இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ்
சில வாரங்களுக்கு முன்பு துக்ளக்கில் குருமூர்த்தி, கார்ல் மார்க்ஸ் 1853-ல் இந்தியா குறித்து எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி எழுதியிருந்தார். கூகிளில் துழாவிப் பிடித்த கட்டுரையின் மொழியைப் புரிந்து கொள்ள இரண்டு மூன்று முறை படிக்க வேண்டி இருந்தது.
நேரமும் பொறுமையும் இருந்தால், மூலக்கட்டுரையைப் படித்துப் புரிந்து கொள்வதே சிலாக்கியம். தமிழில் எனது சாராம்ச சுருக்க முயற்சி இங்கே:
கட்டுரையின் தொடக்கத்தில் இந்தியாவை அரசியல் ரீதியாக ஆசியாவின் இத்தாலி என்றும், சமூக ரீதியாக ஆசியாவின் அயர்லாந்து என்றும் வர்ணிக்கிறார். ஹிந்து மதம் முரண்பாடுகள் நிறைந்த மதம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
பிறகு இந்தியாவில் ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தைப் பற்றிப் பேசுகிறார். இக்கட்டுரை 1853-ல் எழுதப்பட்டதால், கிழக்கிந்தியக் கம்பெனியைப் பற்றியதாக இது இருக்கிறது (இன்னும் ராஜாங்கக் குடைக்குள் இந்தியா வரவில்லை). வரலாற்றில் அதற்கு முந்தியதாக இந்தியா எதிர்கொண்ட கஷ்டங்களையெல்லாம் விட வித்தியாசமானதாக காலனியாதிக்கம் கொண்டு வந்த கஷ்டங்கள் இருப்பதாக முன்வைக்கிறார். கிழக்கிந்தியக் கம்பெனியின் செயல்பாடு, இந்தோனீஷியாவில் (ஜாவா) டட்சுக்காரர்களின் செயல்பாடு போல் உள்ளதாகச் சொல்கிறார்.
இந்தியாவில் அதுவரை நிகழ்ந்த போர்கள், கலவரங்கள், படையெடுப்புகள், பஞ்சங்கள் ஆகியவை அந்நாட்டை மேலோட்டமாகவே பாதித்ததாகவும், பிரிட்டிஷார் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் அந்நாட்டை ஆழமாக பாதித்து வருவதாகவும் சொல்கிறார். இந்த பாதிப்புக்குக் காரணமாக இரண்டு முக்கியமான மாற்றங்களை முன்வைக்கிறார்:
1. விவசாயம், நீர்நிலைகள் சார்ந்த உள்கட்டமைப்புகளின் நிர்வாகம் - பிரிட்டிஷ் அரசாங்கங்கள் வருவதற்கு முன்பு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சிற்றரசுகளின் கட்டமைப்பு நிர்வாகம், பிரிட்டிஷ் அரசாங்க நிர்வாகத்தால் உதாசீனப்படுத்தப்பட்டது. இக்கட்டமைப்புகளுக்காக அரசாங்கங்களை நம்பி வந்திருந்த விவசாயிகள் இதனால் ஆதரவின்றி இருக்கிறார்கள், அதனால் அவர்களது தொழிலும் வருமானமும் அடிப்படையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
2. நெசவுத் தொழில்களை நசித்தல் - இதை இரண்டாவதும் முக்கியமான காரணமாகவும் முன்வைக்கிறார். ஐரோப்பாவில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த இந்தியத் துணிகளுக்கான சந்தையை முடக்கி, இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு 'Twist' எனப்படும் பஞ்சை ஏற்றுமதி செய்து, குறைந்த செலவில் நெய்து, அவர்களே அதை ஐரோப்பாவில் கொண்டு விற்பதன் மூலம், இந்தியாவில் பஞ்சு உற்பத்திக்கும், நெசவுத் தொழிலுக்கும் இடையிலான முக்கிய பந்தத்தை ஆங்கிலேயர் சிதைத்திருக்கிறார்கள். இதனால் பல இந்திய ஊர்களும், கிராமங்களும் பூண்டோடு அழிந்திருக்கின்றன.
