<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/13780929?origin\x3dhttp://kurangu.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Sunday, October 16, 2005

ஆப்பிரிக்க பஞ்சாயத்து

இன்றைய வாஷிங்டன் போஸ்டில் ஆப்பிரிக்க ருவாண்டா நாட்டின் இன்றைய நிலை பற்றி ஒரு அருமையான கட்டுரை வெளியாகி இருக்கிறது.

1984-ம் ஆண்டு ஒரு நூறு நாள் பொழுதில், ருவாண்டாவில், பெரும்பான்மையினரான ஹுடு இனத்தவர் சிறுபான்மையினரான டுட்ஸி இனத்தைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் பேரைப் படுகொலை செய்தனர். இதைத் திட்டமிட்டு நடத்திய அரசியல்வாதிகளும் தலைவர்களும், டான்சானியாவில் சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணை முன் நிறுத்தப் பட உள்ளனர். கொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பலரது வழக்குகள் ருவாண்டா கிரிமினல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவை தவிர, கொலைகளுக்கு உடந்தையாக இருந்த ஏராளமானோர் இன்று ருவாண்டாவின் உள்ளூர்/கிராம நீதிமன்றங்களினால் விசாரிக்கப்படுகின்றனர். கசாச்சா என்று அழைக்கப்படும் இந்த நீதிமன்றங்கள் - நமது பஞ்சாயத்து விசாரணைகளைப் போல - ஊர்ப்பெரியவர்களால் நிர்வகிக்கப்பட்டு, நெகிழ்வான விதிகளோடு நடத்தப்படுகின்றன.


நாடெங்கிலும் சுமார் பத்தாயிரம் கசாச்சாக்கள் உள்ளன; சுமார் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளை விசாரிக்கின்றன.

கசாச்சா என்றால் 'புல்வெளியின் மீது' என்று பொருள்.

கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

"அந்த ஒன்பது நீதிபதிகளும் புல்வெளியில் தற்காலிகக் கூரைக்கடியில் வந்து அமர்ந்தனர். ஒவ்வொருவரும் மஞ்சள், பச்சை, நீலக் கோடுகள் கொண்ட துணிக் கச்சைகளை உடைகளின் மீது அணிந்திருந்தனர். அவற்றின் மீது இன்யாங்கமுகாயோ - நம்பத்தகுந்தவர் - என்று எழுதி இருந்தது. இரண்டு குற்றவாளிகள் முன் நிறுத்தப்பட்டனர். பொது மக்கள், ஒரு ஐம்பது, அறுபது பேர் எழுந்து நின்றனர். தலைமை நீதிபதி, "நாம் இப்பொழுது நினைவு கூர்வோம்" என்று கூறினார். அதன் பின், ஒரு நீண்ட அமைதி."

"ருவாண்டாவில் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் கொடுமையானவை. இருப்பினும், வாரம் ஒரு முறை கூடும் கசாச்சாக்கள் பழிவாங்குதலுக்கு எதிராகவும், சமாதானத்திற்கு ஆதரவாகவும் பேசுகின்றன - குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அந்த கசாச்சாவிற்கு வெளியே பிற தண்டனைகள் கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் இருப்பினும்."

"ருவாண்ட நாட்டு மக்களுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள விழைகிறார்கள் - தமக்கு நெருக்கமானவர்கள் எங்கே, எப்படி இறந்தார்கள் என்று அறியாமல் முன்னகர்வது கடினம். நாடெங்கிலும் நினைவுச்சின்னங்கள் உள்ளன, ஆயினும் அங்கிருக்கும் பலகைகள் பெரும்பாலும் காலியாகவே உள்ளன - இறந்தவர்கள் பெயர்கள் தெரியாததால். அவர்கள் பெயர்களைத் தெரிந்து கொள்வதற்கான தேவை, பழி வாங்கும் தேவையை விட அதிகமாக இருக்கிறது"

