது இவர்க்ளின் அபிமான மாறன் மனைவி யார் என்பதோ, இன்று இளவரசாராக வலம் வரும் இளைய மாறனின் மனைவி யார் என்பதும் தெரியவில்லையோ? இது போன்ற அண்டை நாட்டுப் படைகளுக்குப் பிறந்த அநாமதேயங்களுக்கும், சுடுகாட்டில் பிணத்தைத் தின்னும் மாடன்களுக்கும், எங்கே தன் பெயரில் உள்ள பிள்ளை தனது தே பிள்ளை ஜாதியைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று அதை மறைத்து வாழும் புழுத்துப்போன மலங்களுகுக்கும் ஜாதியைத் தவிர வேறு எதையும் எழுதிட முடியாதுதான். ஜார்ஜ் கார்ட் அவர்களின் அறிவில் ஒரு தூசியைக் கூட எட்ட முடியாத நாய்கள் குறைத்துக் கொண்டுதான் இருக்கும். விடுங்கள். வெறிபிடித்த மிருகங்களுக்கு குறைக்கவும் கடிக்கவும் மட்டுமே தெரியும்.

October 06, 2005 6:17 PM  
Blogger வானம்பாடி said...

//இது போன்ற அண்டை நாட்டுப் படைகளுக்குப் பிறந்த அநாமதேயங்களுக்கும், சுடுகாட்டில் பிணத்தைத் தின்னும் மாடன்களுக்கும், எங்கே தன் பெயரில் உள்ள பிள்ளை தனது தே பிள்ளை ஜாதியைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று அதை மறைத்து வாழும் புழுத்துப்போன மலங்களுகுக்கும் ஜாதியைத் தவிர வேறு எதையும் எழுதிட முடியாதுதான். ஜார்ஜ் கார்ட் அவர்களின் அறிவில் ஒரு தூசியைக் கூட எட்ட முடியாத நாய்கள் குறைத்துக் கொண்டுதான் இருக்கும்.//

அடாடாடா.. முந்தைய அனாமேதேயம் எழுதியதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டீர்களே. என்ன நாகரீகம், என்ன கண்ணியம்.

October 07, 2005 10:40 AM  
Anonymous Anonymous said...

ஐயா கண்ணியவத்தைக் கட்டிக் காக்கும் சுதர்சனம் அவர்களே


பேராசிரியர் ஜார்ஜ் கார்ட் அவர்களின் மனைவியின் ஜாதியியை இழுத்து மிகக் நாகரீகமாக, மிகக் கண்ணியமாக இங்கே ஒரு அநாமதேயம் பதில் போட்டிருந்த பொழுது நீங்கள் ஏன் வந்து அவருக்கு நாகரீகத்தைப் பற்றி, கண்ணியத்தைப் பற்றி உபதேசிக்கவில்லை என தெரிந்து கொள்ளலாமா? அப்பொழுது தாங்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தீர்கள்? ஒரு சிலருக்கு அவர்களது மொழியில் சொன்னால்தான் புரியும் என்பதனால் அந்த மொழியை நானும் பயன்படுத்த நேர்ந்தது. அது குறித்து எனக்கு எவ்வித குற்ற உணர்வும் கிடையாது. அடுத்த முறை உங்கள் உபதேசத்தை முதலில் கண்ணியம் தவறுபவரிடம் வைத்துக் கொள்ளவும். அப்படி இல்லாமல் இரட்டை வேடம் போடுவதாய் இருந்தால், அவர்கள் பாணியிலேயே நானும் கண்ணியமாக உங்களை 'பொத்திக் கிட்டுப் போ' என்று சொல்ல நேரிட்டு விடும். முதலில் இங்கு வந்து அசிங்கம் பண்ணிய கன்ணிய புத்திரனிடம் உங்களின் அறிவுரையைச் சொல்லி இருந்தால் நானும் உங்களுக்கு நாக்ரீகத்தின் மேல் உள்ள பற்றைப் பாராட்டி இருப்பேன். பதிலுக்குச் சொன்னவனுக்கு மட்டும் செலக்டிவாக அறிவுரை கூறுவது எந்த வித நாகரீகம் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. அடுத்த முறையாவது சரியான ஆட்களுக்கு நாகரீகத்தைக் கற்றுத் தர முயல்வீர்கள் என நம்புகிறேன்.

இப்படிக்கு

கண்ணியமற்ற அநாகரீகவாதி

October 07, 2005 4:41 PM  
Blogger வானம்பாடி said...

//அப்பொழுது தாங்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தீர்கள்?//

முதலில், யாருக்கும் கண்ணியம் உபதேசிப்பது என் வேலையல்ல. யாராவது அநாகரீக பின்னூட்டம் எழுதிய உடனே ஒடி வந்து கண்டனம் தெரிவிக்கக் கூடிய தொழில்நுட்ப சாத்தியங்களும் என்னிடம் இல்லை. நான் இந்தப் பதிவை படிக்கும்போது நீங்கள் இருவருமே பின்னூட்டம் எழுதிவிட்டீர்கள்.

//அடாடாடா.. முந்தைய அனாமேதேயம் எழுதியதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டீர்களே.//

இந்த வரியின் அர்த்தம், முந்தைய அனாமேதேயம் எழுதியது நாகரீகமற்றது, நீங்கள் எழுதியது அதை விட நாகரீகமற்றது.

// நானும் உங்களுக்கு நாக்ரீகத்தின் மேல் உள்ள பற்றைப் பாராட்டி இருப்பேன்.//

உங்களின் பாராட்டு எனக்கு அனாவசியம். யாரும் பாராட்ட நான் அதை சொல்லவில்லை. நீங்கள் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதிக் கொள்ளுங்கள். நீங்களே சொல்லும் முன் நானே 'பொத்திக் கொண்டு' போகிறேன்.

யாரிடம் என்ன சொல்ல வேண்டும் என்று நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும், உணர வைத்ததற்கு நன்றி.

October 10, 2005 3:30 AM  
Anonymous Anonymous said...

PKS சொல்வாராம், உடனே ஒரு பின்னூட்டம் வருமாம், அதை சாக்கு வைத்து, தனக்கு பிடிக்காதவர்களை தன் மன வக்கிரத்தை எல்லாம் வெளிப்படுத்தி திட்டி இன்னொரு பின்னூட்டம் வருமாம். ஹா ஹா ஹா. என்ன ஒரு நாடகம்.

October 10, 2005 10:16 AM  

Post a Comment

<< Home