இவ்விரண்டு காரணிகளாலும் - உதாசீனப்படுத்தும் அரசை மக்கள் சார்ந்திருத்தல், பரவி இருந்த தொழில் அமைப்புகள் மையமாகுதல் - இந்தியாவின் அடிப்படை சமூக அமைப்பான கிராமம் என்பது சிதைந்து வருகிறது - இதுவே ஆங்கிலேயர் இந்தியாவில் உருவாக்கி வரும் அடிப்படை மாற்றம். இந்த இடத்தில் இந்திய கிராமம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி ஒரு மேற்கோளுடன் அறிமுகம் செய்விக்கிறார். இக்கிராமங்களின் சீர்குலைவு ஆங்கிலேய கலெக்டராலோ, சிப்பாயாலோ வரவில்லை - மாறாக, ஆங்கிலேயர் கொண்டு வந்த பொருளாதார முறையால் - தறிகளை ஓரிடமும், நெசவுத் தொழிலை மற்றோரிடமுமாக வைக்கும் அமைப்பால் - வந்தது என்றும், ஆசியாவில் உண்டான முதல் சமூகப் புரட்சி இது என்றும் சொல்கிறார்.
ஒரு பண்டைய நாகரீகத்தின் சமுதாய அமைப்புகள் இப்படி நசிவது என்பது வருத்தத்தை, சஞ்சலத்தை அளிக்கக் கூடிய விஷயமென்றாலும், அவ்வமைப்புகளின் உண்மையான தன்மை என்னவாக இருந்தன என்பதை ஆராய வேண்டும் என்கிறார்.
1. மேம்போக்காகப் பார்க்கையில் ஆபத்தற்றவை போல் தோற்றமளித்தாலும், இவ்வுள்ளாட்சி அமைப்புகள், மனிதர்களை அவர்களது மனங்களை ஒரு சிறிய கூண்டிற்குள் அடைத்து, அவற்றின் உன்னத மேன்மைகளை அடைவதைத் தடுத்து வருகின்றன.
2. தமக்குள்ளேயே சுருங்கி இருந்து வெளி உலக நடப்புகளை வேடிக்கை மட்டும் பார்த்து, அங்கு நடக்கும் அநியாயங்களை கண்டு கொள்ளாமல் இருந்து, தாமே பாதிக்கப்பட்டாலும் எதிர்த்துப்போரிட வலிமையற்று இருக்கும் அமைப்புகளாகவே இவை இருந்து வந்திருக்கின்றன.
3. சாதி, அடிமைத்தனங்களினால் பீடிக்கப்பட்ட சமூகங்களாகவே இவை இருந்திருக்கின்றன.
4. மனிதனை இயற்கைக்குப் பணிந்திருக்கும்படி பணித்தும், அவன் சூழ்நிலைகளுக்கு அதிபதியாக இருப்பதை முடக்கியும் வைத்திருப்பதால், இயற்கையின் வடிவங்களை - அனுமான் என்னும் குரங்கு, பசு ஆகியவற்றை - மனிதன் வழிபடும் வக்கிரமான வழிமுறைகளுக்கு வழி வகுத்திருக்கின்றன
ஆக, இந்த சமூகப் புரட்சியானது மோசமான காரணங்களுக்காகவே உருவாகி இருக்கிறது என்றாலும், இப்புரட்சி இந்தியாவிற்கும், ஆசியாவிற்கும் நன்மையே பயக்கும் என்ற தொனியில் முடிக்கிறார்.
என்னுடைய சிந்தனைகள் சில:
1. அவரது புரட்சி பற்றிய கருத்தின் முக்கியத்தைக் கருத்தில் கொண்டு, ஹிந்து மதக் கடவுள்கள் பற்றிய அவரது கருத்துக்களை உதாசீனம் செய்து விடலாம் (அவை இந்திய சமூகத்தைப் பற்றிய அவரது கீழ்நோக்குப் பார்வையின் ஒரு பாகமாக இருந்தாலும்).
2. மதரீதியான மூடநம்பிக்கைகள், சாதிப்படிநிலை, அடிமைத் தொழில் இவற்றினால் கட்டமைக்கப்பட்ட சமூக அமைப்புகளினால் எந்த ஒரு நன்மையும் விளையாது, அவை அழியத் தகுந்தவை, எத்தகைய புரட்சியினாலும் அது நிகழ்ந்தாலும் பரவாயில்லை என்பதன் நியாயத்தை மறுக்க முடியாது. அவரது மொழியில் இழையோட்டமாய்த் தெரியும் ஒரு மேற்கத்திய மேன்மைவாதம் கொஞ்சம் எரிச்சலூட்டினாலும்.
3. இக்கட்டுரையைப் பிந்தொடர்ந்த வரலாற்றில், மார்க்ஸ் குறிப்பிட்டது போல இந்திய கிராமங்கள் அவ்வளவு சுலபமாக அழியவில்லை. அவை கிழக்கிந்தியக் கம்பெனியையும், ஆங்கிலேய ராஜாக்களையும், விடுதலைப் போராட்டத்தையும், சுதந்திரத்தையும் சீரணித்து விட்டு நின்றன. இன்று, உலகமயமாகும் பொருளாதாரம் என்னும் பெரும் சக்தியை எதிர்கொண்டு நிற்கின்றது.