"நான் பார்த்த கசாச்சாவில் நிகோடெமஸ் என்றொருவன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டான். அவன் மீது குற்றம் சாட்ட ஒருவன் எழுந்தான் - "நிகோடெமஸ் டுட்ஸிக்களைத் தேடினான், வேட்டையாடினான், அவனே கொன்றானா என்பது எனக்குத் தெரியாது" என்றான். அதன் பின் அவன் நீதிபதிகளை நிகோடெமஸை மன்னித்து விடுமாறு வேண்டினான் - பொதுவில் குற்றம் சாட்டப்பட்டு நிற்பதே பழி வாங்கியதற்குச் சமம் என்பது போல"

"என்னால் அவர்களுக்கிடையே அதிகம் வித்தியாசம் சொல்ல முடியவில்லை. நிகோடெமஸ் ஒரு ஹுடு. அவன் மீது குற்றம் சாட்டி, அவனை மன்னிக்கக் கோரியவன் ஒரு டுட்ஸி போல் இருந்தான், ஆனால் தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு இனத்தவரும் நீதிபதிகளாக இருந்தனர். நாட்டில் பலர் கலப்பினமாகவும் இருந்தனர். பலருக்கு ஹுடு-டுட்ஸி வித்தியாசம் வர்க்க பேதமாக இருக்கிறது. கிகாலி நினைவகத்தில் ஒரு பலகையில் எந்த ஒரு ஹுடு பத்து பசுக்களுக்கு மேல் வைத்திருக்கிறானோ அவன் டுட்ஸி என்று கண்டிருந்தது."

"அன்று வேறொரு முக்கியமான செய்தி வெளியாகி இருந்தது - பத்து வருடங்களாக் வழக்கின்றி சிறையில் இருந்த சுமார் ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டு, இந்த சிற்றூரின் கசாச்சாவின் முன் நிறுத்தப்பட அனுப்பப் படப் போகின்றனர்....இவர்களை என்ன செய்வது என்ற கவலை கொடுமையான வறுமை, சீர்குலையும் கட்டமைப்புக்கள் ஆகியவை குறித்த கவலைகளோடு சேர்ந்து கொண்டுள்ளன. USAID-ஐச் சேர்ந்த எனது நணபரொருவர் சுமார் 90% ருவாண்டா மக்கள் குறைந்தபட்ச வேலையின்றி இருப்பதாகத் தெரிவித்தார்"

"கிகாலி நினைவத்தின் குழந்தகள் அறையில் படங்கள் உள்ளன: "டேவிட்: கால்பந்து விளையாடினான், சிரிக்கச் சிரிக்கப் பேசுவான், மருத்துவராக விரும்பினான், அரிவாளால் கொல்லப்பட்டான்', 'லிசா: கைக்குழந்தை, பிடித்த உணவு: தாய்ப்பால், பிடித்த மனிதர்: தாய், சுவரில் அடித்துக் கொலை'"

"சென்ற வாரம் கசாச்சா நீதிமன்றம் மேலும் விசாரணைகளுக்குப் பிறகு, நிகோடெமஸ் குற்றவாளியென்று கண்டு அவனை சிறைக்கு அனுப்பியது"

"ருவாண்டாவில் ஒரு பழமொழி உண்டு: 'கடவுள் பகல் பொழுதில் உலகெங்கும் வேலை செய்து விட்டு, இரவில் துயில ருவாண்டா வருகிறார்". அது உண்மையென்றால், ருவாண்டா நாட்டு மக்களும் ஒரு நாள் நிம்மதியாகத் தூங்க முடியும்"

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

2 Comments:

Blogger மயிலாடுதுறை சிவா said...

நல்ல கட்டுரை ஸீரிகாந்த்
ஆங்கிலத் திரைப் படம் "Hotel் ரொவாண்டா" பார்த்தீர்களா?
முடிந்தால் நாராயணன் பழைய பதிவு ஒன்றை படித்து பாருங்கள்..
மயிலாடுதுறை சிவா...

October 16, 2005 4:57 PM  
Anonymous Anonymous said...

a healthy follow up of the events (though in part)shown in Hotel Ruwanda.
Thanks for the post

October 16, 2005 5:21 PM  

Post a Comment

<< Home