4. நெசவுத்தொழில் பற்றிய அவரது கருத்துக்கள், கிராமப் பொருளாதாரத்திற்கும், மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்கும் இடையில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டும் கருத்துக்கள் ஆகியவற்றுக்கும், பிற்காலத்தில் காந்தி முன்வைத்த கிராமீயப் பொருளாதாரக் கூறுளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்
6 Comments:
எனக்குத் தெரிந்தவரை சில விளக்கங்கள்.
1. மார்க்ஸ் ஒரு நாத்திகர். அவரும் இளம் ஹெகலியவாதிகள் என்று பெயர்பெற்றவர்களும் முதலில் தீவிரமாக எதிர்த்தது கிறித்துவத்தைதான். டேவிட் ஷ்ட்ரவுஸ் ("The Life of Jesus"), லுத்விக் ஃபாயர்பாக் ("The Essense of Christianity") போன்றோருடன் தனது இளமையைக் கழித்தவர் மார்க்ஸ். ஃபாயர்பாக்கின் தத்துவார்த்தக் கொள்கைகளை எடுத்துக்கொண்டு, அதே சமயம் ஹெகலின் இயங்கியலை விட்டுத்தள்ளாமல் தனது இயங்கியல் பொருள்முதல்வாதத்தை முன்வைத்தவர் மார்க்ஸ். எனவே அவர் எல்லா சமயங்களையும் எதிர்ப்பவர். ஹிந்து மதத்தை எதிர்த்ததில் "இந்திய சமூகத்தைப் பற்றிய அவரது கீழ்நோக்குப் பார்வை" என்று தனியாக ஏதும் இல்லை. கடவுளை மனிதன் படைத்தான் என்ற கொள்கை வைத்திருக்கும் பொருள்முதல்வாதிகள் ஹிந்து, கிறித்துவம், இஸ்லாம் என்று தனித்து எதிர்ப்பதில்லை.
2. மார்க்ஸைப் பற்றி பல எதிர்க்கருத்துகளை வைக்கலாம். ஆனால் "மேற்கத்திய மேன்மைவாதம்" நிச்சயமாக இருக்கமுடியாது. உலகின் முதல் 'உலகளாவிய மனிதநேய தத்துவவாதி, அரசியல் போராட்டக்காரர்' மார்க்ஸ்தான். அவர் தன்னை ப்ரஷ்ய நாட்டுக்காரராகவோ, ஜெர்மனாகவோ என்றுமே நினைத்ததில்லை. ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் பிரச்னையையும் தன் பிரச்னையாகக் கருதினார். ஒவ்வொரு நாட்டு மக்களும் - இந்தியர்களும் - தத்தம் விடுதலையை அடையவேண்டும் என்று நினைத்தார்.
அந்தப் பார்வையில்தான் அவர் ஒவ்வொரு நாட்டு மக்களின் இயலாமையையும் பிறரது அடக்குமுறைகளையும் கண்டித்தார். நிச்சயமாக மேன்மைவாதம் அதில் இல்லை. ஆனால் மார்க்ஸ் இந்தியாவை முழுமையாகப் புரிந்துகொண்டிருந்தார் என்று சொல்லமுடியாது.
3. ரயில்வே வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றால் இந்திய கிராமங்கள் அழிந்து, தொழிலாளர் வர்க்கம் பெருகி இந்தியாவிலும் வர்க்கப்புரட்சி நடைபெறும் என்று எதிர்பார்த்தார். பல்வேறு காரணங்களால் அது நடைபெறவில்லை.
4. காந்திக்கும் மார்க்ஸுக்கும் உள்ள வேறுபாடாக நான் கருதுவது (நான் ஒரு நிபுணன் இல்லை என்ற disclaimerஉடன்) - காந்தி உணர்வால் உந்தப்பட்டு போராட்டங்களை நடத்தினார். மார்க்ஸ் அறிவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்து தனது கொள்கைகளை முன்வைத்தார். மார்க்ஸ் சமூகவியல் பார்வைகள் இன்னது என்று தெளிவாகக் கூறிவிட முடியும். காந்தியின் கொள்கைகள் என்ன என்று பல விஷயங்களில் தெளிவாகச் சொல்லமுடியாது.
காந்தி ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவடைந்த சிறு கட்டமைப்பாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அறிவியல் பூர்வமாக அவ்வாறு இருக்கக்கூடுமா? இருக்கவேண்டுமானால் என்ன செய்யவேண்டும்? என்னென்ன வெளிவிசைகளால் அது பாதிக்கப்படும் என்றெல்லாம் சொல்லவில்லை.
மார்க்ஸ் படுவேகமாகத் தொழில்மயமாகும் இடத்தில் பிறந்தவர். நாளடைவில் கிராமங்கள் தன்னிறைவு பெற்ற தனிக் கட்டமைப்பாக இருக்க முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
பத்ரி, விரிவான விளக்கத்திற்கு நன்றி.
கார்ல் மார்க்ஸ் என்ற பெயரை மட்டும் மறைத்து விட்டுப் படித்தால் 'கீழ்நோக்குப் பார்வை', 'மேன்மைவாதம்' இரண்டுமே தெளிவாகத் தெரியும். அவர் எழுதியதால் அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்வதில் தவறில்லை தான். இருப்பினும்,
1. அவர் ஹிந்து மதச் சிந்தனைகளை ஓரளவேனும் படித்திருந்தார் என்றால், குரங்கு, பசு வழிபாடுகளை வக்கிரங்கள் என்று சித்தரிக்கும் அளவுக்குப் போயிருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. ஏதோ் ஒரு மதம்தானே, இதுகளுக்கு என்ன தெரியப் போகிறது என்று அடித்து ஆடுவது போல் தான் தெரிகிறது.
2. புரட்சி, புரட்சி என்று சொல்பவர், இந்திய விவசாயிகள் ஒன்று திரண்டு ஆங்கிலேயரின் மோசமான ஆட்சிக்கு எதிராக எழ வேண்டும், போராட வேண்டும் என்று ஏன் சொல்லவில்லை? சில மேற்கத்தியர்கள் வந்து புரட்டிப் போட்டால் தான் இந்த சமூகம் உருப்படும் என்ற undercurrent - மன்னிக்கவும் - எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.
ஆயினும், என்னைப் பொறுத்த வரையில் இவை இரண்டுமே பெரிய விஷயங்கள் இல்லை (கட்டுரையிலும் அவ்வாறே குறிப்பிட்டிருந்தேன்).
உங்கள் முனைப்பிற்கு மீண்டும் நன்றி.
Srikanth,
Thanks for writing on this. Just started a day and tempted to get into "commenting".
1. Mulkraj Anand had edited and published Karl Marx's essays on India (total of 9 essays if I remember correctly). If Publishers like Badri can let us know where that is available or if they are translated into Tamil in the past etc, that would be great.
2. Jayakanthan wrote in one of the essays that at in his last years, Marx learned Sanskrit and was planning to write more in detail about India but died before that. We need to look into it.
3. Reading the very famous biography of "Karl Marx - A life" by Francis Wheen (PAK recommended FRanchis Wheen book - one another good biography on Marx is by Isaiah Berlin), one could find that Marx did not have much regards for rural life (which is Indian way of life). He calls the rural life as "Rural Idiocy". In his perspective, for communism to come Capitalism should be at his peak. So, he views rural life as a place which lacks very behind in that cycle. I dont agree with this view. Thats why in later stages (and even in India), communists tried to embrace Mao and China more becos Mao made revolution possible in China (which was a rural society similar to India somewhat).
4. Coming back to Marx Vs Gandhi. Let me go back to Jayakanthan. He helped me a lot to understand Marxism through his writings. He says, that Marx in his theories had no relationship with nature. (rural life is more associated with nature. if thats idiocy relationship with nature is less obviously). Gandhi is the one who emphasised on the relationship of society with nature. Thats why, I also feel a mixture of Gandhism through Gandhiyan ways (non-violent and democratic) is the best way to take Marxism forward. Somehow Indian communists and communists worldwide vehemently oppose such idea.
4. Marx is a very interesting personality. I am almost tempted to write a book on him :-)
Please bear with fastly running and not fully explaine prose here.
Thanks and regards, PK Sivakumar
PKS, Thanks for the interesting insights and for placing Jayakantan's opinions on this topic alongside.
PKS: நீங்கள் குறிப்பிடும் புத்தகம் 1939-ல் பதிப்பிக்கப்பட்டது. இப்பொழுது அச்சில் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதாவது லைப்ரரியில் இருந்தால் உண்டு. ஒருவேளை ரோஜா முத்தையா லைப்ரரியில் இருக்கிறதா என்று பார்க்கிறேன்.
Badri, Thanks. Since it has been published more than 50 years back, there may not be copyright problems. :-) Please see if it can be translated and published through Kizhaku (provided its a profitable venture for you of course) Or is there any tamil translations already available.
FYI, Ve. Saminatha Sharma quotes this book as a reference in his book titled "Karl Marx". So it should be available with someone or library in TN.
Thanks and regards, PK Sivakumar
Post a Comment
<< Home